Just another WordPress.com site

தேசிய அவமானமான ஸ்பெக்ட்ரம் பற்றி நாம் அறிவோம், அதில் ஒண்ணேமுக்கால் லட்சம் கோடி ரூபாய் அளவுக்கெல்லாம் ஊழல் செய்யப்படவேயில்லை என்றெல்லாம் மக்களே பேச ஆரம்பித்துவிட்டனர். ராஜா கைது தான் செய்யப்பட்டாரே தவிர குற்றம் நிரூபிக்கப்படவில்லை, அதுவரை நாங்கள் அவரை அரவணைத்துக் காப்போம் என்கிறார் முதல்வர். இது தினம் ஒரு அறிக்கை வரும் தேர்தல் நேரம்,மக்கள் சிந்திக்க வேண்டிய காலம், அப்படி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மெய்யாகவே நடந்தது என்ன ?!!! என்பதை துபாயில் பணிபுரியும் சிவக்குமார் என்னும் பொறியாளர் அருமையாக ஆய்வு செய்து எழுதியுள்ளார், இது இப்போது இமெயிலில் வரத்துவங்கிவிட்டது, இனியேனும் நன்கு படித்தவர்கள் அவசியம் சிரமம் பாராமல் சிந்தித்து வாக்களித்து நாட்டைக்காக்கவேண்டும். அவசியம் இதைப்படித்துவிட்டு ஃபேஸ்புக், ஆர்குட், ட்விட்டர் தளங்களில் ஃபார்வர்டும் செய்யவும்.

க்கள் அனைவரையும் இலவசங்களை மட்டுமே வாங்க தெரிந்த மாக்கான்கள் என்றே நினைத்து விட்டார் நம் முதல்வர். அதற்காகத்தான் தமிழ்நாட்டில் அனைவரும் குழந்தை பெற்றுகொள்கிறார்கள் என்று சொன்னாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை. என்னது ஏழைகள் பயன்படுத்தும் அளவிற்கு குறைந்த விலையில் சேவையை கொண்டுவந்தது ராசாவா? மக்களே உண்மையை புரிந்து கொள்ளுங்கள். இந்த புளுகு மூட்டைகளின் பாவத்திற்கு ஆளாகாதீர்கள். விலை குறைந்ததிற்கான காரணத்தை இங்கு குறிப்பிடுகிறேன்.

1999 ஆண்டில் தான் தொலைதொடர்பு உரிமங்கள் வழங்க ஆரம்பிக்கபட்டது. அன்று வெறும் பணம் படைத்தவர்கள் மட்டுமே கைபேசியை பயன்படுத்தினர். எனவே நுகர்வோரின் எண்ணிக்கை மிக குறைவு. சில பல லட்சங்கள் மட்டுமே. தொழில் நுட்பவளமான 1G அல்லது 2G அலைக்கற்றைகள் மிக அதிக அளவில் அரசிடம் கையிருப்பு இருந்துள்ளது. ஆனால் உரிமம் வாங்க உலக அளவிலோ இந்திய அளவிலோ போட்டிகள் இல்லை. விலை கொடுத்து உரிமம் வாங்கியவர்கள் லாபம் பெற நுகர்வோரிடம் நிமிடத்திற்கு அதிக கட்டணம்(In coming and out going ) வசூல் செய்ய கட்டாயம் ஏற்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால் நாம் தான் வசதி படைத்தவர்களாயிற்றே என்று இஷ்டத்திற்கு பேசி நேரத்தையோ பணத்தையோ அன்றைய வசதி படைத்தவர்கள் விரயம் செய்யவில்லை. குறைவான நேரத்துக்குதான் கைபேசியை பயன்படுத்தினர்.

நுகர்வோரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால்தான் அன்று அலைகற்றை உரிமம் பெற அதிக நிறுவனங்கள் முன்வரவில்லை. இதை சரி செய்ய அன்றைய அரசு ஒரு தொலை தொடர்பு புரட்சியை உருவாக்க முயன்றது. விளைவு நாளுக்கு நாள் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகமானது. இன்றும் அதிகமாகி கொண்டே இருக்கிறது. 2010 நுகர்வோரின் எண்ணிக்கை சுமார் 60 கோடிக்கும் மேல். 2008 இல் 50 கோடிக்கும் மேல்.

தற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் அளவுக்கு போதிய அலைகற்றைகள் அரசிடம் இன்றும் உள்ளனர். ஆனால் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெறும் 60 கோடிதான். 122 தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க பட்டுள்ளது. தகுதி என்றால் என்ன? போதிய அனுபவம், வங்கி காசோலை, வங்கி செக்யூரிட்டி டெபொசிட் அது மட்டும் இல்லை வாங்கியவுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் சேவையை தொடங்க வேண்டும். இந்த குறிப்பை நினைவில் வைத்து கொள்ளுங்கள். பின்னால் உதவும். டாட்டா, ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் உரிமம் வாங்கியுள்ளனர். இதோடு அந்த 122 தகுதி இல்லாத நிறுவனங்களையும் சேர்த்து கொள்ளுங்கள்.

நியாயக் கணக்கு:

ந்தியாவில் 60 கோடி மக்கள் கைபேசி சேவையை பயன்படுத்துவதாக உண்மை தகவல் உள்ளது. எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். ஒரு நபர் தனது கைபேசியை ஒரு நாளைக்கு சராசரியாக வெறும் 15 நிமிடங்கள் (LOCAL CALLS ONLY) பயன்படுத்துவதாக வைத்துக்கொள்வோம். ஒரு நிமிடத்திற்கு 40 பைசா கட்டணம்.

ப்போது 15×0.40 =6.0 ரூபாய் ஒரு கைபேசியின் மூலம் செலவாகிறது. 60 கோடி கைபேசிகள். 60×6.0 = 360 கோடிகள் ஒரு நாளைக்கு செலவாகிறது. ஒரு மாதத்திற்கு 30×360 = 10,800 கோடிகள். ஒரு வருடத்திற்கு 12×10,800 = 1,29,600 கோடிகள். 2008 இல் 2G ஏலம் விடப்பட்டது. இன்று வரை இரண்டு வருடங்கள் ஆகிறது. அப்போ து குறைந்தபட்ச வருமானம் இன்றுவரை2,59,200 கோடிகள். இது ஒரு நாளைக்கு வெறும் 15 நிமிடங்கள் கைபேசியை பயன்படுத்தினால் இரண்டு வருடத்திற்கு கிடைத்திருக்கும் வருமானம்.

தோடு SMS, MMS, STD, ISD, சேவை கட்டணம், இணைப்பு கட்டணம்…….இன்னும் என்ன என்னவோ கட்டணங்கள் உள்ளது என்று சொல்கிறார்கள் மற்றும் 15 நிமிடத்திற்கு அதிகமாக பயன்படுத்துவோரின் செலவையும் சேர்த்தால் எத்தனை கோடி கோடிகள் வருமானமாக கிடைக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். என்னால் கணக்கிடவே முடியவில்லை. என்னிடம் உள்ள கால்குலேட்டர் மற்றும் கணினி காண்பிப்பது “INFINITIVE”. நான் தற்போது இந்தியாவில் இல்லை. இருந்திருந்தால் அனைத்தையும் அலசி ஆராய்ந்து இதைவிட இன்னும் துல்லியமாக நடந்த ஊழலின் அளவை குறிப்பிட்டு இருப்பேன். இந்த வருமானம் அனைத்தும் அரசுக்கு கிடைத்திருக்க வேண்டும். அது மக்களை சென்று அடைந்து இருக்கவேண்டும். கிடைத்ததா? 

க்களை சென்றடைந்ததா? நிச்சயம் இல்லை என்றுதான் ஒவ்வொரு மக்களும் கூறவேண்டும். அப்படி என்றால் இந்த மக்கள் பணம் சட்டத்திற்கு புறம்பாக யாரிடமோ சென்று அடைந்துள்ளது. இந்த ஊழல் பணம் அடுத்த சில ஆண்டுகளில் தனது சொந்தநாட்டு மக்களையே தாக்கப்போகிறது. விலைவாசி உயரும். பொருளாதாரம் நாசாகும். “Above middle Class” மக்கள் நடுத்தர மக்களாகவும், நடுத்தர மக்கள் ஏழைகளாகவும், ஏழை மக்கள் மேலும் பரம ஏழைகளாகவும் மாறுவார்கள்.

னநாயகம் வேரோடு அழியும். மனிதாபிமானம், மனிதநேயம் மண்ணோடு மண்ணாகும். ரௌடிசம்,குற்றசம்பவங்கள் தலைவிரித்து ஆடும். கடந்த ஐந்தாண்டுகளாக ஆயுள் கைதியாக உள்ள நடுநிலை பத்திரிகைகள் இனி மரண தண்டனை கைதிகளாக மாற்றப்பட்டு தூக்கில் போடப்படும்.

துரோகம்-1: உரிமம் வாங்கிய அனைத்து நிறுவனங்களும் சுமார் 13000 கோடிக்கும் அதிகம் பொறுமானம் உள்ள(உதாரணம் S .TEL நிறுவனம்13000 கோடிக்கு வாங்க முன்வந்தது) அலைகற்றைகள் உரிமத்தை அடிமாட்டு விலைக்கு அதாவது 1200 , 1300 ,1650 கோடிகளுக்கு திட்டமிட்டு விற்கப்பட்டுள்ளது. அரசுக்கு சேரவேண்டிய, மக்களுக்கு சேர வேண்டிய வருவாய் சில சுய நலவாதிகளை சென்றடைந்துள்ளது.

துரோகம்-2: பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் உரிமத்தின் பங்குகளை வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்துள்ளனர். இதனால் அரசுக்கு அதாவது பல கோடி மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் வருவாய் சில சுய நல தனி மனிதர்களை சென்று அடைந்துள்ளது.

துரோகம்-3: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய 122 நிறுவங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இதில் “swan, Unitech” போன்ற லெட்டர் பேட் நிறுவனங்களும் அடங்கும். இந்த நிறுவனகள் ஏன் இன்னும் சேவையை தொடங்கவில்லை என்று உள்ளூர ஆராய்ந்தால் மிக தெளிவாக புரியும். பெரிய நிறுவனங்கள் போட்டி இல்லாமல் தொலைதொடர்பு துறையில் கொள்ளை லாபம் பார்க்க அதாவது கட்டணம் என்ற பெயரில் மக்களின் உழைப்பை சுரண்ட பெரும்பாலான தகுதி இல்லாத பினாமி லெட்டர் பேட் நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை.

இவைகள் சேவையை தொடங்கி இருந்தால் சந்தையில் போட்டி அதிகமாகி கைபேசியில் பேசும் கட்டணம் இப்போது இருப்பதை விட மேலும் குறைந்திருக்கும். ஒரு வேளை இதற்காகத்தான் திட்டமிட்டு “S.TEL போன்ற போட்டி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கவில்லை என்ற சந்தேகம் தெளிவாக எழுகிறது.

துரோகம்-4: MTNL BSNL போன்ற அரசு நிறுவனங்களுக்கு அதிக அளவில் அலைகற்றைகளை ஒதுக்கி போதிய ஆப்பெரடர்களை நியமித்து இருந்தால் கைபேசியில் பேசும் கட்டணம் நிமிடத்திற்கு வெறும் ஒரு பைசாவுக்கு வந்திருக்கும். மக்கள் அரசினால் பயன் அடைந்து இருப்பார்கள்.

துரோகம்-5: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய லெட்டர் பேட் நிறுவனங்கள் தனது பங்குகளை பல வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்றுள்ளனர். அதில் பாகிஸ்தான் போன்ற நாடுகளும் அடங்கும். இந்தியாவின் தொலை தொடர்பு துறையை இந்த நாடுகளும் பயன்படுத்துகின்றனர். இது உள்நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு மிக பெரிய அச்சுறுத்தல்.

துரோகம்-6: நீரா ராடியா தொலைபேசி உரையாடல்கள், CAG ,தொலைதொடர்பு சம்பந்தபட்ட, கைபற்றபட்ட ஆவணங்கள், சம்பந்தபட்ட பிரதமர் அலுவலக கடிதங்கள் புறகணிப்பு, சட்ட,நிதி துறை கடிதங்கள் புறகணிப்பு, TRAI பரிதுரைகள் புறகணிப்பு இப்படி கோடி கணக்கில் ஆதாரங்கள், சாட்சிகள். முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்று முந்தைய ஆட்சியாளர்கள் வகுத்த அடிப்படை கொள்கை கூட பின்பற்றப்படவில்லை. அதிலும் முறைகேடு.

துரோகம்-7: இவ்வளவு குற்றங்கள் செய்தும் சம்பந்தபட்ட குற்றவாளிகள் செய்த தவறை ஒப்பு கொள்ளாமல் நாங்கள் தவறு செய்யவில்லை என்று மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்வது மக்களுக்கு இழைக்கப்பட்ட ஏழாவது துரோகம். இதன் உச்சகட்டம்தான் 2G யில் ஊழலும் இல்லை நஷ்டமும் இல்லை என்று மத்திய அமைச்சரின் பத்திரிகை பேட்டி. இந்த உலகத்திலே தான் மட்டும்தான் புத்திசாலி வக்கீல் மற்ற அனைவரும் அடி முட்டாள்கள் என்ற ஆணவ நினைப்பு.

துரோகம்-8: நடந்த அனைத்து தேச துரோகங்களும், குற்றங்களும் பொருளாதார மேதை பிரதமருக்கு தெரிந்தே கண்முன்னே நடந்துள்ளது. இருந்தும் பிரதமர் வாய் மூடி மௌனியாக இருப்பது மக்களுக்கு இழைக்கபடும் மகா மகா துரோகம்.

துரோகம்-9: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முறைகேடாக பெறபட்ட பணங்கள் பெரும்பாலானவை இந்தியாவில் புழக்கத்தில் இல்லாமல் அந்நிய நாடுகளில்,வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல். இந்த பணம் அரசுக்கு வருவாயாக கிடைத்து இருந்தால் ஏராளமான அரசு கல்லூரிகள், பள்ளிகள், பாலங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் என்று உருவாக்கி அனைவருக்கும் கல்வி,வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள் என்று ஏற்படுத்தி ஏழைகளே இல்லாத நாட்டை உருவாக்கி இருக்கலாம். இலவசங்கள் பெறாத மக்களை கண்டிருக்கலாம்.

துரோகம்-10: ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை பயன்படுத்தி தலித் பற்றும் பிற இனத்தை சேர்ந்த ஏழை விவசாய மக்களிடம் மிரட்டி விளை நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டதாக தகவல். இது மக்களுக்கு இழைக்கபட்ட துரோகம் பத்து. ஒரு முறைகேட்டை செய்து அதையே மூலதனமாக வைத்து இன்னொரு முறைகேடு செய்யப்பட்டுள்ளது. ஊழல் செய்வதினால் மக்களுக்கு இழைக்கபடும் துன்பங்களுக்கு இதை விட சிறந்த உதாரணம் வேறென்ன வேண்டும். நண்டு கொழுத்தால் வலையில் தங்காது. இதுதான் ஊழலின் விளைவுகள். இவர்கள் ரத்தம் குடிக்கும் கொசுக்கள் மாதிரி. நம்மிடம் உள்ள ரத்தத்தை உறிஞ்சுவதோடு மட்டும் இல்லை அதோடு சேர்த்து நோய் கிருமிகளையும் நமது ரத்தத்தில் விட்டு செல்கின்றனர்.

ப்படி 2G ஊழலில் மக்களுக்கு இழைக்கபட்ட துரோகங்கள் எண்ணில் அடங்காதது. இந்த ஊழலின் தாக்கம் இதோடு நிற்காது. மக்களைத்தான் சுத்தி சுத்தி அடிக்கும். எப்படி? ஊழல் பணத்தை வைத்து ஏழைகளின் நிலங்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டு அதை பிளாட் போட்டு அதே மக்களிடம் அதிக விலை வைத்து விற்கப்படுகிறது.

ரு ஏக்கரை குறைந்த விலைக்கு விற்ற மக்கள் அந்த பணத்தை வைத்து அதே இடத்தில் அதாவது முந்தைய சொந்த இடத்தில ஒரு கிரௌண்ட் நிலம் கூட வாங்க முடியவில்லை. இதுதான் ஊழலின் விளைவு. இப்போது புரிந்து இருக்கும் ஏழைகள் எப்படி உருவாகிறார்கள் என்று. இது மட்டும் இல்லை ஊழல் பணத்தை வைத்து அனைத்து இடங்களையும் வளைத்து போட்டு ரியல் எஸ்டேட் நடத்தும் அனைத்து அரசியல்வாதிகளும் இப்படி ஊழல் பணத்தில்தான் செய்கின்றனர்.

வர்கள் சொல்வதுதான் விலை. விலைவாசி உயர்வது இயற்கை அல்ல. அனைத்தும் மிக மிக செயற்கையே. இயற்கை என்று ஆளும் கட்சியினர் கூறுவது தவறு. உண்மையை மூடி மறைக்கும் செயல். இது ரியல் எஸ்டேட் மட்டும் இல்லை. அனைத்து பொருள்களுக்கும் பொருந்தும். குறைந்த விகிதத்தில் உள்ள பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள். அதிக விகித்தில் உள்ள நடுத்தர மக்கள், ஏழைகள் மேலும் ஏழைகளாக ஆவார்கள். இந்த ஏழை, பணக்காரன் இடை வெளியை குறைக்கத்தான் அரசாங்கம் ஒன்றை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ன்று ஆளும் வர்க்கத்தினரே அதற்கு முழு முதல் காரணமாக திகழ்கிறார்கள். சொல்லபோனால் அரசின் கடமைகளை அரசியல்வாதிகளும் மறந்துவிட்டனர். இவர்களை தேர்ந்தெடுக்கும் மக்களும் தங்கள் கடமைகளை மறந்து இலவசத்துக்கு பின் செல்கின்றனர். இலவசம் வாங்கும் மக்களே ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்.

ங்கள் உழைப்பு என்னும் மூலதனத்தை மறந்து இலவசம் வாங்குவதால் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் நீங்கள் ஏழைகளாகத்தான் இருக்க முடியும். உங்கள் வாழ்கை தரமும் உயரபோவதில்லை. இலவசம் கொடுக்க தேவையான வரிபணத்தை செலுத்தும் உழைக்கும் மக்களின் வாழ்கை தரமும் உயரபோவதில்லை. இது நிச்சயம். மாற்றம் ஒன்றே மாறாதது. இலவசம் மாறவில்லை என்றால் உங்கள் வாழ்கை தரமும் மாறபோவதில்லை.

னது நோக்கமே இந்த 2G உலக மகா ஊழலால் மக்கள் எவ்வாறு வஞ்சிக்கபட்டார்கள் என்பதை ஒவ்வொரு இந்திய குடிமகனும் பத்திரிகை நிறுவனங்களில் பணிபுரியும் நண்பர்கள் உள்பட அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதுதான். எனவே தெரிந்துகொள்ளுங்கள், புரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு ஏழை மக்களுக்கும் தெரியபடுத்துங்கள். ரோட்டில் இறங்கிதான் போராடவேண்டும் என்று இல்லை.கொடி பிடிக்க அவசியமும் இல்லை. e -mail, FAX , Facebook , orkut என்று எவ்வளவோ தொழில் நுட்ப வசதி உள்ளது. தங்களுக்கு உகந்த ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து தங்களின் அன்றாட வேலைகள் பாதிக்காத வகையில் சுலபமாக இதை செய்யமுடியும். செய்வீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி.

நன்றி அருண்சங்கர்

Advertisements

பாண்டவர்கள் ஒரு முறை “இராஜ சூய யாகம்’ செய்தனர். பல நாட்டு அரசர்களும் விருந்தினராக வந்தனர்.
“சபையில் முதலில் பூஜிக்கத் தகுந்தவர் யார்?’ என்ற வினா எழுந்தது.
பல்கலைகளில் தேர்ந்தவனான சகாதேவன் எழுந்து, “”ஆன்றோர்களே! அரசர்களே! இவ்வுலகம் எவருடைய வடிவம்? வேள்விகள் யாருடைய உருவம்? அப்படிப்பட்டவனே முதல் பூஜை பெறத் தகுதியுடையவன்! அத்தகை யோரில் நம்மிடையே கண்ணனைத் தவிர வேறு யாரும் இலர். அதனால் அவருக்கே பூஜை செய்வோம். அப்படிச் செய்தாலே எல்லா உயிர் களுக்கும் செய்ததற்கு ஒப்பாகும்” என்றான்.
அவன் சொல்லியதை ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் எதிராக சிசுபாலன் மட்டும் இதனை எதிர்த்தான்.
அவன் எதிர்ப்பைக் கண்டு சினந்த அரசர் பலர் அவனைக் கொல்ல எழுந்தனர். நிலைமை மோசமடைந்தது.
இதனை அறிந்த கண்ணன்… பிறரின் பழிக்கு ஆளாகாமல் சிசுபாலனை தானே அழித்தார்.
பின்னர் சகாதேவன் சொன்னபடி கண்ணனுக்கு முதல் பூஜை செய்தனர்.
கண்ணன் ஓர் ரத்தின சிம்மாசனத்தில் அமர்ந்து அருங்காட்சி அளித்தான்.
இராஜசூய வேள்வி தொடர்ந்து நடைபெற்றது.
ஒரு பக்கம் பல்லாயிரம் பேருக்கு விருந்து படைக்கப் பட்டது.
இந்நிலையில், ரத்தின சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த கண்ணனைக் காணவில்லை. எல்லாரும் தேடினர். நெடுநேரம் எங்கெல்லாம் தேடியும் கண்ணன் தென்படவே இல்லை.
இறுதியில் விருந்து நடந்து முடிந்த இடத்தில் கண்ணன் காணப்பட்டான். விருந்தினர் உண்ட எச்சில் இலைகளை அள்ளி அப்பால் கொட்டும் பணியில் மும்முரமாய் ஈடுபட்டிருந்தான்.
முதற்பூஜை பெற்ற பரம்பொருள் எச்சில் இலை எடுப்பதா…!என எல்லாரும் வியந்தனர்.
“”கண்ணா! எச்சில் இலை எடுக்க எத்தனையோ பேர் இருக்க, நீர் இக்காரியம் செய்யலாமா? முதற்பூஜை பெற்ற நீ எச்சில் இலை எடுக்க அனுமதிப்பது அவமதிப்பது ஆகாதா…? உடனே நிறுத்து… எச்சில் பட்ட உடைகளை மாற்றிக் கொண்டு சிம்மாசனத்தில் இருந்து காட்சி தா” என வேண்டி நின்றனர்.
“”எச்சில் இலை எடுப்பது இழிவான செயலா? ஏவலர் எடுக்கும்போது அக்கறை இல்லாமல் இங்கும் அங்கும் ஒழுகவிட்டுத் தரையை சேறாக்குகின்றனர். அவ்வாறு செய்வது மறு பந்தியில் அமருவோர்க்கு இடையூறாய் இருக்காதா…? ஆதலால் எச்சில் இலையை எவ்வாறு சிந்தாமல் சிதறாமல் எடுப்பது என்று செய்து காட்டினேன். சொல்லிக் காட்டுவதை விட செய்து காட்டுவது மிகப் பயன்தானே…?
அதுமட்டுமா…? தொழிலில் ஏற்றத்தாழ்வு உண்டா…? முதல் பூஜை பெறுவதும் ஒரு தொழில்தான். எச்சில் இலை எடுப்பதும் ஒரு தொழில்தான். இரண்டுக்கும் இடையில் வேறுபாடு காண்பவன் மூடன். முதல் பூஜை பெற்ற நான் எச்சில் இலை எடுப்பதை இழிவாகக் கருதினால் நான் பெற்ற முதல் பூஜை தகுதிக்காக பெற்றதாகுமா? பகட்டுக்காகத்தானே பெற்றதாக ஆகும்” என்றான் கண்ணன்!

ருத்ராட்சம்

லட்சுமிகடாட்சம் அளிக்கும் ருத்ராட்சம்

clip_image001மனோபலமும் ஆரோக்கியமும் தரும் அரிய பொக்கிஷம் ருத்ராட்சம். இதன் மின்காந்த ஆற்றல் உடம்பில் படும்போது பல நன்மைகள் உண்டாகின்றன. ரத்த ஓட்டத்தை சீர் செய்யும் சக்தி இதற்குண்டு. ஒன்று முதல் 21 முகங்கள் கொண்ட ருத்ராட்சங்கள் உள்ளன. “”ருத்ராட்சம் அணிபவருக்கு லட்சுமி கடாட்சம் உள்ளிட்ட எல்லாநன்மைகளும் அருள்வேன்,” என்று சிவபுராணத்தில் பார்வதிதேவியிடம் பரமேஸ்வரன் உறுதியளித்துள்ளார். இதனை அணிபவர்கள் “நமசிவாய’ என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும். சிவபூஜை, புராணம் படித்தல், கோயில் தரிசனம், தியானம், தேவார, திருவாசகம் ஓதுதல், விரதகாலம், சிரார்த்தவேளை, மங்கல நிகழ்ச்சிகள் ஆகிய வேளைகளில் ருத்ராட்சம் அணிவது சிறப்பானது.

ருத்ராட்ஷம் எவ்வாறு தோன்றியது?

சிவபெருமான் கண்களிலிருந்து தோன்றியது ருத்ராட்ஷம். அதை அணிபவரை அவர் கண்போலக் காப்பாற்றுவார். எனவே அனைவரும் கண்டிப்பாக ஐந்து முக ஒரு ருத்ராட்ஷமாவது எப்போதும் கண்டிப்பாக அணிந்தீருக்க வேண்டும்

ஆப்படியானால் யார் வேண்டுமானாலும் ருத்ராட்ஷம் அணியலாமா?

ஆமாம்! ருத்ராட்ஷத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர் பருகும் போதும், உணவு உண்ணும்போதும், தூங்கும்போதும் எல்லாக்காலத்திலும் ருத்ராட்ஷம் அணிந்திருக்க வேண்டும் என்று சிவபெருமானே கூறியுள்ளதாக சிவபுராணம் தெரிவிக்கிறது.

சிறுவர், சிறுமியர் ருத்ராட்ஷம் அணிவதால் அவர்களின் படிப்புத் திறமை பளிச்சிடும். ருத்ராட்ஷத்தை பெண்கள் அணிந்தால் தீர்க்க சுமங்களியாக மஞ்சள் குங்குமத்தோடு வாழ்வார்கள். இதனால் அவர்களுடைய கணவருக்கும் தொழிலில் வெற்றியு்ம் இல்லத்தில் லட்சுமி கடாசமும் நிறைந்திருக்கும். ஆகையால் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணியவேண்டும்.

சுத்தபத்தமாக இருப்பவர்கள் தான் ருத்ராட்ஷம் அணிய வேண்டும் என்று சொல்கிறார்களே?

குளித்தவர்கள்தான் சோப்பு உபயோகப்படுத்த வேண்டும் என்று யாராவது சொல்வார்களா? ஆரோக்கியம் உள்ளவனுக்குத்தான் மருந்து: நோயில் தவிப்பவனுக்கு கிடையாது, என்று எவரேனும் சொன்னால் ஏற்றுக்கொள்வோமா? அது போலத்தான் சுத்தமாக இருப்பவர்கள்தான் ருத்ராட்ஷம் போட்டுக்கொள்ள வேண்டும் என்று சொல்வதும்.

ருத்ராட்ஷம் அணிந்தால்தான் மனமும், உடலும் தூய்மை அடையும். எனவே உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்ளாமல் நம்பிக்கையோடு ருத்ராட்ஷம் அணிந்து கொள்ளுங்கள். எப்படி மருந்துக்குப் பத்தியம் அவசியமோ அதுபோல ருத்ராட்ஷம் அணிபவர்களும் மது அருந்துதல், புகை பிடித்தல், புலால் உண்ணுதல் போன்றவற்றை படிப்படியாக விட்டுவிட முயற்சிக்க வேண்டும். (முக்கியமாக மாடு, பன்றி மாமிசம் எப்போதும் சாப்பிடக்கூடாது)ருத்ராட்ஷத்தில் முகமா? அப்படியென்றால் என்னயார், யார் எத்தனை முகம் கொண்ட ருத்ராட்ஷம் அணியலாம்?

ருத்ராட்ஷத்தின் குறுக்கே அழுத்தமான கோடுகளைக் காணலாம்இதற்குத்தான் முகம் என்று பெயர். நான்கு கோடுகள் இருந்தால் நான்கு முகம். ஐந்து கோடுகள் இருந்தால் ஐந்து முகம் என்று இப்படியே கணக்கிட வேண்டியதுதான். எத்தனை முகம் என்பதைக் கண்டுபிடிக்க எவ்வித முன் அனுபவமும் தேவையில்லை. கண்ணால் சாதாரணமாகப் பார்த்தாலேயே தெரியும்.
அதுமட்டுமல்ல, எல்லா இடங்களிலும் எளிதில், மிகமிக சகாயமான விலையில் கிடைக்கும் ஐந்து முக ருத்ராட்ஷம் அணிவதே போதுமானது. பகவானின் திருமுகம் ஐந்து. நமச்சிவாய ஐந்தெழுத்து. பஞ்சபூதங்கள் ஐந்து (நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம்). நமது கை கால் விரல்கள் ஐந்து. புலன்கள் ஐந்து. ஆகையால் மிக அதிகமாக ஐந்து முக ருத்ராட்ஷத்தையே படைக்கின்றார். ஆகையால் ஐந்து முக ருத்ராட்ஷங்கள் அணிவதே மிகச் சிறப்பு. இதை ஆண், பெண் மற்றும் குழந்தைகள் என சகலமானவர்களும் அணியலாம். ஐந்து முக ருத்ராட்ஷத்திலேயே மற்ற எல்லா முக

ருத்ராட்ஷங்களினால் கிடைக்கின்ற பலன்களும் அடங்கிவிடும்.

பெண்கள் ருத்ராட்ஷம் அணியக்கூடாது என சிலர் செல்கிறார்களே?

பெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவள் ஆதிபராசக்தி அவள் ருத்ராட்ஷம் அணிந்திருப்பதை, கொந்தளகம் சடை பிடித்து விரித்து பொன்தோள் குழை கழுத்தில் கண்டிகையின் குப்பை பூட்டி என்று விவரிக்கிறது அருணாசலபுராணம் (பாடல் எண் 330) பழி, பாவம் முதலியவற்றை முழுவதுமாகத் தீர்த்துக் கட்டுகிற திருநீறையும், ருத்ராட்ஷத்தையும் தனது திருமேனி முழுவதிலும் அகிலாண்டேஸ்வரி அணிந்து கொண்டாளாம். பராசத்திக்கு ஏது பழியும், பாவமும்? நமக்கு வழி காட்டுவதற்காகத்தானே அம்பிகையே ருத்ராட்ஷம் அணிந்து கொள்கிறாள்!. எனவே பெண்கள் தாராளமாக அம்பிகை காட்டும் வழியைப் பின்பற்றி ருத்ராட்ஷம் அணிய வேண்டும். மேலும்,                 சிவ மஹாபுராணத்திலும் பெண்கள் கட்டாயம் ருத்ராட்ஷம் அணிய வேண்டும் என்று சிவபெருமானே வலியுறுத்தியுள்ளார்.

எல்லா நாட்களிலும் பெண்கள் ருத்ராட்ஷம் அணியலாமா?

பெண்கள், தங்களுடைய தாலிக் கொடியில் அவரவர் மரபையொட்டி சைவ, வைணவச் சின்னங்களைக் கோர்த்துதான் அணிந்திருக்கின்றனர். அதை எல்லா நாட்களிலும் தானே அணிகிறார்கள்? சில பெண்கள், யந்திரங்கள் வரையப்பட்ட தாயத்து போன்றவற்றையும் எப்போதும் அணிந்திருப்பதுண்டே? இவற்றைப் போல் ருத்ராட்ஷத்தையும் எல்லா நாட்களிலும் கழற்றாமல் அணிய வேண்டும். ருத்ராட்ஷம் வாழும் இந்த உடம்பிற்காக அல்ல. உயிரின் ஆத்மாவிற்காகவே சிவபெருமானால் அருளப்பட்டது.

ருத்ராட்ஷம் கண்டிப்பாக அணிய வேண்டுமா?

இன்று பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை ஆண் – பெண் இருபாலரும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிய வேண்டும். ஏனெனில் நம்மைப் படைத்ததே பாவங்களைப் போக்கி சிவபெருமானின் திருவடியை அடைவதற்காகவே நம் வாழ்க்கையில் வரும் கஷ்டம், வேதனை, துன்பம், வலி இவைகளிலிருந்து விடுபடுவதற்காகவே ருத்ராட்ஷம் அணிய வேண்டும். ருத்ராட்ஷம் அணிந்தால் மறுவிறவி இல்லை மஹா பேரானந்தமே. ருத்ராட்ஷம் அணிவதை சிலபேர் நீ அணியக்கூடாது சுத்தமானவர்கள் தான் அணிய வேண்டும் என்று சொல்வார்கள்அதைப் பொருட்படுத்தக் கூடாது. இறைவனுக்கு ஒருவர் மீது கருணை இருந்தால் மட்டுமே ருத்ராட்ஷம் கழுத்தில் அணியும் பாக்கியம் கிடைக்கும். ருத்ராட்ஷம் முழுக்க முழுக்க சிவபெருமானுடையது. சிவபெருமான் கண்களை விழித்து 1000 வருடங்கள் கடும் தவம் இருந்து அவர் கண்களில் இருந்து தோன்றியதே ருத்ராட்ஷம். ருத்ராட்ஷத்தை அணிந்து கொண்டவர்கள் சிவ குடும்பத்தில் ஒருவராவார். சிவபெருமான் தன் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு கஷ்டத்தையும், துன்பத்தையும் கொடுப்பாரா?.  அதனால் யார் என்ன சொன்னாலும் கண்டிப்பாக ருத்ராட்ஷத்தை அணியவேண்டும். ருத்ராட்ஷதை அணிந்த பின் எந்த சூழ்நிலையிலுமே கழற்றவே கூடாது. நீங்கள் இப்பொழுது எப்படி வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கின்றீர்களோ அதேபோல் வாழ்ந்தால் போதும் இதில் எவ்வித மாற்றத்தையும் செய்யத் தேவையில்லை. நெற்றியில் திருநீறு அணிந்து ஓம் நமசிவாய சொல்லி வந்தாலே போதுமானது.

நீத்தார் கடன் (திதி), பெண்கள் தீட்டு, கணவன் – மனைவி இல்லறதாம்பத்யம் நேரங்களில் ருத்ராட்ஷம் அணியலாமா?

முக்கியமாக இம்மூன்று விஷயங்களுமே இயற்கையானதே. இதில் எந்த நிகழ்ச்சியும் செயற்கையானதே கிடையாது. நீத்தார் கடன் போன்றவற்றை செய்யும் போது அதை செய்விப்பவரும், செய்பவரும் ருத்ராட்ஷம் அணிந்திருப்பது அவசியம். இதனால் பித்ருக்களின் ஆன்மாக்கள் மகிழும் என்று சிவபெருமானே உபதேசித்திருக்கிறார். இனியும் ஏன் சந்தேகம் ஆகையால் இம்மூன்று நிகழ்ச்சிகளின் போது கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணியலாம். அதனால் பாவமோ, தோஷமோ கிடையாது.

சரி ருத்ராட்ஷத்தை அணிந்து கொண்டேன், இதன் பலன்கள் தான் என்ன?

நிராடும் போது ருத்ராட்ஷம் அணிந்திருந்தால் கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்கின்ற புராணங்கள், கங்கையில் மூழ்கினால் பாவம் போகும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். பாவங்களினால் தான் நமக்குக் கஷ்டம் உண்டாகிறது. ருத்ராட்ஷம் அணிவதால் கொடிய பாவங்கள் தீரும். இதனால் நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களும் படிப்படியாகக் குறைந்து விடும்.
மேலும் ருத்ராட்ஷம் அணிபவருக்கு லஷ்மி கடாஷ்சமும், செய்யும் தொழிலில் மேன்மையும், சகலவிதமான ஐஸ்வர்யங்களும் ஏற்பட்டு பகவானின் பேரின்பமும், ஆனந்தமும் கிடைக்கும் என்று சிவ மஹா புராணம் அறுதியிட்டுக் கூறுவதையும் கருத்தில் கொள்க.
இது மட்டுமல்ல ருத்ராட்ஷம் அணிவதால் இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்றவற்றின் தீவிரம் குறைவதாக வெளிநாட்டவர்களின் ஆய்வுகள் கூறுகின்றன. எனவே தூங்கும்போதும் கூட ருத்ராட்ஷத்தைக் கழற்றி வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வேலை வாய்ப்பு இல்லாதவர்களும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிந்து தினந்தோறும் 108முறை பஞ்சாட்சரத்தை சொல்லிவந்தால் 18 மாதத்தில் மேற்கூறிய பிரார்த்தனைகள் நிறைவேறும்.

ருத்ராட்ஷம் அணிவதால் கடவுளின் கருணை கிட்டுமா?

சர்வ நிச்சயமாக அவன் அருளாலே அவன் தால் வணங்கி அவர் கருணை செய்தால்தான் அவருடைய நாமத்தைக்கூட நாம் சொல்ல முடியும். அப்படியிருக்க அவர் ருத்ராட்ஷத்தையே நமக்கு அளித்துள்ளாரே அதனால் திருநீறு தரித்தல், ருத்ராட்ஷம் அணிதல், பஞ்சாட்சர மந்திரமான “ஓம் நமசிவாய” உச்சரித்தல், இம்மூன்றும் ஒரு சேரச் செய்து வந்தால் முக்தி எனும் மஹா பேரானந்தத்தை அடைவீர். இம்மூன்றும் இந்து தர்மங்கள், தர்மத்தை விடாதவர்களை இறைவன் கைவிடமாட்டார். மேலும் நவகிரஹங்கள் நன்மையே செய்யும், (ஏழரைச் சனி, அஷ்டமச்சனி, ராகு-கேது) தோஷத்தின் தாக்கங்கள் குறையும். ருத்ராட்ஷம் அணிந்திருக்கும் வேலையில் உயிர் பிரிந்தால் சிவபெருமான் திருவடியை அடைந்து நற்கதி எற்படும். பேய், பிசாசு, பில்லி, சூனியம், மந்திரம், தந்திரம், இவை அனைத்தும் ருத்ராட்ஷம் அணிந்திருப்பவர்களை ஒன்றுமே செய்யமுடியாது. ஆகையால் ஒவ்வொருவரும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிய வேண்டும்.

இத்தனை மேன்மைகள் இருந்தும் சிலர் திருநீறு, ருத்ராட்ஷம் அணியத் தயங்குகிறார்களே?

உலகில் மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் தத்தமது மத சின்னங்களை அணிய வெட்கப்படுவதில்லை. நாம் நமது மதச் சின்னங்களாகிய விபூதி, ருத்ராட்ஷம் மற்றும் நமசிவாய என்ற ஜபம் ஆகியனவற்றை ஏன் விடவேண்டும்? இதற்காக யாராவது நம்மைக் கேலி பேசினாலும் பொருட்படுத்தக்கூடாது. அப்படிப் பேசுகிறவர்களா நமக்குச் சோறு போடுகிறார்கள்அவர்களா நம்மைக் காப்பாற்றுகிறார்கள்ஆனால் மதச் சின்னங்களை அணிந்து நமசிவாய என்று எல்லாக் காலத்திலும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள சிவபெருமான் நிச்சயம் காப்பாற்றுவார். அவரவர், தங்கள் வாழ்க்கையிலேயே இதை அனுபவப் பூர்வமாக உணரலாம். ருத்ராட்ஷம் அணிபவர்கள் கண்டிப்பாக எந்த சூழ்நிலையிலும், ருத்ராட்ஷதைக் கழற்றவே கூடாது. யார் என்ன சொன்னாலும் அதைப் பொருட்படுத்த வேண்டாம். சிவபெருமானின் அனுக்கிரஹமும், ஆசீர்வாதமும் இருந்தால் மட்டுமே ஒருவருக்கு ருத்ராட்ஷம் கிடைக்கும்.

ஓம் நமசிவாய”

குறிப்பு :
மனநிலை பாதித்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், ஆதரவற்றவர்கள், நோயுற்றவர்கள், பிரார்த்தனை வைப்பவர்கள், கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிய வேண்டும். ஏனெனில் அவர்களை சிவன் தன்கண்போல் காப்பார்.

பத்ம புராணம் கூறவது:
எவன் ஒருவன் சைவனானாலும், வைஷ்ணவனானாலும், சாக்தனானாலும், காணாபத்யனானாலும், சௌரனானாலும் இறக்கும் தருவாயில் சிரசில் ருத்ராட்ஷத்தை தரித்திருப்பானாகில், எல்லா பாபங்களினின்றும் விடுபட்டு மறு பிறவியில் சகல சுகங்களையும் அனுபவித்து மோக்ஷத்தை கிரமமாய் பெறுவான்”..                                                     பத்ம புராணத்தில் பரமேஸ்வரன் தன் குமாரனாகிய கார்திகேயனுக்கு ருத்ராக்ஷத்தின் மகிமையை வர்ணிக்கிறார். ருத்ராக்ஷத்தைப் பார்ப்பது லக்ஷம் பங்கு புண்ணியாமானால், அதனை அணிவது அதினினும் 10 கோடி பங்கு புண்ணியத்தைப் பயக்கும்.
ருத்ராக்ஷம் தீர்த்தங்களிலும் விசேஷமான தீர்த்தம் என கருதப்படுவதால் அதை அணிந்து கொண்டு செய்யும் பூஜை, ஜபம், தானம், பிதுர்கடன்கள் எல்லாம் நூறு மடங்கு விசேஷ பலனைக் கொடுக்கும். ருத்ராக்ஷத்தால் புனிதமாக்கப்பட்ட நீரை உடலில் தெளித்துக்கொள்ளவேண்டும். ஆகர்ஷண சக்தி பெற்ற இந்த ருத்ராக்ஷம் அணிபவருக்கு அவர்கள் நல்ல மனிதர்களைச் சந்திக்கையில் அவர்களது நல்ல சக்திகளை ஆகர்ஷிக்கும் சக்தி உண்டாகும்.

பிரதோஷத்தின் பலனும் மகிமையும்

clip_image002

பிரதோச வழிபாட்டினைக்
கடைப்பிடித்து சகல நலனும் பெறுவோமாக

பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம்.

பொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனை அனைவரும் வணங்குகின்றனர். இந்த இடத்தில் “அனைவரும்” என்பது மனிதர்களை மட்டும் குறிக்கவில்லை. முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு ஆகியோரையும் குறிக்கும். அந்த நேரத்தில் சிவனும் ஷேம நலத்திற்காக வழிபாட்டில் ஈடுபடுவார் என்பது ஐதீகம்.

எனவே, அனைத்து தரப்பினரும் வழிபாடு செய்யும் நேரத்தில், நாமும் பிரார்த்தனை செய்தால், இதயம் கனிந்து ஈசன் நமக்கு அதிகமான நலன்களை வழங்குவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

அதற்கடுத்தப்படியாக வாகனத்திற்கு மரியாதை தரக்கூடிய வழிபாடு பிரதோஷம் ஆகும். சிவனின் வாகனமான நந்தி பகவானுக்கும் மரியாதை செய்யக் கூடியது பிரதோஷ வழிபாடு.

நான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர். சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பவரும் நந்தி பகவான் என்று ஐதீகம் கூறுகிறது. எனவேதான் அவருக்கு அனைத்து வேதங்களும், இதிகாசங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது.

மெத்தப் படித்திருந்தாலும் நந்தி பகவான் மிகவும் அடக்கமானவர். சிவன் கோயில்களில் அவர் அமர்ந்திருக்கும் தன்மையே இதனை உணர்த்தும் விதமாக இருக்கிறது. அனைத்தையும் கற்றறிந்த பின்னர் அதனை மனதில் அசைபோடும் வகையில் அவர் அமர்ந்திருப்பது போல் தோன்றும்.

எனவே, பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோஷங்கள் நீங்குகிறது. எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்து, வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.

காராம்பசுவின் பாலைக் கொண்டு நந்தியையும், சிவனையும் வழிபட்டால் பூர்வ ஜென்ம வினைகள், பிராமணனைக் கொன்ற சாபம், பெண்ணால் வந்த சாபம் உள்ளிட்டவை நீங்கும் என விரதமாலை நூல் கூறுகிறது.

எனவே, பிரதோஷ காலத்தில் ஈசனை வழிபடுவதன் மூலம் அனைத்து தரப்பு மனிதர்களும் பலன் பெற முடியும். குறிப்பாக சாயும்காலம் (மாலை) வழிபாடு மேற்கொள்வது கூடுதல் பலனைத் தரும்.

120 பிரதோஷ சிவன் கோவிலுக்குச் சென்று மாலை 4.30 – 6.00 மணிக்குள் நடைபெறும் பிரதோஷ பூஜையில் கலந்து ஓம் நமசிவாய என்று 108 முறை எழுத்தாலோ அல்லது மனதாலோ பிரார்த்தனை செய்து சகல செல்வங்களும் பெற்று மறு பிறவி இல்லாமல் முக்தி எனும் மஹா பேரானந்தத்தை பெருங்கள்

திருச்சிற்றம்பலம்”

பிரதோஷ தினம் நாள்காட்டி

01.01.11 சனி மஹா 28.06.11 செவ்வாய்

17.01.11 திங்கள்                              12.07.11 செவ்வாய்

     31.01.11 திங்கள்                              28.07.11 வியாழன்

     16.02.11 புதன்                                   11.08.11 வியாழன்

     02.03.11 புதன்                                   26.08.11 வெள்ளி

     17.03.11 வியாழன்                         09.09.11 வெள்ளி

     31.03.11 வியாழன்                         25.09.11 ஞாயிறு

15.04.11வெள்ளி                             09.10.11 ஞாயிறு

30.04.11 சனி மஹா 24.10.11 திங்கள்

15.05.11  ஞாயிறு                           08.11.11 செவ்வாய்

     30.05.11 திங்கள்                              23.11.11 புதன்

     13.06.11 திங்கள்                              07.12.11 புதன்

                                   22.12.11 வியாழன்
சிவனை நினை- சிவனை துதி- சிவயொகம்பெறு

துணிந்து நில்… எதிலும் வெல்! விவேகானந்தர்

clip_image001

“”என் சிங்கக்குட்டிகளே! இந்த வாழ்வு வரும் போகும். செல்வமும் புகழும் போகமும் சில நாட்களுக்கே. நீங்கள் பெரும்பணிகளைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில்நம்பிக்கைக் கொள்ளுங்கள். என்ன @வண்டு மானாலும் நடக்கட்டும். கவலைப்படாதீர்கள். குட்டிநாய்களின் குரைப்புக்கும், வானத்தில் முழங்கும் இடியோசை கேட்டும் நடுங்காதீர்கள். நிமிர்ந்து நின்று வேலை செய்யுங்கள். இந்த தேசத்தில் பிறந்த புழு கூட உண்மைக்காகவே உயிர்விட வேண்டும்,” என்று முழக்கமிட்டவர்வீரத்துறவி விவேகானந்தர்.

கோல்கட்டாவில்,விஸ்வநாத தத்தர்- புவனேஸ்வரி அம்மையாரின் தவப்புதல்வரறாக, 1863, ஜனவரி 12ல் அவதரித்தார். நரேந்திரன் என பெயர் இட்டனர். வடமொழி, ஆங்கில நூல்கள் பலவற்றைக் கற்று ஆன்மிக ஞானம் அடைந்தார். ராமகிருஷ்ண பரமஹம்சர் அவரைத் தனது சீடராக ஏற்றுக்கொண்டார். துறவியான பிறகு அவருக்கு வந்த பெயர் விவேகானந்தர். விவேகம் இருந்தால் தான் ஆனந்தம் பிறக்கும் என்பதைத் தன் பெயர் மூலம் இந்த உலகுக்கு சுட்டிக்காட்டினார்.இமயம் முதல் குமரி வரை பயணம் செய்து, ராமகிருஷ்ணரின் உபதேசங்களைப் போதித்தார். இந்து மதத்தின் பெருமையை உலக அரங்கில் நிலைநாட்ட, சிகாகோவில் நடந்த சர்வமத மகாசபை மாநாட்டில் பங்கேற்று, அரியதொரு சொற்பொழிவை நிகழ்த்தினார். மற்றவர்களெல்லாம் அங்குவந்திருந்தவர்களை “லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன்’ என அழைத்து பேச்சை ஆரம்பிக்க, விவேகானந்தர் தனக்கே உரிய தனித்துவத்துடன் “டியர் பிரதர்ஸ் அன்ட் சிஸ்டர்ஸ்’ என ஆரம்பித்து, உலக மக்கள் யாவரும் இந்தியர்களின் சகோதர சகோதரிகள் என்ற கருத்தை ஆணித்தரமாகச் சொன்னார். அந்த ஒரு வார்த்தைக்கே அரங்கம் அதிர்ந்தது.

“”கோழைகளுடனோ அல்லது அர்த்தமற்ற அரசியலுடனோ எனக்கு எந்த விதத்தொடர்பும் இல்லை. கடவுளும் உண்மையும் தான் இந்த உலகிலுள்ள ஒரே அரசியல். அது தான் எனக்கு மிகவும் பிடிக்கும். மற்றவை எல்லாம் வெறும் குப்பை,” என்று முழங்கினார்.ஒருநாள், அவர் தற்செயலாகக் கைகட்டி கம்பீரமாக கூட்ட அரங்கின் முன் நின்றதை ஒரு போட்டோகிராபர் படமெடுத்தார். அதை சிகாகோவிலுள்ள “கோஸ்லித்தோ கிராபிக் கம்பெனி’ போஸ்டராக அச்சடித்து நகர் முழுக்க தொங்க விட்டது. அந்தப் படம் தான் இன்றுவரை விவேகானந்தரின் கம்பீர தோற்றத்தை நம் மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.

விவேகானந்தர் எல்லா உயிர்களையும் தமதாகவே கருதினார். அதற்கு காரணம் அவர் குருவிடம் கற்ற பாடம் தான். குரு ராமகிருஷ்ணர், தொண்டை புற்றுநோயால் சாப்பிட முடியாமல் சிரமப்பட்டார்.””நீங்கள் தான் காளி பக்தர் ஆயிற்றே! அவளிடம் நேரில் பேசுவீர்களே! போய் அவளிடம் குணமாக்க கேளுங்கள்,” என்றார் விவேகானந்தர்.””கேவலம், இந்த உடலைக் குணமாக்குவதற்காக அவளிடம் நான் கையேந்தமாட்டேன்,’ ‘ என உறுதியாகச் சொல்லிவிட்டார் குருநாதர். விவேகானந்தர் வற்புறுத்தவே, வேறு வழியின்றி காளியை வழிபட்டு வந்தார்.””அம்பாள் என்ன சொன்னாள், குணமாக்கி விடுவாளா?” என்று விவேகானந்தர் ஆவலுடன் கேட்கவே,””இல்லை! நீ சாப்பிடாவிட்டால், உனக்காக பல வாய்கள் சாப்பிடுகிறதே! அந்த திருப்தி போதாதா!” என அவள் திருப்பிக்கேட்டாள். நான் வந்துவிட்டேன்,” என்றார்.மற்றவர்கள் சாப்பிட்டால் தான் சாப்பிட்டது போல என்று நினைத்த குருவின் சமரசப் பார்வை, விவேகானந்தரையும் ஒட்டிக்கொண்டது. ஜெய்ப்பூர் மன்னர் அரண்மனைக்கு வந்தார் விவேகானந்தர். அங்கே இசைநிகழ்ச்சி நடந்தது. துறவி என்பதால் அதைக்காண செல்லாமல், தன் அறையில் இருந்தார். அப்போது, ஒரு பெண் பாடிய பாடல் அவருக்கு கேட்டது.

அதில் சோகம் இழையோடியது. அதைக் கேட்டு மனம் இளகிய அவர் இசைநிகழ்ச்சி நடந்த இடத்துக்குச் சென்றார்.””இவள் நடனப்பெண். இழிந்த தொழில் செய்பவள். மற்றவர்கள் பார்வையில் இவள் இழிந்தவளாக இருக்கலாம். ஆனால், இவளது பாடல் எனக்கு புதிய பாடத்தைத் தந்தது. தன் வாழ்க்கை சிரமத்தை அவள் பாடலாகப் பாடினாள். அதைக் கேட்டுஉள்ளம் உருகினேன்,” என்றார். அவளை அம்பாளாக பார்த்தார். அவரது உருக்கமான பேச்சைக்கேட்ட அவள், அவரது வருகை தன்னை ஆசிர்வதித்ததாகச் சொன்னாள். இழிந்த தொழில் செய்தவர் களையும் தெய்வமாகப் பார்த்தவர் விவேகானந்தர். அலைகள் சீறும் கன்னியாகுமரி கடலில், அவர் நீச்சலடித்துச் சென்று நடுப்பாறையில் அமர்ந்து தியானம் செய்த வீர வரலாறை உலகம் மறக்காது. அந்த வீரத்துறவியின் இரக்கம் நம்மை ஆட்கொள்ளட்டும். அவரது வீரம் பொதிந்த வார்த்தைகள் நமக்கு துணிவைத்தரட்டும். அந்தத் துணிவு வெற்றிக் கனியை பறித்துத் தரும்.

இன்று தேசிய இளைஞர் தினம்:இன்றைய இளைஞர்கள் கையில் தான் நாட்டின் எதிர்காலமே உள்ளது. இளைஞர்களின் முன்னேற்றத்தை பொறுத்து தான் நாட்டின் முன்னேற்றமும் அமைகிறது. இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவரும், ஆன்மிகவாதியுமான சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான ஜன. 12, இந்தியாவில் ஆண்டுதோறும் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளில் கட்டுரை, கவிதை, யோகா, சொற்பொழிவு, கருத்தரங்கு, விளையாட்டுப் போட்டி, பேச்சுப்போட்டி, ஊர்வலம் ஆகியவை நடைபெறுகின்றன.

இந்தியாவின் கலாச்சாரம், பண்பாட்டை உலகுக்கு எடுத்துக்காட்டியவர் விவேகானந்தனர். “நூறு இளைஞர்களை தாருங்கள், இந்த நாட்டையே மாற்றிக்காட்டுகிறேன் ‘ என்று அவர் கூறினார். இது இளைஞர்கள் மேல் அவர் வைத்த நம்பிக்கையை காட்டுகிறது. இளைஞர்கள் முன்மாதிரியாக ஒருவரைப் பின்பற்றும்போது முழுவதும் அவர்களாகவே மாறிவிடாமல், அவர்களிடமுள்ள நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும் என்று விவேகானந்தர் வலியுறுத்துகிறார்.

இளைஞர்களின் பொறுப்பு : நாட்டில் 2001ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கின் படி 13 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை 42 கோடி பேருக்கு மேல் உள்ளது. இளைஞர்கள் டாக்டர், இன்ஜினியர், ஆசிரியர் போல அரசியலிலும் தங்களின் பங்களிப்பை அளிக்க வேண்டும். எனவே நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு இளைஞரிடமும் உள்ளது. இளைஞர்களின் சக்தியை முழுமையாக நல்வழியில் பயன்படுத்தினால் இந்தியாவின் வல்லரசு கனவு எளிதில் நிறைவேறலாம். இளைஞர்களின் கல்வி, வேலைவாய்ப்புக்கு அரசு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும்

நன்றி ; தினமலர் Smile

“பகவத்கீதை”

கீதையின்சாரம்-முன்னுரை

கண்ணபிரான் போதனையான “பகவத்கீதை” ,”கீதையின் சாரம்” மனித வாழ்க்கையே போராட்டம் எனபதை பெரும் போர்களத்தில் வைத்தே பகவான் கிருஷ்ணர் தனது உண்மையான திடமான விசுவாசியும், உற்ற நண்பனும், தூய தொண்டனும், உயிர்த் தோழனும், உறவினனும் அதே காலத்தில் வாழ்ந்த மக்களுள் ஞானம், வீரம், புகழ் மிக்க போர் வீரனுமான அர்ச்சுனனுக்கு அவன் மனம் சோர்ந்து காண்டீபத்தையே கண்ணன் காலடியில் போட்டு மண்டியிட்டு மன்றாடிய போது, அர்ச்சுனனை உண்மையான ஞானி, யோகி, பக்தன், விவெகி, விராதி வீர்ன், அதிவிவேகி என்பதை உணர்ந்து கொண்டான்.

இப்படியானவன் சீடனாக அமைவது அருமையிலும் அருமை. எனவே இவன் மூலமாகவே பல்லாயிரம் வருடங்களுக்கு முன் முறிந்து சிதைந்த பரம்பரையின் புதிய பரம்பரைத் தொடர்பின் முதல் சீடனாக அர்ச்சுனனை உருவாக்கி அவன் மூலமாகவே உலக மக்களுக்காக பகவத்கீதையை அர்சுனனக்கு உபதேசிக்கிறான் கண்ண்ன். இருகையாலும் அம்பு எய்யும் திறைமை கொண்ட அர்ச்சுனன் தன் புலமை மிக்க அரும்பெரும் ஞானத்தால் தன் உள்ளத்தில் உதிர்க்கும் அத்தனை சந்தேகங்களையும் வெளிக்காட்டி கேள்வி கேட்டு வாதிட்டு அறிகின்றான். இருகையாலும் அம்பு எய்யும் திறைமை கொண்ட அர்ச்சுனன் தன் புலமை மிக்க அரும்பெரும் ஞானத்தால் தன் உள்ளத்தில் உதிர்க்கும் அத்தனை சந்தேகங்களையும் வெளிக்காட்டி கேள்வி கேட்டு வாதிட்டு அறிகின்றான்.

சதித்திட்டங்களால் அர்ச்சுனனுடைய அரசை ஆக்கிரமிக்க எண்ணிய துரியோதனின் மனத்தையும், போர்களத்தின் மத்தியிலேயே அர்ச்சுனன் மனதில் நடந்து கொண்டிருக்கும் நிலமையையும் கண்ணனால் புரிந்து கொள்ள முடிந்தது.

எதற்கும் அச்சம் பயம் கொள்ளாத அர்ச்சுனன் போர்க்களத்தில் உயிர் நஷ்டத்தை எண்ணியே மனம் தளர்ந்தான். காண்டீயம் அவன் கை விட்டு நழுவி விடுமளவு பொருமையை இழந்தான். இனியும் இங்கு நிற்க என்னால் முடியாது கண்ணா என்றான். போரிலெ வெற்றியைக் கண்டும் மகிழ்ச்சி கொள்ளாமல் உறவினர், நன்பர்கள், அன்பர்களின் உயிர் நஷ்டத்தைக் கண்டே கலங்கினான்.

எவர்களுக்காக என் வாழ்க்கையையும் போர் வெற்றியையும், அரசையும் விரும்பி போர்க்களம் வந்தவன் தன் குலத்தினரோடும், தன் உறவினரோடும் உள்ள இரத்தபாசம் அவனுக்கு ஏற்பட்ட இரக்கத்தால் வெளிப்படுகிறது.

அர்ச்சுனன் மூலமாக இவையாவும் அறிந்த கண்ணபிரானுடைய முடிவான தீர்மானம் நீதி நேர்மையில்லாத அநியாயமான அக்கிரமக்காரர்களை, சமூக விரோதிகளை சண்டானர்களை கொண்ர்றொழிக்க வேண்டும். நல்லவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற முடிவான விருப்பம் கொண்டான்.

அர்சுனா! தகாத இடத்தில் தகாத நேரத்தில் ஏன் இவ்விதம் கோழையானாய்? உனக்கு இது அழகல்ல உன் ஷத்திரிய தர்மத்திற்கே விரோதமானது, கேடானது. அர்ச்சுனா! உலகில் பன்றிகளைப் போல் வாழ்வதற்கல்ல மனிதன் பிறந்திருப்பது.

தருமஷேத்திரமான குருஷேத்திரமே போர்க்களமானது. உன் இரத்த பாச எதிரிகளால், உன் மனைவி துரொபதையின் துகில் உரிந்த சண்டாளர் அவளின் உடை களைந்தபோது, பிஷ்மர் துரோணர் மற்றும் மதிப்புக்குரிய பெரியவர்கள், மற்றும் மாவீரர்கள் எல்லோரும் மெளனமாக பேசாதிருந்தார்கள். நீ போரிடாது விட்டால் உன் மதிப்பும் போய்விடும். இந்த அவமதிப்பை உன்னால் சகிக்கவே முடியாது.

போரிட்டவாறு இறப்பாயானால் சுவர்க்கம். வெற்றியானால் பெருமையும் அரசையாளும் மகிமையும் கிடைக்கும். போர்புரிவதே உன்கடமை. அதை நடுநிலையான மனதுடன் செய். வெற்றி தோல்வியில் பற்று வைக்கதே. இந்த அநியாய அக்கிரம சண்டாளர்கள் அசுர மனம், அரக்க குணம் கொண்டவர்கள். சமூகத்திற்க்கு உதவாதவர்கள். இவர்களை கொண்றொழிக்கவே வேண்டும்.கொல்வதற்கு பயப்படாதே. இவர்களை ஏறேற்கனவே கொன்றுவிட்டேன். கொல்வதற்கு பயபடாதே. உன் பக்கம் நான் இருக்கிறேன். உனக்காகவே சாரதியாகி தேரோட்டியாக செயல்படுகிறேன். எனவே நீ கவலைப்படாதே. தொடர்ந்து போர் செய். உனக்கே வெற்றி நிச்சயம்.

நல்லவர்களை காப்பாற்றவும், கொடியர்களை அழ்த்து தர்மம், நீதியை நிலை நாட்டவே நான் விரும்பி அவதரிக்கிறேன். இவ்வாறு கண்ணன் போதிக்கிறார் பகவத் கீதையில்.

கீதையின்-சாரம்-முன்னுரை-முற்றிற்று

01. குருசோத்திரப் போர் களத்தில் படைகளை கவனித்தல்

பாண்டவர்களின் ஒப்பந்தப்படி பன்னிரண்டு ஆண்டுகள் தர்மரும் சகோதரர்களும் காட்டில் வாழ்ந்தார்கள்.ஓராண்டு காலம்
எவரும் அறியாமல் மாறு
வேடத்தில் வாழ்ந்தார்கள்.இவ்வித கஷ்டங்களை சகித்து ஒப்பந்த காலமும் முடிவானது.தங்களுக்குச் சேர வேண்டிய பாதி ராச்சியத்தை உரிமையுடன் பெற்றுக் கொள்ள வந்தார்கள்.

அவர்களுடைய நியாயமான வேண்டுகளை பங்காளி துரியோதனன் கொடுக்க மறுத்துவிட்டான்” பாதி ராச்சியயமாவது?ஊசிமுனை நிலம் கூடக் கொடுக்கமுடியாது. முடிந்தால் என்னுடன் போரிட்டு வென்று ராச்சியத்தை பெற்றுக்கொள்ளட்டும் என்று அறுதியிட்டுக் கூறிவிட்டான்.

கண்ணன்: . ஜானார்த்தனா! அத்தகைய பாவி மனிதர்கள் வெகுகாலம் நரகத்தில் கிடந்து உழலவேண்டும்.இது உலகறிந்த ஊண்மை.

போரின் இத்தகைய விளைவை நீ முன்பே அறிந்திருந்தும் ஏன் போரிட துணிந்து முன் வந்தாய்?

அர்ச்சுனன்: இதுதான் வியப்பாகவும் வேதனையாகவும் இருக்கிறது.நாங்கள் பெரும் பாவம் செய்ய தீர்மானித்திருக்கிறோம்.அரசாட்சிக்கும், அதன் சுகபோகங்களிற்குமாகச் சொந்த குடும்பதாரையே கொல்லத் துணிந்தோமே என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது.மதி கெட்டசெயல் இது

தர்மரும் சகோதரர்களும் தாய் குந்திதேவியிடம் நிலமையைத் தெரிவித்தார்கள்.” உரிமையைப் பெறப் போராடவும் தயங்க வேண்டாம்” என்றாள் தாய்.தாயின் உத்தரவு பெற்றதும் பாண்டவர்கள் போருக்கு ஆயத்தமானார்கள்.சமாதானத் தூதுவர்களாக பல அறிஞர்கள்,அரசர்கள், பெருமக்கள் சமாதானம் பேசியும் முடியவில்லை.ஆணவமும் அகம்பாவமும் கொண்ட துரியோதனன் எல்லோரையும் அலட்சியம் செய்து விட்டான்.

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா பலமுறை தூது சென்றும் தோல்வி கண்டார் அவரையும் துரியோதனன் மதிக்கவில்லை.காரணம் பிள்ளைப் பருவத்தில் கண்ணன் இடையர் குலத்தில் வளர்ந்தவன்.இடையர்களோடு கூடிப் பசுக்கூட்டம் மேய்த்தவன்.இதனல் கண்ணனைப் பற்றி எதுவும் அறியாமல் ஏளனமாய் எண்ணிக் கொண்டான்.அத்துடன் துரியோதனன் ராஜமாளிகையில் அரசயோகத்தில் வாழ்ந்தவன்.அர்ச்சுனன் கன்ணனனை தன்னுறவினனாகவும் தோழனானகவும் உயிருக்குயிரான நண்பனானகவும் ஓர் அவதார புருஷனானகவும் எண்ணி இதயத்தை பறி கொடுத்திருந்தான்.அதனால் அர்ச்சுனன் கண்ணனுக்கு கெளரவம் கொடுத்தான்.

போரே முடிவானது

போருக்கு ஆயத்தனமான இரு அணீயினரும் போர்தான் என்று தீர்க்கமான முடிவுக்கு வந்து விட்டார்கள்.அவர்கள் தங்களுக்கு உதவியாகப் பக்க பலமாக பல உறவினர்களையும், அன்பர்களையும், நண்பர்களையும் ,அபிமானிகளையும், ஆதரவாளர்களையும்,சிற்றரசர் பேரரசர் போன்றவர்களையும் பலதரப்பட்ட வீரர்களையும் திரட்டிக் கொண்டார்கள்.

போருக்கு வேன்டிய கஷரத துரக பதாதி ( யானை தேர், குதிரை,கலாள்) படைகளும் மற்றுமக்கால முறைப்படி தேவைப்படும் படைக்கலன்களான அம்புவில்லு , ஈட்டி, வாள்,சூலம்,வேல், பறைகள்( மேளங்கள்) சங்குகள், ஊதுகுழல்கள் யாவும் திரட்டி விட்டார்கள்.திகதி,நாள், நேரம் யாவும் முற்றாகி விட்டது.போர்ப்பிரகடனமும் ( பிரசித்தம்)செய்யப்படுகின்றது.

ஆனால் 56 தேசத்திற்கு அதிபதியான கண்ணபிரானனின் உதவியைக்கேட்டு எதிரிகளான இருவரும் ஒருவரயொருவர் அறிந்து கொள்ளாமல் செல்லுகின்றார்கள்.ஆனால் இருவரும் ஒரே சமயத்தில் புறப்பட்டு முன்பின்னாக செல்கிறார்கள்.துரியோதனன் முன்னும் அர்ச்சுனன் தாமதமாய் பின்னரும் சென்றார்கள்.

அச்சமயம் ஸ்ரீகிருஷ்ணர் உறங்கி கொண்டிருந்தார் .முதலில் சென்ற துரியோதனன் அகம்பாவத்துடன் கண்ணனின் தலைமாட்டருகில் ஆசனத்தில் அமர்ந்திருந்தான்.பிந்திச் சென்ற அர்ச்சுனன் கண்ணனின் காலருகில் கைகூப்பையபடியே அமைதியாக அடக்கமாக நின்றான்.

ஸ்ரீகிருஷ்ணர் கண் விழித்தமும் தன் கால்மாட்டில் நின்ற அர்ச்சுனனை முதலில் பார்த்து புன்னகையோடு அவனுக்கு நல்வரவு கூறினார்.அதேசமயம் பின்னுக்கு திரும்பியவர் தலைமாட்டில் துரியோதனன் ஆசனத்தில் உட்கார்ந்திருந்த்தைக் கண்டு அவனையும் வரவேற்று உபசரித்தார்.

பாண்டவர்களுக்கும் தங்களுக்கும் போர் தொடங்க முடிவாகிவிட்டது.என்ற விபரத்தை கூறிய துரியோதனன் தான் முதலில் வந்திருப்பதாகவும் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் வேண்டினான்.அப்படியா? ஆனால் நான் கண் விழித்தும் முதலில் அர்ச்சுனனைத்தான் கண்டேன். இருந்தாலும் எனக்கு நீங்கள் இருவரும் சமமே.அனாலும் பரிசுகள் வழங்கும் போது

சிறியவர்களுக்குத்தான் முதலில் வழங்குவது வழக்கம்.அதுவே முறை என்று கூறிய ஸ்ரீகிருஷ்ணர் அர்ச்சுனனைப் பார்த்து அர்ச்சுனா! எனது பெரிய சேனை ஒருபுறம் இருக்கும் .மறுபுறம் நான் தனியாகவும் ஆயுதம் எதுவும் எதுவும் எடுக்காத நிராயுதபாணியாகவும் இருப்பேன்.இந்த இரண்டில் எதை நீ விரும்புகிறாய் என்பதைக் கூறவேண்டும் என்றார்.

இதைக்கேட்ட அர்ச்சுனன் ஆயுதம்
ஏந்தாத நிராயுத பாணியாக நீர் மட்டும் என் பக்கம் இருந்தால் போதும் என்றான்.துரியோதனன் ஸ்ரீகிருஷ்ணருடைய பெரும் சேனைகளையே கேட்டுப் பெற்றான் பெருமகிழ்ச்சியோடு சென்றான்.அதே சமயம் கிருஷ்ணர் அர்ச்சுனா!” எனது பெரும் சேனைப்பலத்தை விட்டு விட்டு ஏன் இந்த தீர்மானத்திற்கு வந்தாய்”என்று கேட்டார்.கிருஷ்ணா! நீர் நிராயுதபாணியாய் ஆயுதம் எதுவுமே ஏந்தாமல் எனக்கருகே தேரோட்டியாய் இருந்து நான் வெற்றி பெற வேண்டும்.என்னுடைய இந்த விருப்பத்தை நீர் நிறைவேற்றினால் அதுவே போதும் என்றான்.அவன் விருப்பப்படியே ஸ்ரீகிருஷ்ணர் அர்ச்சுனனுக்கு ( பார்த்தனுக்கு) தேரோட்டியாக இணங்கிச் செயல்பட்டார்.இதுவே கண்ணன் சாரதியானதிற்கு காரணம்.

எங்கு இறைவன் இருக்கிறானோ
அங்கு வெற்றி நிச்சயம் என்பது தத்துவம்

பெரியப்பா,சித்தப்பா, பிள்ளைகளான பாண்டவர்களுக்கும் ( ஐவர்) கெளரவர்களான ( நூற்றியொருவருக்கும்) போர் நடப்பது முடிவாயிற்று.இருதரப்பாரிற்கும் பாட்டானார் மகரிஷி வேதவியாசர் .101 பிள்ளைகளுக்குத் தந்தையான மகராஜா ,திருதாட்டினர்,இவர் பிறவியிலே குருடர்.இவருடன் வேதவியாசர் மிகவும் பாசம் கொண்டவர்.அதனால் அவரிடம் வந்து மகனே ( திருதாட்டினர்) பெரும்போர் தொடங்கப்போகிறது.இதனால் பேரழிவு நிச்சயம்.இனியாராலும் தடுக்கவே முடியாது.இந்தப் போரை நீ பார்க்க

விரும்பினால் உனக்கு நான் “திவ்விய திருஷ்டி ( அருட்பார்வை) தருகிறேன். இதன் உதவியால் நீ இங்கிருந்த படியே போர்க்களக் காட்சிகளைத் தெளிவாக பார்க்க முடியும்.என்றார். இதைக்கேட்ட திருதாட்டினன் என் புதல்வர்களும் என் தம்பி பாண்டுவின் புதல்வர்களுமாக நம்குலத்தவர்கள் தாமே. தமக்குள் போரிடுவதை நான் விரும்பவில்லை .ஆனால் போர் நிகழ்ச்சிகளைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்றார்.

அப்படியானால் உன் உதவியாளன் சஞ்சயனுக்கும் திவ்விய திருஷ்டி அளிக்கிறேன்.அவன் போர்க்கள நிகழ்ச்சிகளையும் போராளிகளின் மனப்போக்கையும் நன்கு தெரிந்து உடனுக்குடன் சகல தகவல்களையும் தெரிவிப்பான் என்று கூறினார். அதனால் சஞ்சயனும் அருள்நோக்கைப் பெற்றான்.போர் தொடங்கியதிலிருந்து முடிவுவரை சகல நிகழ்ச்சிகளையும் அர்ச்சுனனின் தேர்ச்சாரதியான கண்ணபிரானின் செயல் திறன்களையும் அவரின் அரிய போதனைகளையும் அதேசமயம் அர்ச்சுனனின் கேள்விகளையும் அவரின் அரிய போதனைகளையும் அதேசமயம் அர்ச்சுனன் கேள்விகளையும் விபரமாக எடுத்துச் சொல்லிக் கொண்டே வந்தான்.

சஞ்சயன் ( காவல்க்கணர்) என்ற தேரோட்டியின் மகன். தேரோட்டிகளில் சஞ்சயனுக்கு மட்டுமே அக்காலம் தனிமதிப்பும் மரியாதையும் இருந்தது.இவன் அமைதியானவன்,அடக்கமானவன்,நல்நடத்தையானவன்,நல்லஞானமுள்ளவன்.பரமாத்மா கிருஷ்ணனுடைய பக்தன்.அவருடைய மகிமையை உண்மையான சொரூபத்தை பூரணமாக அறிந்தவன்.அக்காலம் அர்ச்சுனனும் சஞ்சயனும் இளமைமுதல் இணைபிரியாத நண்பர்கள்.சஞ்சயனுக்கு பகவான் வேதவியாசர் அளித்த தெய்வீக பார்வையால் அவனிருந்த இடத்திலிருந்தே திருதாட்டினருக்கு குருஷோத்திர போர் நிகழ்ச்சிகளை சொல்லிக்கொண்டே வந்தான்.

போர்முனை

அநுமான் கொடி பறந்து கொண்டிருக்க அழகான கம்பீரமான வெண்நிற புரவிகள்( குதிரைகள்) பூட்டிய கம்பீரமான ரதத்தில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா சாரதியாக அமர்ந்திருக்கிறார்.அவருக்கு பின்னால் காண்டீபதாரியாய் அர்ச்சுனன் அமர்ந்திருக்கிறான்.குறித்த நேரத்தில் ரதம் போர்க்களம் புகுந்தது.

இருபடையணிகளிலும் தம் உறவினர்களையும் , நண்பர்களையும் மற்றும் வேண்டியவர்களையும் கண்டான்.அர்ச்சுனன் போரில் இவர்கள் எல்லாம் இறந்து போவார்களே என்ற எண்ணமும் உண்டானது.சோகத்தால் மனம் தளர்ந்தான்.கண்ணா இருசேனைகளுக்கும் நடுவில் நம் ரதத்தை கொன்டுபோய் நிறுத்துங்கள்” என்றான்.அர்ச்சுனனுக்கு போர் ஆயத்தங்களை குறிக்கும் முரசங்கள் முழங்கியதும் அவனுக்கு உற்சாகம் பொங்கியது.ஏன் அர்ச்சுனா அவ்விதம் கேட்கிறாய் ? கண்ணா என்னுடன் போர் புரிய வந்திருக்கும் சகலரையும் பார்க்க விரும்புகிறேன் என்றான்.அர்ச்சுனனின் வேண்டுகோளின்படியே கண்ணன் ரதத்தை இருசேனைகளுக்கும் நடுவில் கொண்டு போய் நிறுத்தியதும் அர்ச்சுனா!இதோ உன்னுடன் போர் புரிய வந்திருக்கும் உறவினர்களான குருவம்சத்தவர்களை பார் என்றார்.அர்ச்சுனன் இடுபக்கப் படைகளையும் அவதானித்தான்.எதிர் அணியிலுள்ள சகலரையும் பாட்டனர்களான பீஷ்மர், தூரோணச்சாரியார், ஆசிரியர்கள் மற்றும் உறவினர்கள் யாவரையும் கண்டான்.மேற்கொண்டு இப்போர்க்களத்தில் யுத்தம் செய்ய வந்திருக்கும் வீரப்பெருமக்களை நான் பார்க்க வேண்டும் அல்லாமலும் எவர்களோடு நான் போரிட வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.அத்துடன் துரியோதனனுக்கு விருப்பமானதைச் செய்யும் நோக்குடன் வந்திருக்கும் பிற நாட்டு அரசர்களையும் பார்க்க ஆசைப்படுகிறேன்.

அதேசமயம்( கெளரவர்) துரியோதனன் படையின் பிரதம தளபதி பீஷ்மர் சிங்கம் கர்சிப்பதுபோல் சங்கொலி எழுப்பினார்.தொடர்ந்து அவர் படையினர்களும் போர் முரசங்கள் மற்றும் வாத்தியங்களை முழங்கினார்கள்.வஞ்சகன் துரியோதனன் அங்குமிங்குமாக ஓடி வியாசரிடமும் துரோரணச்சாரியரிடமும் வஞ்சமான முறையில் உரையாடி அவர்களை உசுப்பி உசார்ப்படுத்தி வைக்க பல அரசியல் தந்திரங்களை கையாளுகிறான்.காரணம் பெரியவர் பீஷ்மர் இருபகுதியாருக்கும் பாட்டனார்.ஆனால் தனது படைக்கு தலைமைத் தளபதி. இது இவனுக்கு ஓர் சந்தேகம்.அவர் இருதரப்பாரிடமும் பாசம் கொண்டவர்.அவனே தீர்மனிக்கிறான் அவர் தலைமை தளபதியாக இருந்தாலும்கூட பாண்டவர் படையை வெல்வது சந்தேகம். பாண்டவர் படைக்கே மிகப்பெரும் பலவானும் வல்லவனுமாகவிருக்கும் பீமசேனனின் படை எனது கெளரவர் படையை வென்றுவிடமுடியும் என்பதும் அவனை உறுதிப்படுத்தி மனதை உறுத்தியது.போர்முனையில் கெளரப்படையினரின் முழங்கக்கேட்டதும் பாண்டவர் படையும் போர் தொடங்க வாத்தியங்களை முழங்கியிருக்க வேண்டும்.ஆனால் அதற்குரிய ஆணை பிறப்பிக்கப்படவில்லை.அதேசமயம் வெண்நிறப்பிரவிகள் பூட்டிய சிறந்த ரதத்தில் அர்ச்சுனனோடு அமர்ந்திருந்த கிருஷ்ண பரமாத்மா தனது ” பஞ்சஷன்னியம்” என்னும் சங்கை எடுத்து எங்கும் பேரொலியாக கேட்க முழங்கினார்.

தொடர்ந்து அர்ச்சுனனும் தேவதத்தன் என்னும் சங்கை முழங்கினான்.தொடர்ந்து பீமன்,தர்மர்,நகுலன்,சகாதேவன் முறையே “பெளண்டிரம்”” அனந்த விசயம்””சுகோஷம்””மணீ புஷ்பகம்”ச்ங்குகளையும் முழங்கினார்கள்.வீறுகொண்டெழுந்த பாண்ட்வர்களின் சங்கநாதம் எல்லா திசைகளிலும் பரவி எதிரொலித்தது.முறைகேடாக ராச்சியத்தை அபகரித்துக் கொண்ட கெளரவர்களின் நெஞ்சங்களை நடுநடுங்க வைத்தன.

எதிர் அணியிலும் தன் அணியிலும் போரிடக் காத்திருக்கும் மாவீரர்களான பாட்டனார், ஆசாரியர், மாமா,சகோதர்கள்,

அண்ணன்,தம்பிகள்,புதல்வர்கள்,மாமனார்கள்,தந்தைக்கு ஒப்பான பெரியவர்கள்,உறவினர்கள்,நண்பர்கள்,அரசர்கள் இவர்களை எல்லாம் பார்த்ததும் அர்ச்சுனன் தைரியமிழந்து கோழையைப் போல் வருந்தி பேசத்தொடங்கினான்.

“ஹே கிருஷ்ணா!என் நெருங்கிய உற்றார் உறவினர்களை போர்புரியும் நிலையில் எதிரே பார்த்ததும் என் அங்கங்கள் தளர்ந்து போகின்றன.முகம் வாடுகிறது,உடல் நடுங்கிறது.மயிர்க்கூச்சு எழுகிறது.என் கையிலிருந்து காண்டீப வில் நழுவுகிறது.சர்மம் முழுவதும் எரிச்சல், மனம் தத்தளிக்கிறது. தடுமாறுகிறது.என்னால் நிற்கக்கூட முடியவில்லையே கண்ணா!”

கண்ணன்: அர்ச்சுனா!இதைத்தவிர வேறெதெல்லாம் தெரிகிறது?

அர்ச்சுனன் கேசவா! தீய சகுனங்களை காண்கிறேன்.போரில் இந்த உறவினர்களையெல்லாம் கொன்றுவிட்டு என்ன இலாபத்தை அடையப்போகிறேன்? எனக்கு எதுவும் கிட்டாது. (31)

கண்ணன்: அர்ச்சுனா! இவர்களையெல்லாம் வதம் செய்யாமல் உங்களுக்கு உரிமையோடுரிய ராச்சியம் எப்படிக் கிடைக்கும்?

அர்ச்சுனன் :கிருஷ்ணா! எனக்கு வெற்றியும் வேண்டாம்.இந்த அரசாட்சியும் வேண்டாம்.அரசர் பதவி தரும் சுகங்களையும் நான் விரும்பவில்லை.கோவிந்தா! எங்களுக்கு ராச்சியத்தாலோ சுகபோகங்களாலோ அல்லது வாழ்வதனாலோ என்ன பயன் கிட்டப்போகிறது. (32)

கண்ணன்: வில்லாளி வீரனே! அர்ச்சுனா! நீ வெற்றியையும் அரசாட்சிகளையும் விரும்பவில்லையா?

அர்ச்சுனன்: கண்ணா! நாங்கள் எவர்களுக்காக வேண்டி இந்த ராச்சியம் ,சுகபோகம் எல்லாம் விரும்புகிறோமோ அவர்கள் எல்லோரும் தம் உயிர் பொருள் சார்ந்த பற்றுதல்களை துறந்து போர்புரிய போர்முனையில் வந்து நிற்கிறார்களே?    (33)

கண்ணன்: அர்ச்சுனா! இவர்கள் எல்லோரும் உனக்கு யார்?

அர்ச்சுனன்: எந்து குருதேவர் , தந்தைமார்கள், புதல்வர்கள்,பாட்டனார்கள்,மாமா, ,மாமன்மார்கள், பேரப்பிள்ளைகள்,மைத்துனர்கள் மற்றும் பல உறவினர்கள். (34)

கண்ணன்: தம்பி ! இவர்களே உன்னைக் கொல்ல முன் வருவார்களேயானால்?
அர்ச்சுனன்: இவர்கள் என்னைக் கொல்லட்டுமே.மதுசூதனா! எனக்குத் தேவலோகம், பூலோகம், பாதளலோகமென்னும் மூவுலகங்களும் கிடைப்பதானாலும் நான் இவர்களைக் கொல்ல மாட்டேன்.வெறும் பூவுலக அரசாட்சிக்காகவா கொல்லவிரும்புவேன். (35)

கண்ணன்:  தம்பி ! ராச்சியம் ஆளுவதற்கு கிடைத்தால் உனக்கு மிக்க மகிழ்ச்சி ஏற்படும். ஏன் இதை நீர் விரும்பவில்லை .இது உங்களுக்கு உரிமையான ராச்சியம் அல்லவா?

அர்ச்சுனன்: ஜனாத்தனா! பெரியப்பா திருதராஷ்டிராரின் மக்களையும், உறவினர்களையும் கொன்றுவிடுவதில் எனக்கு எப்படி மகிழ்ச்சி ஏற்படும்?அவர்கள் எனக்கும் உறவினர்கள் தானே?இந்த அநியாயக்காரர்களைக் கொல்வதால் எங்களுக்குப் பாவம் தான் ஏற்படும்.மாதவா!இவர்களை நான் கொல்ல விரும்பவில்லை.ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களை அழித்துவிட்டு நாங்கள் சுகமாக வாழமுடியுமா?      ( 36,37)

கண்ணன்: அர்ச்சுனா! எதிரணியிலிருக்கும் உன் உறவினர்கள் உன்னையே கொல்லக் காத்திருக்கிறார்கள்.நீ மட்டும் ஏன் அவர்களை கொல்லப் பின் வாங்குகின்றாய்?
அர்ச்சுனன்: பெருமானே! பேராசை காரணமாக இவர்களுடைய பகுத்தறிவு பாழடைந்து விட்டது.அதனால் குலநாசம்,மித்ர தூரோகம் ஆகியவையால் ஏற்படும் குற்றத்தையும் பாவத்தையும் இவர்கள் கவனிக்கவில்லை.இப்பாவத்தை உணர்த்தும் பகுத்தறிவு படைத்த நாங்களாவது இக்குற்றத்தை செய்யாமல் இருக்கவேண்டும்.குலம் அழிந்தால் என்ன ஆகும்?    ( 38, 39)

கண்ணன்:  குலம் அழிந்தால் தொன்றுதொட்டு வரும் குலதர்மம் அழிந்துவிடும்.

அர்ச்சுனன்: குலதர்மம் அழிந்தால் என்ன ஆகும்? 

கண்ணன்:  குலம் முழுவதிலும் அதர்மம் பரவும். (40)

அர்ச்சுனன்: அதர்மம் பரவினால் என்ன ஆகும்?

கண்ணன்: அதர்மம் பரவினால் நல்லொழுக்கம் நசிந்து குலப்பெண்கள் கெட்டுபோவார்கள்

அர்ச்சுனன்: குலப்பெண்கள் கெட்டுப்போனால் என்ன ஆகும்?

கண்ணன்: குலப்பெண்கள் கெட்டுபோனால் கேடுகள் உள்ள இனக்கலப்பு ஏற்படும்.                                       (41)

அர்ச்சுனன்: இனக்கலப்பால் என்ன கேடுவரும் கண்ணா?

கண்ணன்: .இனக்கலப்பு இதற்கு காரணமாக இருந்தவர்களை மட்டுமல்ல, அக்குலம் முழுவதையும் நரகத்திற்கேஇட்டுச் சென்றுவிடும்.பிண்டதானம்,ஜலதானம்,( சிராத்தம்,தர்ப்பணம்)இல்லாததால் முன்னோர்கள்( பிதுருக்கள்) தாழ்வு நிலையடைவார்கள்.இனக்கலப்பு ஏற்படுத்தும் குற்றங்களால் குலதர்மம், ஜாதி,தர்மம் இரண்டுமே அழிந்து போகின்றன. ( 42,43)

அர்ச்சுனன்: கண்ணா! குலதர்மம் அழிந்த மனிதர்களுக்கு என்ன ஆகும்?

கண்ணன்: . ஜானார்த்தனா! அத்தகைய பாவி மனிதர்கள் வெகுகாலம் நரகத்தில் கிடந்து உழலவேண்டும்.இது உலகறிந்த ஊண்மை.                                     (44)

போரின் இத்தகைய விளைவை நீ முன்பே அறிந்திருந்தும் ஏன் போரிட துணிந்து முன் வந்தாய்?

அர்ச்சுனன்: இதுதான் வியப்பாகவும் வேதனையாகவும் இருக்கிறது.நாங்கள் பெரும் பாவம் செய்ய தீர்மானித்திருக்கிறோம்.அரசாட்சிக்கும், அதன் சுகபோகங்களிற்குமாகச் சொந்த குடும்பதாரையே கொல்லத் துணிந்தோமே என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது.மதி கெட்டசெயல் இது. (45)

கண்ணன்: இப்போது நீ என்ன செய்ய விரும்புகிறாய்?

அர்ச்சுனன்: நான் ஆயுதங்களைத் துறந்து யுத்ததிலிருந்து விலகிவிட விரும்புகிறேன்.நிராயுதபாணியான என்னை துரியோதனன் முதலானவர்கள் கொன்றாலும் அது எனக்கு நல்லது. (46)
இப்படியே மனம் வருந்திப் பேசியபின் காண்டீப வில்லையும் அம்புகளையும் கீழே போட்டுவிடு ரதத்தின் நடுவில் மனசோர்வுடன் உட்கார்ந்து விட்டான். (47)

படையினரின் விபரம்

பாண்டவர் படை: பாண்டவர் படையைச் சேர்ந்த சிறந்த வில்லாளிவீரர் காசிராஜர்,மாவீரர் சிகண்டி,திருஷ்டத்மனன்,வீராடமன்னன்.வெல்லவே முடியாத வீரசாத்தயகி, ராஜா துருபரர்,துரோபதியின் ஐந்து வீரப்புதல்வர்கள்,சுபத்திரையின் வீரப்புதல்வன் அபிமன்யு இவர்கள் யாவரும் படையில் போர் புரிகிறார்கள்.
துரியோதனின் படை: வீரமிக்க பாட்டனார் பீஷ்மர் தலைமைத்தளபதி,மாவீரன் கர்ணன்,வெற்றி வீரர் கிருபாசாரியார்,அசுவத்தாமா, விகர்ணன்,சோமதத்தரின் புதல்வர் பூரிசிரவர் இவர்களோடு சிறந்த போர் வீரர்களும் போராடுகிறார்கள்

02.கீதையின் உள்பொருள் சுருக்கம்-பக்கம்-1

போர்களத்திற்கு வெகு உற்சாகத்துடன் போர் புரிய வந்த அர்ச்சுனனன் போர் படைகளின் ஆர்பாட்டன்களையும் அவர்களின் உற்சாகத்தையும் கண்டு இவர்கள் எல்லாம் எந்த நிலைக்கு ஆளாகப்போகிறார்களோ என்று எண்ணி மனோதிடம் இல்லாமல் கோளையைப் போல வருத்தப் பட்டுகொண்டான். அவன் கண்களில் நீர் முட்டி வழியத் தொடங்கியது.மதுசூதனன் அர்ச்சுனா! தகாத வேளையில் எப்படி இந்தக் கோழைத்தனம் ஏற்பட்டது? இப் பயங்கொள்ளித்தனம் சிறந்த ஆண்மகனான வீர புருசனுக்கு அழகல்ல,நிம்மதியையோ மேல் நிலையையோ, அளிக்காது. ஆகையால் பார்த்தா! இந்த பேடித்தனத்தை அருகில் நெருங்க விடாதே. உன் போன்ற வீரர்களுக்கு இப்பலவீன்ம் முறையற்றது.வீரப்பெருமகனே! இதயத்தை வழுவிழக்கஷ் செய்யும் இந்த அற்ப பலவீனத்தை ஒதுக்கித் தள்ளிவிட்டு காண்டீபத்தை கையிலெடு. போபுரிய எழுந்திரு. போரைத் தொடங்கு என்றார் ( 1- 3)

அர்ச்சுனன்: கண்ணா! நான் சாவதற்குப் பயப்படவில்லை. பிறரைச் சாகடிகத்தான் தயங்குகிறேன். அஞ்சுகிறேன். என் எதிரே தோன்றும் பீஷ்மர், துரோணர் முதலானவர்களென் பெருமதிபிற்குரியவர்கள் நான் பூசிக்கத் தகுந்தவர்கள். இத்தகைய சான்றோர்களை கடிந்து பேசவே கூடாதென்று என் இளமைப் பருவமுதல் கருதிய நான் இவர்களுடன் எப்படி பகைமை உணர்வுடன் போர்புரிய முடியும். எப்படி தாக்கி அழிக்க முடியும் (4)

கண்ணன்: அர்ச்சுனா! கடமையைச் செய்வதற்கு எதிராக வேறு எதையும் கருத்தில் கொள்ளலாமா?

அர்ச்சுனன்: கண்ணபிரானே! மதிப்பிற்குரிய பெரியவர்களை கொல்வதைவிட இந்த பூமியில் பிச்சையெடுத்து வயிறு வளர்ப்பதை மேலாகக் கருதுகிறேன். உங்கள் போதனைப்படி நான் போரிட்டால்

எனக்கு என்ன கிட்டும்? பெரியவர்களையும் குருமார்களையும் கொன்ற பின் அவர்களது குருதி தோய்ந்த செல்வங்களையும் மற்றும் சுகபோகங்களையும் தானே அனுபவிக்கப் போகிறேன்? அந்நிலையில் என்னால் நிம்மதியாக வாழமுடியுமா?                           (5)

கண்ணன்: அர்ச்சுனா! அப்படியானால் நீ என்ன செய்வதாக உத்தேசம்? எதை நியாயம் என்று கருதுகிறாய்

அர்ச்சுனன்: பரந்தாமனே! இந்தப் போர்புரிவது சரியா தவறா என்பது எங்களுக்குத் தெரியாது. இந்தப் போரில் நாங்கள் ஜெயிப்போமா தோற்போமா என்பதும் தெரியாது. எல்லாவற்றையும் விட மிகவும் முகியமானது எவர்களைக் கொன்றுவிட்டு நாங்கள் வாழ விரும்பவிலையோ, அவர்கள் தான் எங்களுக்கு எதிரே அணிவகுத்து நிற்கிறார்கள்.இந்தச்சொந்த ப்ந்தமுள்ள குடும்பத்தாரை நாங்கள் எப்படி கொல்வோம் ( 6)

கண்ணன்: இப்போது நீ எதையும் தீர்மானிக்க முடியவில்லையோ இதற்கு மாற்று வழியாக எந்த உபாயத்தை யோசித்துள்ளாய்?

அர்ச்சுனன்: மாதவா! கோழைத்தனம் என்னும் குறைபாட்டால் என் சஷத்திரிய வீர இயல்பு தாழ்ந்து போயிருக்கிறது. எது தர்மம்? என்று தீர்மானிக்க இயலாத மதி மயக்கம் . ஆகையால் எது நலந்தருமோ,எது என் கடமையோ எனக்கு எடுத்து சொல்லுங்கள் நான் உங்கள் சீடன் உங்களை சரணடைந்திருக்கிறேன்.எனக்கு அறிவுரை வ்ழங்குங்கள்.வழிகாட்டுங்கள்.க்ண்ணபிரானே முதலில் சொல்வதைப்போல் யுத்தம் புரிய மட்டும் சொல்லாதீர்கள்.ஏனென்றால் போரில் வெற்றி பரிசாகக்கிடைக்கும் செல்வங்களும் அரசும்,அரச சுகபோகங்களும் அல்லது தேவலோக தலமைப்பதவியானாலும் கூட அவற்றால் என் சோகத்தைப் போக்க முடியாது இந்த துயரம் என் புலன்களையே செயலிழக்க வைக்கிறது. (7 -8)

எனவே நான் போர் புரியமாட்டேன் என்று தெளிவாக கூறிவிடேன். (9)

கண்ணன்: புன்சிரிப்புடன் நீ வருத்தப்பட வேண்டாததிற்கு வீணாக வருத்தப்பட்டு கொண்டிருக்கிறாய். புலமைமிக்க சான்றோர் போல்பெரிய தத்துவம் பேசுகின்றாய்! விவேகம் மிக்க சான்றோர்கள் இறந்து போனவர்களுக்காகவும் இறக்கப் போகிறவர்களுக்காகவும் ஒருபோதும் வருத்தப்படமாட்டார்கள். இத்தத்துவத்தை முதலில் நன்றே புரிந்துகொள். ( 10,11)

அர்ச்சுனன்: கண்ணா! ஏன் அவர்கள் வருத்தப்பட மாட்டார்கள்?

கண்ணன்: அர்ச்சுனா! நானோ நீயோ இந்த அரசர்களோ முன்பும் இருந்ததில்லை.பின்பும் இருக்கப்போவதில்லை என்று நினைக்கலாகாது.நாம் எல்லோருமே முன்பும் இருந்தோம்.பின்பும் இருக்கப்போகிறோம்.இந்த உண்மையை உணர்ந்த சன்றோர்கள் பிறப்பு இறப்புக் குறித்துச் சோகப்படமாட்டார்கள். ( 12)

அர்ச்சுனன்: வாசுதேவா! இதை எப்படி நான் அறிவு பூர்வமமாக உணரமுடியும்?

கண்ணன்: தம்பி அர்ச்சுனா! உயிருள்ள இந்த உடலுக்கு பிள்ளைப் பருவம் , வாலிபம், வயோதிபம், முதுமை எப்படி ஏற்படுகின்றனவோ இதே போலத்தான் மற்றச் சரீரங்களிலும் குடிபுகுகிறது இந்த ஜீவன் இதனாலிந்த விசயத்தில் விவேகிகள் வருத்தம் கொள்வதில்லை.                 ( 13)

அர்ச்சுனன்: பராத்தமாவே! குழந்தைப் பருவம் முதலிய பலநிலைகள் உடலுக்கு ஏற்படுகின்றன,உண்மைதான், ஆனால் ஏற்புடையது,ஏற்கமுடியாதது,சுகமளிப்பது, துன்பம் தருவது ஆகியவை எதிர்படும்போது என்ன செய்வது?

கண்ணன்: குந்திதேவியின் மைந்தனே! புலன்களுக்கு உட்பட்ட பௌதீகப் பொருட்கள் யாவும் உகந்தது.அல்லாதது என்னும் நிலைகளில் சுகத்தையும் துக்கத்தையும் தரகூடியவைகள் .ஆனால் அவை வந்து போககூடியவைகள். ஆகையால் அர்ச்சுனா!அவைகளை நீ ஏற்றுகொள். சகித்துகொள், அவைகளீடம் விருப்பு வெருப்பு இல்லாமல் இரு. (14)

அர்ச்சுனன்: கண்ணா அப்படி இருப்பதால் என்ன பயன்?

கண்ணன்: ஆண்களில் சிறந்தவனே! சுகதுக்கங்களில் சமநிலையோடு இருந்துவரும் தீர புருசனைப் புலன்களுக்கு ஆட்பட்ட பெளதீகப் பொருட்கள் மகிழ்ச்சியோ, துன்பமோ கொள்ள வைப்பதில்லை. அத்தகைய நடுநிலைப் பேராண்மைக்குரியவன் பாராத்மாவை தன்னுள் உணர்கிறான்.இதன் மூலம் அமரத்துவ நிலயையும் அறிகிறான். ( 15)

அர்ச்சுனன்: அது எப்படிச் சாத்தியமாகும் கண்ணா?

கண்ணன்: ” ஸத்” என்பது சேதன தத்துவம் – உயிர் கொண்டது ” அஸத்” என்பது சடப்பொருள் -உயில்லாப் பொருள் “ஸத்” எப்போதுமே இருந்து வருகிறது “அஸத்” பொருளுக்கு நிலையில்லை. இந்த உண்மையை தத்துவஞானிகள் அறிந்திருப்பதால் அவர்கள் அமரத்துவ நிலையில் இருக்கிறார்கள் (16).

அர்ச்சுனன்: அந்த ஸத் என்னும் அழியாப் பொருள் எது கண்ணா?

கண்ணண்:எப்பொருள் உலகம் முழுவதிலும் பரவி நிலையாய் இருக்கிறதோ, அது அழியாத “ஸத்” அதை யாராலும்அழித்துவிடமுடியாது

அர்ச்சுனன்: அஸத் எனும் அழியும் பொருள் எது?

கண்ணன்: நம்மிடமிருந்து ஜீவன் எனும் சேதனம் அமரத்துவம் கொண்டது. இதை ஊகித்து அறிய முடியாது. இதனுடைய உடல் உறுப்ப்புகள்.சாதன்ங்கள் யாவும் “அஸத்” எனும் அழியும் பொருட்கள்.இதனால் தான் சொல்கிரேன் அர்ச்சுனா! நீஉன் கடமைளைச் செய். யுத்தம் புரிய வேண்டியதுதான் இப்போதைக்குரிய உன் கடமை.

போரில் இறப்பதும் கொல்லுவதும் தவிர்க்க முடியாதவை ஆகையால் உடலில் இருக்கும் ஜீவனும் அந்நிலைக்கு ஆளாகும் என்றெண்னாதே.அதாவது தானும் மடிந்து பிறரையும்மடிய வைக்கும் என்றெண்ணாதே.இந்த ஜீவன் உடலுப்புகளைக் கொண்டிருந்தாலும் அழிவற்றது.மேலும் சேதனன் என்னும் இந்த ஜீவன் எவரையும் அழிப்பதுமில்லை. தானும் அழிவதில்லை.

அர்ச்சுனன்: மாதவா! ஏன் அப்படி அமைந்திருக்கிறது?

கண்ணன் : ஜீவனை சரீரி ( உடல் பெற்றது) என்பர்.இது பிறப்பு இறப்புகளைக் கடந்தது.அதாவது பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை.நித்தியமாக நிரந்தரமாக இருப்பது.சரீரம் அழிந்த பிறகும் அதில் குடிகொண்டிருக்கும் ஜீவன் நிலைபெற்றது.

அர்ச்சுனன்: இதை எப்படி உணர்வது? உணர்வதால் என்ன பயன்?

கண்ணன்: பார்த்தனே! எந்த மனிதன் இந்தப் பெளதீக உடலை கடந்த ஜீவனை அழிவில்லாதது. நித்தையமானது.பிறப்பும் இறப்பும் இல்லாதது என்பதை நன்கு உணர்கிறானேர் அவன் ப்றரைக் கொல்வதாகவோ பிறரை கொல்லச் செய்வதாகவோ எப்படி நினைப்பான்?

அர்ச்சுனன்: பரமனே! அப்படியானால் இறப்பது யார்?

கண்ணன்: அர்ச்சுனா சரீரம் தான் அழிகிறது “சரீரி” அழிவதில்லை . மனிதன் எவ்வாரு பழைய ஆடைகளை களைந்து விட்டு புதிய ஆடைகளை உடுத்துகிறானோ அதேபோல் ” சரீரி” என்னும் ஜீவன் பழைய உடல்களைத் துறந்துவிட்டு புதிய உடல்களுக்குள் புகுந்து குடியிருக்கச் செல்கின்றது.

அர்ச்சுனன்: புதுப்புது உடல்களில் குடி புகுவதால் உயிருக்குக் எதாவது மாறுதல்கள் ஏற்படுமல்லவா

கண்ணன்: எந்த மாறுதல்களும் ஏற்படாது. ஏனெனில் இந்த சரீரியை ( உயிரை) எந்த ஆயுதத்தாலும் அழிக்க முடியாது.தீயாலிது எரிக்க முடியாது.தண்ணீரால் இது கரைந்துவிடாது.காற்றால் இதை காய வைக்கவோ சிதறடிக்கவோ முடியாது.

அர்ச்சுனன்: கண்ணா! இந்த உயிர் ஏன் யூகப் பொருட்களால் பாதிக்கப்படுவதில்லை?

கண்ணன்: இந்த சரீரி என்னும் ஜீவனை தகர்க்கவோ, எரிக்கவோ, நனைக்கவோ, வற்றச் செய்யவோ எதனாலும் இயலாது.காரணம் இது நித்தியமாக- சாசுவதமாக இருப்பது.எல்லா வகையிலும் பரிபூரணமானது-நிலையான இயல்பு கொண்டது- சஞ்சமில்லாதது -தொன்றுதொட்டு இருந்து வருவது .இந்த ஜீவன் புலன்களுக்கு அடங்காதது.அதனால் நேரிடையாக காணவும் முடியாதது.இதை உள்ளுணர்வாலும் அறிய முடியாது இதில் எவ்வித மாறுதலும் ஏற்படுவதில்லை. இந்த உண்மைகளை உணர்ந்து கொண்டு இந்த ஜீவனைக் குறித்து நீ வருத்தபடவேண்டாம்.

அர்ச்சுனன்: அர்ச்சுதா! இந்த சரீரியை ( உயிரை) மாறுதலற்றது, அழிவற்றது என்பதை உணர்ந்து கொண்டபின் வருத்தமோ கவலையோ ஏற்படலாகாது உண்மை. ஆனால் அந்த உணர்வு ஏற்படாத வரையிலும் வருத்தம் ஏற்படத்தானே செய்யும்?

கண்ணன்: வலிமை மிக்க வில்லாளியே! நீ இந்த உயிரை பிறப்புக்கும் இறப்புக்கும் இலக்கானதாக கருதினாலும் அதையிட்டு வருத்தப்படக்கூடாது.காரணம் பிறந்தது இறக்கத்தான் செய்யும்.இறந்தது பிறகு பிறக்கத்தான் போகிறது.இந்த நியதியை எவராலும் ஒதுக்கிவிட முடியாது.ஆகையால் அழிந்து,பிறகு பிறக்கும் உடல்களைக் குறித்து நீ சோகம் கொள்ளலாகது.

அர்ச்சுனன்: சரீரி என்னும் உயிருக்காக சோகப்படலாகாது என்பது சரி தான்.ஆனால் சரீரத்துக்காக வருத்தப்பட வேண்டித்தானே இருக்கிறது?

கண்ணன்: இல்லை அர்ச்சுனா! எந்தச் சரீரத்துகாகவும் வருத்தப்படக்கூடாது. எல்லாப் பிராணிகளும் பிறப்பதற்கு முன்பு புலப்படாதவை. நடுவில்மட்டும் தான் புலபப்டுகின்றன இதற்காக வருத்தபடுவான் ஏன்?

அர்ச்சுனன்: கண்ணா! எப்படியும் கவலை எற்படுகிறது ஏன்? எப்படி அறிவது?

கண்ணன்: அறியாமைதான் காரணம்.ஜீவ தத்துவத்தை ஜம்புலன்களால் ( மெய்,வாய்,கண்,மூக்கு,செவி) மனத்தாலும் அறிவாலும் புரிந்துகொள்ளவோ, உணரவோ இயலாது.ஆகையால் ” சரீரியை” பார்ப்பது,பேசுவது,கேட்பது,எல்லாமே வியப்பாகத்தான் இருக்கும்.பிரமை பிடித்த வியப்பு இதை பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும் முடியாது.நமக்குள் நாமே சிந்தித்து உணர வேண்டும் இதற்கும் ஆழ்ந்த சிந்தனை தேவை.

அர்ச்சுனன்: அந்த உணர்வு எத்தகையது கண்ணா?

கண்ணன்: பரதவம்சத்துச் செல்வனே! எல்லா உடல்களிலும் உள்ள இந்த உயிர் என்னும் உள்ளது.அழிவற்றது. அழிக்க இயலாதது.இந்தத் தத்துவத்தை திடமாக உணர்ந்து கொண்டபின் எந்தப் பிராணிக்காகவும் ஏன் வருத்தப்பட வேண்டும்.

அர்ச்சுனன்: கண்ணா! வருத்தத்தை விலக்கிகொள்ள பல அறிவுரைகளைச் சொன்னீர்கள். ஆனால் எனக்கு இப்போது எற்பட்டிருக்கும் அச்சத்தையும் பாவச் செயல்களினால் ஏற்படும் பயத்தையும் எப்படிப் போக்குவது?

கண்ணன்: அர்ச்சுனா! உன் ஷத்திரிய தர்மத்தை( கடமையை) ச் சர்ந்தாவது நீ பயப்படாமல் இருக்க வேண்டும்.காரணம் வீரர் குலத்தவர்களான சஷ்த்திரியர்களுக்கு போரிடுவதுதான் தர்மம் இதைவிட நலம்தரும் வேறுசெயல்கள் ஒன்றுமில்லை.

அர்ச்சுனன்: அப்படியானால் சஷத்திரியர்கள் போர் புரிந்துகொண்டே இருக்கவெண்டுமா?

கண்ணன்: இல்லைத் தம்பி போர் எற்படும்போது போரிட வேண்டிய கட்டாயம் ஏற்படும்போது சஷத்திரய தர்மம் போரிடுவதுதான் அதுவே சுவர்க்கம் புகும் தலைவாசல் .பார்த்தா! போரிடும் வாய்ப்பைப் பெறும் சஷத்திரியர்கள் பாக்கியசாலிகள்.உண்மையில் அவர்கள் உத்தமமான சுகம் பெறுகிறார்கள்.சுவர்க்கம் புகுகிறார்கள்.

அர்ச்சுனன்: கண்ணா! வலுவில் வந்த போரை நாம் தவிர்த்துவிட்டு நான் ஒதுங்கி போனால் என்ன ஆகும்?

கண்ணன்: இது அறப்போர் .இதை நீ செய்யாவிட்டால் உன் சஷ்த்திரிய தர்மமும் இதுவரை நீ ஈட்டிய புகழும் அழியும் நீ உன் கடமையைச் செய்யாததால் உனக்குப் பாவமும் வந்து சேரும்.

அர்ச்சுனன்: புகழ் அழிந்து அபகீர்த்தி ஏற்பட்டால் என்ன ஆகும்?

கண்ணன்: அன்புள்ள் தம்பி! நீ போர் புரியாவிட்டால் தேவதைகள்,மனிதர்கள் எல்லோரும் உன்னை இகழ்வார்கள்.வெகு காலம்வரையும் நீ கடமை தவறிய குற்றத்தை சொல்லிக் காட்டுவார்கள்.இந்த அவப்பெயர் மதிக்கத்தக்க பெருமை கொண்ட உன் போன்ற மனிதனுக்கு மரணத்தைவிட கொடிய துன்பம் தரும்.

அர்ச்சுனன்: மாதவா! மேலும் என்ன ஆகும்?

கண்ணன்: உன்னை பீஷ்மர்,துரோணர் முதலான மாவீரர்கள் வீரபுருசனாக மதிக்கிறார்கள்.அந்த மதிப்பும் போய்விடும்.நீ சாவிற்கு பயந்து கோழையாகி போரிடாமல் ஓடிவிட்டதாக கருதுவார்கள்.

அர்ச்சுனன்: பகவானே! இந்த அவமதிப்பை என்னால் சகித்துக் கொள்ளமுடியாதா?

கண்ணன்: உன்னால் முடியவே முடியாது. மிகப்பெரிய பயங்கரமான மோசமான விளைவுகள் ஏற்படும். உன் எதிரிகளுக்கு பழிவாங்க சந்தர்ப்பம் கிடைத்துவிடும்.அவர்கள் உன் வீரதீர பிரதாபத்தை எள்ளி நகையாடுவார்கள்.இழி சொற்களால் உன்னை ஏசுவார்கள். தூற்றுவார்கள்.இதைவிட துன்பம் வேறு இருக்கமுடியுமா?

அர்ச்சுனன்: சரி நான் போர் புரிந்தால்?

கண்ணன்: போரிட்டவாறு நீ இறந்தாலும் உனக்கு பெருமை சுவர்க்க லோகமும் கிடைக்கும். வென்று விட்டாயானால் இவ்வுலகை அரசாளும் மகிமை மாட்சி கிட்டும். ஆகையால் குந்திதேவியின் மைந்தனே! போர் புரியும் தீர்மானத்துடன் ஆயத்தமாகு. காண்டீபத்தை கையிலெடு.

அர்ச்சுனன்: கேசவா! போர்புரிவதால் பாவம் எற்படாதா?

கண்ணன்: நீ நடுநிலையான மனப்பாங்குடன் கடமையைச் செய். வெற்றி தோல்வி,லாபம்,நட்டம்,இன்பம்,துன்பம் இவைகளில் சமபுத்தியை ஏற்படுத்திக்கொள்.இந்நிலையில் நீ போர்புரிந்து பகைவர்களைஅழிப்பதால் உனக்கு பாவம் ஏற்பட்டது.

அர்ச்சுனன்: கண்ணா! பாவம் ஏற்படுத்தாத சமபுத்திக்கு மேலும் என்ன சிறப்புள்ளது?

கண்ணன்: இந்த சமநிலை அறிவு ( சமபுத்தி) பற்றி முன்பே உனக்கு சாங்கியயோகம் பகுதியில் கூறியிருக்கிறேன்.இப்போது “கர்மயோகம்” (செயல்பாடு) சார்ந்த கருத்திலும் சமபுத்தியின் சிறப்பை சொல்கிறேன்.
1. நடுநிலை மன்ப்பாங்கு ( சமபுத்தி) கொண்டுள்ள நீ எல்லாக் கருமபந்தங்களிலும் இருந்து விடுபடுவாய்
2.சமபுத்திக்கு துளியும் அழிவு ஏற்படாது.

3.இதை மேற்கொண்டால் எதிரிடையானவிளைவும் ஏற்படாது.
4.இதைச் சிறிதளவு சார்ந்த அச்சத்திலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.

அர்ச்சுனன்: கண்ணா! நீங்கள் புகழ்ந்துபேசும் சமபுத்தி நிலையை எட்ட என்ன வழிகள்?

கண்ணன்: இந்நிலையை எட்ட முதலில் உன் அறிவை ஒரே இலட்சிய முனைப்பிற்கு ஆயுதப்படுத்திக் கொள்ள வேண்டும். பரம்பொருள் தத்துவம் ஒன்று அதை எட்டவேண்டும் என்ற திடமான நிச்சயம் ஏற்பட வேண்டும்.
திடநிச்சயமுள்ள புத்தியை செயலாற்றல் மிக்க ஒருமுனைப்புள்ள் அறிவு என்பர்..இந்த நிச்சயமில்லாத புத்தி மனிதனை பல வழிகளிலும் இட்டுச் சென்று அல்லல்ப்படுத்தும். பல பிரிவுகளைக் கொண்டதாக அது பிரிந்து சிதைந்து செயல்படுத்தும்.

அர்ச்சுனன்: ஒரே முனைப்புள்ள நிச்சயம் மனித புத்திக்கு ஏன் எளிதாக ஏற்படுவதில்லை?

கண்ணன்: அறியாமைதான் காரணம். இந்த அறியாமை எப்படி ஏற்படுகிறது? ஆசாபாசங்களுக்கு அடிமையானவர்கள் .சுவர்ககலோக சுகபோகத்தை மேலாக கருதுபவர்கள். வேதத்தின் கர்ம காண்ட பகுதிகளில் கூறப்பட்டுள்ள விருப்பங்களுக்கு ஏற்ற கர்மாக்களில் பற்றுதல்ல் கொண்டவர்கள். பெளதீக சுகபோகம் வாழ்க்கையின் பயன் என்று நம்பி வாழ்பவர்கள். இத்தைகைய மனிதர்கள் மலர்ந்து மனம் வீசும் மலர்களைப்போல் கவர்ச்சிமிக்க வாக்குக்ளைத் தம் கருத்துகளைச் சாதகமாக பேசி வருவார்கள்.அவர்களுடைய கவர்ச்சிப் பேச்சுக்கள் மாறி மாறிப் பிரவிகளைத் தரும் சுயநலச் செயல்களை சிலாகிப்பவை,சுகபோகம்,செல்வம்,செல்வாக்கு ஆகியவைகளைப் பெற உதவும் அற்பச்செயல்களை விபரிப்பவை.நறுமண மலர்களில் உள்ள கவர்ச்சி இந்த ஜனகரஞ்சகப் பேச்சுகளிலும் இருக்கும். ஆனால் இம்மலர்களைப் போலவே அவை விரைவில் வாடி உருகுலைத்துவிடும்.அப்பேச்சுகளில் மயங்கி உழல்பவைகளின் கதியும் அப்படித்தான் சுயநலம் சுகபோகம் என்று உழலும் மனிதர்கள் பரமாத்மாவிடம் ஈடுபடும் என்றும் உறுதியான் அறிவை பெற முடியாது.

அர்ச்சுனன்: சுகபோகம், செல்வம்,செல்வாக்கு அகியவைகளில் ஏற்படு, பற்றுதலிலிருந்து விடுபட நான் என்ன செய்ய வேண்டும் பரமாத்மாவே வழி காட்டுங்கள்.

கண்ணன்: வேதங்கள் சத்துவம் ரஜஸ் தமஸ்(அடக்கம்,மிடுக்கு,வெறி) எனும் முக்குணங்களைக் கொண்ட உலகியல் வாழ்வை விவரிக்கின்றன.
அர்ச்சுனா! வேதங்கள் விவரிக்கும் ஆசாபாசங்கள் நிரம்பிய செயல்களில் நீ பற்றுதல் கொள்ளாதே ,விருப்பு,வெறுப்பு எனும் தளைகளிலிருந்து நீ தவித்திரு.சாசுவதமான பரமாத்துவத்தில் (உடல் அழிவற்றது.உடல் அழிவும் மாற்றமும் கொண்டது)எனும்

திடலுணர்வுடன் நிலை பெற்று இரு.கிடைக்காத பொருளைப் பெறவும்.கிடைத்த பொருளைப் பாதுகாக்கவும் கவலைப்படாதே முயற்சிக்காதே.பரம்பொருளைப் பெறும் ஒரே இலட்சியத்தில் உறுதியுடன் நிலைத்திரு.!

அர்ச்சுனன்: அப்படி ஒரு இலட்சிய நிலைப்பாட்டில் திடமாக இருப்பவர்களுக்கு என்ன ஏற்படும் கண்ணா?

கண்ணன்: அர்ச்சுனா! பெரிய அழகில் குளம் ஒன்று உருவானபின் அதற்கு முன் பயன்படுத்திவந்த சிறியகுட்டை தேவையில்லாமல் போகிறது.அதன் மதிப்பும் மறைந்து விடுகிறது.அதெபோலத்தான் வேதங்களின் பரந்த தத்துவங்களையும் ,சாஸ்திரங்களின் போதனைகளிஅயும் நன்கு அறிந்த ஞானிகள் வாழ்ந்தும் துறந்தும் நிற்கும் மகாபுருஷர்கள்.இவர்களை ஜீவன் முத்தர் ( வாழ்ந்த நிலையிலேயே பற்றுதலின்றி இருக்கும் பெருமை பெற்றவர்கள்) என்பர்.இந்த மகான்கள் உலகியல் சுகபோகங்களுக்கும் செல்வம்,செல்வாக்கு போன்ற வைபவங்களுக்கும் மதிப்பு அளிப்பதில்லை.அவைகளை விரும்பவும் மாட்டார்கள்.

அர்ச்சுனன்: கண்ணபிரானே! நான் அந்த ஜீவன் முக்த நிலையைப் பெற என்ன செய்ய வேண்டும்?

கண்ணன்: கர்ம யோகத்தைக் கடைப்பிடி.செயலில் முனைப்புதான் கர்மயோகம் செயலின் விளைவைப் பற்றிச் சிந்திக்காமல் செயல்திறன் பற்றியே சிந்தித்து முனைவது யோகம் .செயல்புரிவது உன் கடைமை பலனை எதிர் நோக்குவது அல்ல.செயல் முனைப்புதான் உனக்கு உரியது.மேலும் கர்மபலன்களுக்கு நீ காரணமாகதே அதாதவது நீ செயலாற்றுவதற்கு உறுதுணையாக இருக்கும்.உன் உடல்,உள்ளம் அறிவு முதலியவற்றில் பற்றுதல் வைக்காதே.

அர்ச்சுனன்: அப்படியானால் நான் ஏன் செயலாற்ற வேண்டும்?

கண்ணன்: செயலாற்றாமல் இருப்பதிலும் நீ ஈடுபாடு கொள்ளக்கூடாது.பற்றுதல் எதிலும் இருக்கலாகாது.

அர்ச்சுனன்: அப்படியானால் நான் செயல் புரியமுடியும்?

கண்ணன்: செயலில் நிறை குறை வெற்றி தோல்வி ஆகியவற்றில் நடுநிலையுடன் இருத்தல் “யோகம்” ஆகையால் தனஞ்சயா! நீ பற்றுதல்,விருப்பு வெறுப்பு இவைகளைப் புறக்கணித்து விட்டு சமநிலையில் நிலைத்திருந்து கர்மத்தை செய்!

அர்ச்சுனன்: சமநிலையில் நிற்காமல் நான் செயல் புரிந்தால் என்ன ஆகும்?

கண்ணன்: விருப்பு -வெறுப்பற்ற சமநிலையுடன் செய்யாத செயல் இழிவையே தரும். தனஞ்சயா ! நீ சமநிலை, சமபுத்தியை மேற்கொள். செயலின் விளைவை ( பயனை) விரும்புவன் அற்பன்.அவனது சுயநலபுத்தி செயலைவிட்டு பயனில் ஈடுபடுகிறது.பயனுக்கு அடிமையாகிறது.

அர்ச்சுனன்: கர்மபலனை விரும்புவன் அற்பன் என்றால் சிறந்தவன்( மேலானவன்) எவன்?

கண்ணன்: சமபுத்தி கொண்டவன் சிறந்த மனிதன். அவன் இந்த மானிட வாழ்கையிலேயே பாவ -புண்ணியயங்களுக்கு அப்பாட்பட்டவனாகிரான்.ஆகையால் அர்ச்சுனா! நீ சமநிலை, சமபுத்தியில் திடமாக நிலைத்திரு.இதுதான் செயல்த்திறன்.

அர்ச்சுனன்: சமபுத்தியின் விளைவு என்ன?

கண்ணன்: “யோகம்” எனப்படும் சமபுத்தி,சமநிலை, சமநிலை கொண்டமனீஷி( மெய்ஞானி) செயலின் பயனில் பற்றில்லாதவர்.அவர் பிறவித் தளையிலிருந்து விடுபட்டு , உன்னதமான் அழியாப் பெரும் பதவியைப் பெறுவார்.

அர்ச்சுனன்: செயலின் பயனைத் துறந்த சமநிலையை நான் எப்படிப் பெறுவேன்,எப்போது உணர்வேன்?

கண்ணன்: அர்ச்சுனா! எப்போது உன் அறிவு மோகம் எனும் சக்தியைக் கடக்கிறதோ , அப்பொதே உனக்குள் நீ உணர்ந்த கேள்விப்பட்ட யோகங்களிருந்து பற்றின்மை ஏற்பட்டுவிடும்.

அர்ச்சுனன்: வைராக்கியம் ஏற்பட்டபின் யோகம் எனும் சமநிலை எப்போது ஏற்படும்?

கண்ணன்: பலவையான் சாஷ்திரங்களின் சித்தந்தங்கள் கருத்து வேறுபாடுகள் ஆகியவற்றால் சஞ்சலப்பட்டிருக்கும் உன் புத்தி உலகியல் வாழ்விலிருந்து விடுபட்டு பரம்பொருளான் பரமாத்மாவிடம் திடமாக ஈடுபடும்போது உனக்கு யோகநிலை சித்திக்கும்.

அர்ச்சுனன்: யோகநிலை சித்திபெற்ற திடமதி கொண்ட மனிதனுக்கு என்ன் அடையாளங்கள்?

கண்ணன்:  பார்த்தா! சமநிலை பெற்றவர் மனத்திலுள்ள விருப்பங்களையெல்லாம் ஒதுக்கி விடுவார் .தன்நிலையிலிருந்து தமக்குள்ளேயே மகிழிச்சி அடைகிறார்.அவர் “ஸ்திதப்ராக்ம்ஜர்”(நிலையான் சமபுத்தி பெற்றவர்.)

அர்ச்சுனன்: ஸ்திதபிரக்ஞன் எப்படிச் கருத்தை வெளியிடுவான்?

கண்ணன்: தம்பி! சாதரண மனிதர்களைப் போல் பேசுவதில்லை.சமபுத்தி- சமநிலை கொண்டஞானி.அவருடைய செயலும் குறிப்பும் சீரிய கருத்துகளை வெளிப்படுத்தும்.அந்த ஸ்திதபிராக்ஞர் நிகழ்காலத்தில்வாழ்ந்து கொண்டிருந்தாலும் துன்பம், துயரம், சோதனை, விபத்து எனும் கேடுகள் ஏற்படும் போது வருந்துவதில்லை.சுகம், செளக்கியம், புக்ழ், செல்வம்முதலிய நலன்கள் கிட்டும்போது மகிழ்ச்சி கொள்ளுவதில்லை அந்த ஞானி ஆசை,பயம்,பாசம்,குரோதம்,பகை ஆகிய இயல்புகளைக் கடந்தவராக இருப்பார்.

திடசிந்தனௌம் சீரீய கர்ய்த்துகளையும் கொண்ட அந்த சமபுத்திஸமநிலைச் சாதகரைத்தான் “ஸ்திதபிரக்ஞர்”என்று அழைப்பார்கள்.அவர் எல்லா நிலைகளிலும் செயல்களிலும் பற்றுதல் இல்லாதவர்.முன்வினைப் பயனாக அநுகூலமான் வாய்ப்பு வரும்போது மகிழ்சியடைய மாட்டார்.பிதிதிகூலமான சந்தர்ப்பம் ஏற்படும்போது வெறுப்படைய மாட்டார்.அவருடைய அற்வு திடமாக நிலைபெற்றிருக்கிறது.பரமாத்மாவோடு இணைய வேண்டுமென்கிற தீர்மானத்துடன் வாழும் அவர் சித்த புருஷ்ர்.

அர்ச்சுனன்: அந்த சித்த புருஷ்ர் எப்படி அமர்கிறார்?

கண்ணன்: அர்ச்சுனா! எப்படி ஆமை தனது நான்கு கால்களையும் கழுத்தையும் வாலையும் முதுகு ஓட்டுக்குள் ஒடுங்குமாறு உள்ளடக்கிக் கொண்டு கிடக்கிறதோ,அதே போல கர்மயோகியான “ஸ்திதபிரக்ஞர்” தம் ஜம்புலன்களையும் மனத்தையும் பெளதீக விஷயங்களிலிருந்து விலக்கி ,தம் உள்ளுணர்வில் அடக்கிக் கொள்ளுகிறார். அந்நிலையில் அவருடைய அறிவு சமநிலையில் திடமாக இருக்கிறது.

அர்ச்சுனன்: ஜம்புலன்களையும் ஒடுக்கி ஒருமுகப்படுத்துதலுக்கு நேரிய அடையாளம் எது?

கண்ணன்: ஜம்புலன்களையும் தம் இலக்கான விஷயங்களிலிருந்து ( அநுபவங்களிலிருந்து) ஒதுக்கி வைக்கும் தேகாபிமனியான மனிதனிடமிருந்து அந்த விஷயங்கள் விலகிவிடுகின்றன.ஆனால் சுவை உணர்வு கொண்ட போகரஸபத்தி ( சுவை உணர்வு) விலகுவதில்லை.ஆனால் பரமாத்மாவை அடையும் சித்த புருஷனின் சுகபோக புத்தி கூட விலகிவிடுகிறது.

அர்ச்சுனன்: ரஸபுத்தி எனப்படும் சுவையை நாடும் அறிவு இருப்பதால் என்ன கேடு?

கண்ணன்: ரஸபுத்தி இருப்பதால் விஷய சாதனங்களில் பற்றுக் கொண்ட மனிதன் எவ்வளவுதான் விவேக ஞானம் உள்ளவனாக இருந்தாலும் ,குழப்பம் விளைவிக்கும் புலன்கள் அவனது மனத்தை வலுக் கட்டாயமாக விஸய அநுபவங்களில் ( உலகியல் இன்பத்தில்) ஈடுபட இழுத்துச் செல்லுகின்றன.

அர்ச்சுனன்: ரஸபுத்தியை விலக்குவதற்கு என்ன செய்யவேண்டும்?

கண்ணன்: கர்மயோகி சாதகர் எல்லாப் புலன்களையும் அடக்கித் தம் வசத்தில் இருத்தி பரமாத்மாவாகிய என்னை தியானித்து சரணடைய வேண்டும்.என் மீது நம்பிக்கை வைத்து,வேறு சிந்தனை கவலை இல்லாமல் இருக்க வேண்டும்.இவ்வாறு தம் புலன்களை அடக்கி வசப்படுத்தியவரின் புத்திநிலை பெற்று விளங்கும்.

அர்ச்சுனன்: பரமாத்மாவே! உங்களைச் சணடையாமல் இருந்தால் என்ன ஆகும்?

கண்ணன்: என்னை சரணடையாமல் இருந்தால் புலன்கள் விரும்பும் விஷய அநுபவங்களில் சிந்தனை செல்லும். மனிதனுக்கு அவைகளில் ஈடுபாடு ஏற்படும் .அவைகளை அநுபவிக்க வேண்டுமென்ற ஆசை ஏற்படும்.

அர்ச்சுனன்: ஆசை ஏற்பட்டபின் என்ன ஆகும்?

கண்ணன்: ஆசை வளரும். ஆசை நிறைவேறத் தடையோ தடங்கலோ ஏற்படும்போது வெறுப்பு மிகுந்த கோபம் ஏற்படும் பிறகு மதிமயக்கம், மூடத்தனமெல்லாம் வளரும்.

அர்ச்சுனன்: அதன் பிறகு என்ன ஆகும்?

கண்ணன்: நல்ல சிந்தனை ,மனப்பக்குவம்,பகுத்தறியும் விவேகம் எல்லாம் விலகிவிடும்.பழைய பரிபக்குவ நினைவே இல்லாமல் போகும்.இதன்னல் புத்தி சக்தி குலையும் தொடர்ந்து மனிதன் அழிவைத்தான் எட்டுவான்.

அர்ச்சுனன்: ஸ்தித பிரக்ஞரின் நிலையை உணர்த்தினீர்கள் கேசவா! அவர் எப்பட்ய் நடந்து கொள்வார் என்பதைச் சொல்லுங்கள்?

கண்ணன்: தம்பி! நிலைபெற்ற பிரக்ஞையுள்ள சாதகரின்நடவடிக்கை செயல் வடிவில் இராது.கருத்து வெளிப்பாடாக இருக்கும். புலனடக்கம்,மனவடக்கம் கொண்டசாதனையாளர் அவர்,விருப்பு -வெறுப்புகளைக் கடந்தவர்.தம் வசமுள்ள புலன்கள் மூலம் உலகியல் அனுபவங்களில் ஈடுபட்டிருந்தாலும், உள்மனத்தின் திருப்தியுடன் வாழ்கிறார்.

அர்ச்சுனன்: உள்மனம் எனும் அந்தக்கரணத்தின் திருப்தியைப் பெற்றபின் என்ன ஆகும்?

கண்ணன்: அத்தகைய திருப்தி கொண்ட மனிதரின் எல்லாத் துயர்களும் நசித்து விடுகின்றன.அந்த சாதகரின் சமபுத்தி விரைவிலேயே பரமாத்மாவோடு நிலையாக இணைந்து விடுகிறது.

அர்ச்சுனன்: எவருக்கு புத்தி நிலைபெறுவதில்லை?

கண்ணன்: எந்த மனிதனின் மனமும் இந்திரியங்களும் அடங்கி இருக்கவில்லையோ .அவனிடம் நிலைபெற்றிருக்கும் சம புத்தி ஈராது.அவனுக்குத் தன் கடமை உனர்வில் பிடிப்பு இராது.கடமையில் திட்மான ஈடுபடு இல்லையேல் ,அமைதி கிட்டாது.அமைதியை இழந்த மனிதனுக்கு மகிழ்ச்சி ஏது?

அர்ச்சுனன்: உலகியல் உழல்பவனிடம் புலன்கள் அடங்கி இராது.ஆனால் சாதகராக இருப்பவருக்கும் நிலையான் சமபுத்தி ஏற்படாமல் போவதற்கு என்ன காரணம்?

கண்ணன்: காரண்ம் புலனடக்கமும் மனவடக்கமும் இணைந்து வசப்பட்டு இராததுதான். நீரில் செல்லும் ஓடத்தை காற்று தன் திசையில் இழுத்துச் செல்வதைப் போலே ,சாதகரின் புலன்கள் தம் விஷயங்களில் ஈடுபட்டிருக்கும்போது ஏதாவது ஒரு புலன் சஞ்சலமான் மனத்துடன் இணைந்து விட்டால் போதும்.அந்த மனமே சாதகரின் புத்தியைக் குலைத்துவிடும்.சமநிலைகெட்டுவிடும்.

அர்ச்சுனன்: பின் எவருக்கு த்தான் புத்தி நிலைபெறுகிறது?

கண்ணன்: வீரத்திருமகனே! ஜம்புலன்களும் எவருக்கு முழுவதும் கட்டுபப்ட்டு இருக்கின்றனவோ, எவருடைய உள்ளம் பெளதீக விஷய அநுபவங்களில் பற்றுதலின்றி இருக்கிறதோ, அத்தகைய சாதகரின் பிரக்ஞை( பகுத்தறிவு) ஒரே குறிக்கோளில் நிலைபெற்று இருக்கிறது.

அர்ச்சுனன்: எவருக்கும் புலனடக்கம் இல்லையோ அத்தைகைய சாமானிய மனிதருக்கும், புலனடக்கம் உள்ள சாதகருக்கும் உள்ள வெளிப்படையான வித்தியாசம் என்ன?

கண்ணன்: புலன் அநுபவங்களுக்கு இலக்காகி உழலும் சாமனிய மனிதர் பரமாத்தாவுடன் இணையும் சாதனையில் ஈடுபடாமல் மதிமயங்கி மோக நித்திரையில் ஆழ்ந்திருப்பார்.அக்காலம் அவர்களுக்கு இருள் சூழ்ந்த இரவு ,அத்தகைய இராக்காலத்தில் அடக்கம் மிக்க ஞானிகள் விழித்திருப்பார்.பரமத்ம தத்துவதத்தில் இலயிருத்திருப்பார்கள். சாமானிய மனிதர்கள் விழிப்புணர்வுடன் சுகபோகங்களை அநுபவித்தும் பொருள் சம்பாத்தித்தும் பொழுது போக்கும் காலத்தில், ஞானிகள் ஆத்மலயிப்பில் அமைதியுடன் மூழ்கியிருப்பார்கள்,இதைதான், சாமானியயர்கள் மதிமயங்கி உறங்கும் இரவு ஞானிகளுக்குப் பகல் என்றும் சாமனியர்கள் அமைதி காணும் இரவு என்றும் சொல்வார்கள்.

அர்ச்சுனன்: அப்படியானால் அடக்கம் உள்ள சாதகர்களுக்கு எதிரில் பெளதீக சுகபோகப் பொருள்கள் வருவதில்லையா?

கண்ணன்: வருவதுன்டு இதனால் அடக்கமுள்ள சாதகர் சஞ்சலம் அடைவதில்லை.எப்படிக் கம்பீரமான் கடல் தம்மிடம் வந்து சங்கமிக்கும் நதிகளால் எந்த மாற்றத்தையும் பெறுவதில்லையோ,அதே போலத்தான் அடக்கமுடையோர் எதிரில் உலகியல் சுகபோகப் பொருள்கள் எதிர்ப்படுகின்றன.இதனால் அவர்களூடைய மனம் பேதலிப்பதில்லை.இத்தகைய மாமனிதர்கள் தான் பரமாத்ம தத்துவமான பரம சாந்தியைப் பெறுகிறார்கள்.போக விசயங்களில் ஈடுபாடு கொண்ட சம்சாரிகளுக்கு இந்தப் பேரமைதி கிட்டாது.

அர்ச்சுனன்: ஆசாபாசம் உள்ள சம்சாரிகளுக்கு ( சாந்தி) எப்படிக் கிட்டும்?

கண்ணன்: சுகபோகங்களில் ஏற்படும் ஆசாபாசங்களை முற்றிலும் துறந்து விட்டால் அமைதி பெறலாம்.எந்த மனிதன் எல்லா ஆசைகளையும் பாசங்களையும் விடுவதோடு தான் தனது எனும் செருக்ககையும் துறந்து வாழ்கிறனோ,அவனுக்கு சாந்தி கிடைக்கும்.

அர்ச்சுனன்: புருஷோத்மரே!செருக்கைத் துறந்த சாதகரின் நிலைப்பாடு எப்படி இருக்கும்?

கண்ணன்: செருகொழிந்த சாதகரின் நிலைப்பாடு பிரும்பத்தில் ஈடுபட்டிருக்கும் பார்த்தா! இதைத்தான் பிரும்ம நிலை என்பர்.இந்நிலையை எட்டியதும் அந்த சாதக மனிதர் எக்காலத்திலும் மோக பாசத்தில் சிக்கமாட்டார்.தம் இறுதிக் காலத்திலும் பிரும்ம நிலையில் இருப்பவர்.நிர்வாண பிரும்மம் எனும் பரம சாந்தி நிலையில் முக்தி பெறுகிறார்

03.கர்ம யோகம்

அர்ச்சுனன்: ஜனார்த்தனா! உங்கள் கருத்துப்படி ஞானபுத்தி எனும் மெய்யறிவுதான் தலைசிறந்தது என்றால் நான் உத்தமமான ஞான்புத்தியை நாடாமால் கொடுமையான செயலில் ஈடுபட வேண்டும் என்று ஏன் என்னை வற்புறுத்துகிறீர்கள்? நீங்கள் இரண்டையும் சொல்லுகிறீர்கள்! ஒருமுரை செயலில் ஈடுபடு! என்கிறீர்கள். மறுமுறை மெய்யறிவை நாடு என்கிறீர்கள்.கேசவா!உங்களுடைய இந்த மாறுபட்ட அறிவுரையால் எனக்குத் தடுமாற்றம் குழப்பம் ஏற்படுகிறது. தீர்மானமாக ஒருவழியை எனக்குக் காட்டுங்கள். அதன் மூலம் நான் ந்லன் பெறவகை செய்யுங்கள்.

கண்ணன்:தீமையை விரும்பாத இயல்பு உள்ள அர்ச்சுனா!இந்த மனித உலகில் இருவகையான் ஈடுபாட்டை முன்னே கூறியிருக்கிரேன். சாணக்கிய யோகிகளுக்கு ஞான யோகத்திலும் சாமனிய யோகிகளுக்கும் கர்ம யோகத்திலும் ஈடுபாடு இன்றியமையாதது. இரண்டின் இலட்சியமும் ஒன்று தான்.ஞான யோகத்தாலும் கர்ம யோகத்தாலும் ஒரே நிலையிலுள்ள சம புத்திஎ எற்படுகிறது.இரு யோகங்களின்வழிமுறைகளை நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். இலட்சியத்தின் முனைப்பு இருக்க வேண்டும்.

அர்ச்சுனன்: அந்த சமபுத்தி நிலையை எட்ட எவ்வகைக் கருமத்தை புரிவது அவசியமாகிறது?

கண்ணன்:செயல் புரிவதுதான் அவசியம். மனிதன் செயலாற்றல் உள்ளவன். செயல் புரியாதிருந்தால் அவனது ஆற்றல் வீணாகி விடும்.செயல் புரியாமல் பயனை எட்டவே முடியாது.சாதனை மூலம் தான் சித்தி கிட்டும்.சமபுத்தியை பெற செயல் புரியத் தொடங்க வேண்டும்.செயலைப் புறக்கணிக்கவே கூடாது.

அர்ச்சுனன்: செயல் புரிவதைப் புறக்கணிப்பதால் சமபுத்தி கிட்டாதா?

கண்ணன்: இல்லை.எந்த மனிதனும் எந்த நிலையிலும் ஒரு கணநேரம் கூட செயற்பட்டால் இருக்க முடியாது.எனெனில் இயற்கையாக ஏற்பட்டுள்ள இயல்புகள் உரிரனங்களை இயக்குகின்றன. செயல் புரிவது பிராணிகளின் உடன் பிறந்த சுபாவம்.இதை எந்தப் பிராணியாலும் தவிர்க்கவோ தடுக்கவோ முடியாது.

அர்ச்சுனன்: சரி மனிதன் எதுவும் செய்யாமல் மெளனியாக அமர்ந்திருந்தால் அது செயலைத் துறந்ததாக அமையாதா?

கண்ணன்: அது செயல் துறவு ஆகாது.புலன்களைப் வெளிப்படையாக செயல்பட விடாமல் உள்ளத்தில் பலவற்றையும் சிந்தித்துக் கொண்டிருப்பதும் செயத்துறவு ஆகாது.இது மூடர்கள் புரியும் வெளிவேசம், ஏமாற்று வேலை.இதன்னல் பல தீமைகள் ஏற்படும்.

அர்ச்சுனன்: அப்படியால் நீங்கள் கூறிய சமபுத்தியை எப்படிப் பெற முடியும் கண்ணா?

கண்ணன்: அர்ச்சுனா! எந்த மனிதன் புலன்களைத் தன் கட்டுபாட்டில் வைத்துக் கொண்டு ஆசாபாங்களுக்கு அடிமையாகாமல் கடமையாகிய பணிகளைப் பற்றுதல் இல்லாமல் செய்து வ்ருகிறானோ.அவன் தான் உத்தமன். அவனுக்கு சமபுத்தி கிட்டுகிறது.ஆகையால் நீ சாத்திர விதிப்படி அமையும் கடமையச் செய். மனம் போனவாறு செயல்புரிவதைவிட விதித்துள்ள கடமையை புரிவது உயர்ந்தது.செயல் புரியாவிட்டால் உன் உடல் இயக்கம் கெட்டுவிடும்.

அர்ச்சுனன்: பகவானே! கடமைளை செய்வதால் பந்தம் ஏற்படாதா?
கண்ணன்: ஏற்படாது செயலை ” யக்ஜம்” என்பர் இதைச் தனக்காகச் செய்தால் மனிதன் செயல்களின் தடையால் கட்டப்படுகிறான். இதைத்தான் “கர்மபந்தம்”என்பர்.குந்தியின் மைந்தனே! நீ கடமைச் செயலை எவ்வித சுயநல எண்ணமும் இல்லாமல் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற நெறி உணர்வுடன் செய்து வா.

அர்ச்சுனன்: நான் ஏன் செயல் புரிய வேண்டும் கண்ணா?

கண்ணன்: தம்பி அர்ச்சுனா மனித இனத்தை படைக்க ஆரம்பித்த போதே பிரம்மதேவர் இந்த நியதியை ஏற்படுத்தி விட்டார்.படைப்புக் காலத்திலேயே பிரம்மா மனிதர்களிடம் ” கடமைச் செயலேனும்”யக்ஜத்தை செய்து வளர்ச்சி பெறுங்கள்.இது கடமையை நிறைவேற்ற ஊக்கமளிப்பதாக, உதவி புரிவதாக அமையட்டும்!” என்று கூறியிருக்கிறார்.

அர்ச்சுனன்: பிதாமகரான ( பாட்டானார்) பிரும்மதேவரே! எந்த மனநிலையில் நாங்கள்கடமையைச் செய்ய வேண்டும்?

கண்ணன்: “யக்ஞம்” எனும் கடமையை நிறைவேற்றுவதன் மூலமாக நீங்கள் தேவர்களின் உயர் நிலையை எட்டுங்கள்.தேவதைகளுக்கு வளர்ச்சி ஏற்படும்.தேவதைகள் உங்களை வளர்த்து உயர்வு அளிப்பார்கள்.இவ்வாறு தேவதைகளும் நீங்களும் ஒருவரை ஒருவர் வளர்த்துக் கொள்வதால் அதாவது தமக்காக அல்லாமல் பிறருக்காக கடமையைச் செய்வதால் நீங்கள் பரமாத்மாவை அடைவீர்கள்.பெரும்பேறு பெறுவீர்கள்.

அர்ச்சுனன்: பிதாமகரே! நாங்கள் கடமையைச் செய்யாது போனால்?
கண்ணன்: நீங்கள் கடமையைச் செயல் எனும் யக்ஞத்தைச் செய்வதால் அபிவிருத்தி அடைந்த தேவதைகள் நீங்கள் கேட்காமலேயே உங்களுக்கு கடமையை நிறைவேற்றுவதற்கு தேவையான் சாதனங்களை அளித்துக் கொண்டிருப்பார்கள்.ஆனால் நீங்கள் அச் சாதனங்கள் மூலமாக தேவதைகளைப் பேணி வளர்க்காமல் நீங்களே சுகபோகங்களை அனுபவிப்பவர்களானால் திருடர்களாவீர்கள்.

அர்ச்சுனன்: பகவானே! இந்தக் குற்றத்திலிருந்து எப்படி தப்புவது?

கண்ணன்: தம்பி அர்ச்சுனா! பிறர் நலனிற்காகக் கடமைச் செயலை செய்து வருவதுதான் வழி.இதனால் யக்ஞபலனாக சமத்துவ நிலையை உணர்வாய்.இதனால் மேன்மை பெறும் மனிதர்கள் பாவங்களிலிருந்து முக்தி பெறுகிறார்கள்.எவர் தம் சுய செளக்கியங்களுக்காகவே செயலாற்றுகிறாரோ அவர்கள் பாவங்களையே சேகரிக்கிறார்கள்.பாவிகளாக கருதப்படுகிறார்கள்.

அர்ச்சுனன்: பகவானே!இப்போது நீங்கள் கடமைச் செயல்பற்றி பிரமதேவரின் கட்டளையை எடுத்துச் சொன்னீர்கள்.இது குறித்து உங்கள் அறிவுரை என்ன?

கண்ணன்: இது குறித்து நான் கூறுவது சிருஷ்டிஎனும் சக்கரத்தை இயக்க கடமைச் செயலை செய்து வருவது அவசியமாகிறது.ஏனென்றால் எல்லா பிராணிகளுமே உணவாகிய அன்னத்திலிருந்து உற்பத்தியாகிறது அன்னம் மழையினால் உற்பத்தியாகின்றன.மழை யக்ஞத்தால்(கடமையை நிடைவேற்றுகிறது)பொழிகிறது.யக்ஞம்சுயநல உணர்வு இல்லாமல் செய்யும் பணிகளால் உருவாகிறது.கடமைப் பணிகளைப்புரியும் விதிமுறைகளை வேதங்கள் போதிக்கின்றன.வேதங்கள் பரம்பொருளான் பரமாத்மாவிடமிருந்து வெளிப்பட்டவை.ஆகையால் எங்கும் பரந்துள்ள பரமாத்மா யக்ஞத்திலும் எப்போதும் இருந்து வருகிறார்.பாராத்மாவை அடைவது தன் கடமைப் பணியை நிரைவேற்றுவதின் மூலமே சாத்தியமாகும். ஆகையால் சிருஷ்டி சக்கரத்தின் பாதுகாப்பிற்கு மனிதர்கள் தம் கடமைச் செயல்கள் முரையாக செய்துவர வேண்டியது இன்றியமையாத தேவை.
ஒருபோதும் புறக்கணிக்கமுடியாது.

அர்ச்சுனன்: எவராது அந்த சிருஷ்டி சக்கரத்தின் பாதுகாப்பிற்காக தன் கடமைப் பணியை செய்யாது போனால்?

கண்ணன்: பார்த்தனே! எந்த மனிதன் சிருஷ்டி சக்கரத்தின் பரம்பரையை இயக்கத் தொடரைப் பாதுகாக்கத் தன் கடமைப் பணியை செய்யாது இருகிறானோ அவன் புலன்களுக்கு அடிமைப்பட்டு போக வாழ்வில் உழலும் பாவத்தை புரிகிறான்.பாவம் நிறந்து வாழ்பவனின் வாழ்க்கை வீண்.பூமிக்குப் பாரம்,இவன் வாழ்வதைவிட இறப்பதே மேல்.

அர்ச்சுனன்: சுயநலப்பற்றில்லாமல் நீங்கள் காட்டும் நெறிவழியில் சிருஷ்டி சக்கரத்தில் இயக்கத் தொடரைப் பேணிப் பாதுகாக்க தனது கடமைப் பணியை மனிதன் நிறைவேற்றி வந்தால் ஆவது என்ன?

கண்ணன்: அத்தகைய உத்தம மனிதன் தனக்குள் அகம் மகிழ்ந்தும் மனநிறைவு பெற்றும் வாழ்கிறான்.அவன் செய்யா வேண்டியது ஏதும் மிஞ்சி இருப்பதில்லை.ஏனெனில் அந்த மகா புருஷனுக்கு இந்த உலகியல் வாழ்வில் செயல்புரிவதோ புரியாமலிருப்பதோ சுயலாபம் கொண்டதல்ல.அந்த உத்தமருக்கு எந்தப் பிராணியுடன் சுயநலம் சார்ந்த சம்பந்தம் ஏற்படுவதில்லை.

அர்ச்சுனன்: பகவானே!நானும் அத்தகைய உத்தம புருஷனாக முடியுமா?

கண்ணன்: முடியும்.நீ உத்தம புருஷனாக ஆகலாம்.நீ தொடர்ந்து பற்றுதல் இல்லாமல் கடமையைச் செய்து வா.அப்போதுதான் பாரம்மத்மாவை எட்ட முடியும்.

அர்ச்சுனன்: முன்பு இப்படி பற்றுதல் இல்லாமல் கடமைகளை எவராது செய்திருக்கிறாரா? அவர் பரமாத்மாவை அடைந்திதிருக்கிறாரா?
கண்ணன்: ஜனக மாகராஜா போன்ற பல மகா புருஷர்கள் தன்னலம் கருதாமல் கடமைப் பணிகளை செய்துகொண்டு வாழ்ந்திருக்கிறார்கள்.பரமாத்மாவின் அனுக்கிரகத்தைப் பெற்ற பின்னும் அவர்கள் உலகநலனுக்காக ( உலகைத் தீய வழியிலிருந்து

தடுத்து நல்வழியில் செலுத்த) கடமையாற்றி வந்திருகிறார்கள்.ஆகையால் லோகஸங்கிரகம்”நலனிற்காக நீயும் அவர்களைப்போல கடமைகளைச் செய்.

அர்ச்சுனன்: லோகஸங்கிரகம் எனும் உலகநலன் எப்படி ஏற்படுகிறது?

கண்ணன்: இருவகையில் ஏற்படுகிறது தமது கடமைகளை நிறைவேற்றுவதின் மூலமாகவும், வாக்குறிதிகள் மூலமாகவும், மேன்மக்கள் புரியும் செயல்களைப் பார்த்து பிறர் பின்பற்றுகிறார்கள்.மேலும் அவைகள் தம் வாக்குகளால் புலம்படுத்தும் நெறிமுறைகளை மற்றவர்கள் ஏற்றுச் செயலாற்றுகிறார்கள்.

அர்ச்சுனன்: பரமாத்மாவை அடையும் தகுதிபெற்ற ஜனக மகாராஜா போன்றவர்களைப் போல் உலக நலனிற்காக கடமையாற்றியதற்கு எடுத்துக் காட்டுகள் உள்ளதா?

கண்ணன்: என்னையே எடுத்துக்காட்டகக் கொள் பார்த்தா!மூவுலகிலும் நான் செய்ய வேண்டிய கடமை மீதியில்லை.எனக்கு கிடைக்க வேண்டிய பொருள் எதுவும் கிடைக்காமல் போகவில்லை .எல்லாம் நிறைவுடன் பெற்றிருந்தும் நான் உலக நலனிற்காக கடமைப் பணிகளைப் புரிந்து வருகிறேன்.

அர்ச்சுனன்: பகவானே நீங்களும் கடமைப்பணி புரிய வேண்டிய அவசியம் என்ன?

கண்ணன்: அர்ச்சுனா! அவசியமுள்ளது நான் சுணங்கி கடமைப் பணிகளை ஒதுக்கி விட்டு கடமையை நிறைவேற்றாது போனால் பிறரும் என்னைப் பின்பற்றி சுணங்கி சோம்பி நிற்பார்கள்.அவர்களும் கடமைப் பணிகளை புறக்கணித்து விடுவார்கள்.அவர்களது வாழ்க்கை இயக்கம் சீர்குலையும்.

அர்ச்சுனன்: அப்படியானால் என்ன ஆகும்?

கண்ணன்: நான் என் கடமைகளைச் செய்யாது இருந்தால் மற்ரவர்கள் முறை தவறி வாழத் தொடங்குவார்கள்.இதனால் எல்லாக் குளறுபடிகளுக்கும் மக்கள் சமுதாயத்தை சீர்குலைத்தற்கும் நானே மூலகாரணமாவேன்.

அர்ச்சுனன்: இந்த நோக்கில் உலக நலனிற்காக கடமைப் பணி புரிவது மிக அவசியமாகிறது.ஆனால் தத்துவஞானிகளான மகா புருஷர்களுக்கும் கடமைப் பணிகள் புரிவது அவசியமாகிறது?

கண்ணன்: ஆம் அர்ச்சுனா! மிகவும் அவசியம். எப்பட்ய் அஞ்ஞானிகள் தாம் செய்யும் தொழில்களீல் சுயநல விளைவுடன் பயனை எதிர்நோக்கி முனைப்புடன் ஈடுபாடுகிறார்களோ விருப்பு வெறுப்பில்லாத ஞானிகளான மாகபுருஷர்களும் உலநலனுக்காக வேண்டி முனைப்புடன் தம் கடமைப் பணிகளில் ஈடுபட்டாக வேண்டும். மேலும் ஞானிகளிற்கு மகத்தான பொறுப்பும் உள்ளது.அஞ்ஞானிகளை தம் வழியில் கொண்டுவரும் வகையில் எடுத்துகாட்டாக அவர்கள் பணிபுரிய வேண்டும்.அதன்னல் அஞ்ஞானிகள் திருந்த வேண்டும்.

அர்ச்சுனன்: அஞ்ஞானி, ஞானி இருவரும் செயற்படுவதில் என்ன வித்தியாசம் என்ன?

கண்ணன்: எல்லாச் செயல்களும் பலவகையிலும் இயற்கையின் இயல்புகளால் நிறைவேற்றி வைக்கப்படுகின்றன.ஆனால் நான் எனது எனும் செருக்கில் மயக்கிய உள்ளப்பாங்கு மனிதனை அஞ்ஞானியாக்குகிறது.அவன் நான் தான் செய்கிறேன்.என்று கருதுகிறேன்.வீரம் மிக்கவனே! குணப்பிரிவு,கர்மப்பிரிவு இரண்டையும் உணர்ந்துள்ள் ஞானி எல்லாச் செயல்களும் இயல்பாகவே இயற்கையிலேயே நிகழ்கின்றன.என்பதை உண்ர்ந்திருப்பதால் தாம் புரியும் செயல்களில் சுயநலப்பற்று வைப்பதில்லை.

(சத்துவம் ரஜஸ் எனும் குணங்களும் ,உடல் புலன்கள்,மனம்,புத்திபிராணி,பொருள் எல்லாம்கொண்ட உலகியலும் குணப்பிரிவிலும் இவைகளில் ஏற்படும் செயல்கள் கருமப்பிரிவிலும் அடங்கும்)

அர்ச்சுனன்: கண்ணபிரானே!உங்களுக்கு உள்ள பொறுப்புகள் ஞானிகளான மாகா புருஷ்ர்களுக்கும் உள்ளனவா?

கண்ணன்: இல்லை அர்ச்சனா!ஞானிகளை மகா புருஷர்கள் அஞ்ஞானிகளைப்போல் காரியங்களைச் செய்யாமல் இருக்கலாம்.ஆனல் அவர்கள் நேரிடையாகவோ, மறைமுகமாகவே அஞ்ஞானிகளை தடுமாறச்செய்யாமல் இருக்க வேண்டும் .சிறிதளவு இயற்கைக் குணங்களில் மோகித்து மயங்கினாலும் வழி தவறி விடலாம்.இயற்கைக்குணங்களிலும் செயல்களிலும் பற்றுதலுடன் ஈடுபட்டுள்ள அஞ்ஞானிகள் ஞானிகளைப் பார்த்து மேலும் சஞ்சலப்பட்டு வழிமாறிப் போவார்கள்.

அர்ச்சுனன்: பகவானே! நான் இப்போ சஞ்சலப்படுகிறேனே.என்னால் என்ன செய்ய முடியும்?
கண்ணன்: அர்ச்சுனா! நீ பகுத்தறீயும் விவேக புத்தியுடன் சிந்தித்து உன் எல்லாச் செயல்களையும் என்னிடம் அர்ப்பணித்துவிடு விருப்பு , வெறுப்பு பற்றுதல், மமதை,வருத்தம் ஏதும் கொள்ளாமல் கடமைப் பணியான போரிடும் பணியை தொடர்ந்து செய். உன் வீர இயல்பிற்கேற்ப போர்புரி.

அர்ச்சுனன்: எனது எல்லாக் கடமைப் பணிகளையும் உங்களிற்கே அர்ப்பணிப்பதால் என்ன ஆகும்?
கண்ணன்: குற்றமற்ற நோக்கத்துடன் சிரத்தையுடன் எனது வழிகாட்டலின்படி நடப்பவர்கள் எல்லாவகைக் கர்ம பந்தங்களில் இருந்து விடுபடுகிறார்கள்.தடை நீங்கிய நிலை அவர்களை மேம்படுத்துகிறது.

அர்ச்சுனன்: அப்படியனால் உங்கள் வழிகாட்டலிற்கேற்ப நடப்பவர்களுக்கு என்ன ஆகிறது?

கண்ணன்: என் கொள்கையில் குற்றம் குறை கண்டு அதன் வழியில் செல்லாதவர்கள் உலகியல் உணர்வுகளுக்குள் சிக்கி மதிமயங்கிப் போகிறார்கள்.அவர்களுக்கு பரபொருள் பேரறிவு கிட்டுவதில்லை.அவிவேகி ( அறிவிலி) களாகி அழிந்து போகிறார்கள்.அவர்கள் வாழ்ந்தும் பயனில்லை.

அர்ச்சுனன்: பரமாத்மாவே உங்கள் கருத்துப்படிஆசாபாசம் இல்லாமல் கடமையாற்றத்தவறுபவர்கள் ஏன் அழிவு ஏற்படுகிறது?

கண்ணன்: ஞானி வெறுப்பு -விருப்பு இல்லாத ஈடுபாட்டுடன் செயல்புரிகிறார்கள். இதனால் சாஸ்திர நியமங்களிற்கேற்ப செயலாற்ற அவர்களால் இயலவில்லை.முறைகேடான இயல்பால் அவர்கள் அழிகிறார்கள்.

அர்ச்சுனன்: கண்ணா! இந்த அழிவிலிருந்து காப்பாற்றிகொள்ளா என்ன உபாயம்?

கண்ணன்: ஒவ்வொரு புலன் சார்ந்த இயக்கத்திலும் விருப்பு -வெறுப்பு கலந்திருக்கின்றன. ஆகையால் மனிதன் புலன்களுக்கு அடிமையாகாமல் நடுநிலையோடு செயல் புரியவேண்டும். விருப்பு-வெறுப்பு உணர்சிகளுமே மனிதனின் பகைவர்கள்.

அர்ச்சுனன்: அப்படியானால் மனிதன் என்ன செய்ய வேண்டும் கண்ணா?

கண்ணன்: தன் கடமையை அறநெறியாக மதித்து நிறைவேற்ற வேண்டும்.குணநலன் குறைவாக இருந்தாலும் கடமை அறநெறி தான்.கடமையை நிறைவேற்றும் போது மரணம் ஏற்பட்டாலும், அது நல்லதே.பிறருடைய அறநெறி எவ்வளவுதான் குணநலன்,நிரம்பியதாக இருந்தாலும் அது எற்கத்தக்கதல்ல.அச்சம் ஊட்டுவது.ஆபத்தானது.

அர்ச்சுனன்: தர்மத்தைச் ( கடமையை) செய்வது சிறந்தது என்று அறிந்திருந்தாலும் மனிதன் எதனால் தூண்டப்பட்ட்டு வழி தவறி அதர்மத்தையும் பாவத்தையும் அடிகடி புரிகிறான்?

கண்ணன்: ரஜோ குணத்தால் ஏற்படும் காமம் பாவத்தை செய்விக்கும் துர்க்குணம் , காமத்திலிருந்து குரோதம் விளைகிறது.மாபாவியான காமம் ஒருபோதும் திருப்தியடையாது.அது பாவங்களை விளைவிப்பது.

அர்ச்சுனன்: மாபாவியான காமம் என்ன செய்கிறது?

கண்ணன்: எப்படிப் புகை தீயை மறைந்திருகிறதோ, தூசு எப்படி கண்ணாடியை மறைந்திருக்கிறதோ, ஜவ்வுப்படிவம் எப்படி கருப்பபையை மூடியிருக்கிறதோ , அதே போல காமம் , பாவம் செய்ய விரும்பாத மனப்பண்பை பலவீனப்படுத்துகிறது.மனிதனை பாவம் செய்யத் தூண்டுகிறது.குந்தியின் மைந்தனே! காமம் தீயைப் போல் எரிக்க எரிக்கத் தணியாதது. விவேவிகளான சாதனையாளர்களிற்கு அது எதிரி.காமத்தில் வயப்பட்ட மனிதனின் விவேகமும் பகுத்தறிவும் மறைக்கப்பட்டு விடுகிறது.

அர்ச்சுனன்: அத்தகைய காமம் எங்கிருக்கிறது?

கண்ணன்: காமம் புலன்கள், மனம், புத்தி மூன்று நிலைகளிலும் இருக்கிறது.இதன் மூலமாக காமம் உடல் பற்றுதல் மிகுந்த மனிதனின் அறிவை மறைத்து அவனை மயங்க வைக்கிறது.பாவங்கள் புரிய தூண்டுகிறது.

அர்ச்சுனன்: அந்த காமத்தை எப்படி அழிப்பது?
கண்ணன்: பரத வம்சத்தில் பிறந்த சிறந்த வீரனே! நீ முதலில் உன் புலன்களை அடக்கு .பிறகு பகுத்தறிவையும் , விஞ்ஞான் அறிவையும் மறைத்துக் கேடு விளைவிக்கும் மாபாவியான் காமத்தையும் கட்டாயம் அழித்து விடு.

அர்ச்சுனன்:  பகவானே! நீங்கள் உபதேசிக்கும் இந்த உபாயத்தை எப்படிச் செயல்படுத்துவது?
கண்ணன்: குந்தியின் வீரமைந்தனே! உடலைவிட மேம்பட்டவை ஜம்புலன்கள்( மேலானவை, வலுவானவை, வெளிப்பாடுமிக்கவை,பரந்திருப்பவை, சூட்சுமமானவை) இந்திரியங்களான் புலன்களைவிட மேம்பட்டது மனசு. மனதைவிட மேம்பட்டது புத்தியெனும் அறிவு.புத்தியைவிட வலுவானவை காமம் எனும் ஆசை. ஆகையால் எல்லாவற்றிலும் வலிமைமிகுந்த காமத்தைக் கட்டுப்படுத்து.இலகுவில் வெல்லமுடியத இந்த எதிரியை வீழ்த்தி விடு! நீ எல்லாவகையிலும் வெற்றி பெறுவாய்.

(காமம்) அகந்தையில் உள்ளது.இதனால் உலகியல் பொருள்களில் அகந்தையில் கவர்ச்சி உண்டு.அகந்தையில் இரு அம்சங்கள், ஒன்று இயற்கையின் அம்சம்.ஜடப் பகுதி,மற்றது பரமாத்மாவின் சைந்தன்யம் எனும் உணர்ச்சி அம்சம்.இயற்கையின் அம்சம் இயற்கையின் பாலும் பரமாத்மாவின் அம்சம் பரம்பொருள்பாலும் ஓரின உறவு காரணமாகக் காணப்படுபவை.ஆகையால் அகந்தையின் அடித்தளக் காமம் இருக்கிறது.உணர்ச்சி அம்சத்தில் தத்துவ ஞான ஆர்வமும் அன்புடைமையும் உள்ளன.இதுதான் ஜடத்திற்கும் சேதனனுக்கும் அடிப்படை வித்தியாசம்.ஜட நிலையைத் தாண்டி சேதன நிலையை எட்டிய மனிதன் ஜடத்தின் அம்சமான காமத்திற்கு அடிமையாகக் கூடாது.

04.உன்னத அறிவு

அர்ச்சுனன்: பகவானே! கர்மயோகமான கடமைச் செயற்பாட்டில் தீவிர விருப்பமான சுயந்ல வேட்கையை ( காமம்) அழிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினீர்கள்.இந்த கர்ம யோகத்தின் மரபுத்தொடர்( பரம்பரை) எப்படியானது?

கண்ணன்: அர்ச்சுனா! இந்த அழிவில்லத கர்ம யோகத்தை நான் முதலில் சூரியனுக்கு உபதேசித்தேன்.பின் சூரியன் தன் மகன் மனுவிற்கும் .மனு தன் மகன் இஷ்வகுவிற்கும் உபதேசித்தார்கள்.இவ்வாறு வழி வழியாக உபதேசிக்கப்பட்டு வந்திருக்கும் இந்த கர்மயோகத்தை உலகை ஆன்டு வந்த ராஜரிஷிகள் அறிந்திருந்தார்கள்.பல ஆண்டுகள் கடந்து போனதால் இந்த யோகம் மனிதர்களிடம் அரிதாகி விட்டது. அர்ச்சுனா! நீ என் நெருங்கிய பக்தன் பிரியமான தோழன் இதனாலேயே இப் புராதனமான கர்மயோகத்தை உனக்கு உபதேசிக்கிறேன்.இது மிகவும் இரகசியமான அரியதத்துவம்.

அர்ச்சுனன்: பரம்பொருளே!நீங்கள் எந்தச் சூரியனுக்கு உபதேசித்தீர்களா அவர் வெகு காலத்தில் முன்பே பிறந்தவர்.ஆனால் நீங்கள் அவதரித்ததோ இந்தக் காலத்தில். சிருஷ்டி காலத்தில் தொடக்கத்திலே நீங்கள் இந்த அரிய யோகத்தை சூரியனுக்கு உபதேசித்ததை நான் எப்படி தெரிந்து கொள்ளமுடியுமா?

கண்ணன்: பிரதாபம் மிகுந்த வீரனே!இந்த விசயம் எனது இந்தப் பிறவியைச் சார்ந்தது அல்ல.எனக்கும் உனக்கும் பல பிறவிகள் ஏற்பட்டு விட்டன. அவையெல்லாம் எனக்குத் தெரிந்தவைதான் ஏதாவது எந்தப் பிறவியில் நீயும் நானும் என்னவெல்லாம் செய்து கொன்டிருந்தோம் என்பதை நான் நன்கு அறிவேன்.ஆனால் நீ உன் பிறவிகளையும் பிறவிச்செயல்களையும் அறியவே மாட்டாய்.

அர்ச்சுனன்: எனக்கு ஏற்பட்ட பிறவிபோல் உங்களுக்கு ஏற்படவில்லை?

கண்ணன்: இல்லை. நான் பிறப்பு இறப்புகளைக் கடந்தவன்.பிறவி இல்லாதவன்.மரணமில்லாதவன்.உயிரினங்களிற்கு எல்லாம் ஈஸ்வரன்( ஆக்கவும் அழிக்கவும் வல்லமை படைத்தவன்)எனினும் என் வசத்திலுள்ள இயற்கை நியதியை கட்டுப்படுத்திக்கொண்டு யோக மாயையில் நான் வெளிப்படுகிறேன். ( பிறக்கிறேன் அவதாரம் செய்கிறேன்).

அர்ச்சுனன்: நீங்கள் வெளிப்படும் தருணம் எது?

கண்ணன்: பரத வம்சத்தில் உதித்த அர்ச்சுனா! எப்பொதெல்லாம் தர்மத்திற்கு கேடு ஏற்படுகிறதோ அதர்மம் மேலோங்கி பெருகிறதோ அப்போதெல்லாம் நான் அவதாரம் எடுக்கிறேன்.( விரும்பி பிறக்கிறேன்)

அர்ச்சுனன்: நீங்கள் அவதாரம் எடுப்பதால் பயன் என்ன கண்ணா?

கண்ணன்:நல்லவர்களான நன்னெறியாளர்களைப் பாதுகாக்கவும் தீயவர்களை அழிப்பதற்கும்,தர்ம நெறிகளை நடைமுறைப் படுத்தி நிலை நாட்டுவதற்கும் நான் ஒவ்வொரு யுகத்திலும் பிறக்கிறேன்.

அர்ச்சுனன்: பகவானே! இம்மாதிரி அடிக்கடி பிறவி எடுப்பதால் உங்களை பந்தபாசம் கட்டுப்படுத்துவது இல்லையா?

கண்ணன்: இல்லை. என்னுடைய பிறவியும் செயலும் தெய்வாம்சம் பொருந்தியவை. எனக்கென்று எந்தச் சுயநலமும் கொள்ளாமல் உலக நன்மைக்காகவே நான் பிறவி எடுக்கிறேன்.இந்த உண்மையை எந்த மனிதன் தத்துவ ஞானத்துடன் உணர்கிறானோ,அவன் இறந்த பின் மறுபிறவி பெறாமல் என்னையே வந்தடைகிறேன்.

அர்ச்சுனன்: அத்தகைய தத்துவஞானி உங்களையே வந்தடைகிறான் என்பதற்கு என்ன அத்தாட்சி?

கண்ணன்: அத்தாட்சி உள்ளாது.என்னோடு ஒன்றி, என்னையே புகலாக கொன்ட தத்துவஞானிகள் என் பிறப்பு இறப்புகளின் திவ்விய தன்மையை அறிந்து ளொண்டதால் புனிதர்களாகி, ஆசை,அச்சம் சினம் முதலிய தீய இயல்புகளில் இருந்து விடுபட்டு என்னையே வந்தடைகிறார்கள்.

அர்ச்சுனன்: அவர்கள் எந்தத் தன்மையுடன் உங்களைப் புகலடைகிறார்கள்?

கண்ணன்: பார்த்தனே! உலகியல் உறவுகளோடு ஒட்டாமல் எந்தத் தன்மையுடன் என்னை மனிதர்கள் புகலடைகிறார்களோ, நானும் அவர்களுடன் அதே தன்மையுடன் தான் ஒட்டுறவு கொள்ளுகிறேன்.எனது இந்த உறவால் சம்சாரிகளான மனிதர்களிடம் சிறப்பான எதிர் விளைவுகள் ஏற்படுகிறது.நற்குணங்கள் நிரம்பிய அவர்கள் சுயநலம்,செருக்கில்லாமல் பிறருக்கு நன்மை புரிவதில் தீவிரமாக ஈடுபடுகிறார்கள்.

அர்ச்சுனன்: அச்சுதா! உங்களைப் புகலடைந்தவர்களை நீங்கள் பாசத்துடன் ஆட்கொள்கிறீர்கள். அப்படியிருந்தும் மனிதர்கள் உங்களைவிட்டு வேறு தேவதைகளைப் பூசிக்கவும் உபாசிக்கவும்செய்கிறார்களே ஏன்?
கண்ணன்:அத்தகைய மனிதர்களின் மனபாங்கில் உலகியல் ஆர்வம் ஆதிக்கம் செலுத்துகிறது.அதனால் கர்ம அனுஷ்டானங்களால் ஏற்படும்.பயனை சித்தியாக பெற விரும்புவார்கள்.இதனாலேயே அவர்கள் என்னை விட்டுவிடு பிற தேவதைகளை உபாசிக்கிறார்கள்.ஏனென்றால் இந்த மாதிரி மாநிட உலகில் கர்மாக்களில் ஏற்படும் பயன் விரைவில் கிட்டி விடுகிறது.

அர்ச்சுனன்: பகவானே! எப்படி மனிதர்கள் கர்மாக்களில் ஏற்படும் சுயநல பயனிற்காக பிற தேவதைகளை உபாசிக்கிறார்களோ, அதே போல் நீங்களும் ஏதாவது ஒரு பயனை வேண்டிய தக்க கர்மாவை செய்வதுண்டா?

கண்ணன்: நான் ஜீவன்களின் குணங்களுக்கும் செயல்களுக்கும் ஏற்ப நால்வகைப் பிரிவுகளை( வர்ணங்கள்,இனங்கள்) உருவாக்குகிறேன்.அவை பிராமணன், சத்திரியன்,வைசீகன்,சூத்திரன் என்னும் இனங்கள்.ஆனால் நான் படைப்பு முதலிய பணிகளை பயன் கருதியோ செருக்குடனோ செய்வதில்லை. இதேபோல் என்னைத் தத்துவ ஞானத்துடன் அறிந்துள்ள ஞானிகளும் விருப்பு வெறுப்பு இல்லாமல் செலாற்றுவதால் கர்ம பந்தங்களிற்கு ஆட்படுவதில்லை.

அர்ச்சுனன்: இதேபோல் இவ்வுலகில் எவராவது பணி புரிந்து இருக்கிறார்களோ?

கண்ணன்: செய்திருகிறார்கள். முதலில் முத்தி பெற விரும்பிய ஞானிகள் இந்தக் கர்ம தத்துவத்தை அறிந்து கொண்டு பயனில் ஆசையில்லாது பணிபுரிந்திருக்கிறார்கள்.நீயும் அந்த முன்னோர்களைப் போல் அவர்கள் காட்டிய வழியில்பணிபுரிந்து வா.

அர்ச்சுனன்: அர்த முமுசுக்கள் செய்து காட்டியதும் ,நீங்கள் உத்தரவிடுவதும் உபதேசிப்பதுமான கர்மா எனும் கடமை பணி எத்தகையது?

கண்ணன்: செயல் ( கர்மா) எது? செயலின்மை ( அகர்மா) எது? இந்த விஷயத்தில் மகா வித்துவான்களே தடுமாறி விடுகிறார்கள்.எனவே செயல் தத்துவத்தை உனக்கு உபதேசிக்கிறேன்.இதை உணர்ந்த நீ உலகியல் தளைகளிருந்து விடுபடுவாய்.கர்மா மூன்று வகைப்படும்.கர்மம், அகர்மம்,விகர்மம்( செயல்,செயலின்மை, தகாத செயல்).இம்மூன்று கர்ம பேதங்களையும் இவைகளின் நிலைகளையும் கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டும்.இதைத்தான் கர்ம தத்துவம் என்பர்.இது மிகவும் ஆழ்ந்த தத்துவம்.

அர்ச்சுனன்: கர்மம் அகர்மம் இவைகளில் உண்மைத் தத்துவத்தை அறிவது என்பது என்ன?

கண்ணன்: கர்மத்தில் அகர்மத்தையும் அகர்மத்தில் கர்மத்தையும் காண்பது, உணர்வது செயல்படுத்துவது தான் கர்ம தத்துவம்.அதாவது செயலில் ஈடுபடும்பொது பற்றுதல் , ஒட்டுறவு இல்லாமல் இருப்பது, பற்றுதல் அற்ற நிலையில் செயற்படுவது
( நாம் இந்தக் காரியத்தைச் செய்யவில்லை.இக்காரியம் ந்ம்மை இதில் ஈடுபடுத்தியிருக்கிறது என்ற உணர்வுடன் செயல்படுவது).இவ்வாறு செயல் செயலின்மை இரண்டையும் ஒருநிலையில் கொண்டுள்ளவர் தான் யோகி புத்திமான்.

அர்ச்சுனன்: பகவானே! அந்தப் புத்திமானுக்குரிய சிறப்புக்கள் என்ன?

கண்ணன்: எவருடைய செயல்கள் யாவும் தன்னல முனைப்பும் தீவிர விருப்பமும் இல்லாதவையோ, மேளும் அவை நல்லறிவு எனும் தீயில் இட்டு புடம்போட்டவையோ அத்தகைய திறன் கொண்டவரை ஞானிகள்.பேரறிவாளர்கள்.பண்டிதர் என்பர். அத்திறன் தான் அவைகளுடைய புத்திசாலித்தனம் எனும் சிறப்பியல்பாகும்.

அர்ச்சுனன்: அத்தகைய சிறந்த மனிதர்களின் நிலைப்படுகள் என்ன?

கண்ணன்: செயல்திறன் கொண்ட பண்டிதர்கள் செயல் , செயலின் பயன் இரண்டிலுமே பற்றுதல் கொள்வதில்லை. மேலும் அவர்களைச் சார்ந்திருப்பதில்லை.அவர்கள் எப்போதும் மனதிருப்தியுடன் வாழ்பவர்கள். ஆகையால் அவர்கள் எல்லாம் செய்து கொண்டிருந்தாலும் எதுவும் செய்யாதவர்களாகவே இருப்பார்கள்.செயல்,செயலின்மை இருநிலைகளும் அவர்களிற்கு சமம்.

அர்ச்சுனன்:அத்தகைய சாதனையாளர்கள் செயலில் ஈடுபடாமல் இருந்துவிட்டால் என்னவாகும்?

கண்ணன்: சரீரம் ,அந்தகரணம் இரண்டையும் கட்டுபாட்டில் வைத்திருப்பவரும் .சேமித்து வைத்துள்ள சகலதையும் தியாகம் செய்பவரும்,உலகியல் ஆசைகளும் இல்லாதவருமான சாதகர் உடல் சம்மந்தப்பட்ட கருமங்களை செய்து கொண்டிருந்தாலும் கர்மபந்தத்தில் சிக்குவதில்லை.

அர்ச்சுனன்:அத்தகைய சாதகர்கள் செயலில் ஈடுபாடு கொண்டவராக இருந்தால் என்னவாகும்?

கண்ணன்: அந்தச் சாதனையாளரும் சூழ்நிலைக்கு ஏற்பதாக தம்மை மாற்றிக் கொண்டு மனநிறைவு பெறுகிறார்கள்.பொறாமை சஞ்சலம் விருப்பு வெறுப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படாமல் இருப்பார்கள்.செயலின் நிறைவு ( பயன்) நிறைவின்மை (பயனின்மை)இவ்விரண்டையும் சமமாக கருதியவாறு செயலில் ஈடுபட்டு இருப்பதால் கர்ம பந்தங்கள் அவர்களை கட்டுப்படுத்துவதில்லை.மேலும் எவர் விருப்பு வெறுப்புகளை கடந்தவரோ,சுதந்திரமானவரோ எவருடைய குறிக்கோள் பரமாத்மாவை அடையும் முனைப்பு உள்ளதோ அத்தகைய சாதகர் உலக நன்மைக்காகவே செயலை புரிந்து வருவார் .ஆகையால் அவர் செயலில் ஈடுபட்டிருந்தாலும் அதில் சிக்காமல் செயலின்மை நிலையில் நிலைத்திருக்க வல்லவர்.

அர்ச்சுனன்:அச்சாதகர்கள் செய்யும் உலக நன்மைக்காக காரியங்கள் எத்தனை வகையானது?

கண்ணன்: நன்மைகள் பலவகை
1. எந்த நன்மைகளில் எல்லாச் சாதனங்களும் உபகரணங்களும்,செயல்முறையும் செய்பவரும் பிரும்ம சொரூபமான்வையோ அது பிரும்ம யக்ஞம்.

2. எதில் எல்லாமே எனக்கு அர்ப்பணிக்கப்பட்டவையோ, அது “பகவதர்ப்பண ரூபமான யக்ஞம்”
3. எதில் சாதகர் தம்மை பிரமத்தில் இரண்டறக் கலந்துவிடக் செய்திருக்கிறாரோ அது பேதமற்ற ” அபின்னதாரூப யக்ஞம்”
4. எந்த நற்செயலில் சாதகர் தம் ஜம்புலன்களையும் அடக்கியிருக்கிறரோ,அவைகளைத் தத்தம் பொருள்களிருந்து( விஷயங்களிலிருந்து விடுவிதிருக்கிராரோ அது” ” ஸம்யம ரூபமானயக்ஞம்”.

5.எதி சாதகர் விருப்பு வெறுப்பு இல்லாமல் அடங்கியுள்ள புலன்களால் பொருட்களில் ஈடுபடுகிறாரோ அதற்கு பெயர் விஷயஹவன ரூபயக்ஞம்
6. உயிரெ நிலைகள், புலன்கள், உள்ளம் இவைகளின் செயல்களைத் தடுத்து ,அறிவு விழிப்புடன் இருக்கும் போதே சஞ்சலம் இல்லாத திட நிலையை எட்டுவது “அமாதி ரூபமானயக்ஞம்.
7.உலக நலனிற்காக தன்செல்வத்தை செலவிடுவது ” திரவிய யக்ஞம்”
8.தன் தர்மத்தை ( அற நெறிகளை) கடைப்பிடிப்பதில் ஏற்படும் இடர்பாடுகளையும் இன்னல்களையும் மகிழ்ச்சியுடன் சகித்துக் கொள்வது ” தபோ யக்ஞம்”.

9. செய்யும் காரியம் நிறைவு பெற்றாலும் , பெறாது விட்டாலும் பயன் கிடத்தாலும் ,கிடைக்காது விட்டாலும் சமமான மனநிலையில் இருப்பது ” யோக யக்ஞம்”
10 சீரிய நெறி நூல்ககளை நற்சாத்திரங்களை கற்பதும் கற்பிப்பதும் பகவானின் திருநாமங்களை ஜெயிப்பதும் முதலான பக்தி நெறிகளை அனுட்டிப்பது ” சுவாத்யாய ரூபமான ஞானயக்ஞம்”.
11. யோக நியமங்களிற்கேற்ப பூரகம் ( மூச்சை உள்ளே இழுப்பதும்) கும்பகம் ( மூச்சை நிறுத்தி வைப்பதும்) ரேசகம்( மூச்சை வேளியே விடுவது) எனும் முறையில் ப்ராணயாமம் செய்வது பிராணாயாம ரூபமான யக்ஞம்”
12. நியம ஒழுங்கு முறை ஆகாரம் உட்கொண்டு பிராணன்களை தத்தம் இடங்களில் நிறுத்தி வைப்பது “ஷ்தம்பனவிருத்தி பிராணாயாம ரூப யக்ஞ்ம்”.

இந்த எல்லா யக்ஞங்களும் செயற்பாடுகளில் இருந்து செய்பவர்கள் ஏற்படும் ஈடுபாட்டை( பந்த பாசம்) அகற்றுவதற்குத்தான் இந்த உண்மயை உணர்ந்து யக்ஞங்களை அனுஷ்டிக்கும் சாதனையாளருக்கு எல்லா வகை பாவங்களும் அழிந்து போகின்றன.

அர்ச்சுனன்: பகவானே! பாவங்கள் அழிவதால் என்ன ஆகிறது?

கண்ணன்: குருவம்சத்து வீரனே! நான் மேற்சொன்ன யக்ஞங்களை சரியாக செய்பவர்களுக்கு அமிருத சொரூபமான பரமாத்மாவைப் பெறும் பேறு கிட்டுகிறது.ஆனால் எவ்வித யக்ஞமும் செய்யாத மனிதனுக்கு இந்த உலகம் கூட பயனிளிக்காது.பின் பரலோகம் எப்படிப்பயனுள்ளதாக அமையும்.

அர்ச்சுனன்: இத்தகைய யக்ஞகளைப் பற்றிய வர்ணனை வேறு எங்குள்ளது பகவானே?

கண்ணன்: நான் கூறிய யக்ஞங்களும் மேலும் பலவும் வேதங்களில் விரிவாக வர்ணிக்கப்பட்டுள்ளது.அவை கர்மாக்களிலிருந்து உருவானவை என்பதை அறிந்து கொள். இத்தகைய தத்துவ அறிவுடன் நீ யக்ஞத்தை செய்தால் கர்ம பந்தங்களிலிருந்து விடுபடுவாய்.

அர்ச்சுனன்: எல்லா யக்ஞங்களிலும் தலை சிறந்தது எது?

கண்ணன்: பிரதாபம் மிக்க அர்ச்சுனா!கருமங்களிலிருந்து அமையும் எல்லா யக்ஞங்களிலும் ஞானயக்ஞம் தான் சிறந்தது.ஏனெனில் ஞான யக்ஞத்தில் எல்லாக் கருமங்களிலும் பொருள்களும் அடங்கிவிடுகின்றன.

அர்ச்சுனன்: அந்த ஞானத்தை எப்படிப் பெறுவது

கண்ணன்: ஞானயக்ஞத்திற்கு அடிப்படையான மெய்யறிவு ஞானம் பெற நீ தத்துவ தரிசிகளான மகா புருஷர்களிடம் செல்ல வேண்டும்.அந்த ஞானிகளின் திருவடிகளில் தண்டனிட்டு வணங்கி ,அவர்களுக்கு தொண்டு புரிந்து அவர்களிடமிருந்து ஞானோபதேசம் பெற வேண்டும்.அவர்களிடம் ஞானப் பசியுடன் யாசித்து வேண்டிக் கொண்டால் ஞானோபதேசம் செய்தருள்வார்கள்.

அர்ச்சுனன்: அந்த ஞானிகள் உபதேசித்தருளும் ஞானத்தால் என்ன விளையும்?

கண்ணன்: அர்ச்சுனா!அந்த பரிசுத்த ஞானத்தை பெற்ற பின் உன்னை மோகம் ,மயக்கம் எதுவும் பாதிக்கமாட்டாது.அந்த ஞானத்தின் திறத்தால் நீ எல்லா ஜீவராசிகளையும் முதலில் உன்னுள் காண்பாய்.பிறகு என்னுள் காண்பாய். இதனால் எல்லா இடங்களிலும் ஒரே பரமாத்மாவின் தத்துவத்தை உணர்ந்து கொள்வாய்.

அர்ச்சுனன்: பகவானே! இந்த ஞானத்திற்கு மேலும் ஏதாவது மகிமையுள்ளதா?

கண்ணன்: உள்ளது.நீ எல்லாப் பாவிகளிலும் கடைசியான பாவியாகி இருந்தாலும் இந்த ஞானம் எனும் ஓடத்தால் நிச்சயம் பாவக்கடலைக் கடந்துகரையேற முடியும்.

அர்ச்சுனன்: எப்படிப் கடலை கடந்த பின் கடல் தன்னிடத்தில் இருந்தபடியே இருக்கிறதோ அதேபோல் பாவங்களை கடந்த பிறகு பாவங்கள் இந்த உலகில் இருந்து கொண்டிருக்கும் தானே?

கண்ணன்: இல்லை அர்ச்சுனா! எப்படித் தீ காய்ந்த கட்டைகளைஎரித்து சாம்பலாக்கி விடுகிறதோ.அதேபோல ஞானமெனும் அக்கினி எல்லாக் கருமங்களையும் பாவங்களையும் பொசுக்கி விடுகிறது.ஆகையால் இந்த உலகத்தில் ஞானத்திற்கு சமமான பவித்திரமானதுவேறெதுவும் கிடையாது. இந்த ஞாத்தை கருமயோகம் மூலமாக சித்தி பெற்ற சாதகர் தாமதமாகவே அடைந்து விடுகிறார்.

அர்ச்சுனன்: கர்மயோகம் மூலமாக சித்தராகிய மனிதருக்குத்தானே ஞானம் கிட்டுகிறது என்பதை அறிந்தேன்.ஆனால் மற்ற சாதகருக்கு எப்படிப் கிட்டுகிறது?

கண்ணன்: அர்ச்சுனா! புலன்களை அடக்கி வைத்திருக்கும் சாதனையைக் புரிந்துவரும் சிரத்தையுள்ள சாதகருக்கு அந்த ஞானம் கிட்டுகிறது.ஞானம் பெற்றதும் அந்த சாதகருக்கு பேரமைதி.பரமசாந்தி கிடைக்கிறது.

அர்ச்சுனன்: இந்த ஞானத்தை பெறுவதில் ஏற்படும் தடை இடையூறுகள் எவை?

கண்ணன்: எந்த மனிதன் தானும் அறியாதிருந்து,பிறரிடமும் நம்பிக்கை ஈடுபாடு கொள்ளாமல் பிறருடைய அறிவுரையை ஏற்காமல்,தன்னுள் தன்னம்பிக்கையும் கொள்ளாது தடுமாறிக் கொண்டிருக்கிறானோ,அவனுக்கு வீழ்ச்சி நிச்சயம் சந்தேகமும் சஞ்சலும் கொண்ட மனிதனிற்கு இந்த உலகமோ,மேலுலகமோ எந்தச்சுகமும் அளிக்காது.

அர்ச்சுனன்: பகவானே! சந்தேகமும் சஞ்சலமும் விலகி விட்டால் ஆவது என்ன?

கண்ணன்: தனஞ்சயா! எந்த மனிதன் நெறியுடன் சமநிலையை மேற்கொண்டு எல்லா கருமங்களிலிருந்தும் தொடர்பில்லாமல் இருந்து வருகிறானோ, அவன் கரும தத்துவமான நல்லறிவும் , ஞானமும் மூலமாக எல்லா விதச் சந்தேகங்களையும் சஞ்சலங்களையும் அழித்து விடுகிறான் அத்தகைய சாதகருக்கு கருமபந்தம் கட்டுபடுவதில்லை.ஆகையால், பரத வம்சத்து வீரத் திருமகனே!நீ உன் உள்ளத்தில் அஞ்ஞானத்தில் ஏற்படும் சந்தேகம் ,சஞ்சலங்களை ஞானமேனும் வாள் கொண்டு அழித்துவிடு ! சமநிலையில் திடமாக இரு! கடமையை நிறைவேற்றப் போர்புரி!போரை தொடர்ந்து புரிவது உன் கடமை அதுவே உன் சத்திரிய தர்மமும் வீர இயல்பும்.

05.கர்மயோகம், கிருஷ்ண உணர்வில்செயல்

அர்ச்சுனன்: பகவானே!ஒரு சமயம் நீங்கள் கருமங்களை துறப்பதை( சாந்திய யோகம்) புகழ்கிறீர்கள்.வேறொரு சமயம் கருமங்கள் செய்ய வேண்டியதை (கருமயோகம்)வலியுறித்துகிறீர்கள்.ஆகையால் இந்த இரு சாதனங்களிலிருந்து ஏதாவது ஒன்றை எது நிச்சயமாக நன்மை பார்ப்பதோ அதை மட்டும் எனக்கு எடுத்துச் சொல்லுங்கள்?

கண்ணன்: வீரனே! சாங்கிய யோகம் கருமயோகம் இரண்டுமே சிறந்தவை.ஆனால் இவ்விரண்டிலும் சாங்கிய யோகத்தைவிட கரும யோகம் சிறந்தது.

அர்ச்சுனன்: பெருமானே! கருமயோகம் ஏன் சிறந்ததாக கருதப்படுகின்றது?

கண்ணன்:  புஜபலம் மிக்க வீரனே!கருமயோகி எவரிடமும் எதனிடமும் விருப்போ வெறுப்போ கொள்ளுவதில்லை.அவர் நித்திய சந்நியாசி என்பதை உணர்ந்து கொள்.விருப்பு வெறுப்புகளை கடந்திருப்பதால் அவர் சம்சார பந்தங்களிலிருந்து எளிதாக விலகி வாழமுடிகிறது.

அர்ச்சுனன்: பகவானே! இந்த இருயோகங்களும் சிறந்தவை என்கிறீர்கள் இரண்டிலுமிருந்து கிட்டும் பயன்களில் ஏதும் வேறுபாடு இல்லையா?

கண்ணன்: அர்ச்சுனா! அறியாமையில் உழலும் மூடர்கள் சாங்கிய யோகம்,கர்மயோகம் இரண்டும் தனித்தனி பயன்கள் அளிப்பவை என்று கருதுகிறார்கள்.புத்திமான்கள் அப்படிக் கருதுவதில்லை .நிலைத்திருந்தாலும் யோக சாதகருக்கு இரு யோகங்களின் பயன்களும் ஒன்ருபோல் கிடைத்து விடுகின்றது.எந்தப் பயன் சாந்தியயோகிக்கு கிடைக்கிறதோ, அதெ பயன் கருமயோகிக்கு கிடைக்கிறது.ஆனால் இரு யோகங்களையும் ஒரே நிலையில் காண்பவர்தான் சரியான நோக்கம் கொண்டவர்.

அர்ச்சுனன்: இருயோகங்களின் பயன்களும் ஒன்றுதான் என்றால் கரும யோகம் சாலவும் சிறந்ததாக எப்படி ஆகும்?

கண்ணன்: வீரப்பெருமானே! கருமயோகம் நிறைவு,நிறைவின்மை( சித்தி,அசித்தி) இரண்டிலும் சமநிலை எட்டுகிறது.இந்நிலையை பெறாமல் சாங்கிய யோகம் சித்திபெறாது.( சமநிலையில் நீடித்திருக்க இயலாது)ஆனால் சிந்தனைத் திறன் மிக்க கருமயோகி சித்தி அசித்திகளில் சமநிலை பெற்று விரைவிலேயே பேதம் அற்ற பிரமத்தை அடைகிறார்.

அர்ச்சுனன்:  கர்மயோகத்தின் மூலமாக அவர் பிரம்மத்தை எப்படி அடைகிறார்?

கண்ணன்: ஜம்புலன்களையும் அடக்கி வென்றவர்.அப்பழுக்கற்ற உள்ளப்பாங்கு கொண்டவர்.உடலை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்.எல்லாப் பிராணிகளிடத்திலும் தம்மை காணும் கருமயோகி செயல்புரிந்து வந்தாலும் செயல்களின் ஆசா பாசங்களில் சிக்குவதில்லை.அந்த சாதகர் பரமாத்மா நிலையை அடைகிறார்.

அர்ச்சுனன்: பகவானே! சாங்கியயோகி கர்மங்களிலிருந்து எப்படிச் சிக்காமல் தனித்திருகிறார்?

கண்ணன்:  ஸத் ( உண்மை) அஸத்( உண்மையற்றது) இவ்விரண்டு தத்துவத்தையும் உணர்ந்து ஸத்தில் நிலைத்திருக்கும் சாங்கியயோகி உலகியல் வாழ்வில் ஈடுபட்டு ஜம்புலன்களின் செயல்களில் பங்குகொள்கிறார்.அவர் காணல்,கேட்டல்,தொடல்,நுகர்தல் உண்ணுதல்,நடத்தல்,உறங்குதல்,சுவாசித்தல், பேசுதல்,மலஜலம்,கழித்தல்,பெறுதல்,கண்களைமூடித் திறத்தல்(இமைத்தல்)இச் செயல்களையெல்லாம் புலன்கள் செய்கின்றன.நான் செய்யவில்லை என்பதை உனர்ந்து என்பதை உணர்ந்து கொண்டு செயல்களுக்கு கட்டுப்படாமல் ஆசாபாசங்களுக்கு அடிமையாகாமல் வாழ்கிறார்.

அர்ச்சுனன்: இந்த இருவகை யோகிகளுமே செயல்களில் கட்டுப்படாமல் வாழ்கிறார்கள்.ஆனால் இப்படிச் சிக்காமல் இருப்பதற்கு வேறு உபயமும் உள்ளதா?

கண்ணன்: உண்டு அதுதான் பக்தியோகம் பக்தியோகி ஈடுபடும் ஆர்வத்தை துறந்து எல்லாச் செயல்களையும் பகவானிற்கே அர்ப்பணித்து விடுகிறார்.ஆகையால் அவரும் நீரின் மேல் இருக்கும் தாமரை இலைபோல் சகல பாவங்களிலும் சிக்காமல் சுயவிருப்பு வெறுப்பு இல்லாமல் வாழ்கிறார்.

அர்ச்சுனன்: பகவானே! பக்தியோகி சகலதையும்
உங்களுக்கே அர்ப்பணித்து விடுவதால் கருமங்களில் சிக்காமல் இருக்கிறார். ஆனால் கருமயோகி எந்த நோக்கத்துடன் செயல்புரிகிறார்.எப்படிச் செயல்கலில் சிக்காமல் இருக்கிறார்?

கண்ணன்: கர்மயோகி தம் அந்தக் கரணத்தில்(உள்மனம்)தூய்மைக்காகவே உடல் ,உள்ளம்,அறிவு இவைகளிடம் பற்றோ செருக்கோ கொல்ளாமல் இருக்கிறார்.இதனால் அவர் செயலின் பயனை ஆசையுடன் எதிர்ப்பார்பதில்லை.ஆதலால் அவருக்கு நிலையான நிம்மதி( பரமசாந்தி)கிட்டிகிறது.இந்நிலையை எட்டாதவர்கள் பயனில் ஆசைகொண்டு செயலாற்றுவதால் சம்சார பந்தத்தில் உலகியல் தளைகளில் கட்டுண்டு உழல்கிறார்கள்.

அர்ச்சுனன்: சாங்கிய யோகியின் மூலம் வெளிப்படும் செயல்கள்?

கண்ணன்: அர்ச்சுனா! உடல்,புலன்கள்மனம் இவைகளை தம்வசம் அடக்கி வைத்திருக்கும் சாங்கிய யோகி மனத்திலிருந்து எல்லாக் கருமங்களையும் ஒன்பது துவாரங்களை கொண்ட சரீரத்திடம் விட்டு விடுகிறார்.இதனால் கருமங்களை தான் செய்வதாகவே செய்விப்பதாகவோ கருதாமல் சுகமாக நிம்மதியாக தம் யோகி நிலையில் நிலைத்திருக்கிறார்.

அர்ச்சுனன்: சாங்கிய யோகி எந்தச் செயல்களையும் செய்வதில்லை செய்விப்பதுமில்லை. அனால் பரமாத்மா செய்விப்பார் தானே?

கண்ணன்: இல்லை. பரமாத்மா எந்த மனிதனையும் செயலாற்றும் திறன் உள்ளவனாக ஆக்குவதில்லை.எந்தச் செயலையும் பிறரைக் கொண்டு செய்விப்பதுமில்லை.கரும பலத்துடன் எவரையும் சம்பத்தபடுத்துவதுமில்லை.ஆனால் மனிதர்கள் தம் சுபாவத்தின்படி இயல்பாக செயல்புரிந்து வருகிறார்கள் அச் செயல்களுக்கு தங்களையே கர்த்தாவாக எண்ணிக் கொள்கிறார்கள்.பிறகு கரும பலத்துடன் செயலின் விளைவு சம்பந்தம் தானாகவே ஏற்பட்டுவிடுகிறது.

அர்ச்சுனன்: பரமாத்மா எவருக்கும் செயாற்றும் சுதந்திரத்தை அழிப்பதில்லை ஆனாலும் பிராணிகள் மனிதர்கள் புரியும் செயல்களுக்கு பயனை ஏற்கிறார் இல்லையா?

கண்ணன்: சர்வவியாபியான எங்கும் பரந்துள்ள பரமாத்மா எவருடைய பாவ புண்ணியங்களையும் ஏற்பதில்லை.அறியாமை காரணமாக ஜீவன்கள் தம் சொரூபத்தை உணர முடியாததால் மதிமயங்கி போகின்றன. இதனாலேயே ஜீவன்கள் செயல்களுக்கு தம்மையே கர்தாக்களாகவும் செயலின் பயனை அநுபவிப்பவர்களாகவும் நினைத்துக் கொள்கிறார்கள்.இதன் விலைவாக பிறப்பு இறப்பு எனும் சூழலில் ஜீவராசிகள் உழன்று கொண்டிருகிறார்கள்.

அர்ச்சுனன்: பகவானே அப்படியானால் எல்லா ஜீவன்களும் இதெபொலா தம்மைக் கர்த்தாகவும் போக்தாகவாகவும் ( அநுபவிப்பவர்களாக) மதி மயங்கிப் போகிறார்கள்?

கண்ணன்: இல்லை அர்ச்சுனா! விவேகிகள் மெய்ஞானம் மூலமாக அஞ்ஞானத்தை அழித்து விடுகிறார்கள்.சூரியனைப் போன்ற அவர்களுடைய ஞானம் பரமாத்மாவை அறிந்து கொள்ள உதவுகிறது.

அர்ச்சுனன்: அந்தப் பரமாத்மா தத்துவத்தின் அநுபவம் எவருக்கு ஏற்படுகிறது கண்ணா?

கண்ணன்: எவருடைய அறிவும் உள்ளமும் பரமாத்மவிடமே லயித்து இருக்கின்றனவோ, எவர் பரமாத்ம தத்துவத்தில் நிலைத்திருக்கின்றாரோ அவர்கள் அத்தகைய பரமாத்ம சாதகமான ஞானத்தின் மூலமாக பாவ புண்ணிய தளைகளிலிருந்து விடுபட்டு பரமத்மாவிடம் சேர்ந்து புன்ணிய விட்டுகிறார்கள்.அவர்களுக்கு மறுபடியும் பிறவி ஏற்படுவதில்லை.

அர்ச்சுனன்: பரமாத்மாவை உணர்ந்து கொண்ட மகா புருஷர்களின் ஞானம் நடைமுறை நிலையில் எப்படி இருக்கிறது கிருஷ்ணா?

கண்ணன்: தத்துவஞானியான மகாபுருஷர்கள் கல்வியிலும் பண்பிலும் சிறந்து விளங்கும் பிராமனிடமும் அவையில்லாத சண்டாளனிடமும் சமநிலையில் பழகி பரமாத்ம சொரூபத்தை காண்கிறார்கள்.இதேபோல் பசு,யானை,நாய் முதலிய பிராணிகளிடமும் சமநிலையுடன் பரமாத்ம தத்துவத்தை தரிசிக்கிறார்கள்.ஆனால் இந்த சமநிலை அவர்களுடன் கூடி வாழ்வதற்கோ, உறவாடுவதற்கோ பயன்படுத்துவதில்லை.

அர்ச்சுனன்:சமநிலை நோக்கைக் கொண்டிருப்பதால் என்ன ஆகிறது? என்ன பயன் கிட்டுகிறது?

கண்ணன்: எவருடைய உள்ளம் எல்லா நிலைகளிலும் சமத்துவ நிலையில் அதாவது பரமாத்ம தத்துவத்தில் திடமாக இருக்கிறதோ, அவர் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டே இவ்வுலகை வென்றவராகிறார்.இதன் உலகாயுத நிலையிலிருந்து மேம்பட்டு விளங்குகிறார்.காரணம் பிரமம் குற்றம் குறையில்லாதது.எனுனும் சமநிலையிலுல்ளது.ஆகையால் அந்த மகான்கள் சமநிலையில் உள்ள பிரமத்திடமே நிலைத்திருக்கிறார்கள்.

அர்ச்சுனன்: கண்ணா!இத்தகைய சமத்துவ நிலையில் நீடித்திருக்க என்ன வழி?

கண்ணன்: நடைமுறை வாழ்வில் விரும்புவது -விரும்பாதது அனுகூலம் பிரதிகூலம் சார்ந்த சூழ்நிலை ஏற்பட்டாலும்மகிழ்ச்சியோ வருத்தமோ கொள்ளாதவர்.மோக மயக்கங்கள் இல்லாதிருப்பார்.அன்றியும் நிலையான பகுத்தறிவாளியாக இருப்பார்.பிரமத்தை அறிந்திருப்பார்.பரமாத்மாவிடமே நிலைத்திருப்பார்.

அர்ச்சுனன்: பகவானே! இந்த சமத்துவ நிலை எந்த நிலையில் ஏர்படுகிறது?

கண்ணன்: .வெளிப்பொருட்களிடம்( பெளதீக பொருட்கள்) பற்றுதல் கொள்ளாத ஞானி முதலில் தம்முள் இருக்கிற சாத்வீகமான சுகத்தை அடைகிறார்.பிறகு அவர் பரமாத்வோடு ஒருங்கிணைந்து சாசுவதமான ஆனந்தத்தை அநுபவிக்கிறார்.

அர்ச்சுனன்: உலகாயுத( பெளதீக) பொருள்களின்பால் ஏற்படும் பற்றுதல்களிலிருந்து எப்படி தப்புவது?

கண்ணன்: .குந்தியின் புதல்வனே!புலன்களும் போகப் பொருட்களும் சேர்ந்து ஏற்படுத்தும் அநுபவங்கள் எல்லமே துன்பம் விளைவிப்பவைதாம்.ஆதியும் அந்தமும்(பிறப்பு-இறப்பு) உள்ளவைதாம்.ஆகையால் விவேகமான மனிதன் அவைகளின் ஈடுபடமாட்டான்.அநுபவிக்கவும் விருப்பமாட்டான்.

அர்ச்சுனன்: கணணா! அந்தச் சுகபோக அநுபவங்களில் ஈடுபடாத மனிதரின் சிறப்புகள் தான் என்ன?

கண்ணன்: .எந்தவொரு மனிதன் தன் உடலை திறப்பதற்கு முன்பே காமம், குரோதம் முதலியவற்றின் உத்துவேகத்தை சகித்துக் கொள்ளும் திறன் பெற்றுவிடுகிறானோ, அதாவது காமம் ,குரோதம்முதலியவற்றின் உத்வேகம் தலைகாட்டவே விடாமல் செய்து விடுகிறானோ அவன் தான் சுக புருஷன்.அவனே யோகி,அவன் தான் தீரனான ஆண்மகன்.

அர்ச்சுனன்: அந்த நிலையை எய்திய பின் என்ன ஆகிறது கண்ணா?

கண்ணன்: .காம குரோதிகளின் உத்வேகம் எழாதிருப்பதால் அந்த ஆண்பிள்ளைக்கு பரமாத்ம தத்துவத்தில் ஏற்படும் நித்திய சுகம் கிட்டுகிறது.அவன் அதில் இலயித்து ஆனந்தமடைகிறான்.அவனுடைய ஞானம் தெளிவாக நிலைத்திருக்கிறது.அவன் பிரம்ம சொரூபமாகிறான்.அந்த சாதகன்( சாதனையில் வெற்றி கண்டவன்)சாந்தமான பிரமத்தை அடைகிறான்,பிரம்மஞானி என போற்றப்படுகிறான்.

அர்ச்சுனன்: அந்த சாந்தமான யோகத்தை மேலும் எவர் பெறுகிறார்?

கண்ணன்:எந்த சாதகருக்கு உடல், புலன்கள் மனம், புத்தியெல்லாம் தன் வசத்தில் இருக்கின்றனவோ ,எல்லாப் பிராணிகளின் நலன்களிலும் நாட்டமுள்ளதோ, எவருடைய மனச் சஞ்சலங்கள் அழிந்து போகின்றனவோ, எவருடைய எல்லப் பாவங்களும்விலகி விட்டனவோ, அத்தகைய விவேகிகளான ஞானசாதகர்களுக்கு நிர்வாண பிரமம் கிட்டுகிறது.

அர்ச்சுனன்: கண்ணா! நிர்வாண பிரமம் அடைந்தவர்களில் இலட்சணங்கள் எவை?

கண்ணன்:அர்ச்சுனா சுத்த பிரம்மத்தை அடைந்தவர்களிடம் காமம்,குரோதம் சிறிதும் இருக்காது.மனம் அவர்கள் வசமே இருக்கும்.அவர்கள் சுய உண்மை நிலையை ( சொரூபத்தை) அறிந்தவர்கள்.அவர்களை சாங்கிய யோகி என்பர். அவர்கள் வாழும்போதும் இறந்த பிறகும் சுத்த( நிர்வாண) பிரமத்தை அடைந்தவர்கள் ஆவர்.

அர்ச்சுனன்: இந்த நிர்வாண பிரமம் வேறு சாதனங்கள் மூலமும் அடையக்கூடியதா?

கண்ணன்:ஆம் அர்ச்சுனா! தியான யோகத்தால் பெறமுடியும்.வெளி விஷயங்களை வெளியே விட்டுவிட்டு அதாவது எல்லா போகப் பொருட்களையும் துறந்துவிட்டு கண்களின் பார்வையை புருவங்களின் இடையில் நிலைநிறுத்தி நாசித் துவாரங்களில் சஞ்சரிக்கும் பிராணன் ( பூரகம்) அபானம் ( சேரகம்) எனும் மூச்சுக் காற்றை சமானமாக்கி எல்லாப் புலன்களையும் மனத்தையும் ,புத்தியையும் தன்வசப்படுத்தி வைத்திருக்கும் சாதகர் ஆசை,பயம், குரோதம் முதலியவற்றைத் துறந்தவர்.மோட்சத்தை விரும்பும் அவர் எப்போதும் முத்தர் நிலையில் இருப்பர்.

அர்ச்சுனன்: பகவானே! எல்லாத் தளைகளிலிருந்து எளிதாக விடுபட வேறு சுலபமான சாதனம் உள்ளதா?

கண்ணன்: உள்ளது.பக்தியோகம் எவர் என்னை எல்லா உலகங்களுக்கும் பாதுகாவலனாகவும்,பரிபாலகனாகவும் மதிக்கிறாரோ,எவர் எல்லா உயிரணங்களுக்கும் பரம கர்த்தாவாக(சுயநலமற்ற இரக்கமுள்ள அன்பன்) என்கிறாரோ,எவர் என்னை எல்லா யக்ஞங்களுக்கும் தவங்களுக்கும் அநுபவ பாத்தியதை கொண்டவராக உணர்கிறாரோ( தம்மை ஒருக்காலும் அநுபவிப்பவராக என்ணாதிருகிறாரோ) அவருக்கு பரமசாந்தி பேரமைதி கிட்டுகிறது.

06.ஸாங்கிய யோகம்

பகவான்: அர்ச்சுனா! நான் கர்மயோகம் குறித்துப் பல விஷயங்களைச் சொன்னேன். இப்போது கர்ம யோகத்தின் சாரத்தைச் சொல்கிறேன்.எந்த மனிதன் செய்வினைப் பயன்களை( தோன்றிமறையும் பொருட்களை) துய்க்காமல் தம் கடமைகளைச் செய்து வ்ருகிறானோ,அவன் தான் துறவி.அவன் தான் யோகி.தீமை சார்ந்த கருமங்களை துறந்தவன் சன்னியாசியோ யோகியோ இல்லை.
ஆகையால் அர்ச்சுனா! உலகோர் எதைச் சன்னியாசம் ( சாங்கிய யோகம்) என்கிறார்களோ, அதுதான் கர்மயோகமென்பதை உணர்ந்து கொள்.

அர்ச்சுனன்: சன்னியாசி, யோகி -இவர்களிடம் எந்த விஷயத்தில் மகிமை உள்ளது?

கண்ணன்: சங்கற்பங்களைத் துறக்கும் விஷயத்தில் தான் உள்ளது.ஏனெனில் சங்கற்பங்களை ( செயல் தீர்மானம்)துறக்காமல் அதாவது தம் மனத்தின் ஆதிக்கத்தை விடாமல் மனிதன் எந்த விதமான யோகியாகவும் முடியாதது.

அர்ச்சுனன்: யோகியாவதற்கு முக்கிய காரணம் என்ன?

கண்ணன்: எந்த மனிதன் யோகத்தில் ( சம நிலையில்) ஆதிக்கம் செலுத்த விரும்புகிறானோ, அத்தைகைய சிந்தனை கொண்ட யோகிக்குபற்றுதல் இல்லாமல் கடமையையைச் செய்வதுதான் யோக நிலையில் திடமாக இருப்பதற்குக் காரணம்.அந்த யோகியின் அமைதிதான் ( சாந்தி) பரமாத்ம தத்துவத்தை அடைவதற்குக் காரணம்.அதாவது,உலகியல் தொடர்புகளைத் துறப்பதால் கிட்டும் அமைதியை அனுபவிக்காமல் இருப்பதே பரமாத்துவத்தைப் பெறுவதற்குக் காரணம்.

அர்ச்சுனன்:  யோகத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட யோகரூடன் எனும் சாதனையாளனுக்கு என்ன அடையாளம் பகவானே?

கண்ணன்: எந்த யோக சாதகனுக்கு புலன்களின் இலக்கான போகவிஷயங்கலும் செயல்களிலும் விருப்பமுள்ள ஈடுபாடுஇல்லையோ ,தன்னலம் வேண்டி எந்தச் சங்கற்பமும் இல்லயோ அந்தச் சிறந்த மனிதர் தான் யோகரூடர்.யோகத்திலேயே ஈடுபட்டிருப்பர்.

அர்ச்சுனன்: மனிதன் யோகரூடனாக விளங்குவதற்கு என்ன செய்ய வேண்டும் கண்ணா?

கண்ணன்: அம்மனிதன் தன்னைத் தானே உயர்த்திக் கொள்ளவேண்டும்.தன்னைத் தாழ்த்திக் கொள்ளக்கூடாது.மனிதன் அவனுக்கே நண்பனாகவும் பகைவானகாகவும் இருப்பவன் தனக்குத்தனே நட்பும் பகையும் ஆனவன்.

அர்ச்சுனன்: தானே தனக்கு நட்பாகவும் பகையாகவும் எப்படியாக முடியும் கண்ணா?

கண்ணன்: எந்த மனிதன் தன்னைத்தானே வெற்றி கொள்கிறானோ,அதவது எவன் “அஸத்”( உண்மையற்றது) நிலையுடன் தொடர்பு கொள்ளாமல் இருக்கிறானோ,அவனே அவனுக்கு நண்பன் எவன் தனக்குத்தானே தோல்வி அடைகிறானோ,அதாவது எவன் “அஸத்” கூட தொடர்பு கொண்டிருகிறானோ அவனே அவனுக்கு விரோதி.

அர்ச்சுனன்: மனிதன் தனக்குத்தானே நண்பனானால் என்ன ஆகும் பகவானே?

கண்ணன்: எவன் தன்னைதானே வென்றிருக்கிறானோ,அவன் முன்வினைப் பயனாக ஏற்படும் நன்மை தீமைகளிலும்,நடைமுறை வாழ்வில் செய்யப்படும் செயல்களின் வெற்றி தோல்விகளிலும்
பிறர் புரியும்,மானம், அவமானங்களிலும் இருக்கிறான்.ஆகையால் அந்தத் திடசித்தனான மனிதன் பரமாத்மாவை அடைகிறான்.

அர்ச்சுனன்: பகவானே! பரமாத்மவை அடைந்த மனிதனின் இலட்சணங்கள் என்ன?

கண்ணன்: அந்த மகாபுருஷர்களின் அந்தக்கரணம் ( உள் மனம்)எப்பொதும் ஞானம் விஞ்ஞானம் எனும் மெய்யறிவு சிறப்பறிவுகளல் நிரம்பி திருப்தியுடன் உள்ளது.அவனிடம் எல்லப் புலன்களும் அடங்கி ஒடுங்கி இருக்கின்றன. அவன் எல்லா சூழ்நிலைகளிலும் மனம் பேதலிக்கமால் விருப்பு வெறுப்புகளுக்கு இலக்காகாமல் நடுநிலையில் இருக்கிறான்.மண்ணாங்கட்டி, கருங்கல்,தங்கம் இம் மூன்றையும் சமமாக மதிக்கும் அறிவு பெற்றவன்.பொருள்களில் மட்டுமல்ல உற்றார்,உறவினர்,நண்பர்,பகைவர்,மதிப்பவர்,மதியாதவர்,பொதுவானவர்,வெறுக்கத்தக்கவர்.நல்லவர்,தீயவர்-இத்தைய எல்லோரிடமும் சமபுத்தியுடன் பழகுபவன்.இத்தைகைய சமபுத்தி உள்ளவன் மிகச்சிறந்த மனிதனாகிறான்.

அர்ச்சுனன்: அத்தைகைய சமபுத்தி கர்மயோகத்தால் மட்டும் ஏற்படுகின்றதா, அல்லது வேறு சாதனைகளாலும் ஏற்படுவதா?

கண்ணன்: அந்த சமபுத்தி தியான யோகத்தாலும் ஏற்படுகிறது.ஆதலால் தியான யோகத்தின் விதிமுறையைச் சொல்கிறேன்.தியானயோகி போகபுத்தி இல்லாதவர்.அனுபவ ஆசை கொண்டு பொருள்களைச் சேகரிக்க மாட்டார்.ஆசைகளைத் துறந்தவர் உள்ளத்தையும் உடலையும் தம் வசத்தில் எப்பொதும் வைத்திருப்பவர்.ஏகாந்தத்தில் தனியனாக வாழ்ந்தாலும் மனத்தை நிரந்தரமாகப் பரமாத்மாவிடம் ஈடுபடுத்தியிருப்பார்.

அர்ச்சுனன்: மனதைப் பரமாத்மாவிடம் இடையறாது ஈடுபடுத்த அதாவது தியான யோகத்தில் ஆழ்ந்திருக்கப்பயன்படுபவை எவை?

கண்ணன்:பரிசுத்தமான புனிதமான இடத்தில் தருப்பைப் புற்களை விரித்து அவற்றின் மேல் மான் தோலை விரித்து அருள்மேல் பவித்திரமான வஸ்திரங்களை விரித்து ஆசனம் அமைக்க வேண்டும்.அது அதிக உயரமாகவோ தாழ்வாகவோ இருக்கலாகாது.ஆடாமல் நிலையாக இருக்க வேண்டும்.இந்த ஆசனத்தில் அமர்ந்து மனத்தையும் புலன்களையும் தம் வசமாக்கி தியான யோகப் பயிற்சியை அந்தக்கரண சுத்திக்காக அமைத்துக்கொள்ள வேண்டும்.

அர்ச்சுனன்: அந்த ஆசனத்தில் எவ்வாறு அமரவேண்டும்?

கண்ணன்: உடல், கழுத்து, தலை மூன்றையும் நிமிர்த்தி நேராக அசையாமல் அமர வேண்டும்.பார்வை மூக்கு நுனியில் நிலையாக இருக்கவேண்டும்.

அர்ச்சுனன்: இந்த ஆசனத்தில் எந்த உள்ளப்பாங்குடன் அமர்ந்திருக்க வேண்டும்?

கண்ணன்: தியான் யோகியின் அந்தக்கரணம் விருப்பு வெறுப்புகள் இல்லாதது பயமற்றது.பிரும்ம சரிய விரதத்தில் ஈடுபட்டிருப்பது அத்தகைய யோகி விழிப்புணர்வுடன் மனத்தை உலகியல் வாழ்விலிருந்து விலக்கி என்னிடம் செலுத்தி என்னையே தியானித்தவாறு அமர்ந்திருப்பான்.இப்படித்தான் ஜம்புலன்களையும் அடக்கியவாறுஅமர வேண்டும்.

அர்ச்சுனன்: இதன் பயன் என்ன பகவானே?

கண்ணன்: மேற்சொன்னவாறு தன்மனத்தை நிரந்தரமாக என்னிடம் செலுத்தியிருக்கும் யோகி தன் மனத்தை ஆள்வதில் தேர்ந்தவன்.இவருக்கு என்னுள் இருக்கும் “நிர்வாண ப்ரமா” எனும் பரிசுத்தமானசாந்தி( ஆழ்ந்தபேரமைதி)கிட்டுகிறது.

அர்ச்சுனன்: இவ்வாறு தியானம் செய்பவர்கள் பலர் உள்ளனர்.ஆனால் அவர்கள் எல்லோருக்கும் தியான யோகம் சித்தி பெறுவதில்லையே ஏன்?

கண்ணன்: அர்ச்சுனா! நடுநிலை பிறழ்வதுதான் காரணம்.அதிகமாய் சாப்பிடுகிறவன்,சாப்பிடாமலே இருப்பவன்,அதிகம் தூங்குபவன்,தூங்காமலே இருப்பவன்,இவர்கள் புரியும் யோகம் பலனளிப்பதில்லை.

அர்ச்சுனன்: அப்படியானால் இந்த யோகம் எவருக்குச் சித்திக்கிறது?

கண்ணன்: எந்த சாதகருடைய உணர்வு முறையும் நடைமுறையும் செயல்முறையும் அளவாக ஒழுங்காக இருக்கின்றனவோ,செயலீடுபாடுகளும் முயற்சிகளும் தன்னலமின்றி நெறி முறைப்படி அமைகின்றனவோ,உறக்கமும் விழிப்பும் மிதமாக உள்ளனவோ அவருக்கு துன்பங்களைப் போக்கவல்ல இந்த தியானயோகம் சித்தி பெறுகிறது.

அர்ச்சுனன்: துன்பங்களை போக்கவல்ல தியான யோகம் எப்போது சித்தி பெறுகிறது?

கண்ணன்: நன்கு தன் வயப்படுத்தபட்ட சித்தம் தன்நிலையில் திடமாக இருந்தவாறு எல்லாப் பொருட்களிடமிருந்தும் ஒதுங்கி இருக்கிறது.அதாவது அத்திட சித்தம் எப்பொருளையும் தனக்கு தேவை என்று கருதுவதிலை.இந்நிலையைப் பெற்றவர்தான் யோகி.இவர் தியான யோகத்தில் சித்தி பெற்றவர்.

அர்ச்சுனன்: அந்த யோகியின் அத்தகைய சித்தத்தின் நிலைப்பாடு என்ன?

கண்ணன்: காற்று அசைவில்லாத இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் தீபத்தின் சுடர் சிறிதும் அசையாமல் இருப்பதைப் போல, தியான யோகத்தில் ஆழ்ந்திருக்கும் யோகியின் சித்தம் சஞ்சலமின்றி ஒரே முனைப்பில் ஆழ்ந்திருக்கும்.

அர்ச்சுனன்: சித்தம் அந்நிலையில் திடமாக இருப்பதால் என்ன ஆகிறது?

கண்ணன்: யோகப் பயிற்சிகளால் நிலைநிறுத்தப்பெற்றுள்ள சித்தம் ஆழ்நிலையில் ஒடுங்கி சமாதி நிலையை அடைகிறது. அதனாலேயே சுகமாக லயிக்கிறது.அப்போது யோகி தன்னுள் தன்னையே பார்த்துக் கொண்டு பேரானந்தமடைகிறார்.

அர்ச்சுனன்: தமக்குள்ளேயே பேரானந்தம் அடைவதால் என்ன பயன் ஏற்படுகிறது?

கண்ணன்: அத்தைகைய யோகி எல்லையற்றதும், புலங்களிற்கு எட்டாததும், புத்தியால்( உணர்வால்) மட்டுமெ அறியத்தக்கதுமான சுகானுபவத்தை பெறுகிறார்.இத்தைகைய உண்மையான சுகானுபவத்தில் ஆழ்ந்திருந்தாலும் அந்த தியான யோகி எந்த நிலையிலும் தன்னிலையிருந்து  ( சுய சொரூபத்திலிருந்து) நழுவுவதில்லை.மாறுவதில்லை.

அர்ச்சுனன்: பகவானே! அந்த யோகி எக்காரணத்தால் தன்நிலையிலிருந்து மாறுவதில்லை?

கண்ணன்: அந்த யோகி தான் பெறும் சுகலாபத்தை விட மேலானதாக எதையும் கருதுவதில்லை.அந்நிலையில் எவ்வளவு பெரிய துன்பமும் அவரை தடுமாறச் செய்யாது.ஏனெனில் அவர் தன்னிலையில் பரம சுகம் பெறுகிறார்.துக்கம் எதுவும் அவரை நெருங்குவதில்லை.

அர்ச்சுனன்: அப்படியானால் அத்தகைய மேலான சுகலாபம் பெற என்ன செய்ய வேண்டும்?

கண்ணன்: யோகம் என்பதை முதலில் புரிந்து கொள்.எந்த நிலையில் துக்கங்களின் சோக்கை பிரிவாகிறதோ,அதாவது உலக வாழ்வுடன் அறவே தொடர்பற்றுப் போகிறதோ,அதுதான் “யோகம்”.இத்தகைய யோகத்தை சலிப்படையாத உள்ளம் பாங்குடனும் தீர்மாமான உறுதிபாட்டுடனும் பெற வேண்டும்.

அர்ச்சுனன்: கண்ணா! தன் சொரூபத்தை தியானித்திருப்பதால் யோகம் எனும் சம்த்துவ ஈடுபாடு ஏற்படுகிறது.இதைப் பெற வேறுவழியும் உள்ளதா?

கண்ணன்: உள்ளது.நிர்க்குணம்,நிராகாரம் எனும் இயல்பும் உருவும் இல்லாத பரமாத்மாவை தியானிப்பது.தீவிர விருப்பதால் ஏற்படும் எல்லா ஆசைகளையும் துறந்து விட்டு, புலன்களின் பாதிப்பை மனத்திலிருந்து அறவே அகற்றிவிட்டு தைரியமும் திடமும் கொண்ட பகுத்தறிவின் மூலமாக மெல்ல மெல்ல உலகியல் வாழ்விலிருந்து ஒதுங்கி விட வேண்டும். எல்லா இடங்களிலும் பரிபூரணமான பரமாத்மாவிடம் மனத்தையும் புத்தியையும் நிலைநிறுத்திய பின் வேறு எதைபற்றியுமே சிந்திக்காமல் இருக்க வேண்டும்.

அர்ச்சுனன்: வேறு சிந்தனைகள் ஏற்பட்டு விட்டால்?

கண்ணன்: ஏற்படாமல் நிலைநிறுத்த முயற்சி செய்து வரவேண்டும்.நிலையற்ற தடுமாற்றமுள்ள மனம் எங்கெல்லாம் அலைபாய்கிறதோ அங்கிருந்தெல்லாம் விலக்கி அதை பரமாத்மாவிடம் முறையாக ஏடுபடுத்த வேண்டும்.

அப்படிச் செய்வதால் ரஜோகுணம் சார்ந்த செயல்கள் இல்லதாவரும், சாந்தமான உள்ளம் கொண்டவரும், பாவங்கள் அற்றவரும், பிரம்ம சொரூபியுமான யோகிக்கு உத்தமமான ( சாத்வீகமான) சுகம் கிட்டும்.

அதற்கு பிறகு முழுவதும் பரமாத்மாவிடம் ஏற்படுத்தக் கொண்டுள்ள ,குற்றமற்ற அந்த யோகிக்கு சுகமளிக்கும் பிரம்ம சொரூபமான பரமசுகம் கிட்டும்.

அர்ச்சுனன்: பகவானே! நீங்கள் இதுவரையில் ஸகுணமும் ஸாகாரமுமான சொரூபத்தையும் , தம் சொரூபத்தையும்,நிர்க்குண, நீராகார சொரூபத்தையும் டியானம் செய்பவர்களை அறிமுகபடுத்தினீர்கள்.ஆனால் இவர்கள் உலகத்தை எந்த நோக்கோடு பார்க்கிறார்கள் என்பதைச் சொல்லவில்லையே?பகவானே! இப்போது சொல்லுங்கள் தம் சொரூபத்தை தியானம் செய்துவரும் யோகி எந்த உலகத்தை எப்படிப் பார்க்கிறார்?

கண்ணன்: தியான யோகத்தில் ஈடுபட்டிருக்கும் உள்ளப் பாங்கு கொண்ட யோகி தம்மைத்தாமே  ( தம் சொரூபத்தையே) எல்லா உயிர்களிடமும் பார்க்கிறார்.எல்லாப் பிராணிகளையும் தம்மிடம் பார்க்கிறார்.இதனாலேயே அவர் சமநோக்கு.சமசிந்தனை கொண்ட” சமதர்சி”என்று போற்றப்படுகிறார்.

அர்ச்சுனன்:  எவர் உங்களுடைய ஸகுண-ஸகார சொரூபத்தை ( குணமும் உருவும் கொண்ட வடிவத்தை) தியானிக்கிறாரோ,அவர் இவ்வுலகத்தை எப்படிப் பார்க்கிறார்?

கண்ணன்: அந்த யோகி எல்லவற்றிலும் என்னைக் காண்கிறார்.என்னிடம் எல்லவற்றையும் காண்கிறார்.ஆகையால் அத்தைகைய சாதகருக்கு எதிரில் நானும் என் எதிரில் அவரும் எப்பொதும் காட்சியளிக்கிறோம். நாங்கள் எங்களை கண்டு கொண்டிருக்கிறோம்.

அர்ச்சுனன்: நீங்களும் அந்த யோகியும் ஒருவரை ஒருவர் காண இயலாத நிலை ஏன் ஏற்படுவதில்லை?

கண்ணன்: அர்ச்சுனா! அந்த யோகி எல்லா உயிரினங்களிலும் இடம் பெற்றிருக்கிற என்னுடன் இரண்டறக் கலந்து என்னைப் போற்றுகிறார் இதனால் எல்லா ஜீவன்களுடனும் முறையாய் பழகிக் கொண்டே எப்போதும் இடையறாமல் என்னுள் ஒன்றியிருக்கிறார்.அப்படியிருக்க நாங்கள் ஒருவருக்கொருவர் எப்படிப் புலப்படாமல் இருக்கமுடியும் .ஒருக்காலும் முடியாது.

அர்ச்சுனன்: பகவானே1 எவர் உங்களுடைய நிர்குண-நிராகரா சொரூபத்தையே (குணமும் உருவும் இல்லாத தன்மை) தியானித்திருக்கிறாரோ,அவர் இந்த உலகை எந்த நோக்கில் பார்க்கிறார்?

கண்ணன்: அர்ச்சுனா! அந்தஞானியான மனிதன் தன் உறுப்புகளிலும் அவை ஏற்படுத்தும் சுகதுக்கங்களிலும் தன்னை சரிசமமாக பார்க்கிறான்.ஆனால் யோகி அப்படி இல்லை.அவர் தம் உடலை பிற ஜீவன்களுடன் ஒப்பிட்டு சரிநிகராக காண்கிறார். எல்லா ஜீவன்களிடமும் அவைகளின் சுகதுக்கங்களிலும் தன்னைச் சமமாக நோக்குகிறார்.இதனால் தான் ஞானியான யோகி மனிதருள் மேம்பட்டவராக போற்றப்படுகிறார்.

அர்ச்சுனன்: மதுசூதனா! இதுவரை தாங்கள் சமத்துவ நிலையை அடைய உதவும் தியான யோகத்தை பற்றி சொன்னீர்கள்.மனத்தின் சஞ்சலம் காரணமாக தியான யோகத்தில் திடமாக ஈடுபடுவது எனக்கு கடினமாக இருக்கிறது.காரணம்,மனம் மிகச் சஞ்சலமானது.குழப்பம் ஏற்படுவது.வலியது,பிடிவாதமுள்ளது.இத்தகைய மனத்தைத் கட்டுபடுத்துவது காற்றை கட்டுபடுத்துவதைப் போல் மிகக் கடினம்.முழுமையாக வெற்றி காண்பது மிக அரிது என்று எண்ணுகிறேன்.

கண்ணன்: அர்ச்சுனா! நீ சொல்வது சரிதான்.மனம் சஞ்சலம் மிகுந்தது.இதை அடக்குவதும் மிகக் கடினம்.குந்தியின் புதல்வனே! பயிற்சியானாலும் வைராக்கிய சிந்தையாலும் மனத்தை கட்டுபடுத்த இயலாதவரால் தியான யோகத்தில் சித்தி பெற முடியாது.தனது மனத்தையும் புலன்களையும் அடக்கி வைக்கும் ஆற்றல் பெற்றவரால் நிச்சயமாக தியான யோகத்தில் சித்தி பெறமுடியும்.

அர்ச்சுனன்: கண்ணபிரானே! தியான யோக சாதனையில் சிரத்தை இருக்கிறது.ஆனால் முயற்சி பலவீனமாக இருக்கிறது.இத்தைகைய சாதகருக்கு அந்திய காலத்தில் யோக சாதனை பயன்படாமல் போகிறது.அந்நிலையில் அவருக்கு யோக சித்தி கிட்டாமல் போகிறது .பிறகு என்ன நிலையை அடைகிறார்? உலகியல் வாழ்க்கையில் புகலின்றி இரண்டும் கெட்ட சாதகர் சிதறிப்போன மேகத்தை போல உருக்குலைந்து போவார் இல்லையா? ஹே கிருஷ்ணா! என் சந்தேகம் இதுதான் .இதை நீங்கள் தான் போக்க வேண்டும்.உங்களைத்தவிர இதை வேறொருவராலும் போக்கமுடியாது.

கண்ணன்: பார்த்தனே!நிலைதடுமாறிய சாதகராக இருந்தாலும் இவருக்கு யோகத்திலோ அல்லது பரலோகத்திலோ வீழ்ச்சிஏற்படுவதில்லை. ஏனென்றால் அன்பானவனே! நலந்தரும் செயலைச் செய்துவரும் எந்தச் சாதனயாளரும் இழிநிலைக்கு செல்வதில்லை.

அர்ச்சுனன்: சரி அப்படியானால் இழிநிலை( துர்கதி) செல்வதிலை என்ரால் வேறு எங்கு செல்கிறார்கள்
கண்ணன்: அர்ச்சுனா!எந்த சாதகரின் உள்ளத்தில் உலகியல் ஆசை சிறிதளவெனும் இடம்பெற்றிருக்கிறதோ.அவர் யோக நிலையிலிருந்து நழுவியராவர்,அவர் புண்ணிய கருமங்களை செய்பவர்கள் வாழும் மேலான உலகத்தில் ( சுவர்க்கம் முதலியன) இடம் பெறுகிறார்.ஆனால் அங்கு பல வருடங்கள் இருந்தபின்,அழியும்

மானிட சமுதாயத்தில் ( பூவுலகில்) செல்வந்தர்களின் மாளிகையில் வந்து பிறக்கிறார்.ஆனால் எந்த சாதகரின் உள்ளத்தில் உலகியல் வாழ்விற்குரிய விருப்பம் இல்லையோ அவரும் கடைசி காலத்தில் ஏதாவது ஒரு விஷேச காரணத்தால் யோக சாதனையிலிருந்து தவறினால், அவர் சுவர்க்கம் முதலிய சுகபோக உலகிற்கு செல்லாமல்,நேரே தத்துவ ஞானிகளின் கூட்டத்தில் பிறக்கிறார்.தொடர்ந்து யோக சாதனயில் ஈடுபடுகிறார் .இத்தகைய பிறவி இந்த மனித உலகில் மிகவும் அரிது.

அர்ச்சுனன்: தத்துவஞானிகளின் குலத்தில் பிறவி பெறுவதால் என்ன பயன் கண்ணா?
கண்ணன்: அர்ச்சுனா! அந்த சாதகருக்கு பூர்வ ஜென்மத்தில் கிடைத்த யோக சாதனைகள் சுலபமாக கிடைக்கின்றன.இதனால் யோக சித்தி பெறும் முயற்சியில் முனைப்புடன் ஈடுபடுகிறார்?

அர்ச்சுனன்: பகவானே! நீங்கள் தத்துவஞானிகளான யோகிகளின் குலத்தில் பிறப்பவரின் நிலைபற்றி சொன்னீர்கள்.சுத்தமான செல்வந்தர்களின் இல்லங்களில் நிலை என்ன?
கண்ணன்: அர்ச்சுனா! அந்த யோகப் பிரஸ்டரான இரண்டும் கெட்டான் சாதகர் தன்னடக்கம் இல்லாது போனாலும் ( பிற ஆசாபாசங்களுக்கு இலக்கானாலும்) முன் பிறவி செய்த யோக சாதனை காரணமாக பரமாத்மாவிடம் கவர்ந்து இழுக்கப்படுகிறார்.

அர்ச்சுனன்: கண்ணா! முன் பிறவியில் செய்த முயற்சியில் அப்படி என்ன சக்தியிருக்கிறது? எப்படி யோக சாதனைக்கு வலுகட்டாயமாக கவர்ந்து இழுக்கப்படுகிறார்?
கண்ணன்: யோக சாதனையில் ஆர்வமுடன் ஈடுபட்டவர் வேதத்தில் கூறியுள்ள விருப்பமுள்ள ( பயந்தரும்) செயல்களைத் தவிர்த்து யோக சாதனையிலே நீடித்திருக்கிறார்,எனினும் ஒருசமயம் நிலை தவறிவிடுகிறார்.பிறகு சாமளித்துக் கொண்டு யோகத்தில் மறுபடியும் தொடர்ந்து ஈடுபடுகிறார்.இத்தகைய சாதகரைப் பற்றி என்ன சொல்ல முடியும்

அர்ச்சுனன்:பரமாத்மாவிடம் ஈடுபட்டு ஈர்க்கப்படும்போது என்ன ஆகிறது?
கண்ணன்;அந்த நிலையில் யோகி விரைவாக சாதனையில் ஈடுபடுகிறார். எல்லாப் பாவங்களிலிருந்து விடுபடுகிறார்,பல பிறவிகளிலும் தொடர்ந்து சாதகர் நிலையில் முன்னேறி பரமகதியான பரமாத்மாவை அடையும் பேறுபெறுகிறார்.

அர்ச்சுனன்: பரமகதியான பரமாத்மாவை அடையும் யோகிக்கு உள்ள சிறப்பு மகத்துவம் என்ன?
கண்ணன்; அந்த யோகி விரும்பி ஆவல் கொண்டு சாதகம் செய்யும் தவசிகள், ஞானிகள்,சாதகர்கள் ஆகியவர்களைவிட சிறந்தவர்.எனவே அர்ச்சுனா! நீயும் தொடர்ந்து அந்த யோகியாக விளங்க தொடர்ந்து சாதகம் செய்து வா.

அர்ச்சுனன்:  அந்த யோகிகளிலும் தலை சிறந்தவர்?
கண்ணன்; எவர்களெல்லாம் என்னிடம் ஆழ்ந்து ஈடுபட்டவாறு உள்ளுணர்வுடன் சிரத்தையும் பக்தியும் பிரேமையும் கொண்டு என்னைப் போற்றி வணங்கி வருகிறாரோ,அந்த பக்தன் எல்லாவித யோகிகளையும்விட மேலானவர்.மிகச்சிறந்தவர்.

07.பூரணத்தின் ஞானம்

அர்ச்சுனன்: கண்ணபிரானே! நாங்கள் குறிப்பிடும் தலை சிறந்த யோகியாக என்னால் ஆக இயலுமா?எப்படி?

கண்ணன்; பார்த்தனே! நீ என்னிடம் தீவிர ஈடுபாடு கொண்டு என்னையே புகலாக கொண்டு என்னைப் போற்றி வந்தால் நீ நிச்சயம் என் முழுரூபத்தையும் அறிந்து கொள்வாய்.அதற்கான வழிமுறையைஎன்னிடம் கேட்டுத் தெரிந்து கொள்.அந்த முழுமையான என் உருவை அறிந்து கொள்ள உனக்கு விஞ்ஞான பூர்வமான ஞானத்தை முழுமையாக அறிவிக்கிறேன்.அதை அறிந்த பிறகு உனக்கு இந்த உலகில் அறிந்து கொள்ளவேண்டியது வேறெதுவும் மீதி இராது.

அர்ச்சுனன்:  அப்படியானல் எல்லா மனிதர்களும் உங்கள் முழு ரூபத்தையும் ஏன் அறிந்து கொள்வதிலை?
கண்ணன்; இந்த உலகில் தாமாகவே யோக சாதனையில் ஈடுபாடு கொண்டவர்கள் மிகக் குறைவு.மனிதர்களிடம் இதற்கான முயற்சியும் குறைவு.ஆயிரத்தில் ஒரு மனிதன் தான் தன் நன்மைக்காக முயற்சியும் செய்கிறார்.அம்முயற்சி செய்யும் சாதகர்களில் ஒருவர்தான் என் பரிபூர்ண சொரூபத்தை தத்துவ ஞானம் மூலமாக அறிய முடியும்.அவரைப் போன்றோர் அரிதிலும் அரிது.

அர்ச்சுனன்:  அப்படியானல் எல்லா மனிதர்களும் உங்கள் முழு ரூபத்தையும் ஏன் அறிந்து கொள்வதிலை?
கண்ணன்;  இந்த உலகில் தாமாகவே யோக சாதனையில் ஈடுபாடு கொண்டவர்கள் மிகக் குறைவு.மனிதர்களிடம் இதற்கான முயற்சியும் குறைவு.ஆயிரத்தில் ஒரு மனிதன் தான் தன் நன்மைக்காக முயற்சியும் செய்கிறார்.அம்முயற்சி செய்யும் சாதகர்களில் ஒருவர்தான் என் பரிபூர்ண சொரூபத்தை தத்துவ ஞானம் மூலமாக .அறிய முடியும்.அவரைப் போன்றோர் அரிதிலும் அரிது.

அர்ச்சுனன்:  இதற்கெல்லாம் மூல காரணம் யார்?
கண்ணன்;  நான் தான் எல்லா உலகிற்கும் மூல காரணம்.ஏனெனில் உலகம் என்னிடமிருந்கு தான் பிறக்கிறது.பிறகு என்னுள் அடங்கி விடுகிறது.தஞ்சயா! என்னைத்தவிர வேறு எவரும் எதுவும் துளி கூட இந்த உலகிற்கு காரணமில்லை.நூலில் முடிச்சுகள் போட்டு மணிகளாக்கி,அவைகளை நூலில் கோத்து மாலையாக்கினாலும் அந்த மாலை முழுவதும் நூலினால் ஆனதுதானே,இதே போலத்தான் எல்லா மாலை முழுவதும் நூலினால் ஆனதுதானே.இதே போலத்தான் எல்லா உலகிலும் நானே தான் வியாபித்து பரவி இருக்கிறேன்.

அர்ச்சுனன்: பகவானே! இந்தத் தத்துவத்தை எப்படி அறிந்து கொள்வது?
கண்ணன்; குந்தியின் மைந்தனே! தண்ணீரில் நான் தான் சுவையாக இருக்கிறேன்.சூரியனிலும் சந்திரனிலும் நான் ஒளியாக இருக்கிறேன்.எல்லா வேதங்களிலும் ஓங்கார( பிரணவ) சொரூபமாக இருக்கிறேன்.ஆகாசத்தில் நான் சப்தமான( ஒலியாக) இருக்கிறேன்.மனிதர்களில் புருஷார்தமாக ( பேரண்மை) விலங்குகிறேன். பூமியில் புனிதமான மணமாகவும், தீயில் தேஜஸாகவும் ( வெப்பம்),எல்லா உயிரனங்களிலும் ஜீவ சக்தியாகவும், தவசீலர்களிடம் தவமாகவும் இருந்து வருகிறேன்.

பார்த்தனே!எல்லப் பிராணிகளுக்கும் ஆதிமுதல் வித்து நான் தான் என்பதை உணர்ந்து கொள்.புத்திமான்களில் புத்தியாகவும் தேஜஸ்விகளின் தேஜஸாகவும் ( ஊக்கசக்தி) நான் தான் இருக்கிறேன்.

பரம வம்சத்தின் தலை சிறந்த வீரனே! வலிமை மிக்கவர்களின் காமமும்,விருப்பமும் நீங்கப் பெற்ற சாத்வீகமான பலமாக நான் இருக்கிறேன்.மனிதர்களிடத்தில் அறநெறியுடன் கூடிய விருப்பம் ( காமம்)நான்.மேலும் என்ன சொல்ல? எவ்வளவு சாத்வீகம், ராஜஸம்

தாமஸம் என்று முக்குணங்கள் என்னிடமிருந்து தான் உருவாகின்றன.ஆனால் அவை எனக்குள்ளும்,நான் அவைகளுக்குள்ளும் அடங்கி ஒடுங்கி இருப்பதில்லை.அதாவது நான் அவைகளைக் கடந்தவன்.அவைகளுடன் ஒட்டாமல் இருப்பவன்.

அர்ச்சுனன்: அப்படியானால் மக்கள் உங்களை இந்நிலையில் ஏன் அறிந்து கொள்வதில்லை?

கண்ணன்: உலக மக்கள் சத்துவம்,ராஜஸ்,தமஸ் எனும் முக்குணங்களில் மோகித்து வாழ்கிறார்கள்.அதாவது உலகியல் வாழ்வியலேயே ஆழ்ந்து உழன்று வருகிறார்கள் இதனால் தான் முக்குணங்களை கடந்தவனும் அழிவற்றவனுமான என்னை அறிய இயலவில்லை.

அர்ச்சுனன்: உங்களை எவர் அறிந்தவர்கள்?
கண்ணன்: என்னுடைய முக்குணங்களாலான மாயையை கடப்பது கடினம். .எந்த சாதகர்கள் இந்த மாயையில் இருந்து விடுபட்டு என்னையே புகலாக அடைகிறார்கள்,அவர்கள் என் அருளால் முக்குண மாயைச் சூழலிருந்து முற்றிலும் விடுபடுகிறார்கள்.பிறகு அறிந்து கொள்ளுகிறார்கள்.

அர்ச்சுனன்: அப்படியானால் எல்லோரும் உங்களை ஏன் புகலாகச் சரணடைவதில்லை?
கண்ணன்: அசுரகுணம் சார்ந்தவர்களும் மாயையால் மறைக்கப்பட்ட ஞானத்தை கொண்டவர்களுமான மனிதர்கள் மிக மட்டமானதும் பாவங்களுமான செயல்களைச் செய்து வருகிறார்கள் இந்த மூடர்கள் என்னைச் சரணடைவதில்லை.

அர்ச்சுனன்: அப்படியானால் உங்களை எவர்தான் சரணடைகிறார்கள்?
கண்ணன்: நான்கு வகை மனிதர்கள் என்னை பூஜிக்கிறார்கள்.என்னைப் புகலடைகிறார்கள்.பொருளாசை கொள்ளாதவர்கள்,துன்பத்தில் உழல்பவர்.என்னை அறிந்து கொள்ள விருப்புவர்,மெய்யறிவு பெற்ற ஞானிகள்.இவர்கள் புண்ணியசாலிகளான பக்தர்கள்.

அர்ச்சுனன்: இந்த நால்வர்களிலும் தலை சிறந்தவர் யார்?

கண்ணன்: இந்நான்கு வகை பக்தர்களில் என்னிடம் அதிக ஈடுபாடு கொண்டவர் ஞானி. இவர் தாம் தலை சிறந்தவர்.காரணம்,இவர் இடையறாமல் என்னிடம் ஈடுபாடு கொண்டிருக்கிறார்.இவருக்கு நானும் எனக்கு இவரும் மிக்க விருப்பமானவர்கள்.

அர்ச்சுனன்: மற்ற பக்தர்கள் சிறந்தவர்களில்லையா?

கண்ணன்:  இல்லை.அவர்கள் எல்லோரிலும் உதாரகுணம் கொண்டவர்கள்.சிறந்தவர்கள்.

அர்ச்சுனன்: அப்படியால் உங்களிடம் பேரன்பு கொண்டுள்ள பக்தரான ஞானியிடம் என்ன சிறப்பு உள்ளது?

கண்ணன்: அந்த பக்த ஞானி என் ஆத்மாவின் சொரூபம்.என்னையே புகலாக கொண்டிருக்கிறார்.என்னையே திடமான பக்தி சிரத்தையுடன் தியானித்தும் பூஜித்தும் வருகிறார்.இவரிடம் உல்ள சிறப்பு என்னைத் தவிர வேறு எதையும் விரும்புவதிலை.பொருளாசை கொண்டவனிடம் என்னைத் தவிர பொருளிலும் ஆசை உள்ளது.துன்பப்படுபவர்கள் துன்பத்தை போக்கி கொள்ளும் விருப்பம் கொண்டவர்கள்.என் தத்துவத்தை அறிய விருப்புவர்களிடம் அந்த விருப்பமே மேலோங்கி உள்ளது.ஆனால் ஞானியிடம் பற்றோ ஆசையோ என்னையே சார்ந்தல்லாமல் வேறு பொருளில் இருப்பதில்லை.

அர்ச்சுனன்: ஞானியான பக்தருக்கு இவ்வளவு மகிமை எப்படி ஏற்படுகிறது பகவானே?

கண்ணன்:  பல பிறவி எடுத்த பிறகு கடைசியாக மனிதப் பிறவி கிட்டுகிறது.இந்த மனிதர்களில் என்னிடம் பூர்ணபக்தியும் புகழும் கொண்ட ஞானி எல்லாம் பரமாத்மாதான் என்ற மெய்ஞானத்துடன் வாழ்கிறார்.இத்தகைய ஞானி உலகில் மிக மிக அரிதாகத்தான் உருப்பெறுகிறார்.

அர்ச்சுனன்: இத்தகைய பிரேமையும் பக்தியும் கொண்டு பரமஞானியாக உருப்பெறாமல் போவதற்கு என்ன காரணம்?

கண்ணன்: பலவகை ஆசாபாசங்கள் காரணமாக எல்லாமே வாசுதேவர் தான் என்கிற ஞானம் மறைக்கப்பட்டு விடுகிறது.இந்த சுயநல இயல்புக்கு அடிமையாகிய மனிதர்கள் என்னைப் புகலடையாமல் தம் ஆசாபாசங்களை நிறைவேற்றிக் கொள்ள பல உபாயங்களை நியமநிட்டைகளையும் மேற்கொள்கிறார்கள்.இதற்காகப் பல்வேறு தேவதைகளைச் சரணடைகிறார்கள்.பூஜித்து வழிபட்டு வருகிறார்கள்
( பரமாத்மாவான என்னை மறந்து விடுகிறார்கள்).

அர்ச்சுனன்: அந்த அஞ்ஞானிகளை ஏன் உங்கள் பக்கம் வரச் செய்வதில்லை?

கண்ணன்:  நான் மனிதர்களுக்கு அளித்துள்ள சுயநிர்ணய உரிமையை சுதந்திரத்தை ஒருபோதும் எடுத்துக் கொள்ள விரும்புவதில்லை.மேலும் எவை எவை எந்த எந்த தேவதையைப் பூஜித்து ஆராதிக்க விரும்புகிறாரோ, எந்த தேவதைகளிடம் அவருக்குள்ள பக்தி சிரத்தையே வலுப்படுத்துகிறேன்.அதன் துணையுடன் அவர் அவர் தமக்கு உவந்த தேவதையை போற்றி உபாசிக்கிறார்கள். அர்ச்சுனா!இதில் ஒரு விசித்திரமான விஷயம்,அவர்களுக்கு தம் தேவதைகளை உபாசிப்பதால் கிட்டும் பலன் என்னால் நிர்ணயிக்கப்பபட்டவாறு தான் கிடைக்கும்.சுயநல விருப்பத்துடன் தேவதைகளை உபாசிப்பதால் அந்த சிறுமதி மனிதர்களுக்கு அழிவுள்ள பலன்கள் தான் கிட்டுகிறது.அழிவில்லாப் பலன்களை நான் (பரம்பொருள்)கிட்டுவதில்லை இதர தேவதைகளை ஆராதிப்பவர்கள் பெரும்பாலும் ( சுவர்க்கம்முதலிய)போய் திரும்ப வேண்டிய உலகங்களுக்குச் செல்லுகிறார்கள்.என்னையே புகலாகக் கொண்டு பக்தி செலுத்தும் ஞானிகள் என்னை வந்தடைகிறார்கள்.

அர்ச்சுனன்: அப்படியானால் எல்லா பக்தர்களுமே உங்கள் பக்தர்களாக ஏன் ஆக்குவதில்லை?

கண்ணன்:  தம்பி! விவேக புத்தி இல்லாத மனிதர்கள் என் தலை சிறந்த அழிவற்ற உத்தம நிலையை அறிந்து கொள்ளாமல்,புலன்களுக்கும் புலம்படாத என் பரமாத்மா நிலையை பிறப்பும் ,இறப்பும் இளமையும் மூப்பும் கொண்ட மனித நிலையாகக் கருதுகிறார்கள் அப்படியானாவர்கள் என்னையே உபாசிக்கும் பக்தர்களாக எப்படி ஆக முடியும்?

அர்ச்சுனன்: பரமாத்மாவே! சாமானிய மனிதர்கள் உங்களுடைய உத்தமநிலையை அறியாமல்,அறிய மாட்டாமல் இருக்கலாம்,ஆனால் நீங்கள் அவர்களுக்கு எதிரில் உங்கள் உண்மையான உருவத்துடன் வெளிப்பட்டு ஏன் காட்சி அளிப்பது இல்லை?

கண்ணன்: உதவாது.தம்பி! அந்த மூட ஜனங்கள் என்னை இறப்பும் பிறப்பும் இல்லாத சாசுவதமான பரம்பொருள் என்று உணராத போது,யோக மாயையினால் சூழப்பட்டிருக்கும் நான் சாசுவதமான சுயரூபத்துடன் அவர்கள் எதிரில் வெளிப்படுவதிலை..

அர்ச்சுனன்: அந்த யோக மாயையின் திரை உங்களுக்கு எதிரில் இருப்பதில்லையா?

கண்ணன்:  இல்லை,அர்ச்சுனா! நான் முக்காலங்களிலும் ( கடந்த ,நிகழும் வரப்போகும் காலங்களில்) உள்ள எல்லா உயிரனங்களையும் அறிகிறேன்.ஆனால் மாயையின் மயக்கத்தில் மோகித்திருக்கும் ஜீவன்கள் என்னை அறிந்து கொள்வதில்லை.

அர்ச்சுனன்: உங்களை அறியாததற்கு முக்கிய காரணங்கள் எவை?
கண்ணன்: என்னை அறியாததற்கு உள்ள முக்கிய காரணம் விருப்பு வெறுப்புகளால் ( ராகம்-துவேஷம்) ஏற்படும் துவந்த மோகம் ( இருமை மயக்கம்) தவ வலிமை மிக்க வீரனே! இந்த மோகத்தினால் மதி மயங்கியிருக்கும் ஜீவன்கள் இந்த உலகில் உழன்று கொண்டிருக்கும்.பிறப்பதும்,இறப்பதுமாக வந்து போய்கொண்டிருக்கும்.

அர்ச்சுனன்: எல்லோருமே இந்த துறந்த மோகத்தில் மதிமயங்கி இருப்பவர்களா?
கண்ணன்: இல்லை.புண்ணிய காரியங்களைச் செய்து பாவங்களைக் போக்கிக் கொண்ட நல்லவர்கள் மெய்யறிவின் துணை கொண்டு துறந்த மோகத்திலிருந்து ( விருப்பு -வெறுப்புகளால் ஏற்படும் போட்டிக் கலவரம்)விடுபடுகிறார்கள்.பிறகு திடமான சங்கற்பத்துடன்,கடமைப் பற்றுடன் என்னைப் போற்றிப் பூஜிப்பதில் நிரந்தரமாக ஈடுபடுகிறார்கள்.இதையே தம் விரதமாக கொண்டு அந்த உத்தமர்கள் வாழ்கிறார்கள்.

அர்ச்சுனன்: திடமான விரதமாக உங்களை( பரமாத்மாவை) போற்றி பூஜித்து வருவதால் என்ன பயன் ஏற்படுகிறது?
கண்ணன்: மூப்பு ,மரணம் முதலான பிறவித்துயர்களிலிருந்து விடுதலை பெறுவதற்காக என்னையே சரணடைந்து விரத சீலர்களாக வாழ்பவர்கள் அந்த பிரும்மத்தையும் ,பிரும்ம் ஞானத்தையும் எல்லாஅத்தியாத்ம தத்துவங்களையும் முழு கர்மத்தையும் அறிகிறார்கள்.மேலும் அவர்கள் ” அதுபூதம்’ “அதிதைவம்”.”அதியக்ஞம்” சார்ந்த என்னை அதாவது என் பரிபூர்ணதத்துவத்தை ( எல்லாமே வாசுதேவ சொரூபம் எனும் பரம தத்துவத்தை) உணர்ந்து கொள்கிறார்கள் .இது மட்டுமல்ல.அந்த ஞானிகளான பக்தர்கள் என்னையே இடையறாமல் உபாசித்து வருவதால்,அந்திம காலத்தில் என்னிடம் வந்து சேருகிறார்கள்.அவர்கள் இலட்சிய சித்தி பெறுகிறார்கள்.

பிரம்மம்: அழிவற்ற பரமாத்மா.

அத்யாத்மம் : ஆத்மா சார்ந்த ஜீவனின் நிலைப்பாடு.

கர்மம்: சிருஷ்டி பிரளயத்துக்கு பிறகு மருபடியும் ஜீவன்களை வெளிப்படுத்துவதற்காக ( சிருஷ்டி செய்வதற்கு) கர்ம என்று பெயர்.

அதிபூதம்: உலகத்தில் உள்ள பொருள்கள் யாவும் அழியும் தன்மை கொண்டவை.இந்த அனைத்துப் பொருள்களுக்கும் அதிபூதம் என்று பெயர்.

அதிதைவம்: ஹிரண்கர்ப்பம் எனும் பிரும்மாதான் அதிதைவம்.

அதியக்ஞம்: ஜீவராசிகள் அந்தர்யாமியாக இருக்கும் பரமாத்மாவின் சேதன அம்சம்.

08.பரத்தை அடைதல்

அர்ச்சுனன்: புருஷோத்தமா! உங்களையே புகலாகக் கொண்ட ஞானிகளான பக்தர்கள் உங்கள் பூரணசொரூபத்தை அறிந்து கொள்வது பற்றி விவரித்தீர்கள்.இதில் நீங்கள் குறிப்பிடும் பிரும்மம் எத்தைகையது?

கண்ணன்: அர்ச்சுனா! இயல்போ( குணம்) உருவோ இல்லாத அழிவற்ற பரமாத்மாவைத்தான் ” பிரும்மம்” என்கிறோம்.

அர்ச்சுனன்:  அத்தியாத்மம் ( ஆத்மாவைச் சார்ந்த ஜீவ தத்துவம்) என்பது என்ன?
கண்ணன்:  ஜீவன்களின் இருப்பை ( நிலைப்பாடு) அத்தியாத்மம் என்பர்.

அர்ச்சுனன்:  கர்மாவைப் பற்றி சொல்லுங்கள்?
கண்ணன்: மகாபிரளய காலத்தில் தாம் செய்த வினைப் பயன்களுடன் என்னுள் அடங்கி விடுகிறார்கள் எல்லா ஜீவராசிகளும்.பிறகு சிருஷ்டியின் தொடக்கத்தில் வினைப் பயன்களை ( கருமபலன்) அனுபவிக்க ,ஜீவன்களிடமிருந்து அவைகளை வெளிப்படுத்தி அவைகளைன் உடல்களோடு தொடர்பு படுத்தி வைப்பதுதான் தியாகம் எனும் கருமம்.

அர்ச்சுனன்: பகவானே! அதிபூதம் என்பது என்ன? இதன் சொரூபம் என்ன?
கண்ணன்: அழியும் தன்மைதான் அதன் சொரூபம் நசியும் பொருள்கள் யாவும் ஆதிபூதம் எனும் பெளதீகப் பொருள்கள் தாம்.

அர்ச்சுனன்:  அதிதைவம் என்பது என்ன?
கண்ணன்: படைப்புக் காலத்தின் ஆரம்பத்தில் எல்லவற்றிக்கும் முதலாக முன்னதாக வெளிப்படும் ” ஹிரண்யகர்ப்பம்” எனும் பிரும்மா தான் அதிதைவம்.

அர்ச்சுனன்:  இந்த உடலில் அதியக்ஞம் எது?
கண்ணன்: இந்த மனித உடலில் உள்ளுறையும் ” அந்தர்யாமி” யகாக இருக்கும் நான் தான் இயக்கம் கொண்ட ” அதியக்ஞம்.

அர்ச்சுனன்: மதுசூதனா!தம் உள்ளத்தையும் உணர்வையும் வசப்படுத்தி வைத்திருக்கும் சாதகர்களான மனிதர்கள் அந்நிய காலத்தில் உங்களை எப்படி அறிந்து கொள்கிறார்கள்?
கண்ணன்: அர்ச்சுனா! முதலில் ஊழிகாலத்தில் விதிமுறை பற்றிச் சொல்கிறேன்.எந்த மனிதன் இறுதிக்காலத்தில் என்னை நினைத்து கொண்டு உயிர் துறக்கிறனோ, அவன் என்னை வந்தடைகிறான். இதில் சந்தேகமில்லை.

அர்ச்சுனன்: அந்திய காலத்தில், கிருஷ்ண பரமாத்மாவை உங்களை நினைப்பவன் ( துதிப்பவன்)உங்களை வந்தடைகிறான்.ஆனால் உங்களை நினைக்காதவனுக்கு என்ன ஆகும்?
கண்ணன்: குந்தியின் மைந்தனே! மனிதன் தன் இறுதிக் காலத்தில் உயிரே பிரியும்போது எந்தக் கருத்தில்,நினைப்பில் இருக்கிறானோ,அதையே அவன் பிறகும் பெறுகின்றான்.அதனால் உடலைத் திறந்த பின்பும் அதே கருத்து நினைவால் ஆட்கொள்ளப்படுகிறான்.

அர்ச்சுனன்: அப்படியானால் அந்திம காலத்தில் ஸ்மரித்துத் துதிக்க என்ன செய்ய வேண்டும்?

கண்ணன்: செயல் வீரனே! நீ உன் மனதையும் புத்தியையும் என்னிடத்தில் ஒப்படைத்து விடு.எனக்கே அர்ப்பணித்து விடு.தொடர்ந்து எல்லாக் காலத்திலும் என்னையே நினைத்திது துதித்து இரு.உனக்கு ஏற்பட்ட, ஏற்றுகொண்ட கடமைச் செயல்களை முறையாகச் செய்து கொண்டிரு.

அர்ச்சுனன்: இதனால் என்ன ஆகும்?

கண்ணன்: நீ நிச்சயம் என்னையே வந்தடைவாய்

அர்ச்சுனன்: பகவானே! உங்களுடைய எந்த சொரூபத்தை சந்தித்தால் கட்டுபாடுள்ள (மனிதன்) ஜீவாத்மா உங்களை வந்தடைகிறான்?
கண்ணன்: பார்த்தனே! எனக்கு மூன்று சொரூபங்கள் உள்ளன. ஸகுணஸாகாரம்(இயல்பு உருவம் கொண்டது) நிர்க்குண-நிராகரம் ( இயல்பும் உருவும் இல்லாதது)இவைகளில் ஸகுண-நிராகாரம்(இயல்பும் உருவில்லாமையும் கொண்டவை)எனும் சொரூபத்தைசிந்தித்து துதிப்பதின் மூலம் என்னை அடைவது பற்றிச் சொல்கிறேன்.

அர்ச்சுனா! எந்த மனிதன் (பக்தன்) அப்பியாஸ யோகம் எனும் தீவிரப்பயிற்சினால் பக்குவப்பட்ட திட சித்தத்துடன் என் சகுண நிராகாரம் எனும் பரம திவ்விய புருஷசொரூபத்தை சிந்தித்து (வந்தித்து) பூத உடலைத் துறக்கிறானோ,அவன் என் அதே சொரூபத்தை (பரம திவ்விய புருஷநிலை)பெறுகிறான்.

அர்ச்சுனன்: அந்த சொரூபம் எப்ப்டி இருக்கும்?
கண்ணன்: வீரத்திருமகனே! ஸகுண -நிராகாரம் எனும் பரம திவ்விய புருஷசொரூபம் எல்லாம் அறிந்து ( ஸர்வக்ஞன்) எல்லாவற்றிக்கும் ஆதி முதல் எல்லாவற்றையும் ஆளுவது,மிக சூட்சுமமானது.எல்லாவற்றையும் தாங்குவது ,வளர்ப்பது சிந்தனைக்கு அடங்காதது.அறியாமை எனும் இருள் இல்லாதது,சூரியனைப் போல் பிரகாசிப்பது,ஒளிமயமானது.இந்த சொரூபத்தை எந்த பக்தன் சிந்திக்கிறானோ, இறுதிக் காலத்தில் தன் யோக பலத்தால் சஞ்சலமில்லாத மனத்துடன் தன் பிராணன்களை ( உயிர் மூச்சுகளை) புருவங்களின் நடுவில் நிலையாக நிலைப்படுத்தி உடலைத் துறப்பானாயின்,அவன் அந்த பரம திவ்விய புருஷசொரூபத்தைப் பெறுகிறான்.

அர்ச்சுனன்: பரமாத்மாவே! உங்களுடைய ஸகுண -நிராகார சொரூபத்தை சிந்தித்து உங்களைப் பெறும்வழியை உபதேசித்தீர்கள்.இனி நிகுண நிராகார சொரூபத்தைச் சிந்தித்து கட்டுப்பாடு உள்ள ஜீவாத்மா ( மனிதன்) உங்களை எப்படி அடைகிறான்?

கண்ணன்: வேத விற்பன்னர்கள் எந்த பரமாத்ம சொரூபத்தை அஷரம் ( அழிவற்றது) என்கிறார்களோ,ஆசாபாசங்களை துறந்த யதிகள் தவசித்தியாக எந்த சொரூபத்தை பெறுகிறார்களோ,பிரும்மச்சாரிகள் எந்த நிலையை பிரும்மசாரிய விரதத்தை மேற்கொன்டு வருகிறார்களோ அந்த சொரூப நிலையான நிர்குண -நிராகாரத்தை  ( இயல்பும் உருவும் இல்லாத நிலை) அடைவது பற்றி சுருக்கமாகச் சொல்லுகிறேன்.

அர்ச்சுனா! எந்த ஒரு சாதகர் தன் அந்திம காலத்தில் எல்லாப்புலன்களையும் தம் வசத்தில் அடக்கி ,மனத்தை இதயத்துள் நிறுத்தி பிராணன்களை ( உயிர் மூச்சுகளை) மஸ்திஷ்கம் எனும் உச்சந்தலைக்குள் கட்டுப்படுத்தி, யோகநிலையில் ஆழ்ந்து ஓம் எனும் பிரணவமாக அச்ஷர பிரும்ம்மத்தை உச்சரித்துக் கொன்டு எனது நிர்குண நிராகார சொரூபத்தைத் தியானித்தவாறே பூத உடலைத் துறக்கிறாரோ ,அவர் அப்பரமாத்மா நிலையைப் பெறுகிறார்.

அர்ச்சுனன்: பரமாத்மாவே ! நிர்குண -நிராகார சொரூபத்தைச் சிந்தித்து ( வந்தித்து) உங்களை அடைவதை அறிந்து கொண்டேன்.இனி ஸகுண-ஸகாரா சொரூபத்தை ( இயல்பும் உருவும் உள்ள நிலை) சிந்தித்து ஜீவாத்மா உங்களை எப்படிப் பெறுகிறான்? என்பதைச் சொல்லுங்கள்

கண்ணன்: பார்த்தனே! என்னைத் தவிர வேறு எதிலும் சித்தம் செலுத்தாத பக்தன் நித்திய நிரந்தரமாக என்னையே சிந்தித்து வாழ்கிறான்.என்னிடமே எப்பொதும் ஈடுபட்டிருக்கிற அந்த யோகிக்கு நான் எளிதில் கிட்டுகிறேன்.

அர்ச்சுனன்: பகவானே! தங்களைப் பெறுவதால் என்ன கிட்டுகிறது?

கண்ணன்: எந்த மகாத்மாக்கள் என்னிடம் பேரன்பு கொண்டு என்னையே புகலாகக் கொண்டு என்னோடு இணைகிறார்களோ, அவர்களுக்கு அழிவுள்ளதும்,துயரங்களுக்கு இருப்பிடதுமான மறுபிறவி ஏற்படுவதில்லை.

அர்ச்சுனன்: அப்படியானால் மறுபிறவி எவருக்கு ஏற்படுகிறது?

கண்ணன்: அர்ச்சுனா! பிரும்ம லோகம் வரையில் ( சுவர்க்கம் முதலானவை) எல்லா உலகங்களுக்கும் சென்று திரும்பும் ( வந்து போகும்)ஜீவன்களைக் கொண்டவை.ஆகையால் அங்கு செல்பவர்கள் காலக்கெடு முடிந்ததும் திரும்பி வந்துசேர வேன்டியதுதான்.அதாவது மறுபடியும் பிறப்பு எடுக்க வேண்டும் .ஆனால் குந்தியின் மைந்தனே! என்னை( என் சொரூபங்களில் ஏதாவது ஒன்றை) பற்றியவாறு என்னிடம் சேர்ந்தவர்களுக்குப் பிறகு பிறவியே கிடையாது.

அர்ச்சுனன்: அந்த உலகங்களுக்கு சென்றோர் மீண்டும்திரும்ப வேண்டியவர்களாக ஏன் இருக்கின்றனர்? அவை கால அளவுக்கு உட்பட்டவையாக இருப்பதால், அந்த கால அளவு என்ன?

கண்ணன்: பகல் இரவு குறைக்கும் தத்துவத்தை அறிந்தவர்கள் இந்தக் கால அளவைத் தெரிந்து கொன்டிருக்கிறார்கள்.ஓர் ஆயிரம் சதுர்யுகம் முடிவடைந்தால் பிரும்ம தேவரின் ஒரு பகல் வேளை முடிவடைகிறது.
இதே போல ஓர் ஆயிரம் சதுர்யுகம் பிரும்மாவிற்கு ஓர் இரவு.( நாற்பத்துமூன்று இலட்சத்து இருபதினாயிரம் வருடங்கள் ஒரு சதுர்யுகம்) பிரும்மாவின் பகல் பொழுது ஆரம்பமாகும்.சமயம் (உறக்கத்திலிருந்து அவர் எழுந்ததும்) பிரும்மாவின் சூட்சும சரீரத்திலிருந்து எல்லாப் பிராணிகளும் வெளிப்படுகின்றன.மேலும் பிரும்மாவின் இரவு தொடங்கும் போது ( பிரும்மா உறங்கிய பின்)அவருடைய சூட்சும சரீரத்தில் எல்லாப்பிராணிகளும் ஒடுங்கி விடுகின்றன.

அர்ச்சுனன்: அந்தப் பிராணிகள் ஏன் அடிக்கடி பிறந்தும் இறந்தும் பூவுலக வாழ்வில் உழன்று கொண்டிருக்கிறார்கள்?

கண்ணன்: முன்படைப்பில் இருந்த ஜீவ சமுதாயம் தான் அடுத்த படைப்பிலும் தொடரும் ஆனாலும் அந்த ஜீவன்கள் தம் விருப்பு -வெறுப்புகளிலுள்ள இயல்புகளுக்கு ஆட்பட்டு மாறி மாறி பிரும்மாவின் பகல் காலம் தொடங்கும் போது பிறக்கப்படுகின்றன.இரவு காலத்தில் இறக்கின்றன( பிரும்மாவிடமே ஒடுங்கி விடுகின்றன).

அர்ச்சுனன்: வெளியே புலப்படாத பிரும்மாவின் சூட்சும சரீரத்தையும் விட மேலானதும் அழிவற்றதுமான சொரூபம் ஏதாவது உள்ளதா கண்ணா?

கண்ணன்: அர்ச்சுனா! அந்த பிரும்மாவைவிடச் சிறந்தது பரமாத்மா .அது ஒப்பற்றது.நித்தியமானது.நிரந்தரமாக இயங்குவது ,வெளியில் தென்படாதது .சிந்தனைக்கு உட்பட்டதாகவும் இருக்கும்.எல்லாப் பிராணிகளும் அழிக்கப்பட்டாலும் பரமாத்மா அழிவதில்லை.அதைத்தான் வெளிப்படாததும் அழியாததும்,மேல் நிலையானதுமானக் குறிப்பிடுகிறார். அதை அடைந்த பின் ஜீவன் பிறகு இந்த உலகிற்குத் திரும்புவதில்லை அதுதான் என் பரமபதம்.சர்வோத்மமான என் சொரூபம்.

அர்ச்சுனன்: அந்தப் பரமபத நிலையை எப்படி அடைவது?
கண்ணன்: பரமாத்மாவை அடைவதும் பர பதநிலையை அடைவதும் ஒன்றுதான்.அதற்குள் எல்லா உலகங்களும் அடங்கியிருக்கின்றன. அது எல்லா உலகங்களிலும் வியாபிதிருக்கிறது. அப் பரமாத்மா பரம புருஷனாக ( ஆதிபகவானாக) இருப்பதை உணர்ந்து சஞ்சலமில்லாத பக்தியின் மூலம் அந்நிலையை அடையலாம்.

அர்ச்சுனன்: பரமாத்மாவை மறந்து இந்த உலகியல் விருப்பதும் தொடர்பும் கொண்டிருந்தால் என்ன ஆகும்?கொள்ளாதிருந்தால் என்னா ஆகும்?
கண்ணன்: .அர்ச்சுனா! பரமாத்மாவிடம் திட பக்தி கொண்டு வாழ்பவர் பிற பொருள்களிடம் பற்றோ,தொடர்போ கொல்ளாதிருந்தால்,அவருக்கு மறுபிறவி கிடையாது.பிற பொருள்களிடம் பற்றும் தொடர்பும் கொண்டவர்கள். அவர்கள் சாதகர்களாக இருந்தாலும் பிரவித்தளையில் சிக்கி மாறிமாறி இந்த உலகிற்கு வந்து போகிறார்கள்.இந்த இரு மார்க்கங்களையும் நீ தெரிந்து கொள்ளவேண்டும்.

அர்ச்சுனன்: பகவானே!அந்த இரு மார்க்கங்களும்( பிறவித்தளையில் சிக்கவைப்பதும்,சிக்காமல் காப்பதுமான இரு வழிகளும்) எவை?

கண்ணன்: எந்த மார்க்கத்தில் ஒளிமயமான அக்கினி, பகல், வளர்பிறை,சுக்ல மார்க்கம் உத்தராயண புண்ய காலம் (தைமாதம்முதல் ஆனி வரையுள்ல ஆறு மாத காலம்) தொடர்புள்ள தேவதைகள் இருக்கிறார்களோ, இம் மார்க்கத்தில் செல்லும் பிரும்ம ஞானிகள் மறு பிறவி இல்லாத சாசுவதமான நிலையை அடைகிறார்கள்.பிரும்மத்திடம் சேர்ந்துவிடுகிறார்கள்.

எந்த மார்க்கத்தில் புகை,இரவு,தேய்பிறை ( கிருஷ்ண பசஷம்) காலத்தின் அதி தேவதைகள் உள்ளனவோ,அதில் செல்லும் ஆசாபாசம் கொண்ட மனிதர்கள் சுவர்க்கம் முதலான உலகங்களுக்குச் சென்று சுகங்களை அனுபவித்த பிறகு திரும்பி வருகிறார்கள்.

அர்ச்சுனன்:இந்த இரு மார்க்கங்களும் எப்போது ஆரம்பமாகின்றன?

கண்ணன்: பிராணிகளுக்கு என்று அமைந்த வளர்பிறை-தேய்பிறை ( சுக்ல-கிருஷ்ண) எனும் மார்க்கங்கள் அநாதியானவை. அவைகளில் சுக்ல மார்க்கத்தில் செல்லுபவர்கள் திரும்பவும் இவ்வுலக வாழ்விற்குத்திரும்ப வேண்டியதில்லை.கிருஷ்ண மார்க்கத்தில் செல்லும் மனிதர்களுக்கு மறுபிறவி உண்டு.

அர்ச்சுனன்: மறுபிறவி இல்லாமல் போவதற்கு என்ன செய்ய வேன்டும் பகவானே?

கண்ணன்: பார்த்தனே! இந்த இரு மார்க்கங்களின் பரிணாமத்தை ( விளைவை)அறிந்திருப்பதால் ,எந்த யோகியும் இவ்வுலக வாழ்வில் மயங்கி ஈடுபடுவதில்லை .ஆகையால் அர்ச்சுனா! நீ எல்லாக் காலத்திலும் யோக மார்க்கத்தில் ஈடுபட்டிரு. அதாவது உலகிய்ல் வாழ்வில் எப்போதும் பற்றுதல்,வெறுப்பு ஒட்டுறவு ஏதும் இல்லாமல் வாழ்ந்து வா.

அர்ச்சுனன்: யோகியாக இருப்பதால் என்ன ஆகும்?

கண்ணன்: வேதத்திலும் யக்ஞத்திலும் தவத்திலும் தானத்திலும் என்னவெல்லாம் புண்ணிய பலன்கள் கூறப்பட்டிருக்கின்றனவோ அவைகளை எல்லாம் கடந்தவ்ர் யோகி .அவர் தம் யோகப் பயிற்சியால் ஆதிஸ்தானமான பரமாத்மாவை அடைகிறார்.

09.மிக இரகசியமான அறிவு

அர்ச்சுனன்: பரமாத்மாவே! நான் அடிக்கடி குறுக்கிட்டு பல கேள்விகளைக் கேட்டேன்.எல்லாவற்றிக்கும் பதிலளித்து வருகிறீர்கள்.நான் கேள்வி கேட்பதற்கு முன்பாக நீங்கள் என்ன சொல்ல விரும்பினீர்கள்?

கண்ணன்: அன்பனே! நான் முதலில் விஞ்ஞான பூர்வமான ஞானம் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன்.மிக்க ரகசியமாக பாதுகாக்க வேண்டிய அந்த விஞ்ஞானம் சார்ந்த ஞானத்தை( மேலான மெய்யறிவு) குற்றமற்ற உனக்காக மறுபடியும் சொல்கிறேன்.அதை அடைந்த பின் நீ பிறப்பு இறப்புகளைக் கொண்ட இவ்வுலக வாழ்கையிலிருந்து நிச்சயம் விடுதலை பெறுவாய்.

அர்ச்சுனன்: அந்த ஞானம் மிகக் கடினமாக இருக்குமோ பகவானே?

கண்ணன்: இல்லை அர்ச்சுனா! மேலான மெய்யறிவுடன் கூடிய பகுத்தறிவு ( விஞ்ஞான பூர்வமான ஞானம்) எல்லா வித்தைகளுக்கும் ராஜா போன்றது.எல்லா ரகசிய தத்துவங்களிற்கும் தலைவன் போன்றது.மிகக் புனிதமானது.மிக உத்தமமானது.கண்கூடான நற்பயனை அளிப்பது.அறநெறிக்கு உட்பட்டது.அழிவற்றது.மேலும் அநுட்டிப்பதற்கு( வாழ்க்கையில் பயன்படுத்த) மிக்க எளிதானது.

அர்ச்சுனன்: மிக்க எளிதான அந்த ஞான வித்தையை எல்லா மனிதர்களும் ஏன் பெறுவதில்லை? பெற முடிவதில்லை?

கண்ணன்: வீரம் மிக்கவனே! மனிதன் ஞானம், விஞ்ஞானமெனும் தர்ம நெறியில் சிரத்தையும் நம்பிக்கையும் கொள்ளாமலிருந்தால் என்னை அடையமாட்டான்.அழியும் உலகியல் வாழ்வில் உழன்று மாறி மாறி பிறவி எடுக்கிறான்.பிறப்பும் -இறப்பும் அவனை தொடர்கின்றன.

அர்ச்சுனன்: பகவானே! ஞானம் விஞ்ஞானம் எனும் தர்மநெறி வித்தை எது?

கண்ணன்: அர்ச்சுனா! நான் புலன்களிற்கு புலப்படாத வகையில் அந்தர்யாமியாக எல்லாப் பிராணிகளிடமும் குடிகொண்டு இருக்கிறேன்.எல்லாப் பிராணிகளும் என்னுள் ஒன்றி ஒடுங்கி இருக்கின்றன.இதேசமயம் நான் எல்லாப் பிராணிகளிடம் ஒட்டாமல் இருக்கிறேன்.இதேபோல் பிராணிகளும் என்னுள் கலந்துவிடுவதில்லை.அதாவது பிராணிகள் சுதந்திரமாக இருப்பதாக கருதினால் நான் எல்லாவற்றிலும் இருக்கிறேன்.எல்லா ஜீவன்களும் என்னிடம் உள்ளன.ஆனால் எங்கு பிராணிகள் சுதந்திரமாக இருப்பதில்லை என்று கருதினால் நான் பிராணிகளிடத்திலும்,அவை என்னிடத்திலும் இருப்பதில்லை எல்லாமே நான் தான்.

அர்ச்சுனன்: ஆனால் இந்த உலகத்தை உற்பத்தி செய்ததும்,ஆதாரமாக இருப்பதும் ஏதோ ஒரு சக்தியிருக்கும் இல்லையா?

கண்ணன்: தம்பி அந்த எதோவொரு சக்தி நான் தான்.என் அந்தர்யாமியான் ( உள்ளுறை நிலை) சொரூபம் எல்லாப் பிராணிகளையும் படைக்கிறது.எல்லாவற்றையும் தாங்குகிறது.சகலதையும் வளர்க்கிறது.அப்படியிருந்தும் அந்த என் சொரூபம் பிராணிகளிடம் ஒட்டாமல் இருப்பது என்னுடைய இந்த இறையாட்சியின் திறனை( ஈஸ்வர யோகத்தை) நீ நன்கு உணர்ந்து கொள்.

அர்ச்சுனன்: பகவானே! அப்படியானால் அந்தப் பிராணிகள் எப்படி இருக்கின்றன?

கண்ணன்: அர்ச்சுனா! எவ்வாறு எல்லா இடங்களிலும் புகுந்து புறப்படும் கார்று நிரந்தரமாக ஆகாயத்திலே இருந்து வருகிறதோ,அவ்வாறே எல்லாப் பிராணிகளும் என்னுள் என்றும் இருந்து வருகின்றன.

அர்ச்சுனன்: அப்படியானால் பிறகு அந்தப் பிராணிகள் உங்களிடம் இருந்து விட்டுப் போகுமல்லவா?

கண்ணன்: அப்படியில்லை.குந்தியின் மைந்தனே! இயற்கையுடன் தொடர்பு கொண்டுள்ள எல்லாப் பிராணிகளும் பிரளய காலத்தில் என் இயற்கை நிலையை அடைகின்றன.பிறகு மகா சிருஷ்டியின் ஆரம்பத்தில் நான் அவைகளை மறுபடியும் படைக்கின்றேன் ( உருவாக்கி வெளிப்படுத்துகின்றேன்.

அர்ச்சுனன்: அப்படியானால் பகவானே! நீங்கள் எக்காலம் வரைக்கும் படைப்பு பணியில் ஈடுபட்டிருப்பீர்கள்? ( அந்தப் பிராணிகளை உருவாக்கி கொன்டிருப்பீர்கள்?)

கண்ணன்: அர்ச்சுனா! எதுவரைக்கும் அப்பிராணிகள் தன் இயற்கை சுபாவ நிலைக்கு ஆட்கொண்டிருக்கின்றனவோ,அதுவரைக்கும் என் பிரகிருதி( இயற்கை) நிலையை வசப் படுத்திக்கொண்டு தொடர்ந்து அப் பிராணிகளை படைத்துக் கொண்டிருக்கின்றேன்.

அர்ச்சுனன்: பகவானே! நீங்கள் பிராணிகளை மாறி மாறி சிருஷ்டிக்கிறீர்கள்.அப்போது அப்படைப்புப் பணிகளில் நீங்கள் நெருக்கமாக ஈடுபட்டு நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறீர்கள் இல்லையா?

கண்ணன்: இல்லை தனஞ்சயா1 நான் அந்த படைப்ப் பணிகளை ஒட்டுதல் ,ஈடுபாடு,விருப்பு – வெறுப்பு ஏதும் இல்லாமல் சம்பந்தப்படாதவன் போலத்தான் செய்து வ்ருகிறேன்.ஆதலால் அச்செயல்கள் ( கருமங்கள்) என்னைக் கட்டுப்படுத்துவதிலலை.

அர்ச்சுனன்: அப்படியானால் சிருஷ்டிக்கும் பணிகளை எப்படி நிறைவேற்றுகிறீர்கள் பகவானே?

கண்ணன்: அர்ச்சுனா! இயற்கைதான் என் தலைமையில் அதாவது என்னிடமிருந்து சக்தி ஊக்கம் பெற்று சராசரங்களை ( அசையும் பொருள் அசையாப் பொருள் யாவும்)சிருஷ்டிக்கிறது.குந்திதேவியின் செல்வனே! என் வழிகாட்டும் தலைமை காரணமாகவே உலகங்களில் பலவைகையான மாறுதல்கள் மாறிமாறி ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அர்ச்சுனன்: பகவானே! உங்கள் தலைமையில் உங்கள் சக்தி ஊக்கத்தால்தான் உலகத்தில் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது.அப்படியிருந்தும் எல்லா ஜனங்களும் உங்களிடம் பக்தி சிரத்தையுடன் ஈடு கொள்ளாதிருப்பது ஏன்?
கண்ணன்: அறிவில்லாத மூடஜனங்கள் நான் எல்லாப் பிராணிகளுக்கும் தலைமை நிலையில் சர்வேஸ்வரனாக இருப்பதை எண்ணாமல் என்னை சாதாரண மனிதனாக எண்ணி அவ்விசுவாசம் கொண்டு அவமதிக்கிறார்கள்.குறைவாக மதிக்கிறார்கள்.

அர்ச்சுனன்: அந்த அறிவற்ற மூடமக்கள் எப்படிப்படவர்கள்?

கண்ணன்: அர்ச்சுனா! அறியாமையிலும்,ஆணவத்திலும் உழலும் மூடர்களும்,அசுர குணங்களும், அரக்க இயல்புகளும்,மோக மயக்கங்களும் கொண்டவர்கள்.இவைகளின் துணை கொண்டு வாழ்பவர்கள்.இவர்களுடைய தன் நம்பிக்கைகள்,சுபகாரியங்கள் ஞானம் எல்லாமே வீண்.போலித்தனமும் பொய்மையும்,குறைகளும் கொண்டிருப்பதால் இவை நற்பலனை அளிக்காதவை.

அர்ச்சுனன்: பகவானே!உங்களிடம் திட பக்தியும் ஈடுபாடும் கொண்டிருப்பவர் யார்?

கண்ணன்: அவர்கள் தான் மகாத்மாக்கள்.அவர்கள் என்னை சரியாக உணர்ந்தவர்கள்.எல்லா ஜீவராசிகளுக்கும் ஆதிமுதல் நான் தான்.எனக்கு அழிவோ சிதைவோ இல்லையென்பதை நம்புகிறார்கள்.என்னுடைய தெய்வீகமான அழியாச் செல்வத்தை துணை கொண்டு சஞ்சலமில்லாமல் என்னையே போற்றிப் பூசித்து வணங்கி வருகிறார்கள் அம்மகான்கள்.

அர்ச்சுனன்: உங்களைப் போற்றிப் பூசிப்பவர்களுக்கு என்ன அடையாளம் பகவானே?

கண்ணன்: நிரந்தரமாக என்னிடம் ஈடுபாடு கொண்டிருப்பதையே திடவிரதமாக( அறநெறி) கொண்ட மேன்மக்கள் பக்தி சிரத்தையுடன் என் திருநாமங்களைப் பாடி பரவசமடைகிறார்கள்.என்னை அடைவதற்கான முனைப்புடன் சாதனை செய்கிறார்கள்.என்னையே வணங்கி என் சொரூபத்தையே முழுஈடுபாட்ட்டன் உபாசிக்கிறார்கள்.

அர்ச்சுனன்: பகவானே! உங்களை உபாசிக்கிறவர்களுக்கு பக்தி யோகத்தைத்தவிர வேறு வழி ஏதாவது உள்ளதா?

கண்ணன்:  உள்ளது.அர்ச்சுனா! பலசாதகர்கள் ஞானயக்ஞம் மூலமாக என்னையே பூசித்தும் உபாசித்தும் வாழ்கிறார்கள்.மற்றும் பசாதகர்கள் தம்மைத் தனியாக என்ணிக்கொண்டு,உலகத்தை என் சொரூபமாக கருதியவாறு தலைவன் தொண்டன் எனும் உறவு முறையுடன் என்னை பலவகையிலும் உபாசித்து வருகிறார்கள்.

அர்ச்சுனன்: பகவானே! உலகத்தை உபாசிப்பது உங்களை உபாசிப்பதாக அமையுமா?

கண்ணன்: அர்ச்சுனா! நான் தான் க்ரது(யாகம்)யக்ஞம்,ஸ்வதா,ஔஷதம்,மந்திரம்,கிருதம்(நெய்) அக்கினி,வனம்( ஆதி செய்தல்)எல்லாம் நான் தான். அறிந்து கொள்ள வேண்டியவிதிமுறை,புனிதத்தன்மை,பிரணவம் எனும் ஓங்காரம்,ரிக்வேதம்,சாமவேதம்,யசுர்வேதம் எல்லம் நான் தான்.அகில உலகிற்கும் தந்தை தாய்,பாட்டானார்,பாதுகாவலன்,இலட்சியப் பாதை,உயிர், வளர்ப்பவன்,தலைவன்,சாட்சி,இருப்பிடம்,புகலிடம்,நண்பன்,,உற்பத்தி,பிரளயம்,நிலப்பரப்பு,ஆதாரம்,அழியாத வித்துக்கள் எல்லாமே நானே தான்.அர்ச்சுனா!நான் தான் சூரியனாக வந்து வெய்யில் காய வைக்கிறேன் நீரை ஏற்கிறேன்.அந்நீரை மழையாகப் பொழிகிறேன்.நான் தானமிர்தமும் ,அழியும் தன்மையும் சடமாகவும் ,சேதனமாகவும்( உணர்வுள்ளது-அல்லாதது)இருக்கிறேன்.நான் தான் எங்கும் எப்போதும் பரந்திருக்கிறேன்.

அர்ச்சுனன்: பகவானே! இந்த உலகம் முதற்கொண்டு எல்லாமே நீங்கள் தான் என்றிருக்கும்போது மனிதர்கள் உங்களைவிட்டு மற்றத் தேவதைகளை ஏன் பூஜிக்கவும் உபாசிக்கவும் செய்கிறார்கள்.

கண்ணன்:அர்ச்சுனா! சுகபோகங்களில்விருப்பமுள்ளமனிதர்கள் மூன்று வேதங்களிலும் (ரிக்,யகர்,சாமம்) கூறப்பட்ட யக்ஞம் முதலான சுபகாரியங்களை அநுஷ்டிப்பதின் மூலம் இந்திரனைப் பூஜித்து ( ஆராதித்தும் சுவர்க்க லோக வாசத்தை வேண்டுகிறார்கள்.மேலும் சோமரசத்தை பருகிறவர்கள் தடங்கலான பாவங்கள் இருந்து விடுபட்டு ,புண்ணிய பலத்தினால் விசாலமான சொர்க்கலோகத்தை அடைகிறார்கள்.அங்கு தேவதைகளுக்குரிய திவ்வியமான சுகபோகங்களை அநுபவித்து ஆனந்தம் பெறுகிறார்கள்,புண்ணியம் பலம் குறைந்ததும் மறுபடியும் மறுபிறவி மூலம் பூவிலகிற்கு திரும்பி வருகிறார்கள்.அர்ச்சுனா! இவ்வாறு

மூன்று வேதங்களிலும் சொல்லப்பட்டிருக்கும் ஆசைகளை தூண்டும் அநுஷ்டானங்களை செய்பவர்களும் சுகபோகங்களை விரும்புவர்களான மனிதர்கள் அடிக்கடி பிறப்பதும் இறப்பதுமாக இவ்வுலக வாழ்வில் உழன்று கொண்டு இருக்கிறார்கள்.

அர்ச்சுனன்: பகவானே! ஜனன- மரண நிலை சார்ந்த அநுஷ்டானங்களில் ( வேள்வி முதலியவை) ஈடுபட்டிருக்கிற மனிதர்களிற்கு உரியது.ஆனால் சிறந்த ஞானியாக முதிந்தவர் உங்களைப் புகலாக்கொன்டிருந்தால் அவரது நிலை என்ன?

கண்ணன்:வேறெதிலும் எவரிடமும் பற்றோ,ஈடுபாடோ கொள்ளாமல் என்னையே சிந்தித்து என்னையே உபாசித்து இருப்பவர்கள் பரமபக்தர்கள்.அவர்களுடைய யோக சோமங்களை( அகநலம்,புறநலம் இரண்டையும்) நானே கவனித்துக் கொள்கிறேன்.என்னையே சார்ந்துள்ள என்னையே புகலாகக் கொண்டுள்ள பக்தர்களுக்கு நான் செய்யும் தொண்டு இதுவே.

அர்ச்சுனன்: பகவானே!உங்களை உபாசிக்காமல் வேறு தேவதைகளை மிக்க ஈடுபாட்டுடன் பக்தி சிரத்தையாக ஒருவர் உபாசித்து வந்தால் என்ன ஆகும்?

கண்ணன்: குந்தியின் செல்வனே! எந்த மனிதர்கள் பக்தி சிரத்தையுடன் இதர தேவதைகளை பூசிக்கிறார்களோ,அவர்களும் உண்மையில் என்னையே பூசித்தவர்களாவர்கள். ஏனென்றால் இருப்பது,மறைவது நல்லது.தீயது எல்லாமே நான் தான் எனும் தத்துவப்படி அவர்கள் பிறதேவதைகளை ஆராதித்தாலும் அது எனக்கே வந்து சேரும்.ஆனால் அந்த ஆராதனை விதிமுறைப்படி அநுட்டிக்கப்பட்டதல்ல.

அர்ச்சுனன்:  பகவானே! அந்த ஆராதனை உங்களைச் சேரும்போது அது விதிமுறைப்படி அமையாதது என்று ஏன் கருதவேண்டும்?
கண்ணன்:யக்ஞம் ( யாகம்) தானம்,தவம் முதலிய எல்லாச் சுபகாரியங்களையும் அநுபவிப்பவனும்,எல்லா உலகங்களுக்கு தலைவனும் நான் தான்.ஆனால் இதர தேவதைகளை உபாசிப்பவர்கள் என்னுடைய சர்வேஸ்வர தத்துவத்தை அறிவதில்லை.அதனால்தான் அவர்களிற்கு சரிவு ஏற்படுகிறது.

அர்ச்சுனன்:  அவர்களுக்கு ஏற்படும் சரிவு எத்தைகையது?

கண்ணன்: அர்ச்சுனா! தேவதைகளை உபாசிக்கிறவர்கள் தேவதைகளையும் பிதிருகளைப் பூசிப்பவர்கள்.பிதிருக்களையும்,பூதப் பிரேதங்களை வழிபடுபவர்கள் பூதப் பிரேதங்களையும் அடைகிறார்கள்.(அவைகளின் மூலம் பயன் பெறுகிறார்கள்) ஆனால் என்னையே உப்பசிப்பவர்கள் என்னைப் பெறுகிறார்கள்.

அர்ச்சுனன்:  பகவானே! உங்களை பெற உதவும் அவ்வித பக்தி ( திசைமாறாத திட பக்தி) மிகக் கடினமாக இருக்குமா?

கண்ணன்: இல்லை அது மிகச் சுலபமானது.சஞ்சலமில்லாத உண்மையான பக்தன் உள்ளன்புடன் எனக்கு இலையோ,மலரோ,கனியோ,தண்ணீரோ அல்லது எது கிடைகிறதோ,அதனை நைவேத்தியமாக அர்பணிக்கிறானோ,அதை நான் விருப்பத்துடன் ஏற்றுகொள்கிறேன்.

அர்ச்சுனன்:  பரமாத்வாவே! அவ்வித திடபக்தியைப் பெற நான் என்ன செய்யவேண்டும்?

கண்ணன்: அர்ச்சுனா! நீ எதைப் புசிக்கிறாயோ, எந்த நற்பணியை செய்கிறாயோ,எந்தவகைத் தவம்,யாக யக்ஞங்களைப் புரிகிறாயோ,இவைகளைத்தவிர செய்யும் எல்லாக்காரியங்களையும் உன் அன்புடன் எனக்கே அர்ப்பணம்செய்துவிடு.

அர்ச்சுனன்:  உங்களுக்கே அர்ப்பணித்து விட்டால் என்ன ஆகும் பகவானே?

கண்ணன்: அர்ச்சுனா! நீ சுபம்,அசுபம்( நல்லது-தீயது.தகுந்தது தகாதது) எல்லாக் காரியங்களின் விளைவான வினைப்பயன்களில் இருந்து விடுபட்டு என்னையே வந்தடைவாய்.

அர்ச்சுனன்: பகவானே! எவர் எல்லாவற்றையும் உங்களுக்கு அர்ப்பணித்து விடுகிறாரோ,அவரை நீங்கள் எல்லாத் தளைகளிலிருந்தும் விடுவித்துவிடுகிறீர்கள்.ஆனால் அப்படிச் செய்யாதவர்களை கர்ம பந்தங்களான தளைகளில் சிக்கித் தவிக்க விடுகிறீகள்.உங்களிடம் இப்படியொரு பராபட்சபாதம்( ஒருதலைச்சார்பு) ஏன் இருக்கிறது?

கண்ணன்: இது பாரபட்சம் இல்லை அர்ச்சுனா! நான் எல்லாப் பிராணிகளிடமும் சரிசமமாக இருக்கிறேன்.எனக்கு எவரும் எது விதத்திலும் விரோதியுமில்லை.விருப்பமுள்ளதும் இல்லை. ஆனால் எவர் அன்புடன் போற்றுகிறாரோஅவர்கள் என்றும் என்னுடன் சிறப்பாக சேர்ந்து இருக்கிறார்கள். நானும் அதேவிதம் அவர்களுடன் குடிகொண்டிருக்கிறேன்.

அர்ச்சுனன்: பகவானே! ஒரு மனிதன் தீய நடத்தையுள்ளவனாக இருந்தாலும் உங்களைப் போற்றிப் பூசிக்கலாமா? உங்கள் பக்தனாக இருக்க முடியும்?

கண்ணன்: நிச்சயம் இருக்கலாம் மிகக் கெட்டவனாக,கொடியவனாக இருந்தாலும் அந்த மனிதன் பிறரைச் சார்ந்திருக்காமல் என்னையே புகலாகக்கொண்டு ஆராதித்து வந்தால் அவனை சாது என்றே கருத வேண்டும். ஏனெனில் அவன் நிச்சயம் மிக நல்லவைகளை செய்திருக்கிறான்.

அர்ச்சுனன்: அப்படியானால் அத்தீயவனை நல்லவனாக ( சாதுவாக) கருதலாமா பகவானே?

கண்ணன்: கூடாது அவன் அந்த சமயத்தில் மட்டும் ( என்னை மெய்யான பக்தியுடன் பூசுக்கும் போது) தர்மாத்மாவாக இருக்கிறேன். அர்ச்சுனா! என் பக்தன் ஒருக்காலும் நெறி தவறக்கூடாது.வீழ்ச்சியடையக்கூடாதுஎன்று நீ உறுதிபடுத்திக்கொள்.

அர்ச்சுனன்: உங்களிடம் திட பக்தி செலுத்தும் உரிமை ,தகுதி சாதுக்கள் அல்லாத பிறருக்கும் கிடைக்கும் இல்லையா?

கண்ணன்: கிடைக்கும்.பாவ வழியில் பிறந்தவர்கள் , பெண்கள்,வைசீகர்,தொண்டர்களான சூத்திரர் ஆகியோரும் என்னைப் புகலாகக் கொண்டு ( பூஜித்து வ்ழிபட்டு) என்னை அடைகிறார்கள்.மேலும் பிறப்பாலும் நற்செயலாலும் புனிதர்களான பிராமணர்கள் சத்திரியர்கள் என் பக்தர்களாகி என்னைப் பெறுவார்களென்று சொல்லவும் வேண்டுமா?

அர்ச்சுனன்: பகவானே! அத்தைய பக்தர்களாக நான் எப்படியாக முடியும்?

கண்ணன்: அர்ச்சுனா! உன்னுடைய இந்த பூதவுடல் சுகமில்லாதது,அழியக்கூடியது.எனினும் சாசுவதமான நிலையான சுகத்தைபெற நீ
இந்நிலையிலேயெ பூஜித்து உபாசித்து கொண்டிரு.என்னிடமே திடபக்தி கொண்டிரு.

அர்ச்சுனன்: பகவானே! உங்களை நான் எப்படி போற்றிப் பூசிப்பது?

கண்ணன்: அர்ச்சுனா! நீ எனக்கே விசுவாசமுள்ள பக்தனாக இரு.என்னிடமே உன் மனத்தை செலுத்திக் கொண்டிரு என்னையே போற்றிப் பூசித்துக் கொண்டிரு.என்னையே நிதமும் வணங்கி வா அவவிசுவாசம் கொள்ளாதே.இவ்வாறு என்னோடு நீ உன்னைத் தானாகவே ஈடுபடுத்திக்கொண்டு, என்னையே சிந்தித்தும் வந்தித்தும் வாழ்வாயானால் நிச்சயம் என்னையே அடைந்துவிடுவாய்.

10.பூரணத்தின் வைபவம்

கிருஷ்ண பரமாத்மா அன்பனே! நீ மறுபடியும் என் மேலான வாக்கை கேள்.உன் நலன் கருதி இதைச் சொல்லுகிறேன் .நீ என்னிடம் ஆழ்ந்த அன்பு கொண்டிருக்கிறாய். இதுவே என் பரமவசனம்.( எல்லாவற்றிக்கும் அடிப்படையான தன்னிலை சுயரூபம் பர்றிப் பகவான் உபதேசிப்பதுதான்பரமவசனம்)

அர்ச்சுனன்: உங்களுடைய மேலான வாக்கு என்பது என்ன பகவானே?

கண்ணன்: இந்த உலகம் முழுவதும் என்னிடமிருந்து நானே வெளிப்படுத்தியது.இதை முழுவதுமாக தேவதைகளோ,மகரிஷிகளோ அறிவதில்லை.காரணம்நான் எல்லா விதத்திலும் அந்தத் தேவதைகளுக்கும் மகரிஷிகளுக்கும் ஆதி முதலானவன்.

அர்ச்சுனன்: எல்லாவற்றிக்கும் மூலாதாரமான உங்களை தேவதைகள்,மகரிஷிகள் முதலானவர்களே அறிந்து கொள்ளாமலிருக்கும் போது சாமானிய மனிதன் உங்களை எப்படி உணர்ந்து கொள்ளுவான்?அவனுக்கு மங்கள நலன்கள் எப்படி ஏற்படும்?

கண்ணன்: அர்ச்சுனா! எந்த மனிதன் என்னைப் பிறவியும், மரணமும் இல்லாதவராகவும்,எல்லா உலகங்களுக்கும் தலைவராகவும் காவலனாகவும் உணர்கிறானோ,அதையே திடமாக நம்புகிறானோ அவன் ஞானி.எல்லாப் பாவங்களிலுமிருந்தும் அவன் விடுபடுகிறான்.

அர்ச்சுனன்: பகவனே! அப்படியானால் உங்களின் மேலான பரம வசனத்தை நான் எப்படி அறிந்து கொள்வது?

கண்ணன்: அர்ச்சுனா! பகுத்தறிவு,மெய்யானம், மோக மயக்கம் இல்லாது இருத்தல்.பொறுத்தல்( மன்னித்தல்)சத்தியம், புலனடக்கம்,மனவடக்கம்,சுகம்,துக்கம்,பிறப்பு, இறப்பு,பயம்,அபயம்,அகிம்சை,சமத்துவம்,மகிழ்ச்சி,தவம்,தானம்,புகழ், அவதூறு இவை யாவும் பலவகையாலும் பிராணிகளுக்கு என்னிடம் இருந்துதான் ஏற்படுகின்றன.இந்த நிலைமைகள்மட்டுமல்ல என்னிடம் பரிபூர்ண பக்தி கொண்டவர்களும் உலக மக்களை சிருஷ்டித்தவர்களுமான ஏழுமகரிஷிகளும்,இவர்களுக்கு முந்தியவர்களான ஸனகர் .ஸனந்தனர்,ஸனாதனர்,ஸனத்குமாரர் எனும் மாகன்களும் புதினான்கு மனுக்களும்( சுவாரோசிஷ்ர்,சுயாம்புவர்,ரைவதர்,உத்தமர் முதலான மனு மகராஜாக்கள்) இவர்கள் எல்லோரும் என் மனதில் இருந்து பிறந்தவர்கள்,இவர்களுக்கும் வ்ழிகாட்டும் ஆசானும் நான் தான்.

அர்ச்சுனன்; பகுத்தறிவு, மெய்யறிவு,( புத்தி,ஞானம்) முதலானவையும் மகரிஷகள் முதலானவர்களும் என்னிடமிருந்து உற்பத்தியானவர்கள் என்று சொல்லுவதில் உங்கள் நோக்கம் என்ன?

கண்ணன்: அர்ச்சுனா! எந்தப் புத்திமான் என்னுடைய ஜசுரிய வைபவத்தையும் ,மேலான திறமையையும் சிரத்தையுடனும் திட சிந்தனையுடனும் ஒப்புக்கொள்கிறானோ,அவனுக்கு என்னிடம் சஞ்சலம் சந்தேகமில்லாத பக்தி ஏற்பட்டு விடுகிறது.இதில் சிறிதும் ஜயப்பாடு இல்லை.

(பகவானுடைய திறமைக்கு “யோகம்” என்று பெயர். இந்த யோகத்தால் வெளிப்படும் செல்வங்களை ” விபூதி”என்பர்.)

அர்ச்சுனன்; திட சிரத்தையுடனும், சிந்தனையுடனும் ஒப்புக் கொல்வது என்றால் என்ன பகவானே?

கண்ணன்: நானே உலகம் முழுவதற்கும் மூலகாரணம்.என்னிடமிருந்து அகில உலகமும் செயல்படுகிறது.இந்த சாசுவ தத்துவத்தை திடமாக நம்பி, என்னிடம் பேரன்பும் ,பரம பக்தியும் கொன்டு என்னை ஆராதித்து வருபவர்கள் புத்திமான்களான ஞானிகள்.

அப்புத்திமான்கள் என்னிடத்தில் மனதையும் பிராணன்களையும் அர்ப்பணித்து வாழும் பக்த ஜனங்கள் ,தமக்குள் கலந்துரையாடும் போது என் குணங்களையும்,பிரபாவங்களையும் பேசியும் கேட்டும் மகிழ்கிறார்கள்.என்னையே இதயபூர்வமாக விரும்பி அன்பு செலுத்துகிறார்கள்.

இந்த பக்தர்கள் என்னிடம் எப்போதும் ஈடுபட்டிருந்து என்னையே போற்றி பக்தி செலுத்தும் அந்த அன்பர்களுக்கு நான் சமத்துவ உணர்வுள்ள புத்தி யோகத்தை அளிக்கிறேன்.இதன் மூலம் பக்தியோகிகளான அவர்கள் என்னை அடைகிறார்கள்.

அர்ச்சுனன்; கண்ணா!இதல்லாமல் வேறு ஏதாகிலும் நீங்கள் அவர்களுக்கு செய்கிறீர்களா?

கண்ணன்: அந்த பக்தர்களுக்கு அருள்பாலிக்க அவர்களது அந்தரங்கத்தில் , சொருபத்தில் இருக்கும் நான் அவர்களைப் பலவீனப்படுத்தும் அஞ்ஞான இருளை ஒளிரும் ஞான தீபத்தால் போக்கி விடுகிறேன்.

(ஞான ஒளியின் மகிமையால் அர்ச்சுனன் தன் உணர்வை கண்ணபிரானிடம் பெருமிதத்துடன் விண்ணப்பித்துக் கொண்டான்)

அர்ச்சுனன்; பகவானே! பக்தர்களிடம் நீங்கள் கொண்டிருக்கிற தெய்வீகமான ,சிறப்பான அருள்பாலிப்பைக் கேட்டு நான் நெஞ்சுருகி கரைந்து போகிறேன்.பிரபுவே! நீர்க்குணமாயும் ,நிராகாரமாயும்,உள்ள பிரம்மம் நீங்கள்.எல்லோருக்கும் மேலான புகலான இடமும் மிகப்புனிதமானவரும் நீங்கள் தான்.சாகவதமான திவ்விய புருஷர்.ஆதிதேவர்,பிரவித்தளைகள் இல்லாதவர்.எங்கும் வியாபித்திருப்பவர் நீங்கள்.உங்கள் மகிமையை சொரூப தத்துவங்களை எல்லா ரிஷிமுனிவர்களும்,தேவரிஷிநாரதர், அசிதர்,தேவலர்,வியாஸர்முதலானோரும் சொல்லுகிறார்கள்.இப்போது நீங்களும் எனக்கு உபதேசித்தருளி இருக்கிறீர்கள்.இவைகளை நான் கேட்கும்போதும் சிந்திக்கும்போதும் என் மனம் பரிபக்குவம் அடைகிறது.

கண்ணன்: அர்ச்சுனா! நான் இதுவரையில் சொன்னவைகளில் உனக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அர்ச்சுனன்; நம்பிக்கை இருக்கிறது கேசவா!நீங்கள் கூறியவை யாவும் முற்றிலும் உண்மை என்றே நம்புகிறேன்.பகவானே! நீங்கள் அவதரிப்பதை ,தரிசனமளிப்பதை திவ்விய சக்கதியுள்ள தேவர்களாலும் அறியமுடிவதில்லை.அதிசயமான் மாய சக்க்தியுள்ளவர்கள் அல்லது அசுரர்களும்கூட அறியமுடிவதில்லை.

கண்ணன்: அர்ச்சுனா! தேவர்களே அறிய இயலாத போது வேறு எவரால் அறியமுடியும்?

அர்ச்சுனன்; உயிர்களைப் படைத்தவா1 உயிர்களுக்கு இறைவா! தேவதேவா! அகிலாண்ட நாயகனே! புருசோத்மனே!நீங்கள் சுயமாகவே உங்களை அரிந்திருப்பவர்.ஆகையால் நீங்கள் உங்களுடைய வைபவ ஜசுவரியங்கள்மூலமாக உலகம் முழுவதிலும் வியாபித்திருகிறீர்கள்.அந்த மகத்தான் ஜசுவரியங்களான விபூதிகளை பற்றி உங்களால்தான் விபரிக்க முடியும்.விளங்க வைக்க முடியும்.

கண்ணன்: என் விபூதிகளைப் பர்றி அறிந்து நீ என்ன செய்யப் போகிறாய்?

அர்ச்சுனன்; யோகியே! எப்போதும் பலவகை சிந்தனைகளில் ஈடுபட்டிருக்கும் நான் உங்களை எப்படி அறிந்து கொள்ள முடியும்?

பகவானே! எந்தக் கருத்து நிலைகளில் உங்களை சிந்தித்திருப்பேன்? ஜனார்த்தனா! நீங்கள் உங்களது திருநிறைச் செல்வமான விபூதி பற்றியும் ஆதார சக்தியான யோக நிலை பற்றியும் எனக்கு மறுபடியும் விரிவாக உபதேசித்தருளுங்கள்.உங்கள் அமுதமயமான வாக்குகளைக் கேட்டு எனக்கு திருப்தி ஏற்படுவதாய் இல்லை.

பகவான்: அப்படியே ஆகட்டும் அர்ச்சுனா! என் திவ்விய விபூதிகளைஉனக்குச் சுருக்கமாக சொல்கிறேன்.குருகுலச்செல்வனே! என் விபூதிகளின் பரந்து விரிந்து நிறைந்திருக்கும்.நிலைக்கு எல்லையே இல்லை.அவைகளின் பிரபாவங்களிர்கு முடிவும் இல்லை.

அர்ச்சுனன்:பரம்பொருளே! உங்களது திவ்விய விபூதி எவை? எவ்விதமானவை?
கண்ணன்: சிறந்த பக்தனே!எல்லாப் பிராணிகளின் முதலிலும்,நடுவிலும் ,முடிவிலும் நான் தான் இருக்கிறேன்.மேலும் பிராணிகளின் அந்தக் கரணத்தில் ஆத்மா ரூபமாகவும் நான் தான் இருக்கிறேன்.அதிதிதேவியின் புத்திரரில் விஷ்ணுவாகவும்( வாமனர்) ஒளிபடைத்த பொருட்களில் கதிரவனாகவும்,மருத்துக்களில் தேஜாஸாகவும், நட்சத்திரங்களின் அதிபதியான சந்திரனாகவும் நான் விளங்குகிறேன்.வேதங்களில் நான் சாமவேதம், தேவதைகளில் நான் இந்திரன் இந்திரியங்களில் மனம்,பிராணிகளில் சைதனியம் ( பிராணசக்தி)நானே.ருத்திரர்களில் நான் சங்கரராகவும்,யசஷராசஷகர்களில் குபேரனாகவும்,வசுக்களில் அக்கினியாகவும்,பல உரிய சிகரங்களைக் கொன்ட மாமலைகளுள் மேரு இமயமலை பர்வதமாகவும் நான் இருக்கிறேன்.பார்த்தனே! வைதீக தர்ம அநுட்டானங்களை நடத்தி வைக்கும் புனிதர்களான புரோகிதர்களுள் பிருஹஸ்பதி என் சொரூபம் தான் என்பதை உணர்ந்துகொள்.

அர்ச்சுனன்:கண்ணா! மேலும் உங்களுக்கு என்னென்ன விபூதிகள் உள்ளன?

கண்ணன்: அர்ச்சுனா! சேனாதிபதிகளில் நான் ஸ்கந்த தேவன் ( முருகன்)நீர் நிலைகளுள்)நான் சமுத்திரம்,மகரிஷிகளில் நான் பிருகு,வாக்குகளுள் ஓங்காரம் எனும் பிரணவம், யக்ஞங்களுள் ஜபக்ஞம் நிலையாய பொருள்களுள் இமயமலை ,மரங்களில் அரசமரம்.தேவ ரிஷிகளுள் நாரதர்,கந்தர்வர்களுள்சித்திராதன்,சித்தர்களில் கபில முனிவர் நான் தான்.குதிரைகளில் உச்சை சிரவஸ் ( கடலி கடந்த போது அமிர்தத்துடன் வெளிவந்தது) யானைகளுக்குள் ஜராவதம்,மனிதர்களுக்குள் அரசன் நானே.இவர்கள் எல்லோரும் என் விபூதி சொரூபங்கள் என் அம்சங்கள்.

அர்ச்சுனன்:பகவானே! இன்னும் எவைகளையெல்லாம் உங்கள் விபூதிகளாக நான் அறிந்து கொள்வது?

கண்ணன்: அர்ச்சுனா! அஸ்திர ஸஸ்திர ஆயுதங்களில் நான் வச்சுராயுதம்,பசுக்களில் காமதேனு,அறநெறியுடன் இல்லறம் நடத்தி மக்கள் செல்வத்தைப்பெற உதவும் காமதேவன் நான்.சர்ப்பங்களில் வாசுகி, நாகங்களில் சேஷநாகம்,( ஆதிசேஷசன்) ,நீர்வாழ் பிராணிகளின் அதிபதியான வருணன்,பிதிருதிக்களில் அர்யமா,ஆட்சி புரிபவர்களில் யமதர்மராஜன்,தைத்திரியர்களில்பிரகலாதன் கணக்கிடுபவர்களில் காலதேவன்,மிருகங்களில் சிங்கம்,பறவைகளில் கருடன்,புனிதப்படுத்துபவர்களில் வாயு,வில்லாளிகளில் ராமபிரான்,நீர்வாழ் ஜந்துக்களில் முதலை,நதிகளில் புனிதகங்கை,இப்படி எல்லாவற்றிக்கும் தலைசிறந்த நிலையில் நான் தான் விளங்குகிறேன்.

அர்ச்சுனன்:பகவானே! மேலும் நீங்கள் எந்தப் பொருட்களில் தலை சிறந்து விளங்குகிறீர்கள்?

கண்ணன்: அர்ச்சுனா! எல்லச் சிருஷ்டி யுகங்களிலும் முதல் ,நடு முடிவு மூன்றிலும் நான் தான் இருக்கிறேன்.வித்தைகளில் அத்தியாத்மா வித்தையாகவும், சாஸ்திர விவாதம் செய்பவர்களிடையே தத்துவ நிர்ணயம் செய்ய உதவும் வாதமாகவும் இருக்கிறேன்.எழுத்துக்களுக்கெல்லாம் அகரமாகவும்,ஸாமாஸாங்களில் ( சொற்கூட்டுதொகைச்சொல்)துஅந்த ஸமாஸாமாகவும்( ஆதியந்தம், உடலுயிர் முதலிய இருசொற்கூட்டு) விளங்குகிறேன்.அழிவர்ற கலத்தின் மகாகாலமாகவும் எல்லாத்திசைகளிலும் முகங்களைக் கொண்ட பரிபாலன தேவனாகவும் தாதா எனும் ஆட்சியாளர்) நான் இருக்கிறேன்.

அர்ச்சுனன்: பரம்பொருளே! நீங்கள் எந்தெந்த உருவங்களில் இருக்கிறீர்கள்?

கண்ணன்: அர்ச்சுனா! எல்லாவற்றையும் பறித்துக்கொள்ளும் மரணமும் ,பிறவிக்கு காரணமான உற்பத்தியும் நான் தான்.பெண் இனத்தில் நான் கீர்த்தி( புகழ்) ஸ்ரீ(செல்வம்),வாக்கு ,ஸ்மிருதி,(நினைவு)மேதாவிலாசம், தைரியம்,மன்னித்தல் யாவும் நான் தான்.பாடத்தக்க சுருதி (வேத இசை)களில் சிறந்த சாமகானம்,வேதத்திலுள்ள சந்தங்களில் ( பாவினம்) காயத்திரி சந்தஸ் நான் தான்.பன்னிருமாதங்களில் மார்கழி மாதமாகவும் ஆறு பருவங்களில் வசந்த பருவமாகவும் இருக்கிறேன். ஏமாற்றும் பித்தலாட்டங்களில் சூதாட்டம்,ஒளிபடைத்த தேஜஸ்விகளின் தேஜஸ்( ஒளி) நான்.வெல்பவர்களின் வெர்றி, உறுதி கொள்பவரின் தீர்மானம்.சாத்வீக இயல்பு உள்ளவர்களின் அடக்ககுணம் யாவும் நான் தான்.

அர்ச்சுனன்:பகவானே! மேலும் உங்களது சொரூபங்கள் என்ன?
கண்ணன்: அர்ச்சுனா! விருஷ்ணி வம்சத்தவர்களில் வாசுதேவனாகவும் பாண்டவர்களில் தனஞ்சயனாகவும் ( அர்ச்சுனன் எனும் நீ) முனிவர்களில் வேதவியாசராக கவிகளில் சுக்கராச்சாரியாராகவும் இருக்கிறேன்.அடக்கி ஆள்பவரின் தண்டிப்பு விதியாகவும்,வெற்றி விரும்புவர்களின் நீதிநெறியாகவும்,ரகசியக்கருத்துக்களின் மெளனமாகவும், ஞானவான்களின் ஞானமாகவும், நான் இருக்கிறேன்.இதற்கு மேலும் விபரிப்பானேன்? எல்லா உயிரினங்களுக்கும் மூலகாரணமான வித்தும் நான் தான்.அர்ச்சுனா!நான் இல்லாமல் சராசரம் ( அசையும் அசையாப்பொருள்) எதுவும் உயிர் வாழ முடியாது நான் தான் சர்வமும்.

அர்ச்சுனன்:பகவானே! உங்களுக்குள்ள எல்லா வைபவ ஜசுவரியங்களையும் ( விபூதிகளையும்) சொல்லிவிட்டீர்களா?
கண்ணன்: இல்லை வீரனே! என் திவ்வியத்தன்மையுள்ள ( தெய்வாம்சமான) விபூதிகளுக்கு முடிவேயில்லை.நான் உனக்கு இதுவரை சொன்னதெல்லாம் சுருக்கமான விளக்கம் தான் என்னாலேயே என் விபூதிகளை முழுவதுமாக சொல்ல இயலாது.

அர்ச்சுனன்: உங்களுடைய விபூதிகளை தெரிந்துகொள்ள சிறப்பான அடையாளம் எது?

கண்ணன்: அகில உலகிலும் ஜசுவரியம் (தெய்வாம்சம்) சார்பானவையோ, அழகும் பொழிவும் சார்ந்தவையோ, வலிமை பொருந்தியவையோ, அவையாவும் என்னுடைய தேஜஸ் கொண்ட ஒரு அம்சத்தால் ( சொரூபத்தால்) ஏற்பட்டவை என்பதை உனர்ந்து கொள்.அர்ச்சுனா! அகில உலகத்திலும் ( கோடிக்கணக்கான பிரமாண்டங்களிலும்)எனது ஏதாவது அம்சத்தின் மூலமாக வியாபித்திருக்கும் நான் இப்போது உன் எதிரில் உன் வேண்டுகோளை ஏற்று தேரோட்டியாக ஒருகையில் லகானும் மறுகையில்சாட்டையுமாக அமர்ந்திருகிறேன்.உன் விருப்பப்படி உன் உத்தரவை நிறைவேற்றுகிறேன்.இதற்கு மேலும் நீ அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?

11.விஸ்பருபம்

அர்ச்சுனன்: பகவானே! என்னிடம் பேரன்பும், பேரருளும் கொண்டு மிக்க ரகசியமான ஆன்மீக தத்துவத்தை ( எல்லாவற்றிக்கும் ஆதிமூலமாக நான் இருக்கிறேன் என்ற உங்கள் தத்துவத்தை) உபதேசித்தருளினீர்கள்.என் மதிமயக்கம் விலகியது.கண்ணபிரானே! உங்களிடமிருந்து எல்லா உயிரினங்களின் உற்பத்தியையும் பிரளயத்தைப் பற்றியும் அறிந்து கொண்டேன்.மேலும் உங்களுடைய அழிவற்ற ஒப்பற்ற மகத்துவ மகிமையையும் விரிவாகக் கேட்டு உணர்ந்தேன்.

கிருஷ்ண பரமாத்மாவே! நீங்கள் தான் எல்லாப் பொருள்களுக்கும் சகல ஜீவராசிகளுக்கும் தந்தை.பூசிக்கத்தக்க மகானும் நீங்களே.குருதேவர்களுக்கெல்லாம் அதிகுருவும் நீங்கள்.உங்க வைபவ மகிமை எல்லையற்றவை.பாதாளம் ,பூமி, வானம் இவ்வுலகங்களிலும் உங்களுக்கு நிகரானவர் கிடையாது.உங்களை எதிலும் எங்கும் எக்காலத்திலும் மிஞ்ச முடியாது.உங்களை சாஸ்டாங்கமாக வணங்கி போற்றத்தக்க ஈசனாகிய உமது அருளை வேண்டுகிறேன்.என் பிழைகளை பொறுத்தருளுங்கள்.பகவானே! மகன் செய்த பிழைகளை தந்தையும் , சிறிய நண்பனை பெரிய நண்பனும் மனைவியை கணவனும் எப்படி பெருந்தன்மையுடன் மன்னிக்கிறார்களோ, பொறுத்துக்கொள்கிறார்களோ,அதேபோல் என் தவறுகளையும் நீங்கள் பொறுத்தருள வேண்டும்.

கண்ணன்: அர்ச்சுனா! இப்போது நீ மேலும் என்ன அறிய விரும்புகிறாய்?

அர்ச்சுனன்: புருஷோத்மரே! நீங்கள் உங்களைப் பற்றி விபரித்தது எல்லாம் நிதரிசனமான உண்மைகள். பரமேஸ்வரா!நான் உங்களுடைய சர்வேஸ்வரா சொரூபத்தைத் தரிசிக்க விரும்புகிறேன்.உங்களுடைய ஒருஅம்சத்திலேயே அனந்த கோடி பிரமாண்டமும் பரவியுள்ளது.என்னால் உங்களுடைய பரமேஸ்வர சொரூபத்தை தரிசிக்க முடியுமானால் அருள் கூர்ந்து என் புறக் கண்களுக்கு தெரியுமாறு காட்சியளிக்க வேண்டுகிறேன்.

கண்ணன்: அர்ச்சுனா!உனக்கு தீவிர விருப்பம் இருக்குமானால் என் ஒரு சொரூபத்தை மட்டுமல்ல,பலப்பல திவ்விய சொரூபங்களையும் பார்.அவை ஆயிரக்கணக்கில் இருக்கும் , பலவைகளிலுமிருக்கும் பல வண்ணங்களிலும் இருக்கும்.பல ஆகிருதிகளில் இருக்கும்.

அர்ச்சுனன்: மேலும் என்னவெல்லாம் தரிசிப்பேன் பகவானே?

கண்ணன்: பரதவம்சத்து வீரப்புதல்வனே! நீ என்னுடைய சர்வேஸ்வர சொரூபத்தில் ( விஸ்வரூபம்) ஆதித்தியர்களையும் ,வசுக்களையும்.ருத்திரர்களையும் ,அசுவினி குமாரர்களையும்,மருத்துக்களையும் தரிசித்துக்கொள்.எந்த ரூபங்களை முன்பு நீ கண்டதில்லையோ அவைகளையெல்லாம் பார்த்துக் கொள்.பல வியக்கத்தக்க உருவங்களைப் பார்.

அர்ச்சுனன்: நான் எங்கே பார்ப்பேன் பகவானே?

கண்ணன்: உறக்கத்தையும் வென்ற வீரனே!என் இந்த சரீரத்தில் ஏதாவது ஓர் அம்சத்தில் சாரசங்கள்( அசையும் அசையா பொருள்கள்)நிறைந்த முழு உலகத்தையும் நீ இப்போது பார்.இதைத்தவிர மேலும் ஏதாவது பார்க்க விரும்பினால் அதையும் பார்.

( அர்ச்சுனன் சர்வேஸ்வர சொரூபத்தைத் தவிர போரில் எவர்தரப்பில் வெற்றி இடம்பெறும் என்பதையும் அறிய விரும்பியதால் அவனுக்குள்ள சந்தேகத்தையும் தன் விஷ்வரூப சொரூபத்தின் மூலம் போக்கவே வேறு ஏதாவது பார்க்க விரும்பினால் பார் என்று கூறினார்.)

அர்ச்சுனன்: கண்ணா! நீங்கள் அடிக்கடி நீ பார் என்று கூறுகின்கிறீர்கள்.எனக்கோ எதுவும் தென்படவில்லையே நான் எதைப் பார்ப்பேன்?

கண்ணன்: அர்ச்சுனா! நீ இந்தப் பெளதீகக் கண்ணால் என்நிலை எதையுமே பார்க்க முடியாது.நான் உனக்கு தெய்வாம்சம் பொருந்திய திவ்விய சச்சு( திவ்விய பார்வை)எனும் அகக் கண்ணை அளிக்கிறேன்.அதன் மூலம் நீ என் சர்வேஸ்வ வல்லமையைப் பார். என் பரம்பொருள் நிலையை உணர்ந்துகொள்.

மகாயோகேஸ்வரரான பகவான் கிருஷ்ண பரமாத்மா அர்ச்சுனனுக்கு தம் பரமேஸ்வர சொரூபத்தை ( விஸ்பரூப தரிசனத்தை) காண்பித்தருளினார்.

அந்த விஸ்வரூப தரிசனத்தில் அனேக திருமுகங்கள், கண்கள், அனேகவிதமான அற்புதக் காட்சிகள் பலப்பல திவ்வியாஅபரணங்கள்,நிறையக் கைகள்,அவைகளில் விதம் விதமான அஸ்திர சாஸ்திரங்கள் திவ்விய மாலைகள்,ஆடைகள் அணிந்திருக்கும் திருக்கோலம்,எல்லாத் திசைகளிலும் காட்சியளிக்கும் திவ்விய மங்கள திருவுருங்கள் இப்படிப்பட்ட அதிசயமான எல்லையற்ற திருகோலங்களைக் கொண்ட சர்வேஸ்வர சொரூபத்தை காட்டியிருக்கிறார்.இது விபரிக்க இயலாத விஸ்பரூபம்.

அர்ச்சுனன்: ஆகாசத்தில் ஆயிரக்கணக்கான சூரியர்கள் ஒரே சமயத்தில் உதயமானால் எப்படி இருக்கும்? அவையெல்லம் உச்சிப்பொழுதில் ஒரே சமயத்தில் பிரகாசிக்கும் போது எவ்வளவு ஓளி வெள்ளம் பரவும்?இவையெல்லாம் பரமாத்மாவின் விசுவரூபத்தில் எதிரில் மிகச்சொற்பம்?

அர்ச்சுனன் அந்த விசுவரூபத்தை நன்றாகப் பார்த்தான்.
அர்ச்சுனன் சர்வேஸ்வரனான் கிருஷ்ண பரமாத்மாவின் சரீரத்தினுடைய ஒரு பாகத்தில் உலகம் முழுவதையும் பற்பல பிரிவுகளுடன் கூடிய நிலையில் கண்டார்.

பகவானுடைய விஸ்வரூபத்தை தரிசித்ததும் அர்ச்சுனன் பேராச்சரியத்தில் திகைத்து போனார். அவருடைய உடல் சிலிர்த்துப் புளகாங்கிதமடைந்தது. அர்ச்சுனன் பரம பக்தர்.அவர் தலை குனிந்து இரு கரங்களையும் குவித்து வணங்கினார். உள்ளமுருகித் துதிக்கத் தொடங்கினார்.

அர்ச்சுனன்: சர்வேஸ்வரா! உங்களுடைய சரீரத்தில் எல்லாத் தேவதைகளையும் ,எல்லா பிராணிகளையும் கொண்ட பூத சமுதாயங்களையும் பார்க்கிறேன்.கூடவே தாமரை மலரில் வீற்றிருக்கும்பிரும்ம்மாவையும் ,கைலாசத்தில் காட்சியளிக்கும் சங்கரரையும் எல்லா மகரிஷிகளையும் உத்தமமான் சர்ப்பங்களையும் தரிசிக்கிறேன்.

விஸ்வரூபரே! விஸ்வேஸ்வரே! நான் உங்களைப் பல கைகளும் வயிறுகளும்,முகங்களும்,கண்களும் கொண்டவராகத் தரிசிக்கிறேன்.மேலும் எண்ணற்ற உருவங்களில் காண்கிறேன்.உங்களுடைய ஆரம்பம்,மத்தி,முடிவு எதையும் என்னால் பார்க்க முடியவில்லை.ஆனால் உங்கள் சென்னியில் மணிமகுடம்,கைகளில் சதங்கை சக்கரம் முதலான் பலவகை ஆயுதங்கள் முகத்தில் ஒளிவெள்ளம்,நாலா பக்கங்களிலும் ஜொலிக்கும் அக்கினிப்பிழம்புகள்! என் ஊனக்கண்ணால் சரியாகப் பார்க்கவும் முடியவில்லை.என் பார்வைக்கு அடங்கவும் இல்லை உங்கள் விசுவரூபம்.

உலக நாயகரே!நீங்கள் மேலான அழியாத அஷ்ர பிரும்மம்.நீங்கள் அகில உலகத்திற்கும் மூலாதாரம்.நீங்கள் சனாதனமான( சாசுவதமான) தர்மநெறிகளை ரட்சிக்கும் சனாதன புருஷர்.எங்கும் எல்லாமுமாக வியாபித்திருக்கிறீர்கள்.

( இவ்விதம் சஞ்சயனும் தான் கண்டவற்றை விபரமாக மகராஜா திருதாரஷடிரருக்கு எடுத்துரைத்தார்.)

கண்ணன்: அர்ச்சுனா! நீ பார்க்கிறாயா? அல்லது இப்படியெல்லாம் சிந்தித்து உணர்கிறாயா? 

அர்ச்சுனன்: பகவானே! நான் உங்களைத் தரிசித்துக் கொண்டு இருக்கிறேன்.ஆரம்பம்,நடு,முடிவு எதுவும் தெரியவில்லை.எல்லையற்ற மகிமை புலப்படுகிறது.கணக்கில்லாத கைகள்,சந்திர சூரியர்களைப்போல் பிரகாசிக்கும் கண்கள்,கொளுந்து விட்டெறியும் அக்கினி போன்ற முகங்கள் எல்லாவற்றையும் தரிசிக்கிறேன்.நீங்கள் உங்கள் தேஜஸினால் உலகம் முழுவதையும் இயக்கி வருவதையும் உணர்கிறேன்.உங்களைப் பல வடிவங்களில் தரிசிக்கிறேன்.

ஹே மகாத்மா சுவர்க்கத்திற்கும் பூமிக்கும் உள்ள இடைவெளியும் பத்துத்திசைகளும் ( நான்கு திக்குகள் நான்கு துணைத் திசைகள் ஆகாயம்,பாதாளம் ஆக பத்து திசைகள்) உங்களாலேயே நிரம்பியிருக்கின்றன,உங்களுடைய இந்த அற்புதமான உக்கிர விஸ்வரூபத்தை பார்த்து மூன்று உலகங்களும்( சுவர்க்கம், பூமி,பாதாளம்)நடுங்கி கொண்டிருக்கிறன. ஆகா! நான் முன்பு சொர்க்கலோகத்தில் பார்த்த தேவதைகள் உங்கள் திருமேனிக்குள் பிரவேசிப்பதைப் பார்க்கிறேன்.அவர்களில் பலரும் பயபக்தியுடன் கைகுவித்து வணங்கியபடி , உங்கள் திருநாமங்களை , குணங்களைத் துதித்துக் கொண்டே செல்லுகிறார்கள்.மகரிஷிகள் சித்த புருஷர்கள் கூட்டம் கூட்டமாக பொங்கும் மங்களம் எங்கும் தங்குக”! எனும் சுலோகங்களைக் கூறிக்கொண்டும், உங்களைத் துதித்துக்கொண்டும் காட்சியளிக்கிறார்கள்.

உருத்திரர், ஆதித்தியர், வசுக்கள்.ஸாத்தியகணர், விசுவதேவர்,அசிவனீ குமாரர்,மருத்கணர்,பிதரர் கந்தர்வர், யக்கூர்,அசுரர்,சித்தர் சமுதாயங்கள் உங்களையே பேராச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பரம்பொருளே! உங்களுடைய அதிசயமான விஸ்வரூபத்தைக் கண்டு எல்லாப் பிராணிகளும் நடுநடுங்கிப் போயிருக்கின்றன.அனேகம் முகங்கள்,கண்கள்,புஜங்கள்,தொடைகள்,கால்கள்,வயிறுகள்,பயங்கரமான் கோரைபற்கள் யாவும் கொண்ட விஸ்வரூபம் எவரைத்தான் பயப்படுத்தாது? நானும் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறேன்.

எங்கும் பரந்துள்ள திருமாலே! பல வண்ணங்கள் உள்ள வானம் வரையில் உயர்ந்தும் பரந்தும் இருக்கும் உங்களுடைய திருமுக மண்டலத்தையும், திவ்விய ஜொலிக்கிற மிகப் பெரிய நேத்திரங்களையும் மிகப் பிரகாசமான ரூபங்களையும் காணும் நான் பயத்தால் பரிதவிக்கிறேன்.நிம்மதியாக இருக்க முடியவில்லை பிரளய கால அக்கினிபோல ஜொலிக்கிறீர்கள்! பெரும் கோரைப் பற்கள் காரணமாக உங்கள் மாபெரும்முகங்கள் உரியினங்கள் முழுவதையுமே பயன்படுத்துகின்றன.தேவேசா! ஜகந்நிவாசா நீங்கள் மகிழ்ச்சியுடன் என் கண்கள் குளிர மனம்மகிழக் காட்சியளியுங்கள்.

பகவானே! எப்படி நதிகள் நீர்ப் பெருக்குகள் தாமாகவே கடலை நாடி பிரவகிக்கின்றனவோ, அதேபோல் இந்த மானிட உலகைச் சார்ந்த பீஷ்மர், துரோரணர் முதலான மாவீரர்கள் உங்களுடைய ஒளிமிக்க வாய்க்குள் நுழைந்து மறைகிறார்கள்.வீட்டில் பூச்சிகள் எப்படி மோக வசப்பட்டு எரியும் தீயை நாடி விரைந்து தம் அழிவைத் தாமே தேடிக் கொள்கின்றனவோ, அதேபோல் துரியோதனன் முதலானவர்கள் உங்களுடைய பயங்கரமான வாய்க்குள் வேகமாக புகுந்து ஓடுகிறார்கள்.நீங்களே எல்லோரையும் கபளீகரம் செய்கிறீர்கள் .மேலும் நான்கு புறமும் உள்ள எல்லோரையும் தொடர்ந்து விழுங்கி விடுகிறீர்கள்.மஹா விஷ்ணு தேவா! உன்களிடமிருந்து விளிப்படும் மிக உக்கிரமான ஒளிவெள்ளத்தின் வெம்மையால் இந்த உலகமே பரிதவிக்கிறது.

அர்ச்சுனன்: ஹே பரமதேவரே! உங்களை வணங்குகிறேன்.நீங்கள் மகிழ்சிப்பொலிவுடன் காட்சி அளியுங்கள்.ஆதிரூபமான உங்களுடைய இந்த விஸ்வரூபத்தில் தத்துவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறேன். இந்த பயங்கரமான உக்கிர சொரூபம் கொண்ட நீங்கள் யார்?

கண்ணன்: அர்ச்சுனா! எல்லா உலகங்களையும் நாசம் செய்வதற்காகவே வியாபித்திருக்கும் காலதேவன் நான்.

அர்ச்சுனன்: நீங்கள் இங்கு எதற்கு வந்திருக்கிறீர்கள்

கண்ணன்: இப்போது இந்த மனிதர்களை எல்லாம் சம்ஹாரம் செய்ய இங்கு வந்திருக்கிறேன்.

அர்ச்சுனன்: இங்கு உங்களிடமிருந்து எவராவது உயிர் தப்புவாரா?

கண்ணன்: இங்கு உனக்கு எதிர் தரப்பில் உன்னுடன் போராட நிற்கிறார்களே வீரர்கள்,அவர்கள் உன்னுடன் போராடாமல் ஒதுங்கினாலும் உயிர் பிழைக்கமாட்டார்கள்.இவர்கள் யாவரும் என்னால் முன்னதாகவே கொல்லப்பட்டுவிட்டார்கள்.நீ யுத்தம்புரிய ஆயத்தமாகு! போரிட்டு வெற்றி பெற்று புகழைத்தேடிக் கொள்! இந்தப் பகைவர்களை அழித்த பின் செல்வங்கள் செழித்திருக்கும் பேராசைப் பரிபாலித்துப் புகழை பெறு.

அர்ச்சுனன்: அப்படியானால் நான் எதற்கு யுத்தம் செய்ய வேண்டும்?

கண்ணன்: வலது இடது கையாலும் அம்பெய்து சாதனை புரியும் வீரனே!( ஸவ்யஸாசி) நீ இந்தப் போருக்கும் வெற்றிக்கும் துணைகாரணமாக இரு.அதுவே போதும்.

அர்ச்சுனன்: ஆனால் கண்ணபிரானே! பீஷ்மர்,துரோணர்,ஜெயத்திரதன், கர்ணன் முதலான மாவீரர்களை வெல்வது எப்படி?

கண்ணன்: பீஷ்மர் முதலான மாவீரர்களை நான் முன்பே கொன்றாகி விட்டது.என்னால் கொல்லப்பட்ட இம்மாவீரர்களை நீ கொல்.நீ அஞ்சாதே.போர் புரி.இந்தப் போரில் எல்லாச் சத்துருக்களையும் வெல்வாய்.

பகவான் கேசவனின் வாக்குகளைக் கேட்ட பின்பும் பயத்தால் நடுங்கியவாறே அர்ச்சுனன் இரு கைகளையும் குவித்து வணங்கி விட்டு குரல் தழு தழுக்க அவரைத் துதிக்கலானான்.

அர்ச்சுனன்: எல்லா உயிர்களுக்கும் உறைந்திருக்கும் அந்தர்யாமியான பகவானே! உங்களுடைய திருநாமங்களையும் திவ்விய மங்கள் குணங்களையும் துதித்துப் பாடுவதால் எல்லா உலகமும் மகிழ்ச்சியில் மலர்ந்திருக்கிறது.அநுராக உணர்வு பரவுகிறது.பக்தர்கள் உங்கள் திருநாமங்களையும் ,குணங்களையும் துதிப்பதைக் கேட்டதும் அரக்கர்கள் பயந்து நடுங்கி எல்லாத் திசைகளிலும் ஓடி ஒளிகிறார்கள்.சித்தர்கள் சென்னிசாய்த்து வணங்குகிறார்கள்.இதெல்லாம் நிகழ்வது முறைதான்.

கண்ணன்: இதெல்லாம் நிகழ்வது முறைதான் என்று எப்படி நினைக்கிறாய்?

அர்ச்சுனன்: காரணம்,நீங்கள் முடிவு இல்லாத மகத்துவங்களைக் கொண்டவர்.எல்லா தேவதைகளுக்கும் தலைவர், எல்லா தேவதைகளுக்கும்தலைவர்,எல்லா உலகங்களுக்கும் ஆதாரம் நீங்கள் தான்.நீங்கள் அசுர ( அழியாத)சொரூபம் ஸத், அஸத் இரண்டும் எல்லாமே நீங்கள் தான்.மாத்மாவான நீங்கள் எல்லாக் குருமார்களுக்கும் குருதேவர். பிரும்ம தேவரையும் படைத்தவர் நீங்கள்.இப்பேர்ப்பட்ட உங்களைச் சித்தர்களும் தேவர்களும் போற்றி வணங்காமல் எப்படி இருப்ப்பார்கள்? உபாசனைக்கு உரியவரே நீங்கள் தானே!
தெய்வங்களுக்கு முழுமுதற்கடவுள் நீங்கள். சராசரங்கள் நிறைந்த இந்த உலகத்திற்கெல்லாம் ஆதாரம் நீங்கள்.எல்லாவற்றையும் அறிந்தவரும் எவராலும் அறிய வேண்டியவரும் நீங்கள்தாம்.சகலருக்கும் புகலிடம் நீங்கள்.எங்கும் வியாபித்திருப்பதும் உங்கள் ரூபங்களே, சொரூபங்களே

பரமாத்மாவே! வாயு,யமராஜன்,அக்கினி, வருணன்,சந்திரன்,பிரஜாபதி,பிதாமகரான பிரும்மாவிற்கும் தந்தை நீங்கள்.ஆகையால் உங்களை ஆயிரமாயிரம் முறை வணங்குகிறேன்.உங்களுக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம்,நமஸ்காரம் சர்வேஸ்வரா! முன்பக்கம் வணங்குகிறேன் பின் பக்கம் இருந்து வணங்குகிறேன் எல்லா பக்கங்களிருந்தும் வணங்குகிறேன்.அனந்தவீர்ய! நீங்கள் எல்லையற்ற பரந்த பராக்கிரமத்தை உடையவர்கள்.எனவே நீங்கள் தான் எல்லா இடத்திலும் வியாபித்து இருக்கிறீர்கள்.ஆகையால் எல்லாமே நீங்கள் தான்.

பகவானே! உங்களுடைய அளப்பரிய மகிமைகளையும் சொரூபங்களையும் அறியாமல் நான் உங்களை சாதாரணமாக நண்பனாகவும்,மைத்துனராகவும், உறவினராகவும் கருதியிருந்தேன்.

இப்பாசபந்தம் என்னை அறியாமலேயே உங்களை ஹே கிருஷ்ணா!ஹே யாதவா! நண்பா!… என்றெல்லாம் கூறி அழைத்து வந்தேன்.மேலும் உங்களை இடையர் இனத்து நண்பன் என்கிற முறையில் பலர் முன்னிலையிலும் பரிகசித்தும் விமர்சித்தும் விளையாடியிருக்கிறேன்.எத்தனையோ தடவைகள் உங்களை மதிக்காமலும் இருந்திருக்கிறேன்.இதற்கெல்லாம் நான் இப்போது வருந்துகிறேன்.உங்களிடம் அடிபணிந்து மன்னிப்பு வேண்டுகிறேன்.

கண்ணன்: நல்லது தம்பி அர்ச்சுனா! இப்போது நீ என்ன விரும்புகிறாய்? உனக்கு என்ன வேண்டும்?

அர்ச்சுனன்: சர்வேஸ்வரா! உங்களுடைய அதி ஆச்சரியமாக ஒப்பற்ற இந்த விஸ்வரூப தரிசனத்தை கண்டு நான் அக மகிழ்கிறேன்.ஆனால் கூடவே மனதில் அச்சமும் சூழ்ந்திருக்கிறது .ஆகையால் என் பெருமானே! நீங்கள் மனம் குளிர்ந்து மகிழ்ச்சியுடன் எனக்கு காட்சி அளியுங்கள்.புருஷோத்மனான திருமாலின் திருவுருவத்துடன் தரிசனமளிக்க இறைஞ்சுகிறேன்.தலையில் கிரீடம் ,திருக்கரங்களில் கதை,சங்கு,சக்கரம்,பத்மம்,எனும் திருச்சின்னங்கள்,மந்தகாசம்,நீலமேக சியாமள வண்ணம்,பட்டுப்

பீதாம்பரம் இந்த திவ்விய திருக்கோலத்தில் உங்களை தரிசிக்கவே இப்போது விரும்புகிறேன்.ஆயிரம் ஆயிரம் கரங்கள் கொண்ட விஸ்வமூர்த்தியான என் பெருமானே! இதே சதுர்புக சொரூபத்தில் காட்சியளியுங்கள்.

பகவான்: அர்ச்சுனா! நான் உன் பக்திப்பரவசத்தால் மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன்.என் திற மகிமையால் உனக்கு இதுவரையில் எவரும் காணாத அபூர்வமான் விஸ்வரூப தரிசனத்தைக் காட்டினேன்.உனக்கு முன்னால் எவரும் இதை தரிசித்ததில்லை.நீ பாக்கியசாலி தான்.

அர்ச்சுனன்: சர்வேஸ்வரா! உங்களுடைய அளப்பரிய உருவும் பொலிவும் கொண்ட விஸ்வரூபத்தை மனிதன் எதன் உதவி கொண்டு தரிசிக்க முடியும்?

கண்ணன்: எந்த சாதனத்தின் உதவி கொண்டும் தரிசிக்க முடியாது.இந்த பூவுலகில் மனித சமுதயத்தில் என் அருள்பாலிப்பிற்கு பாத்திரமான் உன்னைப் போன்றவர்களைத் தவிர வேறு எவராலும் தரிசிக்கவே முடியாது.வேதம் பயின்றாலும், யாக யக்ஞ்ங்கள் செய்தாலும் தான தர்மங்கள் செய்தாலும் மிகக் கடினமான தவம் புரிந்தாலும் செயற்கரிய சாதனைகள் செய்தாலும் என் விஸ்வரூபத்தை தரிசிக்கும் பாக்கியம் கிட்டாது.

அர்ச்சுனன்: ஆனால் பகவானே! இப்போது உங்களது மிகப் பயங்கரமான் சொரூபத்தைக் கண்டு அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறேனே.நான் என்ன செய்வேன்?

கண்ணன்: தம்பி! இந்த மாபெரும் என் உக்கிர சொரூபத்தை கண்டு நீ பயப்படக்கூடாது. உன் மனதில் மோக மயக்கம், மூடத்தனம்,பேதமை எதுவும் கொள்ளக்கூடாது.இப்போது அச்சம் தவிர்த்து மகிழ்ச்சியுடன் மனநிறைவுடன் என் அதே சதுர்புச ரூபத்தை மறுபடியும் தரிசி.

இந்த சமயத்தில் பகவான் கிருஷ்ண பரமாத்மா அர்ச்சுனன் விரும்பியவாறே நான்கு கைகளுடன் திருமால் திருவுருவைக் காட்டினார்.பிறகு இரு கைகள் உள்ள அழகிய கண்ணபிரானாக காட்சியளித்தார்.பயந்திருந்த அர்ச்சுனனைத் தேற்றினார்.உற்சாகப்படுத்தினார்.

அர்ச்சுனன்: ஜனார்த்தனா! உங்களுடைய அழகிய மானிட ரூபத்தை தரிசித்து தன்னியானேன்.என் இயல்பான நிலையை இப்போது அடைந்திருக்கிறேன்.

கண்ணன்: அர்ச்சுனா! நீ இந்த மானிட உருவத்திற்கு முன்பு கண்டாயே என் மகா விஷ்ணு சொரூபத்தை, சதுர்ப்புச ரூபத்தை இதுவும் மிகவும் அரிதான தரிசனம் தான்.தேவதைகளும் கூட இதை தரிசிக்க ஏங்கிக் காத்திருக்கிறார்கள்.நீ என் விஸ்வரூபத்தை தரிசித்தாயே.அதை வேதங்கள் மூலமாகவோ, தவசித்திகள் மூலமாகவோ,தானதர்மங்கள் வழியாகவோ எதனாலும் தரிசிக்கமுடியாது.

அர்ச்சுனன்:  பகவானே! அப்படியானால் உங்களை எவ்விதம் தரிசிக்க முடியும்?

கண்ணன்: எதிரிகளை அழிக்க வல்ல அர்ச்சுனா! என் சதுர்புச சொரூபமான மகாவிஷ்ணு ரூபத்தை பரிசுத்தமான பக்தி மூலம் தான் தரிசிக்கமுடியும்.கூடவே தத்துவஞானம் பெற்று என்னை உணர்ந்து கொள்ளவும் முடியும் .என்னை அடையவும் முடியும்.

அர்ச்சுனன்: பகவானே! பரிசுத்தமான ( சஞ்சலமில்லாத) திடபக்தி எப்படியிருக்கும்?

கண்ணன்: பாண்டு புத்திரனே!எல்லாச் செயல்களையும் எனக்காகவே செய்ய வேண்டும்.என்னையே சிந்தித்தும் ,துதித்தும், பூசித்தும் இருக்க வேண்டும்.என்னிடம் மட்டுமே பக்தி செலுத்தி வாழவேண்டும்.எதிலும் ஆசாபாசம் கொள்ளக்கூடாது.எந்தப் பிராணியிடமும் பகைமை பராட்டலாகாது.உன்னைபோல இவ்வாறு பக்திப் புகழுடன் என்னையே புகலாகக் கொண்டு வாழும் பக்தன் என்னைப் பெறுகிறான்.நான் அந்த தூயபக்தனை ஆட் கொள்கிறேன்.

12.பக்தித் தொண்டு

அர்ச்சுனன்: பரமாத்மா! நீங்கள் இப்போது உபதேசித்தீர்களே! பலர் உங்களை சகுணசாகார( குணமும் உருவமுள்ள) சொரூபமாக ஏற்று ஈடுபட்டு உபாசிக்கிறார்கள்.வேறு பலர் உங்களுடைய அச்சர அவ்யத்த நிர்குண நிராகர( இயல்பும் உருவுமில்லாத) சொரூபமாக கருதி உபாசனை செய்கிறார்கள்.இவ்விருசாராரர்களில் எவை சிறந்தவர்?

பகவான்: அர்ச்சுனா! என்னிடத்திலே தன் மனத்தைச் செலுத்தி எப்போதும் இடையறாமல் என்னையே தியானித்து பக்தி சிரத்தையுடன் உபாசிக்கும் பக்தனைத்தான் நான் தலை சிறந்த உபாசனாகக் கருதுகிறேன்.

அர்ச்சுனன்: உங்களுடைய அவ்வியத்த ரூபத்தை( புலன்களுக்கு புலப்படாத சொரூபம்) உபாசிப்பவர்களை எப்படிக் கருதுகிறீர்கள்?

கண்ணன்: எல்லா இடங்களிலும் சமபுத்தி கொண்டவர்களும் ,உயிரினம் முழுவதும் நலமுடன் வாழவேண்டும் என்று விரும்புகிறவர்களும் அதற்காகவே பாடுபடுபவர்களுமான மனிதர்கள் தம் புலன்களை அடக்கி எல்லா இடங்களிலும் நிறைந்திருப்பவரும் , சிந்தனைக்கு அடங்காதவரும் அந்தர்யாமியும் ( கூடஸ்தர்)சஞ்சலமில்லாதவரும் குறிப்பிட்டு விளக்க இயலாதவரும் , திடசத்திய சொரூபராகவும் அழியாத -அட்சர ( ஓங்கார) சொரூபராகவும் வெளிப்படாதவருமான பரமதத்துவமான பகவானை உபாசிபபவர்களும் என்னை வந்தடைகிறார்கள்.

அர்ச்சுனன்: அப்படியானால் உங்களிடம் இடையறாது பக்தி செலுத்துபவர்கள் எப்படி தலை சிறந்தவர்கள் ஆவார்கள்?

கண்ணன்: அர்ச்சுனா எனது அவ்வியத்த ( புலப்படாத) சொரூபத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் அதையே திடசித்தமாக தீவிரமாக உபாசிக்கிறார்கள்.அவர்களுக்கு தம் சாதனையில் அதிக கஷ்டம் ஏற்படுகிறது.காரணம் தம் உடலின்பால் பற்றுதல் கொண்டுள்ள தேக அபிமானிகளுக்கு அவ்யக்த சொரூபத்தை வெற்றிகரமாக உபாசித்து பெறுவது மிகக் கடினமானது.ஆனால் எந்த பக்தர்கள் எல்லாச் செய்கைகளையும் என்னிடமே அர்பணித்துவிடு என்னிடம் முழு ஈடுபாடு கொண்டிருக்கிறார்களோ மேலும் ” தேவனே மற்றறியேன்”எனும் ஒரே முனைப்புடன் என்னையே சிந்தித்து உபாசித்து வருகிறார்களோ, அத்தகைய உத்தம பக்தர்களை நான் இந்த அழியும் உலகிலிருந்து விடுவித்து சாசுவத நிலைக்கு இட்டுச் செல்கிறேன்.

அர்ச்சுனன்: பகவானே! அத்தகைய உத்தம பக்தனாக நான் எப்படி ஆகமுடியும்

கண்ணன்: அர்ச்சுனா! நீ என்னிடம் மனத்தைச் செலுத்திக் கொண்டேயிரு.புத்தியையும் என்னைச் சார்ந்தே சிந்திக்கச் செய்.பிறகு நீ என்னுள் இருப்பதை உணர்வாய்.இதில் சந்தேகமேயில்லை.இம்மாதிரி நீ உன் மனதையும் புத்தியையும் என்னில் நிலைப்படுத்திவைக்க இயலாமல் போனால் அப்பியாச யோகம்( தீவிரமான பயிற்சி)மூலம் என்னை அடைய விரும்பு.இதுவும் உன்னால் இயலாது போனால் எனக்காகப் பணி புரிந்துவா.எனககாகவே எல்லாச் செயல்களையும் மேற்கொள்.என்னக்காகத் தொழில் புரிவது மூலமாகவும் நீ என்னைப் பெற முடியும்.உன்னால் இதுவும் இயலாது போனால் பக்தி யோகத்தைப் பின்பற்று. என்னிடமே தீவிரமாக திட ஈடுபாட்டுடன் பக்தி செலுத்து.மனம் புத்தி இரண்டையும் உன் வசத்தில் வைத்துக்கொள்.எல்லாச் செயல்களையும் எனக்காகவே செய்துஅவைகளின் பயன்களையும் எனக்கே அர்பணித்து விடு.

அர்ச்சுனன்: பகவானே!இந்த முறையில் கருமபலன்களையும் துறந்து விடுவது நான்காம் தரத்து ( தாழ்வான) வழியாகும் இல்லையா?

கண்ணன்: இல்லை அர்ச்சுனா! யோகம் ( சமத்துவ ஈடுபாடு) இல்லாத அப்பியாசத்தைவிட சாஸ்திரஞானம் சிறந்தது.யோகம் இல்லாத சாஸ்திர ஞானத்தைவிட தியானம் சிறந்தது.யோகம் இல்லாதது.தியானத்தைவிட கர்ம பலன்களைத் துறக்கும் தியாகம் மிகச் சிறந்தது ஏனெனில் தியாகத்தால் உடனடியாக பேரமைதி கிட்டுகிறது.

அர்ச்சுனன்: என்பெருமானே! முன் சொன்ன நான்கு வழிகளில்( சமத்துவ ஈடுபாடுள்ள பயிற்சி,சாஸ்திரஞானம், தியானம், தியாகம் எனும் சாதனங்கள்) ஏதாவது ஒன்றின் மூலமாக உங்களை அடைந்த சித்தரான பக்தரின் இலட்சணங்கள் எவை? அவர்களிடம் என்ன என்ன குணநலங்கள் உள்ளன?

கண்ணன்: அர்ச்சுனா! என்னைச் சேர்ந்த சித்தரான பக்தர் எந்தப் பிராணிகளிடமும் பகைமை பாராட்டமாட்டார்.எல்லா ஜீவராசிகளிடமும் அன்பும், பாசமும் ,கருணையும் கொண்டு இருப்பார்.தான், தனது எனும் செருக்கு இல்லாமல் இருப்பார்.பொறுமையும் மன்னிக்கும் குணமும் நிரம்பியவர்.இன்ப துன்பங்களில் சமபுத்தி கொண்டவர் எல்லாச் சூழ்நிலையிலும் எப்போதும் மனநிறைவும் மகிழ்ச்சியும் கொண்டிருப்பார். உடல், உள்ளம்,புலன்கள் தன்கட்டுப்பாட்டிற்குள்ளேயே வைத்திருப்பார்.மேலும் அவர் தன் புத்தி இரண்டையும் எனக்கே அர்ப்பணித்திருப்பார். அத்தகைய திடநிச்சயமுள்ள பரமபக்தர் எனக்கு மிகவும் பிரியமானவர்.

அர்ச்சுனன்:பகவானே! இன்னும் எவர்கள் எல்லாம் உங்களுக்குப் பிரியமானவர்கள்?

பகவானே: அர்ச்சுனா! எந்தப் பக்தர்களால் பிறருக்கு கோபதாபம் ஏற்படுவது இல்லையோ, எவரிடமும் பிறராலும் கோபதாபத்தை ஏற்படுத்தி விடமுடியாதோ, அத்தகைய பண்புமிக்க பக்தர் மகிழ்ச்சி, பொறாமை , பயம், உனர்ச்சிவேகம் ஆகியவையால் ஆட்கொள்ளப்பட முடியாதவர். இவர் எனக்கு மிகவும் பிரியமானவை.

அர்ச்சுனன்: பகவானே! இன்னும் உங்களுக்குப் பிரியமானவர்கள் மேலும் இருக்கிறார்களா?

கண்ணன்: அர்ச்சுனா! எவர் தமக்கென்று வாழாமல் எந்தப் பொருளையும் மனிதரையும் தமக்குத் தேவையென்றும் கொள்ளாமல் இருக்கிறாரோ, எவர் உள்ளும்புறமும் பரிசுத்தமாக இருக்கிறாரோ,எவர் திறமைசாலியோ, அதாவது மனித சரீரம் பெற்றதன் நோக்கமாக பகவானை அடையும் வழியில் செயலாற்றி வருகிறரோ,எவர் உலகியல் அநுபவங்களிலிருந்து ஒதுங்கி இருக்கிறாரோ,எவருடைய உள்ளத்தில் உணர்ச்சிக் கொந்தளிப்பு இடம்பெறாதோ, எவர் சுகபோம் சேமிப்பு உத்தம பக்தர் எனக்குப் பிரியமானவர்.

அர்ச்சுனன்: பகவானே! இன்னும் இந்த வரிசையில் மேலும் எவர்கள் இடம்பெறுகிறார்கள்?

கண்ணன்: அர்ச்சுனா!எவர் தமக்கு நலன் ஏற்பட்டதும் மகிழ்ச்சி கொள்ளாமலும் தீங்கு ஏற்படும்போது வெறுப்படையாமலும் இருக்கிறாரோ, எவர் துன்பம் ஏற்படும்போது வருந்தாமலும், இன்பமளிக்கும் நிலைகளை விரும்பாமலும் வாழ்கிறாரோ, இதேபோல் சுபம்,அசுபம் இவ்விரு காரியங்களிலும் விருப்பு – வெறுப்பு கொள்ளாமல் தியாக உணர்வுடன் இருக்கிறாரோ அத்தகைய நடுநிலையில் வாழும் பண்பட்ட பக்தர் எனக்குப் பிரியமானவர்.

அர்ச்சுனன்: இதற்கு மேலும் உங்களுக்கு பிரியமானவர்கள் இருக்கிறார்கள்

கண்ணன்: ஆம் அர்ச்சுனா! எவர் பகைவன் -நண்பன், மானம்-அவமானம், ( புகழ்ச்சி-இகழ்ச்சி)அநுகூலம்- பிரதிகூலம் ( நன்மை- தீமை) சுகம்- துக்கம்( இன்பம்- துன்பம்)இவைகளில் சமபுத்தி கொண்டிருக்கிறார்களோ(இரண்டையும் சமமாககருதி ஏற்கிறார்களோ) ,எவர் போற்றுதல்,தூற்றுதல் இரண்டையும் ஒன்றுபோல் கருதி ஏற்றுக் கொள்கிறார்களோ, எவர் சிந்தனைத் திறன்பெற்றவரோ, கிடைப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழ்கிறாரோ, எவர் உடல் எதிலும் பற்றுதல் கொள்ளாமல் இருக்கிறாரோ, எவருடைய புத்தி நிலை பெற்றதாகவுள்ளதோ அத்தகைய பக்தர்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள்.

( பகவான் இதுவரையில் ஜந்துவகை சித்தபக்தர்களின் இலட்சணங்களை விபரித்திருக்கிறார். இவர்களுடைய சுபாவங்கள்,சாதனைமுறைகள்தனித்தனியாக இருப்பதால் தனித்தனியாக கூறப்பட்டுள்ளன.சிலரிடம் சில தன்மைகள் கூடக்குறைய இருந்தாலும் தியாக பக்தி, திட பக்தி, இவ்ஜந்துவகை பக்தர்களுக்கும் பொதுவானவை.)

அர்ச்சுனன்: இதுவரையில் உங்களுக்கும் பிரியமான பக்த சிரேஸ்டர்களைப் பற்றி சொன்னீர்கள்.பகவானே! இவர்களில் உங்களுக்கு மிகவும் பிரியமானவர் யார் என்பதைச் சொல்லுங்கள்?

கண்ணன்: அர்ச்சுனா! எவர் என்னுடன் மிக்க ஈடுபாட்டுடன், பேரன்பு கொண்டு என்னையே போற்றிப் பணிந்து ஆராதித்து இருக்கிறார்களோ,இதுவரையில் கூறியுள்ள சித்த பக்தர்களின் இலக்கணங்களை விருப்பத்துடன் கடைப்பிடித்து வருகிறார்களோ,அத்தகைய தலைசிறந்த சாதனையாளரான பக்தசிரேஸ்டர்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள்.

13.இயற்கையும், அனுபவிப்பவனும் உணர்வும்

அர்ச்சுனன்: ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவே! உங்களுடைய ஸகுண -ஸாகரா சொரூபத்தை உபாசிப்பவர்கள் உங்களுக்கு மிகவும் பிரியமானவர்கள் என்பதை உனர்ந்து கொண்டேன்.ஆனால் உங்களுடைய நிர்குன – நிராகரா( குணமும் உருவும் இல்லாத) சொரூபத்தை உபாசிப்பவர்களை எப்படிக் கருதுகிறீர்கள்?
கண்ணன்: தம்பி! அத்தகைய சாதக உப்பாசகர்கள் விவேகிகள்.பகுத்தறிந்து முறையாகச் சிந்தித்தும் செயல்பட்டும் வாழ்பவர்கள்.

அர்ச்சுனன்: அத்தகைய விவேகம் எவருக்கு ஏற்படுகிறது?

கண்ணன்: சேஷ்த்திரம் சார்ந்ததாக ஏற்படும் அறிவு விவேகம் இதைப் பெற்றவன் சேஷ்த்திரக்ஞன்,அதாவது குந்தியின் மைந்தனே! கவனமாய்க் கேள்!இந்த உருவமான சரீரம் சேஷ்த்திரம் எனப்படும்.எந்த அறிவாளி இந்த உடலின் தன்மையை , தத்துவத்தை அறிந்து கொள்கிறானோ அவனைத்தான் சேஷ்திரக்ஞன்( சேஷ்த்திரம் எனும் சரீரத்தை அறிந்தவன்)என்பார்கள் அவனை ” சரீரி” ( உடலில் உறைபவன் ஜீவாத்மா) என்றும் கூறலாம்.

அர்ச்சுனன்: சேஷத்திரக்ஞனின் சொரூபம் என்ன?

கண்ணன்: பரத வம்சத்து வீரனே! எல்லா சேஷத்திரங்களிலும் சேஷத்திரங்ஞனாக நானே இருந்து வருகிறேன்.இந்த தத்துவத்தை நீ உணர்ந்து கொள்.
( இங்கு இவ்வாறு கூறுவதன் உட்கருத்து சரீரம் பிரகிருதியின் அம்சம். அதாவது இயற்கையின் பகுதி.ஆகையால் உடலைப் பற்றிக் கவலைப்படாதே.இதனிடம் ஆசை, பாசம் வைக்காதே.நீ என்னுடைய அம்சம். ஆதலால் நீ முற்றிலும் என்னையே சார்ந்திரு.

மற்றொரு கருத்து உடல் என்பது இயற்கையின் ( பிரகிருதியின்) மாறுபாடுஆன்மா என்பது இறைவனின் அம்சம்.ஆகையால் நான் எனது என்ற உடலுடன் கூடிய விவகாரங்களை விடுத்து முழுவதும் சச்சிதானந்த சொரூபமான இறைவனான என்னுடன் ஏற்பட்டுள்ள எப்பொழுதும் இயற்கையான நித்திய சம்பந்தத்தை ( ஸ்வதஸ்ஸித்த ஏக்தா நினைவில் கொள்).

அர்ச்சுனன்: இந்தக் தத்துவத்தை உணர்ந்து கொள்ளுவது என்பது என்ன பகவானே?

கண்ணன்: சேஷத்திரம் , சேஷத்திரக்ஞன் இருவருமே வேறுபட்டவர் .இதைச் சரியாக உணர்வது தான் ஞானம் சேஷ்த்திரம்( சரீரம்) உலகத்துடன் இணைந்தது.சேஷத்திரக்ஞன்( சரீரி) என்னுடன் இணைந்தது.இதைச் சரியாக உணர்ந்து கொள்ளுவது ஞானம் தான்.

அர்ச்சுனன்: சேஷத்திரம். சேஷத்திரக்ஞன் பற்றிய ஞானம் பெற எந்த விஷயங்களை அறிந்துகொள்வது அவசியமாகிறது?

கண்ணன்: ஆறு விஷயங்களை அறிந்து கொள்வது அவசியம்.சேஷத்திரங்கள் நான்கும் சேஷத்திரக்ஞன் பற்றி இரண்டும். சேஷத்திரம் எது? எத்தகையது?எந்த மாறுதலைக் கொண்டது? எதிலிருந்து பிறந்தது? சேஷதிரக்ஞன் எத்தகையவன்?என்ன பெருமை கொன்டவன் இதையெல்லாம் உனக்குச் சுருக்கமாகச் சொல்கிறேன்.

அர்ச்சுனன்: இது விரிவாக எங்கே விவரிக்கப்பட்டிருக்கிறது?

கண்ணன்: ரிஷிகளின் வாக்குகளும் வேத வாக்குகளும்,யுக்தி யுத்தமாயும் நிர்ணயம் செய்யப்பட்டதுமான பிரும்ம சூத்திரங்களும் இதை விரிவாகக் கூறியிருக்கின்றன.

அர்ச்சுனன்: இது விரிவாக எங்கே விவரிக்கப்பட்டிருக்கிறது?

கண்ணன்: ரிஷிகளின் வாக்குகளும் வேத வாக்குகளும் ,யுக்தி யுத்தமாயும் நிர்ணயம் செய்யப்பட்டதுமான பிரும்ம சூத்திரங்களும் இதை விரிவாகக் கூறியிருக்கின்றன ( அடிப்படையான இயற்கை) ஷமஷ்டி புத்தி,ஸமஷ்டி அகங்காரம் முதலான ஜம்போருள் பூதங்கள் பத்து புலன்கள் ( கர்மேந்திரியங்கள் 5, ஞானேந்திரியங்கள் 5) மனம், ஜம்புலன்களுக்கும் இலக்காகும் விஷயங்கள் ஆக மொத்தம் இருபத்து நான்கு தத்துவங்களைக் கொண்டது சேஷத்திரம்.

(மூலப்பிரகிருதி ,( இயற்கை) எல்லாவற்றிக்கும் தாய்,அந்த பிரகிருதியிலிருந்து புத்தி எனும் பெண் பிறந்தாள்.புத்தியிலிருந்து அகங்காரம் எனும் மகன் பிறந்தான்.அகங்காரத்தின் சந்ததிகள்-நிலம்.நீர்.தீ.காற்று, வானம் ஜம்பெரும் பூதங்கள் இவைகளில் இருந்து பத்து புலன்களும், ஒரு மனமும்,புலன்களின் இலக்குகளின் சப்தம்,ஸ்பரிசம், ரூபம், ரஸம், அந்தம் இவை ஜந்து புலன் இலக்குகள்.புலன்கள் மனம், மற்றும் புலன் இலக்குகள் இவைகளில் இருந்து எந்த ஒரு சந்ததியும் பிறக்கவில்லை.

அர்ச்சுனன்: இந்த சேஷத்திரம் என்ன மாறுதல்களைக் கொண்டது?

கண்ணன்: இச்சை , துவேஷம், சுகம் துக்கம் சரீரம் பிராணசக்தி,தாரண சக்தி( தாங்கும் ஜீவ சக்தி) இந்த ஏழு மாறுதல்களைக் கொண்டது சேஷத்திரம் இது சுருக்கமான விளக்கம்.

அர்ச்சுனன்:மாறுதல்களுடன் கூடிய இந்த சேஷத்திரம் தன்னிலும் வேறுபட்டதாக எப்படித் தோன்றுகிறது?

கண்ணன்: சேஷத்திரம் எனும் சரீரம் தன்னிலும் வேறுபட்ட “இது” எனும் குறியீட்டைப் பெற அல்லது வெளிப்படையாகப் புலப்பட இருபது சாதனங்களைப் பெற்றிருக்கிறது.அவையாவன:

1. தன்னுள் மேன்மை சார்ந்த கர்வம் இல்லாமை
2.
தன்னுள் செய்கைத் தன்மை இல்லாமை
3.
உடல் ,உள்ளம், வாக்கு எதனாலும் எவருக்கும் துன்பம் செய்யாமை.
4.
மன்னிக்கும் தன்மை

5.உடல் , மனம் , வாக்குகளில் எளிமை.

6. ஞானம் பெற குருவிடம் சென்று அவருக்கு தொண்டு புரிவது.
7.
உடலையும் , உள்ளுணர்வையும் தூய்மையுடன் வைத்துக்கொள்வது.
8.
தன் இலட்சியத்திலிருந்து பிறழாமல் திடமாகச் செயலாற்றுதல்.
9
மனதைக் கட்டுப்படுத்தி வைத்திருத்தல்.
10
புலன்களின் இலக்குகளான விஷயங்களுடன் ஒட்டுறவு கொள்ளாமல் வைராக்கியத்துடன் இருத்தல்.

11. நான் எனது செருக்கின்றி அகங்காரம் இல்லாமல் இருத்தல்.
12.
வைராக்கிய உணர்வு ( பற்றில்லாமை) பெற பிறப்பு , இறப்பு, முதுமை,வியாதிகள்-இவைகளில் கேடு காணுதல்
13.
எதிலும் பற்றுதலும் விருப்பமும் இல்லாதிருத்தல்.
14.
மனைவி, மக்கள், வீடு முதலியவைகளில் அளவுக்கு அதிகமாக பற்றில்லாதிருத்தல்
15.
அநுகூலம் -பிரதிகூலம் ஆகிய முரண்பட்ட விளைவுகள் ஏற்படும் போது சித்தத்தை சமநிலையில் வைத்திருப்பது.

16. என்னிடம் சஞ்சலமில்லாத தூய பக்தி கொண்டிருத்தல்,கூடவே உலகியல் வாழ்வில் பற்றற்று வாழ்தல்.
17.
ஏகாந்தமான ( தனி) இடத்தில் வசிக்கும் வழக்கத்தை மேற்கொள்ளல்.
18.
மக்கள் கூட்டத்தில் கலந்து உறவாடும் விருப்பமோ,ஆர்வமோ இல்லாதிருத்தல்.

19.பரமாத்மாவின் நிலைப்பாட்டை தினமும் இடைவிடாமல் சிந்தித்தல்.
20.
எல்லா இடங்களிலும் எல்லா ஜீவராசிகளிடமும் பரமாத்மாவையே பார்க்கவும் உணரவும் செய்தல்.

இந்த இருபது சாதனங்கள் ( கருவிகள்) மூலம் சரீரம் தனித்தன்மையுடன் தெரியவரும்.சர்ரிரத்தை இதுஎனும் உருகில் ( தன்னிலும் வேறுபட்டதாக) காண்பது தான் ஞானம்.இதற்கு மாறாக சரீரத்தைத் தன் சொரூபமாக பர்ர்ப்பது அக்ஞானம்.

அர்ச்சுனன்: பகவானே! இந்த ஞானத்திலிருந்து கிட்டும் தத்துவம் என்ன?

கண்ணன்: அறிய வேண்டிய தத்துவம் பரமாத்மா.இதை நான் விபரிக்கிறேன்.இதை அறிந்து கொள்ளுவதால் அமரத்துவ நிலை ஏற்படும்.

அர்ச்சுனன்: அறிய வேண்டிய அந்தக் தத்துவத்தின் சொரூபம் என்ன?

கண்ணன்: தொடக்கமும் முடிவும் இல்லாத பிரப்பிரமம் இது.அதை உள்ளது( ஸத்) என்றோ, அல்லது அல்லது( அஸத்) சொல்லமுடியாது.

(பரம்பொருளை உண்டு -இல்லை என்ற வார்தைகளால் விவரிக்க முடியாது.இல்லை எனும் உணர்வு இருந்து விட்டால் உண்டு என்னும் சொல்லை பயன்படுத்தவே முடியாது.ஆவனை இன்னை எனும் சொல்லாலும் விவரிக்கமுடியாது.ஏனெனில் இல்லாத பொருளில் ஆராய்ச்சியேஎழுதுவதில்லை.எனவே ஸத் ( உண்டு) என்ற சொல்லோ,அஸத்( இல்லை) என்ற சொல்லோ அவனை வவிரிக்கும் திறனற்றவை.அவன் உண்மையும் இன்மையும் கடந்தவன்.)

அர்ச்சுனன்: எனினும் அந்தத் தத்துவம் எத்தகையது?

கண்ணன்: அந்த பராமாத்ம தத்துவம் எல்லா இடங்களிலும் கைகள்,கால்களுடன் வியாபித்திருப்பது.மேலும் அதன் கால்கள்,தலைகள் ,முகங்கள்,காதுகள் எல்லா இடங்களிலும் பரவியிருக்கின்றன.எல்லாப் புலன்களுக்கும் அப்பாற்பட்டது.எல்லாப் புலன் விஷயங்களையும் பிரகாசப்படுத்துவது( வெளிப்படுத்துவது).அதற்கு எதிலும் பற்றுதல் இல்லை .ஆனால் உலகம் முழுவதையும் பேணி வளர்ப்பது.அதற்கு என்று தனிக்குணங்கள்( இயல்புகள்) இல்லை.ஆனால் குனங்களை ஆண்டு அனுபவிக்கும் திறன் பெற்றது.

அர்ச்சுனன்: ஒரே தத்துவத்தில் எதிர் எதிரான அடையாளங்கள்( இலக்கணங்கள்) எப்படி ஏற்பட்டன?

கண்ணன்: பல எதிரியான தன்மையான் ஒரே பரமாத்ம தத்துவத்தில் கலந்துள்ளன. அதனுள் எந்த எதிர் விளைவும் ஏற்படுவதில்லை.காரணம் அசை பொருள்.அசையாப்பொருள்( ஸ்தாவரம், ஜங்கமம்)எனும் எல்லாப் பிராணிகளின் வெளியிலேயும் உள்ளேயும் அதுதான் நிரம்பியுள்ளது. எல்லாப் பொருள்களாகவும், பிராணிகளாகவும்,அதுதான் விளங்குகிறது.
அதைத்தவிர வேறு எதுவும் இல்லை.மிகத் தொலைவிலும் அதுதான். மிக அருகாமையிலும் அதுதான்.

தூரமும் சமீபமும் மூன்று வகைப்படும் இடம்,காலம்,பொருள் சார்ந்தவை.வெகு தூரத்தில் மிக சமீபத்திலும் அதுதான் உள்ளது.காலம் சார்ந்த மூன்றுவகைகள்-முன்பு இன்று நாளை முக்காலங்களிலும் அது இருப்பது. பொருள் சார்ந்த மூன்று நிலைகள்பொருள்களுக்கு முன்பும் அதுதான் இருந்தது.பிறகும் அதுதான் இருக்கும் பொருள்களாகவும் அதுவே இருக்கும்.இந்த

சுலோகம் இந்த அத்தியாயத்தின் சாரம். இதன் பொருளை சரியாக உணர்ந்து சிந்தித்து வந்தால் மனிதன் உலகாயதக் காரியங்களில் உழன்று கொண்டிருந்தாலும் தனிமையில் செயல் துறந்திருந்தாலும் இக்கருத்தின் மூலம் விழிப்புணர்வு ( ஞானோதயம்) எளிதாக ஏற்படும்.

கண்ணன்: பரமாத்ம தத்துவம் மிக சூட்சுமாக இருப்பதால் அறிய இயலாது.அதாவது புலன்களுக்கும் உள்ளுணர்விற்கும் எட்டாதது.ஆகையால் அம் மேலான தக்துவத்தில் எதிடையான முரண்பாடுகள் கிடையாது.

அர்ச்சுனன்: இந்த முரண்பாடற்ற நிலைக்கு வேறு என்ன காரணம் பகவானே?

கண்ணன்: பரமாத்மா பிரிவு பேதங்கள் இல்லாதவர்.எனினும் அனேகம் பிரிவு பேதங்கள் கொண்ட பிராணிகளிலும் இடம் பெற்றிருப்பதால் பிரிவு பேதங்கள் கொண்டவர் போல் இருக்கிறார்.அப் பராமாத்மா தான் எல்லப் பிராணிகளையும் பொருள்களையும் உற்பத்தி செய்பவர்.உயிர் வளப்பவர், பாதுகாப்பவர்.முடிவில் அழிப்பவருங்கூட உற்பத்தி, வாழ வைத்தல் அழித்தல்( உற்பத்தி, ஸதிதி,பிரளயம்) இம்மூன்று நிலைகளும், செயல்களும் செய்பவரும் பரமாத்மாதான் அந்தப் பரம்பொருளை அறிந்து கொள்ளவேண்டும்.

அர்ச்சுனன்: பரமாத்மாவின் சொரூபம் என்ன?

கண்ணன்: ஜம்புலன்கள், மனம், புத்தி,முதலியவை மூலமாக எவ்வளவு உணர்வுகள்(ஞானம்) ஏற்படுகின்றனவோ,அவையாவும் பரமாத்மாவுடம் இருந்தே வெளிப்படுகின்றன.ஆகையால் அவர் எல்லா ஜோதிகளுக்கும் (ஞானம்) ஒளியூட்டும் ஜோதி,பிரகாசப்படுத்தும் பரமஜோதி அவரிடத்தில் அஞ்ஞானம் கிடையாது.ஞான சொரூபமும் அறிய வேண்டிய தத்துவமும் அவரே.சாதனங்களுக்கெல்லாம் தலையாய ஞானத்தின் மூலமாக அடையத் தகுந்தவரும் அவரே.எல்லா ஜீவராசிகளினிதயங்களிலும் அவர் குடி கொண்டிருக்கிறார்.

இந்த அத்தியாயத்தின் பதிமூன்றாம் சுலோகத்தில் விராட்(விசுவ)ரூபமும் இந்த சுலோகத்தில் ஜோதிசொரூபமான பரமாத்மாவும் விவரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அர்ச்சுனன்: இன்னும் எதையெல்லாம் நான் அறிய வேண்டும் அறிவதன் மகத்துவம் என்ன?

கண்ணன்: சேஷத்திரம்,ஞானம் அறியத்தக்கது-இம் மூன்றையும் முறையாக அறிந்து கொள்ளவேண்டும்.அவைகளைச் சுருக்கமாக நான் முன்பு உபதேசித்திருக்கிறேன்.இம்மூன்று தத்துவங்களையும் சரியாக அறிந்து கொள்ளும் என் பக்தன் என் தன்மையை அடைகிறான். அவனுக்கு என்னோடு இரண்டறக் கலந்துவிட்ட உணர்வு ஏற்படுகிறது.

அர்ச்சுனன்: அறியத்தக்க மூன்றையும் உணர்ந்து உங்களுடன் இரண்டறக் கலந்து ஒட்டுறவை உணருகிறான்.ஆனால் ஞான மார்க்கத்தில் செல்ல விரும்பும் சாதகன் என்ன அறிந்து கொள்ள வேண்டும்?

கண்ணன்: அத்தைகைய சாதனுக்கு இயற்கை( சேஷத்திரம்)புருஷன் ( சேஷத்திரக்ஞன்)இரண்டையும் தனித்தனியாக அறிவது அவசியம்.இவ்விரண்டுமே அனாதியானவை.

அர்ச்சுனன்: பிரகிருதி ( இயற்கை)யும் புருஷனும் அனாதியானவர் என்றால் இப்போது பரவியிருக்கும் குணங்களும் ( இயல்புகள், தன்மைகள்) மாறுதல்களும் எப்படி ஏற்பட்டன?

கண்ணன்: குணங்களும், மாறுதல்களும்( விகாரங்கள்)பிரகிருதி எனும் இயற்கையிலிருந்து ஏற்பட்டவை மேலும் காரியம்,காரணம்( கருவி)கர்திருத்வமம்( செய்பவரின் தன்மை)இம் மூன்றிலும் பிரகிருதிதான் காரணமாக இருக்கிறது.

அர்ச்சுனன்: சேஷத்திரக்ஞன் எனும் புருஷன் எதன் காரணாமாக அமைந்திருக்கிறான்?

கண்ணன்: புருஷன் சுக துக்கங்களை அனுபவிப்பதில் காரணமாக இருக்கிறான்.

அர்ச்சுனன்:புருஷன் சுக துக்கங்களை அநுபவிப்பதில் எப்போது காரணமாக அமைந்திருக்கிறான்?

கண்ணன்: பிரகிருதியில் இணைந்திருப்பதால் , அதனுடன் தன் தொடர்பை ஏற்பதால் புருஷன் குண இயல்புகளையும் அனுபவிக்கிறான்.குணங்களுடன் கூடியிருப்பதால் புருஷன் உயர்ந்தும் தாழ்ந்துமான இனங்களில் ( யோனிகள் எனும் பிறவிகளில் ) பிறக்கிறான்.

அர்ச்சுனன்:அந்தப் புருஷனின் சொரூபம் என்ன பகவானே?

கண்ணன்: பல சொரூபங்கள் பிரகிருதியின் செயலுருவத்தோடு ( காரிய சரீரம்) தொடர்பு வைத்திருப்பதால் ” உபதிருஷ்டா” என்றும் இயற்கையுடன் கூடச் சேர்ந்து இசைவு தருவதால் ” அநுமந்தா” என்றும் தன்மைப் பிரகிருதியைப் பராமரித்து வளர்ப்பவனாக கருதுவதால் “பர்த்தா” என்றும் பிரகிருதியுடன் கூட சுகதுக்கங்களை அநுபவிப்பதால் “போக்தா” என்றும் தன்னைப் பிரகிருதியின் தலைவனாக கருதுவதால் ” மகேசுவரர்” என்றும் அழைக்கப்படுகின்றான்.ஆனால் இந்தப் புருஷனின் மூல சொரூபம் பரமாத்மா.இவன் பல சரீரங்களில் குடி கொண்டிருந்தாலும் சரீர சம்பந்தமற்றவன்.-எந்த உடலோடும் ஒட்டுறவு இல்லாதவன்.எதிலும் கலக்காதவன்.

அர்ச்சுனன்: இவ்வாறு பிரகிருதியையும் புருஷனையும் ( இவர்களுடைய சொரூபங்கள்) அறிவதால் என்ன பயன் பகவானே?

கண்ணன்: இவ்வாறு பலவகை இயல்புகள் கொண்ட பிரகிருதியையும் இயல்புகளற்ற புருஷனையும் எந்த மனிதன் சரியாக உணர்ந்து கொள்ளுகிறானோ, அவன் சாஸ்திரங்களில் விதித்தவாறு உலகியல் பணிகளை மேற்கொண்டு கடமைகளை நிறைவேற்றி வருவான். அவனுக்கு மறுபிறவி கிடையாது. ஜனனம் மரணம் எனும் சம்சாரபந்தத்திலிருந்து விடுவிக்கப்படுகிறான்.

அர்ச்சுனன்: சேஷத்திரக்ஞன் எனப்படும் அப்புருஷனை( பராமாத்ம சொரூபத்தை)அறிந்து கொள்ள வேறு உபாயம் உள்ளதா பகவானே?

கண்ணன்: உள்ளது அர்ச்சுனா! பல மனிதர்கள் தியான யோகத்தாலும் ,பலர் ஸாங்கிய யோகத்தாலும்,பலர் கர்ம யோகம் மூலமகவும் தம்முள் தம் சொரூபத்தை ( பரமாத்ம தத்துவத்தை) அறிந்து கொள்கிறார்கள்.

அர்ச்சுனன்: பகவானே! இவைகளைவிட எளிதான ( உபாயம்) வழி ஏதாவது இருக்கிறதா?

கண்ணன்: இருக்கிறது. எந்த மனிதர் தியான யோகத்தையும் சாங்கிய யோகத்தையும் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார்களோஅவர்கள் ஜீவன் முக்தர்களான மஹா புருஷர்களின் கட்டளைப்படி வாழ்கிறார்கள்.அவர்களும் மரணத்தைக் கடக்கிறார்கள்.முக்தி பெறுகிறார்கள்.

அர்ச்சுனன்: அவர்கள் எப்படி மரணத்தைக் கடந்து முக்தி பெறுகிறார்கள்?

கண்ணன்: பரத வம்சத்து திலகமே! அசையும் பொருள்.அசையாப் பொருல்கள் யாவும் சேஷத்திரம்,சேஷத்திரக்ஞன் இருவரும் இணைந்தால் உற்பத்தியானவை.இதனால் சேஷத்திரத்துடன் கூட சேர்க்கைஅயை ஒப்புக் கொள்ளாதிருக்கும் போது அத்தகைய அறிவாளிகள் பிரவித்தளையை அகற்றிக் கொள்கிறார்கள்.ஜன்மம் மரணம் அவர்களைத் தொடர்வதில்லை.அந்த அறிவாளிகள் முக்தர்களாகிறார்கள்.

அர்ச்சுனன்: சேஷத்திரத்தின் சேர்க்கையிலிருந்து விடுபடுவதற்கு மனிதன் என்ன செய்ய வேண்டும்?

கண்ணன்:  இரு காரியங்களை மேற்கொள்ளவேண்டும்,தாமே உருவாகி நிலை பெற்ற பரமாத்மாவின் சம்பந்தத்தை அறிந்து கொள்ளுவது,பிரகிருதி( சரீரம்) சார்ந்த சம்பந்தத்தை விடுவித்துக் கொள்ளுவது ஏற்றத் தாழ்வும் மாறாட்டங்களும் உள்ள உலகியல் வாழ்வில் சம நிலையோடு ஈடுபட்டிருக்கின்றவர் பரமாத்மா.அழியும் பொருள்களில் அழியாத உருவில் இருப்பவர். சர்வ வல்லமைகளும் கொண்ட பரமேசுவரர்.இந்த தத்துவத்தை அறிபவர் தாம் ஞானி.இந்த ஞானிக்கு பரமாத்ம சொரூபம் தம்மிடம் இருப்பதை உணர முடியும் .எல்லாஇடங்களிலும் சமமான ரூபமாக நிறைந்திருக்கும் பரமாத்மாவுடன் ஒருமைப்பாடு ஏற்படுவதால் அழியும் உடலோடு ஒருமைப்பாடு ஏற்படுவதில்லை.பிரகு அந்த ஞானி தம்மை அழித்துக் கொள்ளுவதில்லை. அதாவது சரீரம் அழிந்தாலும் தாம் அழிந்து போவதாக எண்ணமாட்டார்.இதனால் அந்த ஞானி பரமகதியான பரமாத்ம நிலையை அடைகிறார்.

அர்ச்சுனன்: பகவானே!நீங்கள் பரமாத்மாவுடன் ( ஜீவாத்மாவுக்கு) ஏற்படும் சம்பந்த்த்தை அறிந்து கொள்ளுவது பற்றிச் சொன்னீர்கள்.இப்போது பிரகிருதி சம்பந்தத்தை ( உடலுடன் உள்ள தொடர்பை) விடுவித்துக் கொல்ளுவது எப்படி என்பதைச் சொல்லுங்கள்?

கண்ணன்: எல்லாச்செயல்களும் பிரகிருதி ( இயற்கை) வழியாகத்தான் ஏற்படுகின்றன.இந்த உண்மையை உணர்ந்து கொண்டுவிட்டால் எந்தச் செயலுக்கும் தான் காரணமில்லை என்பதை மனிதன் உணர்வான். மேலும் அந்த உணர்வுடன் அவன் எல்லாப் பிராணிகளின் தனித்தனியான தன்மைகளை ( உடல், உருவம்,செயல்,முதலியவைகளை) ஒரே பிருகிருதியில் அடங்கியவை என்பதையும் அவையாவும் பிரகிருதியில் இருந்து தான் உற்பத்தியானவை என்பதையும் உணிகிறான். அந்நிலையில் அவன் பிரும்மத்தை அடைகிறான்.பிறகு பிரகிருதியுடன் அவனுக்குத் தொடர்பு இருப்பதில்லை.

அர்ச்சுனன்: ஏன் அப்படி ஆகிறது கண்ணா?

கண்ணன்: குந்திதேவியின் புதல்வனே!மூல புருஷன் பிறப்பு இல்லாத அநாதி.எத்தன்மையும் இல்லாதவன் அழிவற்ற பரமாத்ம சொரூபம் இது சரீரத்தில் குடியிருந்தாலுமுண்மையில் சரீரத்தின் செயல்களுக்குக் கட்டுப்பட்டதல்ல.செவதும் இதுவல்ல.அதாவது செய்வதும் அநுபவிப்பதும் பரமாத்ம சொரூபமான மூல புருஷன் இல்லை.

அர்ச்சுனன்: புருஷன் பிரகிருதியுடன் கலக்காமல் எப்படி இருக்க முடிகிறது?

கண்ணன்: ஆகாசம் எல்லாவிடங்களிலும் பரந்து விரிந்து இருந்தாலும் மிக சூட்சுமமாகவும் இருக்கிறது.அது எந்தப் பொருள்களிலும் பிராணியிடத்திலும் ஒட்டிக் கொண்டிருப்பதில்லை. இதைப் போலவே மூல புருஷன் எல்லாவிடங்களிலும் நிறைந்திருந்தாலும் எந்த உடலிலும் சிறிதும் ஒட்டிக்கொண்டிருப்பதில்லை.

அர்ச்சுனன்: புருஷன் ஏன் கர்த்தாவாக (செய்பவனாக) இருப்பதில்லை?
கண்ணன்: பாரத வீரனே! சூரியன் எல்லா உலகையும் ஒளியுடன் விளங்க வைக்கிறான்.ஆனால் சூரியனிடம் பிறரால் ஒளிவீசச் செய்யும் தன்மை ஏற்படுவதில்லை.இதைப் போலவே சேஷத்திரக்ஞன்( புருஷன்)எல்லாவிடயங்களையும் ஒளிரச் செய்கிறான்.ஆனால் அவனிடம் ஒளிபரவச் செய்யும் ஆக்கத்திறன் எவராலும் ஏற்படுவதில்லை.அவன் பிரகாசம் மட்டுமே.ஒளிபடைத்தவன். ஒளியைப் படைப்பவனோ பிரர் மூலம் உருவாக்கச் செய்பவனோ அல்லன்.
இதே போல் ஞான ரூபமான கண்ணால் சேஷத்திரம். ஷத்திரக்ஞன் இருவருக்குமுள்ள வித்தியாசத்தை உணர்பவன் ஞானி.மேலும் பிரகிருதியிலிருந்தும் அதன் காரியத்திலிருந்தும் தன்னை வேறுபட்டவனாக சம்பந்தமில்லாதவனாக ஞானி உணர்கிறான். இத்தகைய ஞானிகள் பரமாத்மாவை அடைகிறார்கள் .இவர்கள் தம் ஞான யோகத்தால் பராத்ம நிலையைப் பெறுகிறார்கள்.

14.ஜட இயற்கையும் முக்குணங்கள்

பகவான்: அர்ச்சுனா!

ஞானங்களில் சிறந்த பரமஞானத்தை நான் உனக்கு மறுபடியும் போதிக்கிறேன் .இதை அறிந்ததால் எல்லாச் சிந்தனையாளர்களான ஞானிகள் பரம சித்தியை அடைந்திருக்கிறார்கள். எல்லா ஞானங்களிலும் தலை சிறந்த உத்தம ஞானம் இது.

அர்ச்சுனன்: உத்தம ஞானத்திற்கு மேலும் என்ன மகிமை பகவானே?

கண்ணன்: அந்த ஞானத்தின் மூலம் என்னுடைய தருமநிலையை அடைந்த மகான்கள் எனது மேலான தன்மையை அடைகிறார்கள். அவர்கள் மஷா சிருஷ்டி காலத்தில் பிறப்பதுமில்லை. மஹா பிரளய காலத்தில் வருந்துவதுமில்லை.அமரத்துவம் பெற்றவர்கள்.

அர்ச்சுனன்: மஷா சிருஷ்டி காலத்தில் பிராணிகள் எப்படிப் பிறக்கின்றன?
கண்ணன்: பரமவம்சத்தின் பெருமகனே! என் மூல பிரகிருதிதான் உற்பத்தி இடம். நான் அதில் உயிரை( ஜீவன், சேதனன்) கருவாக அமைக்கிறேன்.அதிலிருந்து எல்லாப் பிராணிகளும் உற்பத்தியாகின்றன.குந்தியின் மைந்தனே! வெவ்வேறு கருவறையிலிருந்து எவ்வளவு பிராணிகள் பிறக்கின்றனவோ,அவைகளின் உற்பத்தியில் தாயின் சொரூபமாகவும் ,தாயாகவும் என் மூல பிரகிருதி உள்ளது.விதை தூவும் பணியில் தந்தையின் இடத்தில் நான் இருக்கிறேன்.

(மகா சிருஷ்டியின் ஆரம்ப காலத்தில் ஜீவன்களுக்கு அவைகளின் குணம், செயல், இயல்புகளுக்கு ஏற்ப பிரகிருதியுடன் தொடர்பை ஏற்படுத்தி வைப்பதுதான் பகவானின் விதை தூவும் பணியாகும்)

அர்ச்சுனன்: பகவானே! நீங்கள் எல்லா ஜீவன்களுக்கும் பிதா, இருந்தாலும் அந்த ஜீவன்கள் சம்சார பந்தத்தில் ( பிறப்பு -இறப்பு எனும் தளையில்) ஏன் சிக்கி கொள்ளுகின்றன?
கண்ணன்: வீரத்திருமகனே! சத்துவம் ரஜஸ்,தமஸ், இம் மூன்று குணங்களும் பிரகிருதியில் இருந்து பிறக்கின்றன.ஆனால் இவைகளுடன் தொடர்பு கொள்ளுவதால் அழிவில்லாத ( ஆத்மாவை) தேகத்தில்( உடலில்) இவை சிக்க வைத்து விடுகின்றன.

அர்ச்சுனன்: சத்துவ குணத்தின் சொரூபம் என்ன?அது தேகியை (உடலுள் உறைபவனை) தேகத்துடன் எப்படிப் பந்தப்படுகிறது?

கண்ணன்: புனிதனான அர்ச்சுனா! அம் மூன்று குணங்களிலும் சத்துவ குணம் இயல்பாகவே நிர்மலமானது, மாறுதலற்றது,எங்கும் பிரகாசிப்பது,ஆனால் அது சுகம்,ஞானம் இரண்டிலும் உள்ள ஈடுபாட்டினால் தேகியை ஆத்மாவை தேகத்தினுள் கட்டுப்பட வைக்கிறது.

அர்ச்சுனன்: ரஜோ குணத்தின் சொரூபம் என்ன? அது தேகியை தேகத்திலும் எப்படிக் கட்டுப்படுத்துகிறது?

கண்ணன்: குந்தியின் மைந்தனே! ஆசையையும் பற்றுதலையும் ஏற்படுத்தும் ரஜோ குணத்தைத் தீவிர விருப்பின் சொரூபம் என்பதை உணர்ந்து கொள்.அது கருமங்களில் ஏற்படும் ஈடுபாட்டினால் தேகியை ஆத்துமாவை தேகத்தினுள் கட்டுப்படுத்தி வைக்கிறது.

அர்ச்சுனன்: தமோ குணத்தின் சொரூபம் என்ன? அது தேகியை எப்படிக் கட்டுப்படுத்துகிறது?

கண்ணன்: தமோ குணம் அக்ஞானத்திலிருந்து ஏற்படுகிறது.எல்லாப் பிராணிகளையும் மதிமயங்க வைக்கிறது.அது அறியாமை, பேதமை, சோம்பல், தூக்கம் மூலமாக தேகியை ஆத்துமா அவை தேகத்தில் கட்டுப்படுத்தி வைக்கிறது.

அர்ச்சுனன்: பகவானே! கட்டுபாட்டிற்கு முன்னதாக அம்முக்குணங்களும் என்ன செய்கின்றன?

கண்ணன்: பரதவம்சத்து பெருமானே!சத்துவ குணம் சுகபோகத்தில் ஈடுபடுத்தி மனிதனிடம் தன் அதிகாரத்தைக் காட்டுகிறது.ரஜோ குணம் கருமத்தில் ஈடுபடுத்தி தன் உரிமையை மனிதரிடம் நிலை நாட்டுகிறது.தமோ குணமோ ஞானத்தை மறத்து தவறு இழைக்கும் பேதமையில் ஈடுபடுத்தி மனிதனை ஆட்கொண்டு விடுகிறது. தாழ்வுக்கு கீழ்நிலைக்கு தள்ளி விடுகிறது.

அர்ச்சுனன்: பகவானே! இம் மூன்று குணங்களிலும் ஒவ்வொன்றுக்கும் எப்படி மனிதர்டம் தன் ஆதிக்கத்தைச் செலுத்துகிறது? வலுவடைகிறது?

கண்ணன்:  பரமவம்சத்து வீரனே! ரஜோ குணத்தையும் தமோ குணத்தையும் அழுத்தி விட்டு சத்துவ குணம் வளர்கிறது.சத்துவ குணத்தையும் தமோ குணத்தையும் அழுத்தி விட்டு ரஜோ குணம் வளர்கிறது.இதேபோல் சத்துவ குணத்தையும் , ரஜோ குணத்தையும் அழுத்தி விட்டு தமோ குணம் மேலே எழும்புகிறது.

அர்ச்சுனன்:மேம்பட்டு எழும்பும் சத்துவகுணத்தின் இலட்சணங்கள் எவை?

கண்ணன்:எப்போது இந்த மனித சரீரத்தில் எல்லாப் புலன்களிலும் அந்தக்கணமெனும் உள்ளத்திலும் தூய்மையும் பகுத்தறிவும் வளர்கின்றனவோ, அந்நிலையில் சத்துவ குனப் வளர்வதை உனர்ந்துகொள்ள வேண்டும்.

அர்ச்சுனன்: வளரும் ரஜோ குணத்தின் இலட்சணங்கள் எவை பகவானே?

கண்ணன்: மனிதரின் அந்தக்கரணத்தில் ( உள்மனம்) பண ஆசையும், செயலாற்றும் முனைப்பும், சுக போகங்களுக்காகவும் சொத்துக்கள் சேர்க்கவும்.புதுப்புதுக் காரியங்களைத் தொடங்குவதும், மன அமைதி இன்மையும், தீவிர ஆசையும் எப்போது அதிகரிக்கின்றனவோ, அப்போது ரஜோ குணம் தலை தூக்குவதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

அர்ச்சுனன்: வளரும் தமோ குணத்தின் இலட்சங்கள் எவை?

கண்ணன்: எப்போது புலன்களிலும் அந்தக்கரணத்திலும் உணர்வுத் தூய்மை இல்லாதிருக்கிறதோ, எக்காரியத்தையும் முறையாகச் செய்ய மனம் ஈடுபடுவதில்லையோ, செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாமலும் செய்யக்கூடாத காரியத்தைச் செய்வதும் அதிகரிக்கிறதோ, உள் மனதில் மோக மயக்கம் பரவியுள்ளதோ, அப்போது தெரிந்து கொள்ளலாம்.தமோ குணம் மேலோங்கியுள்ளது.

அர்ச்சுனன்: இம்மூன்று குணங்களும் மாறி மாறித் தற்காலிகமாக மேலெழும் நிலையில் மனிதன் மரித்து விட்டால் , அவனுக்கு என்ன கதி கிடைக்கும்?

கண்ணன்: சத்துவ குணம் மேலோங்கியிருக்கும் போது மனிதன் மரித்தானானால் புன்ணியாத்மாக்கள் மட்டுமே எட்டத்தக்க நிர்மலமான உத்தம லோகங்களுக்குப் போய் சேருகிறான்.

ரஜோ குணம் மேலோங்கியிருக்கும் தருணத்தில் இறந்தால் மனித குலத்தின் மறு பிறவி பெறுகிறான்.
தமோ குணம் மிகுந்திருக்கும் நிலையில் மரித்தால் பிராணிகளாக மிருகம், பறவை முதலியவைகளாகப் பகுத்தறிவு இல்லாத இனத்தில் பிறக்கிறான்.

அர்ச்சுனன்: பகவானே! இந்தக் குணங்களால் இத்தகைய பிறவி நிலைகள் ஏன் ஏற்படுகின்றன?

கண்ணன்: காரணம் இதுதான். குணங்களின் ( இயல்புகள்) செயல் போக்கு எப்படி இருக்கினறன்வோ அதே போலத்தான் ( அவைகளுக்கு ஏற்ப) காரியங்களும் அமைகின்றன.ஆகையால் சாத்வீக குணத்தின் காரியங்களுக்கான பயன் தூயதாக இருக்கிறது.ராட்சத குணத்தின் பலன் துயரம், துன்பம் தாமஸ குணத்தின் பயன் அஞ்ஞானம், மடமை சாத்வீகம் முதலிய காரினனின் செயல்பாடுகளுக்கு ஏற்பதாக சாத்வீகம் முதலிய குணங்களின் செயல்பாடுகளுக்கு ஏற்பத்தான் சாத்வீகம் முதலிய காரியங்களின் பலனும் அமைகிறது.

அர்ச்சுனன்: விருத்தி எனும் செயல் போக்கு அல்லது செயட்பாட்டிற்கும் அதைச் சார்ந்த கர்ம ( காரியம்)விற்கும் அடிப்படையில் எது உள்ளது?

கண்ணன்: சத்துவம்,ரஜஸ், தமஸ், மூன்று குணங்களும் ( இயல்புகள்) சத்துவ குணத்திலிருந்து நல்லறிவு ( ஞானம்) ஏற்படுகிறது.ரஜோ குணத்திலிருந்து உலோபம் எனும் பேராசை ஏற்படுகிறது.தமோ குணத்திலிருந்து மதிமயக்கம், மோகம், அறியாமை தீயபழக்கம், குறைபாடு எல்லாம் ஏற்படுகின்றன.

அர்ச்சுனன்: இம்மூன்று குணங்களிலும் நிலைத்திருப்பவர்களின் இறுதி நிலை எத்தகையது?

கண்ணன்: சத்துவ குணத்தில் நிலையாக இருப்பவர்கள் சுவர்க்கம் முதலிய மேல் உலகங்களுக்குப் போகிறார்கள். ரஜோ குணத்தில் இருப்பவர்கள் மானுடவுலகில் பிறக்கிறார்கள். நிந்திக்கத்தக்க தமோகுணத்தில் இருப்பவர்கள் நரகம் முதலிய துன்பம் மிகுந்த உலகில் உழல்வார்கள்.

அர்ச்சுனன்: அப்படியானால் உங்களை எத்தகைய மனிதன் வந்தடைகிறான் பகவானே?

கண்ணன்:   செய்பவனின் குணமே செயலின் காரணமாக அமைகிறது.இதை அறிபவன் செயல், குணம் இவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டவானாக தன்னை உணர்ந்தவனாய் எனது ஸ்வரூபத்தையே அடைகிறான்.அவன் விவேகி. உடலை உருவாக்கும் சத்துவம் முதலிய முக்குணங்களையும் கடந்து பிறப்பு, இறப்பு, மூப்பு சார்ந்த துன்பங்களிலிருந்து விடுபட்டு அமரத்துவ நிலையை அநுபவிக்கிறான்.

அர்ச்சுனன்: சர்வேசா! முக்குணங்களையும் கடந்த மாமனிதர் எத்தகைய இலட்சணங்களைக் கொண்டிருப்பார்?

கண்ணன்: பாண்டுவின் செல்வனே! சத்துவ குணத்தின் போக்கு ஒளிமயமாகவும் ரஜோ குணத்தின் போக்கு காரியத்தில் ஈடுபாடாகவும்,தமோ குணத்தின் போக்கு மோகம் ( மதி மயக்கம்) ஆகவும் வெளிப்படும்போது அவைகளை அவ்விவேகி வெறுப்பதில்லை.வெளிப்படாதிருக்கும் போது இவைகளுக்காக ஆசைப்படுவதுமில்லை.இக் குணங்களிடம் விருப்பு வெறுப்பு இல்லாமல் இருப்பார்.இக் குணங்ககளால் பாதிக்கப்பட்டாலும் இருப்பார்.மேலும் குணங்களே தம்மை வெளிப்படுத்திக் கொண்டும் செயல்படுத்திக் கொண்டும் இருப்பதை உணர்கிறார்.தம் சொரூபத்திலேயே நிலைத்திருக்கிறார்.தாமாக எந்தச் செயலிலும் ஈடுபட இயலாது என்பதை உணர்ந்து அமைதியாக வாழ்கிறார்.

அர்ச்சுனன்: குணங்களைக் கடந்த மனிதரின் செயல்பாடுகள் எப்படி அமைகின்றன?

கண்ணன்:  அம் மாமனிதரின் நடவடிக்கைகள் சத்துவ நிலை கொண்டவை.திட சித்தம் கொண்ட அம்மனிதர் தம் சொரூபத்தில் எப்போதும் இருந்து வருகிறார்.அவருடைய சமநிலைப்போக்கு எல்லாவற்றிலும் நிரந்தரமாக இருப்பது.சுகத்திலும் , துக்கத்திலும் மண்கட்டியிலும் , தங்கக்கட்டியிலும் , உடல் பொறிகள் சார்ந்த விருப்பு வெறுப்புகளிலும், புகழ்ச்சியிலும், இகழ்ச்சியிலும், மதிப்பு அவமதிப்புகளிலும், பகைவர் நண்பர்களிடமும் சமநிலை பிறழாமல் இருப்பவர். அவர் ஆவல், ஆர்வம், ஈடுபடு கொன்டு எந்தப் புதிய காரியத்தையும் தொடங்குவதில்லை. இதனாலேயே அவர் குணங்களைக் கடந்தவர் என்று சொல்லப்படுகிறார்.

அர்ச்சுனன்:  குணங்களைக் கடந்து இருப்பதற்கு என்ன வழி கண்ணா?

கண்ணன்: எந்த மனிதன் திடமான பக்தி ஈடுபாட்டுடன் என்னைப் போற்றுகிறானோ, அவன் மூன்று குணங்களையும் கடந்து பிரும்மத்தை அடையும் தகுதியைப் பெறுகிறான்.

அர்ச்சுனன்: பகவேனே! உங்களிடம் திட பக்தி கொண்டிருப்பவன் பிரும்ம நிலையை எப்படி அடைய முடியும்?

கண்ணன்: தம்பி அர்ச்சுனா! பிரும்மம் அழிவற்ற அமுதமான நிலைகளுக்கும், சனாதன தர்மத்திற்கும், ஒப்பற்ற பரமானந்த சுகத்திற்கும் புகலிடம் நான் தான். இவையெல்லாமே என்னுடைய பெயர்கள், நிலைபாடுகள். பிரும்மத்தை அடைபவன் என்னை வந்தடைகிறான்.

15.புருஷோத்தம யோகம்

அர்ச்சுனன்: கிருஷ்ண பரமாத்மாவே! பிரும்மம் அழிவற்ற அமுதம் சனாதனதர்மம் முதலியவற்றின் ஆதாரம்( புகலிடம்) நீங்கள் தான்.ஆனால் இந்த உலகிற்கு ஆதாரம் யார்?

கிருஷ்ணர்: இந்த சம்சாரம் எனும் அகில உலகமும் ஒரு பெரிய ஆலமரம் போன்றது.அதற்கு ஆதாரம் , புகலிடம் வேர் எல்லாம் நான் தான்.அந்த மரம் மேல் நோக்கி வளர்ந்திருப்பது மூலப்பகுதி கீழ்நோக்கி இறங்கியிருப்பது கிளைப்பகுதி.நாளை பகல்வரையிலும் கூட ஸ்திரமாக இல்லாத காரணத்தால் இதை அசுவத்தவிருட்சம் என்கிறார்கள்.இதற்கு தொடக்கமும் முடிவும் இரண்டுமே அறியப்படாததாலும் இதை அவ்யயயம் ( குலைவு இல்லாதது) என்கிறார்கள்.வேதங்களில் கூறப்பட்டுள்ள விருப்புற்றுச் செய்யும் அநுஷ்டானங்களின் வர்ணனைகள் இந்த மகாவிருட்சத்தின் இலைகள் அத்தகைய சம்சார விருட்சத்தை எந்த ஞானி உள்ளதை உள்ளபடி உணர்கிறானோ அவனே உண்மையில் வேதங்களின் தத்துவத்தை உணர்ந்தவன் ஆகிறான்.

அர்ச்சுனன்: இந்த சம்சார விருட்சத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் வாசுதேவா?

கிருஷ்ணர்: இந்த சம்சார விருட்சத்தின் கிளைகள் சத்துவம்.ரசஸ், தமஸ் என்னும் முக்குணங்கள் மூலமாக வளர்ந்து கீழே, நடுவில் ,மேலே உல்ள உலகங்களில் பரவியிருக்கின்றன.ஒலி, உணர்வு,உருவம்,சுவை,மணம்( சத்தம்,ஸ்பரிசம், ரூபம் ரசம்,கந்தம்)என்னும் ஜ்ந்து விடயங்களும் அக்கிளைகளில் சிறுபிரிவுகளில் உள்ள தளிர்கள்.இவ்விடயங்களைப்பற்றி சிந்திப்பதே புதுப்புதுசிறு கிளைகளிலுள்ள தளிர்கள் வெளிப்படுவற்கு

காரணமாகிறது.ஆனால் இந்த மகா விருட்சத்தின் அடிப்பகுதியான மூலாதாரம் இந்த மனித உலகம் தான்(.பூலோகம்) ஏனெனில் இந்த மனித உலகில் செய்யப்படும் கருமங்களின் பலன் தான் மற்ற உலகங்களில் அநுபவிக்க முடிகிறது.

அர்ச்சுனன்: கண்ணா!இந்த மகாவிருட்சத்தின் சொரூபம் என்ன?அப்படியானால் இதனுடன் தொடர்பு இல்லாதிருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

கண்ணன்:அர்ச்சுனா!இந்த சம்சாரம் எனும் விருட்சத்தின் உண்மை போன்றதும், அழகானதும், சுகமானதுமான சொரூபம் மக்களுக்கு காணக்கிடைக்கிறது.இப்படிப் தோற்றம் அளிக்கும் சொரூபம் உண்மையாகவே உள்ளதா என்பதை சிந்தித்துப் பார்த்தால் கிடைப்பதில்லை.இதற்கு ஆதியோ, அந்தமோ நிலைப்பாடோ இல்லை.இந்த சம்சார விருட்சத்தின்வேர்ப்பகுதி மிகவும் வலுவானது.இதன் கிளைகள் ஓரினத்தன்மை .பந்தபாசம் தீவிர விருப்பம் முதலியவை. பற்றில்லாமை எனும் வாளின் துணைகொண்டு இம்மரத்தை வெட்டி ஒதுக்கி விட்டு, பரம்பொருளின் பரமபத நிலையை எட்ட வழிகாண வேண்டும்.

அர்ச்சுனன்:  வழி காண இயலாவிட்டால் மாற்று வழி என்ன பகவானே?

கண்ணன்:ஆதி முதல்வன் பரமாத்மா. அவரைத்தான் புகழடைய வேண்டும்.அவரை அடைந்த பிறகு மனிதன் திரும்பி உலகியல் வாழ்விற்கு வருவதில்லை.அவர் மூலமாகத்தான் அநாதி காலமாக ( ஆரம்பம் எது என்று அறிய இயலாத காலம்)இந்தப் படைப்புகள் பரவியுள்ளன.

அர்ச்சுனன்: பரமாத்மாவை சரணடைவதால் என்ன ஆகும் கண்ணா?

கண்ணன்; பரமமத்மாவை சரணடையும் மனிதர்கள் தன்மானம் மோக மயக்கங்களிருந்து விடுபடுகிறார்கள். பிறபொருள்களில் பற்றுதல் இல்லாததால் அவர்களிடம் கர்வம், மமதை, முதலிய குற்றங்கள் இருப்பதில்லை.அவர்கள் எப்போதும் பகவானிடத்திலேயே நிலைத்திருக்கிறார்கள்.அவர்களுக்கு எதிலும் எந்தவிதமான ஆசாபாசமும் இருப்பதில்லை.மேலும் அவர்கள் சுகம், துக்கம் எனும் சிக்கல்களிலிருந்து விடுபட்டு அழியாத ( அமரத்துவ) நிலையை எட்டுகிறார்கள்.

அர்ச்சுனன்: பகவானே!அந்த அழியாத நிலை எப்படி?
கண்ணன்; சூரியன், சந்திரன், அக்கினியால் அந்த இருப்பிடத்தை பிரகாசப்படுத்த முடியாது.அங்கு சென்ற அடைந்த பின் மனிதன் திரும்பவும் பூவுலகத்திற்கு திரும்புவதில்லை.அம்மனிதனுக்கு மறுபிறவி கிடையாது. அதுதான் அழிவில்லாத பரமபதமெனும் மகோன்னதமான நிலை.

அர்ச்சுனன்: கன்ணா! அங்கு சென்றடைந்த மனிதர்கள் ( பரம பக்தர்கள்) ஏன் பூவுலகத்திற்கு திரும்புவதில்லை?

கண்ணன்; அர்ச்சனா! இந்த மானிட உடம்பில் ஜீவனமாக( உயிராக) குடிகொண்டிருக்கும் ஜீவாத்மா எக்காலத்திலும் என்னுடைய அம்சம் தான்.ஆகையால் பரமபதநிலையில் என்னிடம் வந்து சேர்ந்த பின் திரும்பவும் பெளதீக உலகிற்கு வருவதில்லை.ஆனால் இந்த ஜீவாத்மாக அறியாமையினால் ஒரு தவறு செய்து விடுகிறது இயற்கையின் ( பிரகிருதி)விளைவுகளான ஜம்புலன்கள் மனம் இவைகளின் செய்கைகள் எல்லவற்றையும் தன்னுடையவை என்றும்தன்னால் செய்யப்படுவை என்றும் எண்ண்ணிக் கொள்கிறது. இத்தவறின் காரணமாக ஜீவாத்மா சம்சாரக் கடலில் மறுபடியும் வந்து மூழ்கிப் போகிறது.

அர்ச்சுனன்: ஜம்புலன்கள் , மனம் முதலியவற்றை தம்முடையவை என்று கருதுவதால் என்ன ஆகிறது?

கண்ணன்; அர்ச்சுனா! காற்று எப்படி வாசனையுள்ள இடத்தில் இருந்து அதை எடுத்துச் செல்கிறதோ, எங்கும் பரப்புகிறதோ.அதேபோல் சரீரம் , புலன்கள் முதலியவற்ற்கு உரிமையாளனாக தன்னை எண்ணிக்கொண்டு இயங்கும் ஜீவாத்மா.அந்திம நிலையில் தன் உடலை திறக்கும் போது அவ்வுடலில் அதுவரையும் இருந்து வந்த மனத்தையும் இந்திரியங்களையும் ( புலன்கள்) எடுத்துக் கொண்டு வேறு உடலில் பிரவேசிக்கிறது.இவ்வாறாக அது இறந்தும் பிறந்தும் கொண்டு இவ்வுலக வாழ்வில் உழன்று கொண்டே இருக்கிறது.

அர்ச்சுனன்: பகவானே! ஜீவத்மா புதிய சரீரத்தில் புகலடைந்து என்ன செய்கிறது?

கண்ணன்; அர்ச்சுனா! அங்கு அது மனத்தின் உதவியுடன் காதுகள், சருமம்( தோல்) கண்கள், நாக்கு, மூக்கு, இவ்ஜந்து புலன்களின்மூலமாக சத்தம் ( ஒலி) பரிசம்( உணர்வு) ரூபம்( உருவம்) ரசம்( சுவை) கந்தம்( மணம்) என்னும் விடயங்களில் ( பொருள் சார்ந்த உணர்வு) விருப்பத்துடன் ஈடுபட்டு வருகிறது.

அர்ச்சுனன்:  பகவானே! விருப்பத்துடன் ஜம்புலன்களின் உணர்வுகளை அநுபவித்துக் கொண்டிருப்பதால் என்ன ஆகிறது?

கண்ணன்; குணங்களுடன் கூடப் பிறந்ததும் , இறந்ததும் சுகதுக்கங்களை அநுபவித்துக் கொண்டிருக்கிறபோதும் இந்த ஜீவாத்மா இயல்பாகவே எதிலும் ஒட்டாமல் இருந்து வருகிறது. இந்த உண்மையை பெளதீக சுகங்களில் ஈடுபட்டிருக்கும் மூட மனிதர்கள் அறிந்து கொள்வதில்லை.

அர்ச்சுனன்: அப்படியானால் எவர் தான் இந்த உண்மையை அறிந்து கொள்கிறார்கள்?

கண்ணன்; மெய்யறிவாகிய ஞானம் எனும் கண்களைப் பெற்ற விவேகிகளான மனிதர் உண்மையை அறிந்து கொள்கிறார்கள்.

அர்ச்சுனன்: அப்படியானால் எவர் தான் இந்த உண்மையை அறிந்து கொள்கிறார்கள்?

கண்ணன்; மெய்யறிவாகிய ஞானம் எனும் கண்களைப் பெற்ற விவேகிகளான மனிதர் உண்மையை அறிந்து கொள்கிறார்கள்.அர்ச்சுனா! எவர்கள் தம் அந்தக்கரணத்தை ( உள்மனதை) பரிசுத்தமாக்கிக் கொண்டிருகிறார்களோ தங்களுக்குள் எப்போதும் பெற்ற மகத்துவத்தை உணர்ந்திருக்கிறார்களோ அத்தகைய யோகிகள் தம்முள் உறைந்திருக்கும் ஆத்ம தத்துவத்தை நன்கு அறிகிறார்கள்.இதனால் இவர்களுடைய ஞானக்கண்கள் திறக்கின்றன.ஆனால் எவருடைய அந்தக் கருணம் பரிசுத்தமாக இல்லையோ, அத்தகைய விவேகமற்றவர்கள் எவ்வளவு முயன்றாலும் ஆத்மாவின் மகத்துவத்தை அறிய முடியாத அவர்களுடைய ஞானக்கண்களும் திறப்பதில்லை.

அர்ச்சுனன்: தனக்குத்தானே தன்னுள் உறைந்திருக்கும் தத்துவம் என்பது என்ன?

கண்ணன்; அர்ச்சுனா! நான் தான் சூரியனிடம் வந்து சேர்ந்த பேரோளி உலகம் முழுவதையும் பிரகாசப்படுத்துகிறது.இதே போல் சந்திரனிடமும் அக்கினியிடமும் உள்ள பேரொளி எங்கும் ஒளிர்கிறது.அந்தப் பேரோளி என்னுடையது தான் இதுதான் என்னுள் உறைந்திருக்கும் தத்துவம் இதன் கருத்து.சூரியன் , சந்திரன், தீ மூன்றிலும் நான் தான் பேரோளிச் சொரூபமாக இருந்து எல்லா உலகங்களையும் ஒளிமயமாக்குகிறேன்.எங்கும் பேரொளி பரப்பி வருகின்றன.

அர்ச்சுனன்: பகவேனே! நீங்கள் மேலும் என்னவெல்லாம் செய்கிறீர்கள்?

கண்ணன்; அர்ச்சுனா! நான் தான் பூவுலகில் பிரவேசித்து என் சக்தியால் எல்லா உயிரனங்களையும் வாழ வைக்கிறேன். மேலும் நான் தான் ரசமயமான சந்திரனாக உருவெடுத்து சகல மூலிகைகளையும் மற்றும் தாவரங்களையும் வளர்த்துச் செழிக்க வைக்கிறேன்.

அர்ச்சுனன்: மேலும் என்னவெல்லாம் செய்கிறீர்கள் சர்வேஸ்வரா?
கண்ணன்; அர்ச்சுனா! பிராணிகளின் உடலுள் உறைந்திருக்கும் நான் தான் பிராணன். அபானன் எனும் மூச்சுக் காற்றுக்களுடன் இணைந்த வைசுவாணரம் எனும் ஜடாராக்கினியாக இருந்து ராணிகள் புசிக்கும் நான்குவகை ( போஜ்யம்- சுவைத்துப்புசிக்கத்தக்க உணவு பேயம் -பருகத்தக்க உணவு சோஷ்யம் – உறிஞ்சி சுவைக்கும் உணவு லேகியம் நாக்கினால் நக்கி ஏற்று உட்கொள்ளும் உணவு)பண்டங்களைப் புசித்து சீரணிக்க வைக்கிறேன்.

அர்ச்சுனன்:  மேலும் தங்களிற்குரிய சிறப்பியல்கள் எவை பகவானே?
கண்ணன்; அர்ச்சுனா! நான் தான் எல்லாருடைய இதயத்திலும் குடி கொண்டிருகிறேன். என்னால் தான் நினைவாற்றால் , பகுத்தறிவு மயக்க நீக்கம் ( ஜயம் தெளிதல்) ஏற்படுகின்றன எல்ல வேதங்களின் மூலமாகவும் நான் தான் அறியத்தகுந்தவன்.வேதங்களின் தத்துவங்களை நிர்ணயம் செய்பவனும் நானே வேதங்களை அறிந்தவனும் நானே.

அர்ச்சுனன்: பகவானே! நீங்கள் எவருடைய இருதயத்தில் எழுந்தருளி இருக்கிறீர்களோ அவர்கள் யார்?

கண்ணன்: இந்த உலகில் சஷரர் அழிபவர்.அசஷரர் அழிவற்றவர் என இருவகைப் புருஷர்கள் உல்ளனர்.இவர்களுள் எல்லாப் பிராணிகளின் சரீரங்களும் அழியக் கூடியவை.அவற்றுள் இடம் பெற்றிருக்கும் அவர்களை இயக்கி வரும் ஜீவாத்மா அழிவற்றது.

அர்ச்சுனன்: பகவானே! சரர், அசுரர் இவ்விரு வகையினைத் தவிர வேறு வகையினரும் உள்ளனரா?

கண்ணன்:உள்ளனர். அவ்விருவரையும் தவிர உத்தம புருஷர் ஒருவர் இருக்கிறார்.அவர் தான் பரமாத்மா,பரம்பொருள்.அவர் தான் மூவுலகங்களையும் பாதுகாத்து பராமரித்து வருகிறார். அவர் அழிவற்றவர்.எல்லோருக்கும் தலைவரான ஈஸ்வரர்.

அர்ச்சுனன்:  உத்தம புருஷர் அந்நியமாக இருப்பவர்.ஆனால் நீங்கள் யார் பகவானே?

கண்ணன்: தம்பி அர்ச்சுனா! அந்த உத்தம புருஷன் நான் தான்.நான் சரம் எனும் அழிவு நிலையை கடந்தவன்.அசுரம் எனும் அழியா நிலையிலும் மேம்பட்டதான உத்தம புருஷன் நிலையிலும் நான் தான் இருக்கிறேன்.உத்தம புருஷன் நிலையில் நான் உலகில் பரமாத்மா என்று அழைக்கப்படுகிறேன்.மூவுலங்களையும் பாதுகாத்து பராமரிக்கும் பொறுப்பினை ஏற்றிருக்கும் அழிவற்ற ஈஸ்வரனும் நான் தான் இதனால் தான் உலகத்தின் மக்களாலும் வேதங்களாலும் நான் புருஷோத்மன் எனும் திருநாமத்தால் பிரபல்யம் அடைந்திருக்கிறேன்.

அர்ச்சுனன்: பகவானே! நீங்கள் புஷோத்தமன் எனும் திருநாமத்தால் பிரபல்யம் அடைந்திருப்பதால் மனிதருக்கு என்ன பயன்?

கண்ணன்: பரம வம்சத்து வீரனே! அர்ச்சுனா! மதிமயக்கம் இல்லாத உத்தம பக்தன் என்னை புருஷோத்தமன் என அறிந்து கொள்கிறான்.அதனால் அவன் எல்லாவற்றையும் அறிந்தவன் ஆகிறான். அவன் பெறுவதற்கென்று வேறு ஒன்றும் மிஞ்சுவதில்லை.என்னிடமே ஈடுபாடு கொன்டு போற்றி பரவசப்படுகிறான்.

அர்ச்சுனன்: பகவானே! அப்படியானால் மற்ற மனிதர்களும் ஏன் உங்களிடம் ஈடுபாடு கொண்டிருப்பதில்லை? போற்றிப் பூசித்து வாழ்வதில்லை?

கண்ணன்: அர்ச்சுனா! நான் இதுவரையிலும் உனக்கு உபதேசித்ததெல்லாம் மிகவும் ரகசியமான தெய்வ தத்துவங்கள் இதை அறிந்து கொண்டதன் மூலம் என் பக்தன் அறிய வேண்டியதை அறிந்தவனாகவும் செய்ய வேண்டியதை செய்பவனாகவும் அடைய வேண்டியவற்றை அடைந்தவனாக ஆகிறான்.

கீதாசாரம்
எது நடந்ததோ
அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ
அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ
அதுவும் நன்றாகவே நடக்கும்
உன்னுடையது எதை இழந்தாய்
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் ?
அதை நீ இழப்பதற்கு
எதை படைத்திருந்தாய்
அதை நீ வீணாக்குவற்கு
எதை நீ எடுத்துக்கொண்டாயோ
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது
எதை கொடுத்தாயோ
அது இங்கையே கொடுக்கப்பட்டது
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றவனுடையதாகிறது
மற்றொருநாள் அது வேறொருவருடையதாகிறது
இந்த மாற்றம் உலக நியதியாகும்

16.தெய்வீக மற்றும் அசுர இயல்புகள்

அர்ச்சுனன்: மிகவும் ரகசியமான் அந்தத் தத்துவங்களைஅறிந்துகொள்ள தகுதி கொண்டவர் யார்?

கண்ணன்: இறையருளும் செல்வமுள்ள பக்தன் அந்தத் தகுதியை கொண்டவனாகிறான்.
இறைவன்( தேவன்) பரமாத்மா இறைவனின் அருட்செல்வம் நற்குணம் இதைத்தான் இறையருட்செல்வம் (சம்பத்) என்பர்.இதன் மூலமாக பரமாத்மாவை அடைய முடியும்.

அர்ச்சுனன்: கண்ணா இறையருட் செல்வங்கள் பெற்றவனின் ( இலட்சணங்கள்)என்ன?

பகவான்: அர்ச்சுனா!

1. என்னிடமே திட நம்பிக்கையுடன் ஈடுபட்டு அச்சமின்றி வாழுதல்.
2.
அந்தக் கரணத்தில்( உள்மனதில்) என்னை அடைய வேண்டும் எனும் திடமான் தீவிர நிச்சயம் கொள்வது.
3.
என்னை தத்துவ விளக்கத்துடன் அறிவதற்கு ஒவ்வொரு சூழ்நிலையிலும் சமநிலையில் இருப்பது.
4.
சாத்வீக தானம் செய்வது.
5
ஐம்புலன்களையும் சுயகட்டுப்பாட்டில் வைத்திருத்தல்
6
தன் கடமைகளை முறையாக செய்து வருதல்.
7.
சாஸ்திரங்களின் தீர்ப்புகளை( சித்தாத்தங்களை) விழுமிய கருத்துகளாக கொன்டு சொந்த வாழ்வில் செயல்படுத்தல்.
8.
தன் கடமைகளைச் செய்து வரும்போது ஏற்படும் இன்னல் இடையூறுகளை மகிழ்ச்சியுடன் பொறுத்துக் கொள்வது.

9. உடலாலும் உள்ளத்தாலும் வாக்காலும் எளிமையாக வாழ்வது.
10.
உடல்,உள்ளம் வாக்குகளால் எந்தப் பிராணிக்கும் சிறிதளவாகிலும்துன்பம் தராது இருத்தல்

11. கண்டதையும் , கேட்டதையும் , அறிந்ததையும் உள்ளபடியே இனிய சொற்களால் சொல்வது.
12.
எவரிடமும் எதனிடமும் குரோதம் ( வெறுப்பேறிய வென்சினம்) கொள்ளாது இருத்தல் .எல்லாமே ஈஸ்வர சொரூபம் என்ற உணர்வுடன் பழகுதல்.

13. உலகியல் ஆசை அபிலாசைகளை துறப்பது.
14.
அந்தக் கரணத்தில் விருப்பு வெறுப்புகளால் எழும் கொந்தளிப்புகளை அடக்குவது
15.
கோள் பேசாதிருத்தல்.
16.
எல்லா உயிரினங்களிடத்திலும் இரக்கம் பரிவு கொண்டு பழகுதல்.
17.
உலகியல் பொருட்களில் பேராசை கொள்ளாது இருத்தல்.
18.
எந்நேரமும் மென்மையான இதயம் கொண்டிருத்தல்.
  19.
செய்யத்தகாததை செய்வதில் வெட்கப்படுதல்.
20
சபலசித்தம், அவசரப்படுதல் இரண்டும் இல்லாதிருத்தல்.

21. உடல், வாக்கு இரண்டிலும் செல்வாக்கும் பொலிவும் கொண்டிருத்தல்.
22.
தண்டனை அளிக்கும் அதிகாரம் , திறமை இருந்தாலும் குற்றவாளியின் குற்றத்தை மன்னித்தல்.
23.
எந்தச் சூழ்நிலையிலும் தைரியமும் பொறுமையும் கொண்டிருத்தல்.
24.
உடலை தூயதாக வைத்திருத்தல்.
25
பழிவாங்கும் உணர்ச்சி இல்லாதிருத்தல்.
26.
உயர்வு மனபன்மையும் செருக்கும் கொல்ளாது இருத்தல்.

பரதவம்சத்து வீரனே! இவையாவும் தெய்வீக சம்பத்து ( இறையருள் செல்வம்) பெற்ற மனிதனின் இலட்சணங்கள், இந்த இயல்புகளைக் கொண்டிருக்கும் மனிதன் தான் என்னிடம் பக்தி செலுத்த தகுதி பெற்றவன்.

இந்த இடத்தில் ஓர் சந்தேகம் எழும்.மேற்கூறிய இலட்சணங்கள் கொண்ட மனிதன் தான் ஆன்டவனிடம் பக்தி செலுத்த தக்கவர்கள்.மற்றவர்கள் அல்லர்.தீய இயல்புகள் கொண்டவர்கள் பக்தி புரியக் கூடாதா?பக்தி புரியலாம்.தீயமனிதன் மன்ம்திருந்தி ஆண்டவனை வழிபட்டு மேன்மையை பெற முயன்றால் அவனுக்கு நற்பலன் கிட்டும்.அவன் விரைவிலேயே அறநெறி சீலராக மாறுகிறான்.திருந்திய மேம்பட்ட அந்த மனிதரிடமும் இறையருள் செல்வம் இடம் பெறுகிறது. பகவத்கீதை அத்தியாயம் 9 சுலோகம் 30.3

அர்ச்சுனன்: பகவானே! தெய்வீக சம்பத்துக்கு அருகதையற்றவன் எவன்?

கண்ணன்: அசுரத்தன்மையுள்ள செல்வத்தைக் கொண்டவன்.( அசு என்றால் உயிர் . உயிர் நிலைகளிலேயே பற்றுக்கொண்டு வாழ்பவர்கள்.அவைகளை விரும்புவர்கள்”அசுரர்” எனப்படுவர்.உடலைப்பேணி உடல் இன்பத்திற்கககவே வாழ்ந்தும்
வாழ விரும்பியும் இந்த உடலே நான் தான் என்று கருதுபவர் அசுரர்.நான் இறக்க மாட்டேன்.எப்போதும் வாழ்ந்து மகிழவேண்டும்.சுகபோகங்களை அநுபவித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்.இந்த நினைப்பும் இதற்கான முனைப்பும்தான் அசுர சம்பத்து ( தீயசெல்வம்) எனப்படும்.

அர்ச்சுனன்: பகவானே! அசுரசம்பத்துக் கொண்டவனின் அடையாளங்கள் எவை?

பகவான்: அர்ச்சுனா!

1. வெளிப்பகட்டுடன் செயற்கைப் பெருமையை காட்டிக் கொள்ளுதல்.
2.
கர்வம் கொள்ளுதல் , பற்றுதல் கொண்டுள்ள பொருட்களை வைத்துக் கொண்டு செருக்குடன் பெருமைப்படுதல்.
3.
செருக்கடைய வைக்கும் பொருட்களிலும் கருத்துக்களிலும் ஈடுபட்டு பெருமிதம் கொள்ளுதல்.
4.
குரோதம் கொள்ளுதல்.
5.
மனம், வாக்கு செயல்களில் கடுமையும் கொடுமையும் கொள்ளாதிருத்தல்.
6.
நல்லது பொல்லாதது.உண்மை -பொய், கடமை -கடமையில்லாதது,செய்யத்தக்கது செய்யத்தகாததுமுதலியவற்றை பகுத்தறிந்து கொள்ளும் விவேகத்திற்கு மதிப்பு அளிக்காது இருத்தல்.

அர்ச்சுனா! இவைதான் அசுரசம்பத்தைப் பெற்ற மனிதருக்குள்ள அடையாளங்கள். இவர்கள் என்னிடம் பக்தி செலுத்த தகுதியற்றவர்கள்.

அர்ச்சுனன்: பகவானே! இந்த இறையருட் செல்வத்திற்கும் அசுர இயல்பிற்கும் ஏற்படும் இயல்புகள் என்ன?

கண்ணன்: அர்ச்சுனா! தெய்வீகச் செல்வம் பிறவிப் பெருந்தளைகளைப் போக்கி முத்தியெனும் வீடுவேறு அளிக்க வல்லது.அசுரசம்பத்து பந்தங்களை ஏற்படுத்தி ஜனன மரணச் சூழல்களில் சிக்க வைக்கிறது.எனவே இவற்றையிட்டு நீ கவலைபடாதே.நீ தெய்வீகச் செல்வத்தை பெற்றிருப்பவன்.

அர்ச்சுனன்: பகவானே! அசுரசம்பத்து எப்படி பந்தங்களில் சிக்க வைக்கிறது?

கண்ணன்: அர்ச்சுனா! இந்த உலகில் இருவகைப் பிராணிகளின் படைப்பு நிகழ்கிறது.தெய்வீக சிருஷ்டி , அசுரத்தனமான சிருஷ்டிதெய்வீக சம்பத்து பற்றி விளக்கமாக சொன்னேன்.இப்போது அசுரசம்பத்து அசுர இயல்பான செல்வம் பற்றி விரிவாக கேட்டுக் கொள்.அசுரசம்பத்துள்ளவர் எதில் ஈடுபடவேண்டும்.எதிலிருந்து விலகியிருக்க வேன்டும் எனும் முறையை அறிந்து கொள்வதில்லை.அவர்களிடம்தூய நடத்தைகளும் இருப்பதில்லை.அவர்கள் சத்தியத்தை கடைப்பிடிப்பதில்லை.

அர்ச்சுனன்: பகவானே! அசுரசம்பத்துக் கொன்ட மனிதரிடம் ஆசார அநுஷ்டானங்கள் முதலியவை ஏன் இருப்பதில்லை? அவைகளை அவர்கள் ஏன் கடைப்பிடிப்பதில்லை?

கண்ணன்: அர்ச்சுனா! அவர்களுடைய நோக்கமே விபரீதமானது.அவர்களுடைய கருத்து இந்த உலகம் பொய்.இதிலுள்ள சாஸ்திரம்,அற்நெறி,தர்மம் எதுவும் உண்மையில்லை.இந்த உலகில் தர்மம்,அதர்மம்,புண்ணியம்,பாவம் முதலியவற்றிற்கு சிறிதும் மதிப்புக் கிடையாது.இந்த உலகை படைத்தவன் கடவுள் இல்லை.ஆணும்பெண்ணும் ஒருவரையொருவர் விரும்பினார்கள்.அந்த இருபாலரின் சேர்க்கையால் இந்த மானிட சமூகமும் பிறந்தது.உலகம் உருவாகிற்று.ஆகையால் இந்த உலக உற்பத்திக்கு காரணம் காம இம்சைதான் .இதைதவிர வேறு எதுவும் எவருக்கும் காரணமில்லை.

அர்ச்சுனன்: பகவானே! அசுரசம்பத்துக் கொண்டவர்களின் செயல்கள் எவ்வாறு இருக்கின்றன?
கண்ணன்: அர்ச்சுனா! மேல்சொன்ன நாத்திக நோக்கை புகலடைந்த அவர்கள் தனது நித்திய அளிவற்ற சொருபமான ஆத்மாவை ஒப்புக்கொள்வதில்லை.அவர்களுடைய அறிவு கீழ்த்தரமாக உள்ளது.அவர்களுடைய செயல்கள் யாவும் அச்சமூட்டுபவை.உக்கிரமானவை..அவர்கள் இந்த உலகிற்கே எதிரிகள். இத்தகைய அசுரத்தன்மை கொண்டவர்களின் திறமை , வலிமை எல்லாம் பிறரை அழிப்பதற்காகவே ஏற்பட்டிருக்கிறது.

அர்ச்சுனன்: நாத்திக நோக்கைப் புகலடைந்த அசுரத்தன் மையர் என்ன செய்கிறார்கள்?

கண்ணன்: அவர்கள் எப்போதுமே நிறைவேறாத பேராசைகளுக்கு அடிமையாகிறார்கள். பகட்டு, செருக்கு, மமதைவெறி நிறைந்து செயல்படுகிறார்கள்.மிக மோசமான வழிமுறைகளை கடைப்பிடிக்கிறார்கள்.அவர்கள் மதிமயக்கம் காரணமாக பல தீய கருத்துகளைப் பிடிவாதமாக மேற்கொண்டு சமூகத்தைச் சீர்குலைந்து வருகிறார்கள்.

அர்ச்சுனன்: அவர்களின் கருத்துக்கள் எத்தகையவை பகவானே?

கண்ணன்:அர்ச்சுனா அவர்கள் மரண காலம் வரையும் தொடரும் பெரும் கவலைகளுக்கும் குழப்பங்களுக்கும் அடிமையாகிறார்கள்.பெளதீக பொருட்கள் சேகரிப்பதிலும் ,அவற்றைச் சேமிப்பதிலும் அவற்றால் அநுபவிப்பதிலுமே ஈடுபட்டிருப்பவர்கள்.உலகில் வாழ்வது , உண்டு உறங்கி சுகித்திருப்பதற்கே என்று தீர்மானிப்பத்ற்கு எல்லாமே இந்த சுயநல வாழ்க்கைதான் என்ற நிர்ணயத்துடன் அவர்கள் செயல்படுகிறார்கள்.

அர்ச்சுனன்: அவர்கள் எந்த நோக்கத்தை முன்னிட்டு செயல்படுகிறார்கள் பகவானே!

கண்ணன்: அர்ச்சுனா! ஏராளமான ஆசைகளில் சிக்கிய அவர்கள் கொடூரமான அசுரத்தன்மை கொண்டவர்கள்.காமம் குரோதம்,மதம் மாச்சரியம் முதலிய தீய இயல்புகளை சரணடைகிறார்கள்.சுகபோகம் தான் வாழ்க்கை என்று நம்பி அநியாய வழிகளில் பொருளீட்டுகிறார்கள் இதற்காக பலமுறைகேடுகளையே மேற்கொள்கிறார்கள்.

அர்ச்சுனன்: பகவானே! அவர்களுடைய இலட்சிய ஆசைகள் எத்தகையவை?

கண்ணன்: அர்ச்சுனா! இன்று இவ்வள்வு பண்ம் சம்பாதித்துவிட்டோம்.இனி இதைக்கொண்டு எம் மனோரதங்களை நிறைவேற்றிக்கொள்வோம்.இவ்வள்வு செல்வம் இப்போது இருப்பது இந்தளவு செல்வத்தை சம்பாதிக்க வேண்டும் என்று ஆசை கொள்கிறார்கள்.

அர்ச்சுனன்: அவர்களுக்கு மேலும் என்னவெல்லாம் ஆசைகள் ஏற்படுகின்றன?

கண்ணன்: அர்ச்சுனா! அவர்கள் இவ்வாறு சிந்திக்கிறார்கள்.அதாவது நாம் அந்த சத்துருவை அழித்துவிட்டோம்.இதேபோல் மற்ற எதிரிகளையும் அழிப்போம். நாம் சர்வ வல்லமை கொண்டவர்கள் .பல வெற்றிகளைக் கண்டவர்கள்.வலிமை மிகுந்தவர்கள்.சுகபோகிகள், செல்வந்தர்கள்,ஏராளமான மனிதர்கள் நம்மிடம் நம் தரப்பில் துணையிருக்கிறார்கள்.இங்கு நமக்கு நிகர் எவருமில்லை .எவரால் நம்மை எதிர்க்க முடியும்? நம் விருப்பப்படியே யக்ஞங்களைச் செய்வோம்.தான தர்மங்களைச் செய்வோம்.பிறகு ஆனந்தமாக கேளிக்கைகளில் மூழ்கி மகிழ்வோம்.இவ்வாறு எல்லாம் அறியாமையில் மதிமயங்கி மனேரதங்களை ( தனது தீவிர விருப்பங்களை)வளர்த்துக் கொள்கிறார்கள்.

அர்ச்சுனன்: பகவானே! இப்படியானவர்கள் இறந்த பிறகு எந்தக் கதியை அடைகிறார்கள்?

கண்ணன்: அர்ச்சுனா! பலதரப்பட்ட பிரமைகளிலும் பேதமைகளிலும் சிக்கிய நாத்தியர்கள் மோக வலைக்குள் கட்டுண்டு கிடக்கிறார்கள்.இதனாலேயே பொருள்களைச் சேகரிப்பதிலும் அநுபவிப்பதிலும் தீவிர விருப்புடன் ஈடுபட்டிருப்பதால் கொடிய பயங்கரமான நரகத்தில் விழுகிறார்கள்.

அர்ச்சுனன்: பகவானே! சுகபோகங்களில் விருப்புற்று வாழும் அந்த அசுர சொத்துக்காரர்களை அழிவுப் பாதையில் தள்ளும் இயல்புகள் தன்மைகள் எவை?

கண்ணன்: இவர்கள் தம்மையே மதிப்பு மிக்கவர்களாகவும் தாங்களே மேம்பட்டவர்களாகவும் கருதுகிறார்கள்.இவர்கள் மிகவும் பிடிவாதக்காரர்கள்.செல்வமும் செல்வாக்கும் இருப்பதில் செருக்குள்ளவர்கள்.

அர்ச்சுனன்: இத்தகையவர்கள் சுபகாரியங்களையும் செய்யலாம் அல்லவா?

கண்ணன்: ஆம் அர்ச்சுனா. செய்யலாம் செய்கிறார்கள்.ஆனால் பகட்டாக போலித்தனமாக செய்கிறார்கள்.தம் பெருமையை பறை சாற்றிக் கொள்வதற்காக செய்கிறார்கள்.முறைப்படி ஒழுங்காக செய்வதில்லை.செய்வதாக பெயர்பெறவே விரும்புகிறார்கள்.

அர்ச்சுனன்: ஏன் அவர்கள் இப்படிச் செய்கிறார்கள் பகவானே?

கண்ணன்: காரணம் இதுதான்.அர்ச்சுனா அகந்தை , வீண் பிடிவாதம், கர்வம், பேராசை, வென்சினம் இவைகளை சரணடைந்து இவைகளால் ஈற்கப்படுகிறார்கள்.

அர்ச்சுனன்: அவர்களுடைய தன்மைகள் மேலும் எத்தகையது?

கண்ணன்: அசுரத்தன்மையுள்ல அந்தமனிதர்கள் தம்மிடமும் பிறரிடமும் அந்தர்யாமியாக உள்ள என்னை வெறுக்கிறார்கள்.என்னிடமும் என் பக்தர்களிடமுள்ள பண்புகளை குற்றமாக தீமையாகக் கருதுகிறார்கள்.

அர்ச்சுனன்: இத்தகைய அசுரத்தன்மையின் விளைவுகள் என்ன?

கண்ணன்: அர்ச்சுனா! அந்த வெறுப்புற்ற , குரூரமான, கொடிய இயல்புகளைக் கொண்ட மனிதர்களை மிகவும் நீசர்கள் புனிதமற்றவர்கள் என்பதால் அவர்களை நாய்,கழுதை, புலி, காக்கை,ஆந்தை, கழுகு, பாம்பு, தேள் முதலிய அசுரத்தன்மை கொண்ட இனங்களில் பிறந்து மறுபடியும் இறக்கும்படி செய்து வருகிறேன்.

அர்ச்சுனன்: அதன் பிறகு என்ன ஆகிறது பகவானே?

கண்ணன்:  குந்தியின் மைந்தனே! அந்த மூடர்கள் என்னை அடைய முடியாமல் எல்லா பிறவிகளிலும் அசுரப் பிறவிகளாக பிறக்கிறார்கள். பிறகு அதனிலும் மோசமான நரகங்களில் வீழ்கிறார்கள்.

அர்ச்சுனன்: பகவானே! அவர்கள் அதமப் பிறவியிலும் அதமகதியான நரகத்திலும் உழல்கிறதிற்கு காரணம் என்ன?

கண்ணன்: அர்ச்சுனா! தீவிர இச்சை , குரோதம், பேராசை இவை மூன்றுவகையான நரகங்களுக்கு வாசல்கள்.இவையே மனிதனை கீழ்நிலையில் தள்ளுபவை.ஆகையால் இம்மூன்று தீய இயல்புகளையும் விட்டு விட வேண்டும்.

அர்ச்சுனன்: காமம், குரோதம், உலோபம் இம் மூன்று இழி இயல்புகளையும் துறப்பதால் என்ன ஆகும்?

கண்ணன்:  குந்தியின் மைந்தனே! எந்த மனிதன் நரகத்திற்கு இட்டுச் செல்லும் அம்மூன்று இயல்புகளையும் அண்டவிடாமல் , தன் ஆத்ம சேஷமத்திற்காக அறநெறியுடன் வாழ்கிறானோ அவன் மேலான நற்கதியை அடைகிறான். சாஸ்திரங்களுக்குப் புறம்பான செயல்களைத் துறந்து விட்டு , தன் மேம்பாட்டுக்காக , பற்றுதல், பேராசை இல்லாமல் கடமைகளைச் செய்து வருவதால் அவன் நன்னெறியாளனாக மதிக்கப்படுகிறான்.

அர்ச்சுனன்: மேலான நற்கதி ( பரமகதி)எவருக்குக் கிட்டுவதில்லை பகவானே?

கண்ணன்:  எந்த மனிதர்கள் சாஸ்திர விதிகளைப் புறக்கணித்து விட்டு தம் மனம் போனபடி நடந்து கொள்கிறார்களோ, தம் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்பச் செயலாற்றுகிறார்களோ , நல்லவைகளை ஒதுக்கியும், தீயவைகளை மேற் கொண்டும் வாழ்கிறார்களோ, அவர்களுக்கு நற்கதி கிட்டுவதில்லை.மேலும் அவர்களுக்கு அந்தக்கரண சுத்தி ( உள்ளத்தூய்மை) ஏற்படுவதில்லை. உண்மையான சுகம் கிட்டுவதில்லை.நற்கதி கிட்ட வாய்பே இல்லை.

அர்ச்சுனன்: நல்ல செயல், தீய செயல் இவைகளை எப்படி இனம் கண்டு கொள்வது?

கண்ணன்:  செய்யத்தக்கது.தகாதது பற்றி சாஸ்திரம் தான் பிரமாணம். இதை அறிந்து கொண்டு சாஸ்திரம் விதித்துள்ள கடமைகளைச் செய்து வரவேண்டும்.சாஸ்திரத்தில் மறுக்கப்பட்டதை ஏற்கப்படாததை செய்யலாகாது.செய்யத்தக்கது.தகாதது எனும் காரியங்களுக்கும் சாஸ்திரப்பிரமாணம் தான் எடுத்துக்காட்டு

17.நம்பிக்கையின் பிரிவுகள்

அர்ச்சுனன்: வேண்டுகோள்:
கிருஷ்ண பரமாத்மாவே சாஸ்திர நியமங்களையும் விதிமுறைகளையும் அறியாத மனிதர்கள் பக்தி சிரத்தையுடன் உங்களைப் பூசிக்கிறார்கள்.வேள்வி முதலான புனித அநுட்டானங்களை மேற்கொள்கிறார்கள். அவர்களுடைய பக்தி சிரத்தை சாத்வீகமானதா? ராஜஸமானதா? அல்லது தாமசமானதா?( அமைதியானதா? ஆடம்பரமானதா? கொடுமையனதா?)

பகவான்: அர்ச்சுனா!! மனிதர்களின் இயல்பு வழியாக ஏற்படும் சிரத்தை ஈடுபாடு மூன்று வகைப்படும்.அவை சாத்வீகம் ராச்சதம், தாமசம்.

அர்ச்சுனன்: மனித இயல்பின் மூலம் ஏற்படும் அந்த ஈடுபாடு ஏன் 3 வகைப்பட வேண்டும்?

பகவான்: பரத வம்சத்து புதல்வனே! எல்லா மனிதர்களிடமும் இடம்பெற்றுள்ள சிரத்தை அவர்களுடைய அந்தக் கரணம் எனும் உள்மன உணர்வுக்கு ஏற்றவாறு அமைகிறது. ஈடுபாடு கொண்டு முனைபவன் சிரத்தை மயமானவன்.ஆகையால் எந்த மனிதனுக்கு எத்தகைய சிரத்தையுள்ளதோ அதன் சொரூபமாக அவன் இயல்பும் அமையும்.அவனது செயலும் நிலையும் அந்த இயல்புப்படியே அமையும்.

அர்ச்சுனன்: அப்படியானால் பகவானே அந்த சிரத்தையை எப்படி இனம் கண்டு கொள்வது?

பகவான்: சாத்வீகமான இயல்பு கொன்ட மனிதன் தேவதைகளை பூசித்து ஆராதிக்கின்றான்.இராட்சத இயல்பு கொண்டவன் யட்சர்களையும்,இராட்சதர்களையும் பூசிக்கிறார்கள்.தாமச குணம் கொண்டவர்கள் பூதங்கள் பிரேதங்களை பூசிக்கிறார்கள்.

அர்ச்சுனன்: சிரத்தை ஈடுபாடு இல்லாத மனிதர்களுக்கு என்ன அடையாளம்?

பகவான்: அர்ச்சுனா! சிரத்தையில்லாத மனிதர்கள் வீண் பெருமை கர்வம், பேராசை தீவிர ஈடுபாடு பிடிவாதம் உள்ளவர்களாக இருப்பார்கள்.சாத்திர விதிகளுக்கு புறம்பாக கொடும் தவத்தை மேற்கொள்கிறார்கள்.ஐம்பூதப் பொருட்களால் ஆன சரீரத்தையும் அந்தக் கரணத்தில் உள்ள என்னையும் துன்புறுத்துகிறர்கள்.இத்தகைய அஞ்ஞானிகளை நீ அசுர சுபாவம் உள்ளவர்கள் என்பதை உணர்ந்து கொள்.

அர்ச்சுனன்: பகவானே! இதுவரையில் நீங்கள் பூசை, ஆராதனை, தவம் மூலமாக சிரத்தை கொண்டவர்கள், சிரத்தை இல்லாதவர்கள் என்னும் மனிதர்களை இனம் காண்பதைப் பற்றி உபதேசித்தீர்கள்.ஆனால் எவர் பூசை தவம் செய்யாதிருக்கிறார்களோஅவர்களை எப்படி அறிந்து கொள்வது?

பகவான்:அர்ச்சுனா! உணவின் சுவையைக் கொண்டு அதனை விரும்புபவர்களை அடையாளம் காணலாம்.( உணவு பழக்கம் மூலம் உண்பவர்களின் தராதரம் தெரியவரும்). காரணம் எல்லா மனிதர்களுக்கும் மூன்றுவகை உணவுகள் பிரியமானவை.இதைப் போல் வேள்வி,தவம், தானம் மூன்றும் மூன்று வகைப்பட்டவர்களுக்கும் பிரியமானவை. இந்த வித்தியாசத்தை இப்போது சொல்கிறேன் கேள்.

அர்ச்சுனன்: சாத்வீகமான மனிதனின் சுவை ஈடுபாடு எத்தகைய உணவில் ஏற்படுகின்றது?

பகவான்:அர்ச்சுனா! ஆயுள்,சாத்வீக குணங்கள்,உடல் வலிமை,ஆரோக்கியம்,சுகம்,மகிழ்ச்சி இவைகளை வளர்ப்பவையும் ,நிலையாக இருப்பவையும் இதயத்திற்கு வலிமை அளிப்பவையும் சுவையானவையும், ஈரப்பசை கொண்டவையுமான உணவுப்பண்டங்கள் சாத்வீகமான மனிதனிற்கு பிரியமானவைகள்.

அர்ச்சுனன்: இராட்சத மனிதனிற்கு பிடித்தமான உணவுகள் எவை?

பகவான்:மிகக் கசப்பும், புளிப்பும், உப்பும் உள்ளவை.மிகச் சூடானவை,காரமானவை,எரிச்சல் ஏற்படுத்துபவை.இத்தகைய பதார்த்தங்கள் இராட்சத குணம்படைத்தவர்களுக்கு பிடித்தவை.இவை துன்பத்தையும் சோகத்தையும், வருத்தத்தையும் நோயையும் ஏற்படுத்துகின்றன.

அர்ச்சுனன்: தாமச இயல்பு கொண்டவர்களுக்கு விருப்பமானவை எவை?

பகவான்: அர்ச்சுனா! அரைகுறையாக வெந்து சுவையில்லாதது,கொடுநாற்றம் கொண்டது.( மதுவகை,வெங்காயம்,உள்ளிப்பூண்டு போன்றவை)பழையது, ஊதிப்போனது, தீண்டத்தகாதது( இறைச்சி, மீன்,முட்டை முதலியவை).இப்பொருட்களில் தாமச குணமுள்ள மனிதர்களுக்கு ருசி சுவை மிக விருப்பம் அதிகம்.

அர்ச்சுனன்: பகவானே! ஆகாரவகைகள் மூன்றுவகைப்படுவதை அறிந்தேன்.இதேபோல் வேள்வி,தவம், தானம் இவையும் மூன்று வகைப்படும் என்றீர்கள்.இவைகளுக்குள்ள வேள்வியின் பிரிவுகளைப் பற்றி கூற வேண்டும்?

(முதலில் யசனம், பூசனம், போசனம், வேள்வி வழிபாடு உணவு மூன்றின் மூலமாக ஈடுபாடு சிரத்தையை அறியச்செய்தார்.அதன்மூலம் சாஸ்திர விதிகளை அறியாமை காரணமாகப் புறக்கணிக்கப் படுபவர்களை இனம் காணமுடியும்.ஆனால் சாஸ்திர விதிமுறைப்படி வேள்வி வழிபாடு உண்ணுதல் புரிபவர்களின் வித்தியாசங்ளை அறியச் செய்வதே இங்கு வேள்வி,தவம்,தான்ம் மூன்றுக்குரிய மூவகைப் பேதங்களையும் போதிக்கலானார்)

பகவான்: அர்ச்சுனா! வேள்வி செய்வது,நம் கடமையெனும் உணர்வோடு, மனப் பக்குவத்தோடு பயனை பற்றிச் சிந்திக்காமல் , சாஸ்திர விதிமுறைப்படி செய்யப்படும் வேள்வி சாத்வீகமானது.

அர்ச்சுனன்: இராட்சத வேள்வி எத்தகையது?

பகவான்: பரதகுல செல்வனே! பயனை எதிபார்த்து சுயநலத்திற்காக செய்யப்படுவதும் பிறர் பராட்ட வேண்டும் என்னும் நோக்கத்தில் பகட்டாக செய்யப்படுவதும் இராட்சத வேள்வி எனப்படும்.

அர்ச்சுனன்: பகவானே! தாமச வேள்வி எத்தகையது?

பகவான்: சாஸ்திர விதிகளிற்கு புறம்பானதும் அன்னதானம் இல்லாததும் மந்திர உச்சரிப்பு அற்றதும் தட்சணை அளிப்பு இல்லாததும் சிரத்தையற்றதுமான வெறும் பகட்டு வேள்வி தாமச வேள்வி எனப்படும்.

அர்ச்சுனன்: பகவானே! தவம் எத்தனை வகைப்பட்டது என்பதை உபதேசிக்க வேன்டுகிறேன்?

பகவான்: அர்ச்சுனா!தவஸ்( தவம்) மூன்று வகைப்பட்டது.உடலால் வாக்கால், மனத்தால் புரிவது.தேவதைகள், பிராமணர்கள், குருமார்கள்,ஜீவன் முத்தர்களான் மகாபுருஷர்கள் இவர்களை போற்றி பூசிப்பது.நீர், மண் முதலியவற்றால் உடலைப் பரிசுத்தமாக்கி கொள்வது.உடல்சார்ந்த பணிகளை எளிதாகவும், நேரியதாகவும் வைத்திருத்தல்( பதட்டம் பிடிவாதம் கொள்ளாது இருத்தல்) பிரம்ம சரியத்தை கடைப்பிடித்தல். உடலால் பிறருக்கு தீங்கு செய்யாதிருத்தல் .இதுதான் உடல் சார்ந்த தவம்.

அர்ச்சுனன்: வாக்கினால் புரியும் தவம் எத்தகையது கண்ணா?

பகவான்: எரிச்சல் ஊட்டுவதும் ஆத்திரம் ஊட்டுவதுமாக இல்லாத, உண்மையாக,பிரியமான நலம் தரும் வார்த்தைகளைப் பேசுவது.கல்வி வேள்விகளில் ஈடுபட்டிருப்பது.ஜெபம், அர்ச்சனை முதலியவற்றை பயில்வது.இவைதான் வாக்கினால் புரியும் தவம்.

அர்ச்சுனன்: மனத்தால் புரியும் தவம் எது கண்ணா?

பகவான்: அர்ச்சுனா! மனத்தை மகிழ்சியாக வைத்து கொள்வது.எப்போழுதும் இனிதாகப் பழகுவது.சிந்திக்கும் திறன்,மனவடக்கம்,தூயகருத்து இவற்றை முறையாக பயன்படுத்துவது தான் மானசீக தவம்.

இம்மூன்று வகை தவங்களையும் மிக்க ஈடுபாட்டுடன் பயனீட்டும் ஆசையில்லாமல் நன்றாக செய்து வந்தால் அதுதான் சாத்வீகமான தவம் எனப்படும்.

அர்ச்சுனன்: இராட்சத தவம் எது கண்ணா?

பகவான்: அர்ச்சுனா! எந்தத் தவம் சொந்த நலனுக்காகவும் , கெளரவுத்துக்காகவும் , போற்றுதலுக்காகவும் செய்யப்படுகிறதோ மேலும் பிறரை வியக்க வைக்க வேண்டிய பாசாங்காக செய்யப்படுகிறதோ,அதுதான் ரஜோகுணம் மேலோங்கிய பகட்டுத்தவம் .இதனால் நல்ல பலன் ஏற்படாது.கிடைக்கும் சிறிதளவு பலனும் அழிந்தே போகும்.

அர்ச்சுனன்: பகவானே! தாமசகுணம் மேலோங்கும் தவம் எது?

பகவான்: எந்த தவம் அறியாமையும் பிடிவாதமும் கொண்டு தம்மை வருத்திக்கொண்டு பிறரையும் துன்புறுத்திக் கொண்டு செய்யப்படுகிறதோ அது தாமச தவம் எனப்படும்.

அர்ச்சுனன்: பகவானே! இப்போது தானம் மூன்றுவகைப்படுவது எப்படி என்பது உபதேசிக்க வேண்டுகிறேன்?

பகவான்: அர்ச்சுனா! தானம் கொடுப்பது நம் கடமை எனும் கருத்துடன் பிரதிபலன் எதையும் எதிர்பராமல் செய்ய வேண்டும்.மேலும் இடம் , காலம், தகுதி அறிந்து நல்லவர்களுக்கும் அளிக்கப்பட வேண்டும்.இத்தகைய தானம் சாத்வீகமானது.

அர்ச்சுனன்: இராட்சத தான்ம் எத்தகையது பகவானே?

பகவான்: அர்ச்சுனா! எந்தத் தானம் பிரதி உபகாரம் பெறுவதற்காகவோ அல்லது பிரதி பலனை எதிர்பார்த்து கொடுக்கப்படுகிறதோ,மேலும் கொடுத்து தொலைக்க வேண்டியிருக்கிறதே என்று வேண்டா வெறுப்பாக கட்டாயமாக அளிக்கபடுகிறதோ அதுவே இராட்சத தானம்.

அர்ச்சுனன்: தாமச தானம் எத்தகையது?

பகவான்: எந்தத் தானம் மரியாதையில்லாமல் அலட்சியமாக அவமதிப்புடன் தகுதியற்றவர்களுக்கு தகாத காலத்தில் அளிக்கப்படுகிறதோ அது தாமச தானம்.

அர்ச்சுனன்: பகவானே! சிரத்தையுள்ள மனிதன் சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட வேள்வி,தவம்,தானம் முதலிய அறப்பணிகளை எவ்வாறு தொடங்க வேண்டும்?

பகவான்: அர்ச்சுனா! ஓம்,தத்,சத்( பிரணவ சொருபமான பரமாத்மா தான் உண்மையில் நிலையானது) எனும் மூன்று சொற்களால் குறிக்கப்படும் பரமாத்மா தான் படைப்பின் தொடக்கத்தில் வேதங்களையும் பிராமண சாஸ்திர கிரந்தங்களையும் வேள்விகளையும் படைத்தது.ஆகையால் பரமாத்மாவின் பெயரைப் போற்றி வேள்வி முதலான பணிகளை தொடங்க வேண்டும்.

அர்ச்சுனன்: பகவானே! ஓம் என்ற பிரணவம் எங்கு பயன் படுத்தப்படுகிறது?

பகவான்: அர்ச்சுனா! வைத்தீக சித்தாத்தங்களை ( கோட்பாடுகளை) ஏற்றுக் கொண்ட மனிதர்களுக்கு சாஸ்திர விதிப்படி ஏற்படுத்தப்பட்ட வேள்வி, தானம்,தவம் எனும் பணிகளை ஓம் என்று உச்சரித்துத் தான் ஆரம்பிக்கப்படவேண்டும்.அதுதான் தொன்று தொட்ட வழக்கம்.

அர்ச்சுனன்: பகவானே! தத் எங்கே பயன்படுத்தப்படுகிறது?

பகவான்:அர்ச்சுனா! தத் எனும் பெயரால் கூறப்படும் பரமாத்மாவிற்கு எல்லாமே உள்ளது.எல்லாம் அதற்கே உரிமையானவை என்கிற எண்ணம் நம்பிக்கையாக அமைய வேண்டும் .இந்த திட நம்பிக்கையுடன் உலக பந்தங்களிலிருந்து முத்தி பெற விரும்பும் மனிதர்கள் பயனைக் கருதாமல் வேள்வி முதலிய கடமைகளை செய்துவர வேண்டும்.

அர்ச்சுனன்: பகவானே! சத் எங்கே பயன்படுத்தப்படுகிறது?

பகவான்:பார்த்தா!பரமாத்மாவின் சத் எனும் திருநாமம் எல்லா இருப்பிற்கும் ( நிலைப்பாடு)சிரேஷ்டமான தன்மைக்கு பயன்படுத்தப்படுகிறது.போற்றத் தகுந்தது.சிரேஷ்டமான செயலுடன் “சத்” எனும் சொல் சேர்க்கப்படுகிறது.வேள்வி, தவம், தானம் இவைகளில் மனிதனுக்கு நிலைகூட “சத்” எனப்படுகிறது.எவ்வளவுதான் சொல்கிறது? அந்த பராத்மாவிற்காக செய்யப்படும் செயல்கள் யாவுமே “சத்” என்ப்படும்.

அர்ச்சுனன்: பகவானே! சத் என்பதற்கு மாறான அசத் காரியங்கள் எவை?

பகவான்:பார்த்தனே! சிரத்தையில்லாமல் செய்யப்படும் வேள்வி கொடுக்கப்படும் தானம், அநுட்டிக்கப்படும் தவம் முதலிய காரியங்களை சத் எனப்படும்.அசத் காரியங்களுக்கான பலன் இப்பிறவியிலும் இறந்த பிறகும் கூட ஏற்படுவதில்லை .அதாவது அசத்துக்கு எங்குமே நல்ல பலன் ஏற்படுவதில்லை.

18.முடிவு- துறவின் பக்குவம்

அர்ச்சுனன்: எங்கும் பரந்துள்ள பெருமானே! நான் சன்னியாஸ யோகம் ( சாங்கிய யோகம்)தியாக யோகம்(கர்ம யோகம்) இரண்டின் தத்துவங்களையும் தனித்தனியாக அறிந்து கொள்ள விரும்புகிறேன்.எனக்கு உபதேசித்து அருள வேண்டும்.

பகவான்: அர்ச்சுனா! நான் சன்னியாசம் ,தியாகம் குறித்து சித்தாந்த வழிகளான தரிசனா சாரியர்களின் நால்வகை கருத்துக்களை விவரிக்கிறேன்.
1. பல வித்துவான்கள் காம்ய கருமங்களை ( தாம் விரும்பிச் செய்து வரும் காரியங்களை)துறப்பது சன்னியாசம் என்கிறார்கள்.
2. எல்லாக் காரியங்களுக்கும் உள்ள பயனைத் துறப்பது தியாகம் என்கிறார்கள் சிலர்.
3. சிலர் கருமங்களை ( காரியங்களை) குற்றமாகக் கருதிவிட்டு விடுவது தியாகம் என்கிறார்கள்.
4. வேறு சிலருடைய கருத்து வேள்வி( ஆசார அநுட்டானங்கள்)தானம் இவைகளைத் துறக்கலாகாது என்பது.

அர்ச்சுனன்: கண்ணபிரானே! இவை வேதாந்த வித்தகர்களின் கருத்துக்கள்- ஆனால் இந்த விஷயத்தில் உங்களுடைய கருத்து என்ன?

பகவான்:அர்ச்சுனா!பர வம்சத்தவரில் தலை சிறந்த வீரப் பெருமகனே!சன்னியாசம்,தியாகம் இவ்விரு தத்துவங்களுக்குள் முதலில் தியாகம் பற்றிய என்னுடைய கருத்தை அறிந்து கொள்.தியாகம் மூன்று வகப்படும் எனும் கருத்தைச் சொன்னேன்.வேள்வி,தானம்,தவம் மூன்று கருமங்களையும் துறந்துவிடக்கூடாது.செய்யாதிருந்தால் கட்டாயம் செய்ய வேண்டும்.காரணம் அவைகளில் ஒவ்வொன்றும் சான்றோர்களை,சிந்தனையாளர்களை பரிசுத்தபடுத்தவல்லது.

அர்ச்சுனன்: இந்த அளவிற்கு கருமங்களைச் செய்தால் போதுமா கண்ணா?
பகவான்: பார்த்தனே! இப்போது விவரித்த மூன்று வகை வேள்வி தானம், தவம், ஆகிய கருமங்களையு இது தவிர சாஸ்திரத்தின் மூலம் செய்ய வேண்டிய கருமங்களையும் , பற்றுதலையும் , பயனையும் ஒழித்தே இக்கருமங்கள் யாவும் செய்யப்பட வேன்டும் என்பது எனது நிச்சயமான , உத்தமமான கொள்கை.

அர்ச்சுனன்: பகவானே! மூன்று வகைப்பட்ட தியாகத்தின் சொரூபம் என்ன?

பகவான்: அர்ச்சுனா!ஏற்படுத்தப்பட்ட கருமங்களைத் துறப்பது எவருக்கும் ஏற்புடையதல்ல.மதிமயக்கம் காரணமாக இவைகளைத் துறப்பது தாமஸ ( தீமைதரும்) தியாகம்( விட்டுவிடல்).

விதிக்கபட்ட கருமங்களுக்கும் ஏற்படுத்தப்பட்ட கருமங்களுக்கும் என்ன வித்தியாசம்?சாஸ்திரங்கள் என்ன காரியங்களைச் செய்து வர வேண்டும் என்று விதித்திருக்கின்றனவோ, அவை விதிக்கப்பட்ட கருமங்கள்.எல்லா விதிக்கப்பட்ட காரியங்களையும் ஒரு மனிதன் கடைப்பிடிக்க முடியாது.

சாஸ்திரங்களில் வாரத்தின் எல்லாத் தினங்களுக்கும் ( திங்கள், செவ்வாய் முதலிய தினங்கள்,பிரதமை,துதியை முதலான திதிகள்)விரத அநுட்டானங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன ,ஒரு மனிதன் இவைகளை எல்லாம் கடைப்பிடிக்க முனைந்தால் அவன் உண்டு உறங்கி பணி செய்வது இயலாது போகும்.ஆகையால் எல்லா விரத அநுட்டானங்களும் ஒவ்வொரு மனிதனுக்கும் விதிக்கப்பட்டவை அல்ல என்பது தெரிகிறது.

மனிதர்களின் வருணம்( இனம்) பிருமச்சாரியம், கிருகஸ்தம் முதலான ஆசிரம ( வாழ்கை, நிலை, சூழ்நிலை,இடம், காலம் சர்ர்ந்தது)இவைகளுக்கேற்ப எந்தக் கடமைகள் அவசியமாகின்றனவோ, அவை ஏற்படுத்தப்பட்ட கருமங்கள்.

உதாரணமாக பிராமணர், சஷ்த்திரியர், வைசியர் , சூத்திரர், இந்த நான்கு வருணத்தார்களில் எவர் எவருக்கு வாழ்க்கைக்கும் உடல் வளர்ச்சிக்கும் எத்தனை நியமங்கள் ( நெறி முறைகள்) ஒதுக்கப்பட்டுள்ளனவோ,அவை ஏற்படுத்தப்பட்ட கருமங்கள்.

அர்ச்சுனன்:ராஜஸ தியாகத்தின் சொரூபம் என்ன?

பகவான்: செய்ய வேண்டிய கருமங்களைச் செய்வது கஷ்டமாக இருக்கிறது என்று கருதி உடல் வருத்தம் ஏற்படுமே என்கிற பயத்தில் கடமைகளைக் கைவிடுவது ராஜஸதியாகம். இதனால் அமைதி கிட்டாமல் போகும்.

அர்ச்சுனன்:சாத்துவீக தியாகத்தின் சொரூபம் என்ன?

பகவான்: ஏற்படுத்தப்பட்ட ஏற்கப்பட்ட கருமங்களைச் செய்வது மனிதனின் அவசியமான கடமை என்கிற உணர்வுடன் பயன் விரும்பும் சுயநல நோக்கமில்லாமல் அக்கருமங்களைச் செய்து வருவது சாத்வீகத் தியாகம்.

அர்ச்சுனன்: தியாகம் செய்யும் மனிதன் எப்படிப்பட்டவர்?

பகவான்: அர்ச்சுனா! அவன் சுயநலம் கொண்டதும் மறுக்கப்பட்டதுமான கருமங்களைக் கை விடுகிறான் .ஆனால் வெறுப்போடு ஒதுக்குவதில்லை.சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கடமையாகிய ( செய்யவேண்டிய) காரியங்களைச் செய்கிறான்.அதில் ஆசை பாசம் வைப்பதில்லை.இத்தகைய அறிவாளியான தியாகி எவ்வித ஐயப்பாடும் தயக்கமும் இல்லாமல் தன் நெறிநிலையில் திடமாக வாழ்கிறான். செயல்படுகிறான்.

அர்ச்சுனன்: கருமங்களைச் செய்வதில் ஆசாபாசம் கூடாது, செய்யாமல் விட்டுவது வெறுப்பினால் அல்ல. இவ்வளவு தொல்லையை ஏன் மேற்கொள்ள வேண்டும்? கருமமே செய்யாமல் இருந்துவிட்டால் என்ன?

பகவான்: அர்ச்சுனா! உடல், உருவம் கொண்ட மனிதனால் கருமங்களைத் தானாக துறப்பது இயலாது.கருமங்களால் ஏற்படும் துயரங்களைத் துறக்கலாம்.அதாவது பலன்களை எதிர்பார்த்துக் கருமங்களைச் செய்யும் மனப்போக்கை மாற்றிக் கொள்ளலாம் கரும பலன்களைத் துறக்கும் மனிதன் தியாகி.

அர்ச்சுனன்: கருமபலன்கள் எத்தனை வகைப்படும்?

பகவான்: கருமபலன்கள் மூன்று வகைப்படும்
1. இஷ்டம்- அதாவது எந்தச் சூழ்நிலையை மனிதன் விரும்புகிறானோ அது
2.அநிஷ்டம் – எந்தச் சூழ்நிலையை விருப்பமில்லையோ அது
3. மிசிரம்-(இரண்டும் கலந்தது)-எதில் சில பகுதிகள் விரும்பதக்கதும் சில பகுதிகள் விரும்பத்தாகாதுமாக உள்ளதோ அத்தகையது.இம்மூன்று வகை கரும பலன்களும் பயன் கருதி கருமங்களை செய்பவர்களை பின் தொடரும் .இறந்த பிறகும் தொடரும் .பயன்பற்றி ஆசாபாசம் கொல்ளாதவர்களுக்கு கரும பயன்களின் பாதிப்பு இராது.

அர்ச்சுனன்: பகவானே! மூன்றுவகை பயன்களைக் கொண்ட கருமம் ஏற்பட எது காரணமாக அமைகின்றது?
பகவான்: அர்ச்சுனா! கருமங்களை அழிவுக்குட்பட்டவை என்று கூறும் சாங்கிய சித்தாத்தங்களில் எல்லா கருமங்களிற்கும் பயனளிக்கும் நிலைக்கு 5 காரணங்கள் கூறப்பட்டுள்ளன.

அர்ச்சுனன்: பகவானே! அந்த 5 காரணங்கள் எவை?

பகவான்: அர்ச்சுனா! சரீரம், செய்பவன், பலவகை கருவிகள்,பலவகை செயல்கள் வழிவந்த தொடர்பு அனுபவம் இவ் ஐந்தும் காரணங்கள்.மனத்தாலும் சாஸ்திர சம்மதமான சாஸ்திர விருத்தமான செயல்களை ஆரம்பிக்கிறான்.இதற்கு அவ் ஐந்து காரணங்களும் தூண்டுதல் ஆகும்.

அர்ச்சுனன்: பகவானே! கருமங்களுடன் கூட ஆத்மாவிற்கு சம்பந்தம் இல்லையென்றால்,பின் எவருடைய தூண்டுதலால் அவை ஏற்படுகின்றன? அவற்றிற்கு காரணம் யார்?

பகவான்: அர்ச்சுனா! ஞானம்( அறிவு) ஞேயம்(அறியத்தக்கது).பரிக்ஞாதா( நன்கு அறிந்தவர்)இம்மூன்று பேர்களாலும் கருமத்திற்கு தூண்டுதல் ஏற்படுகிறது.கரணம்( கருவி)கருமம், கர்த்தா( செய்பவன்)இம்மூன்றாலும் கருமங்களின் (செயல்களின்) சேகரிப்பு நிகழ்கிறது.

அர்ச்சுனன்: கருமங்கள் செய்யப்படுவதற்கு ஏற்படுவற்கும் ஐந்துகாரணங்களை கூறுவதின் நோக்கம் அல்லது கருத்து என்ன பகவானே?

பகவான்: அர்ச்சுனா! கருமம்( செயல்) உடல் வாக்கு உள்ளங்களால் ஏற்படுவது.ஆத்மாவால் செய்பவன் தன்மையில்லை.ஆனால் எவன் கருமங்களைச் செய்வது ஆத்மா என்று கூறுகிறானோ அவன் மதிகெட்டவன்.உண்மையை அறியாதவன்.அவனுடைய புத்தி சுத்தமானதல்ல.

அர்ச்சுனன்: பகவானே! ஆத்மாவை செயல்புரிபவன் ( கர்தா) இல்லையென்று கருதுவதால் என்ன ஆகிறது?

பகவான்: அர்ச்சுனா! என்னுடைய உள்ளத்தில் நான் தான் செய்கிறேன்.எனும் செருக்கு இல்லையோ, எவருடைய புத்தி கரும பலன்களில் நாட்டம் கொள்வதில்லையோ,கரும பலன்களை அனுபவிக்க முயல்வதில்லையோ, அவன் எதைச் செய்தாலும் அதன் பந்தத்தில் சிக்குவதில்லை.எல்லா உயிரினங்களையும் அவன் கொன்றாலும் அவன் கொலையாளி இல்லை.அதன் விளைவோ,பாதிப்போ அவனை கட்டுபடுத்துவதுமில்லைஅவன் பாதிக்கப்படுவதில்லை.

அர்ச்சுனன்: பகவானே! கருமங்களுடன் கூட ஆத்மாவிற்கு சம்பந்தம் இல்லையென்றால்,பின் எவருடைய தூண்டுதலால் அவை ஏற்படுகின்றன? அவற்றிற்கு காரணம் யார்?

பகவான்: அர்ச்சுனா! ஞானம்( அறிவு) ஞேயம்(அறியத்தக்கது).பரிக்ஞாதா( நன்கு அறிந்தவர்)இம்மூன்று பேர்களாலும் கருமத்திற்கு தூண்டுதல் ஏற்படுகிறது.கரணம்( கருவி)கருமம், கர்த்தா( செய்பவன்)இம்மூன்றாலும் கருமங்களின் (செயல்களின்) சேகரிப்பு நிகழ்கிறது.

அர்ச்சுனன்:பகவானே! கருமங்களின் தூண்டுதல் ,சேகரித்தல், இவ்விரண்டிலும் முக்கியமானது எது? அவைகளின் முக்கிய பேதங்கள் எவை?
பகவான்:அர்ச்சுனா! குணங்களின் ( இயல்புகள்) தொடர்பால் ஒவ்வொரு பொருளிலும் ஏற்படும் வெவ்வேறு பேதங்களை( வித்தியாசங்களை)குறிப்பிடும் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது இதுதன் அதாவது குணங்களிற்கு ஏற்ப ஞான்ம்,கர்மம்,கர்த்தா( செய்பவன்)இம்மூன்று முக்கிய பேதங்கள் ஏற்படுகின்றன.இவை பற்றியும் அர்ச்சுனா நீ நன்கு தெரிந்து கொள்.

அர்ச்சுனன்: பகவானே! ஞானத்திற்கு உள்ள மூன்று பிரிவுகளில் சாத்வீக ஞானம் எது?

பகவான்: அர்ச்சுனா!சித்தி பெற முயலும் சாதகர்( பயிற்சியாளர்)எந்த மெய்யறிவால்(ஞானம்) எல்லா பிரிவுகளும் கொன்ட பிராணிகளிடத்தில் பிரிவு பேதங்களை ( வித்தியாசங்களை) காணாமல் ஒரே நித்திய நிலையை காண்கிறாரோ அவருடைய மெய்யறிவுதான் சாத்வீக ஞானம்.

அர்ச்சுனன்: பகவானே! இராட்சத ஞானம் எது?

பகவான்: எப்படிப்பட்ட ஞானத்தால் பகுத்தறிவு உள்ள மனிதன் பல பல பிரிவுகள், வித்தியாசங்கள் கொண்ட பிராணிகளிடம் வெவ்வேறான தன்மைகளை காண்கிறார்களோ,உணர்கிறானோ அதுதான் இடாட்சத ஞானம்.அர்ச்சுனன்: கண்ணா ! தாமஸ ஞானம் எது?
பகவான்: அர்ச்சுனா! பிறந்து அழியும் சரீரத்தையே பூரண தத்துவமான ஆத்மா என்று கருதி ஆசாபாசம் கொண்டிருப்பது.பகுத்தறிவிற்கு பொருந்தாது.அது தத்துவ ஞானம் அற்றது.இழிவானது.தாமஸ ஞானம் எனப்படும்.

அர்ச்சுனன்: கண்ணா ! மூன்றுவகை கருமங்களில் சாத்வீக கருமம் எது?

பகவான்: எந்த ஏற்படுத்தப்பட்ட கருமங்கள் பயன் சார்ந்த ஆசை பாசம் இல்லாத மனிதனால் விருப்பு, வெறுப்பு, செருக்கு ஏதும் இல்லாமல் செய்யப்படுகிறதோ அவை சாத்வீகமானவை.

அர்ச்சுனன்: இராட்சத கர்மம் எது கண்ணா?

பகவான்: எந்தக் கருமம் அனுபவிக்கும் ஆர்வம் கொண்ட மனிதனால் செருக்கும் , முனைப்புமாக செய்யப்படுகிறதோ அது இராட்சத கர்மம்.

அர்ச்சுனன்: தாமஸ கர்மம் எது கண்ணா?

பகவான்: அர்ச்சுனா! எந்தக் காரியம் விளைவு.நட்டம், கேடு,வன்மைச்செயல்,தன் திறமை ஆகியவைகளை கருத்தில் கொள்ளாமல் கண்மூடித்தனமாக மோகத்துடன் ( ஆவலுடன்)ஆரம்பிக்கபடுகிறதோ அது தாமஸ கர்மம்.

அர்ச்சுனன்: கண்ணா! மூன்றுவகை கர்த்தாக்களில் ( செய்பவர்) சாத்வீக கர்த்தா எவர்?

பகவான்: அர்ச்சுனா எவர் செய்யும் கருமத்தில் சுயநல ஈடுபாடு இல்லாமல் செருக்கு இல்லாமல் பொறுமையும் உற்சாகமும் கொண்டு வெற்றி தோல்விகளில் ( இலாப நஷ்டங்களில்)சமநிலையோடு ( மகிழ்ச்சியோ வருத்தமோ கொள்ளாமல்) இருந்து வருகிறாரோ அவர்தான் சாத்வீக கர்த்தர்.

அர்ச்சுனன்:இராட்சத கர்த்தா எத்தகையவர் கண்ணா?

பகவான்: அர்ச்சுனா! எவை ஆசை பாசம் கொண்டவராக செய்வினைப் பயனில் நாட்டம் உள்ளவராக, வன்முறைகளில் ஈடுபட்டுள்ளவராக தூய்மை இல்லாதவராக, மகிழ்ச்சி துயரங்களிற்கு அடிமைப்பட்டவராக இருக்கிறாரோ அவர் தான் இராட்சத கர்த்தர்.

அர்ச்சுனன்: தாமச கர்த்தா என்பவர் எப்படி இருப்பர் கண்ணா?

பகவான்: அர்ச்சுனா! எவன் கவனக்குறைவாகவும், செய்யத்தக்கது, தகாதது எனும் விவேகம் இல்லாமலும் இருக்கிறானோ,கல்வி கேள்விகளில் ஈடுபடாமல் இருக்கிறானோ, திமிரும் வீம்பும் வீண்பிடிவாதமும் கொண்டிருக்கிறானோ, செய்நன்றி இல்லாதிருக்கிறானோ,சோம்பேறியோ,துயரத்தில் ஆழ்ந்திருகிறானோ, செயல் புரிவதில் வீணாக காலம் கடத்துபவனோ அவன் தான் தாமஸ ( தமோ குணம் நிரம்ம்பிய) கர்த்தா( செயல் புரிபவன்).

அர்ச்சுனன்: பகவானே! ஞானம் ,கர்மம்,கர்த்தா மூவர்க்கும் உல்ள மூன்றுவகைப் பிரிவுகளைச் சொன்னீர்கள்.இவைகளத் தவிர மேலும் என்னென்ன பிரிவுகள் ( பேதங்களை நான் தெரிந்த்து கொள்ள வேன்டும்?

பகவான்: அர்ச்சுனா! கர்மங்களைச் சேகரிக்கும் கருவிகளில் புத்தியும் சக்தியும் ( மிகுந்த பிடிவாததுடன் கூடிய தாரண சக்தி)கொள்ளவேண்டியது அவசியம் குணங்களைச் சார்ந்த புத்தியும் , ஞாபக சக்தியும் மூன்று வகைப்படும்,அதாவது காரியத்தில் ஈடுபாடு ,விடுபாடு ( பிரவிருத்தி, நிவிருத்தி) செய்யத்தக்கது,தாகதது,அச்சம்,அச்சமின்மை,தளை,விடுதலை,( பந்தம், மோட்சம்) அவைகளைச் சரிவர உணரும் அறிவுதான் சாத்வீக புத்தி.

அர்ச்சுனன்: பகவானே1 இராட்சத புத்தி எத்தகையது?

பகவான்: ஹே பார்த்தா! எந்தவொரு அறிவு தர்மம் செய்யத்தக்கது,தகாதது ஆகியவகைளை சரியாக அறிவதில்லையோ அது இராட்சத புத்தி எனப்படும்.

அர்ச்சுனன்: பகவானே! தாமஸ புத்தி எவ்வாறு இருக்கும்?

பகவான்: – பிருதையின்( குந்தி) மைந்தனே!தமோ குணத்தின் ஆதிக்கத்திற்கு ஆள்பட்ட புத்தி தருமத்தை அதர்மமாக்கவும் அதர்மத்தை தர்மமாகவும் இதேபோல் எல்லாவற்றையும் மாறாகவே அறியும் அறிவு தாம்ஸ புத்தி இதற்கு நல்லதெல்லாம் தீயதாகவும் தீயவையெல்லாம் ந்ல்லவையாகவும் தோன்றும்,இதன்படியே செயல்புரியவும் தோன்றும்.

அர்ச்சுனன்: பகவானே! சாத்வீகமான திருதி ( தாரணசக்தி) எது?

பகவான்: ஹே பார்த்தா! சமத்துவ உணர்வுடன் கூடிய ( திருதி) பிறழாத உறுதி புத்தியுடன் துணையுடன் மனிதன் மனம், பிராணன், புலன்கள் சார்ந்த செயல்களை ஏற்கிறான்.அவற்றை முறைப்படுத்துகிறான்,இத்தகைய ஞாபகசக்தி தான் சாத்வீகமானது.

அர்ச்சுனன்: இராட்சத புத்தி( திருதி) எத்தகையது பகவானே?

பகவான்: அர்ச்சுனா! பயனை விரும்பும் மனிதன் எந்த நினைவாற்றலின் துணையைக் கொண்டு அறம், பொருள், இன்பம் மூன்றையும் மிக்க ஈடுபாடுடன் ஏற்கிறானோ அது இராட்சத புத்தி எனப்படும்.

அர்ச்சுனன்: பகவானே! தாமஸ புத்தி எப்படிப்பட்டது?

பகவான்: ஹே பார்த்தா! தீய புத்தியுள்ளவன் எந்தத் தாரண ஞாபக சக்திமூலம் தூக்கம்,அச்சம்,கவலை,துயரம்,கர்மம் ஆகியவைகளை விடாதிருக்கிறானோஅதுதான் தாமஸ குணம் உள்ள புத்தி.

அர்ச்சுனன்: பகவானே!தாமஸ குணமுள்ளவன் உறக்கம் முதலிய கீழ் நிலை இயல்புகளை ஏன் கைவிடாமல் மேற்கொண்டிருக்கிறான்?

பகவான்: அர்ச்சுனா! இலைகளால் சுகம் கிடைப்பதால் கைவிடவிரும்புவதில்லை.

அர்ச்சுனன்: பகவானே! அந்த சுகம் எத்தகையது? நான் அறிந்து கொள்ளலாமா?

பகவான்: பரதவம்சத்தின் தலை சிறந்தவனே! அந்த சுகம் மூன்று வகைப்படும்.சாத்வீக சுகம்,இராட்சஜசுகம்.தாமஸ சுகம்.இவற்றில் எந்தச் சுகத்தில் வழக்கமான ஈடுபாடு காரணமாக மனநிறைவு கிட்டுகிறதோ, எதனால் துக்கங்கள் விலகுகின்றனவோ, எது பரமாத்மாவிடம்பற்றுதல் கொண்ட அறிவின் மகிழ்ச்சியோடு பிறந்ததோ,எது உலகில் வாழ்வில் ஈடுபாடு கொன்ட காரணத்தால் ஆரம்பத்தில் நஞ்சு போலும் இறுதியில் அமுதம் போலும் அமைகிறதோ அதுதான் சாத்வீகமான சுகம்.

அர்ச்சுனன்:தாமஸ சுகம் எப்படியிருக்கும் பகவானே?

பகவான்:தூக்கம் , சோம்பல், மதிமயக்கம் காரணமாக ஏற்படும் தாமஸ சுகம் தொடக்கத்திலும் இறுதியிலும் மோகாந்த காலத்தில் மூழ்கிவிடும்.பின்னர் துன்பங்களைத் தரும்.

அர்ச்சுனன்: பகவானே!சாத்வீகம்,இராட்சதம், தாமஸம் எனும் முக்குணங்களின் செயற்கையால் இன்னும் எந்தப் பொருட்களில் எல்லாம் மூன்று வித்தியாசங்கள் ஏற்படுகின்றன?

பகவான்:அர்ச்சுனா! ஒரு பேருண்மையை புரிந்து கொள்.இம்மூன்று குணங்களின் செயற்கையால் பாகுபாடு ( பேதம்) காணாத பொருள் எதுவும் இந்த பிரபஞ்சத்தில் இருக்க முடியாது .பூமியிலும் ,மேலுலகிலும்,மனிதர்களிடமும் தேவர்களிடமும்,மற்ற

இடங்களிலும், இனங்களிலும் எந்தவொரு பொருளும், இயற்கை ஏற்படுத்தியுள்ள அம் மூன்று குணங்களையும் சார்ந்திராமல் தனித்திருக்க முடியாது.இவை எங்கும் எவற்றிலும் எக்காலத்திலும் வியாபித்திருக்கின்றன.

அர்ச்சுனன்: இந்தக் குணங்களில் இருந்து விடுபட என்ன வழி பகவானே?

பகவான்:அர்ச்சுனா! இந்த உலகத்தில் படைக்கப்பட்ட மனிதர்களின் இயல்பான குணங்களை அடிப்படையாக கொண்டுதான் பிராமணர்,சத்திரியர்,வைசியர்.சூத்திரர்( அந்தணர்,அரசர்,வணிகர்,உழவர்)எனும் நான்கு வகை வர்ணங்கள்( இனங்கள்) வகுக்கப்பட்டன.ஆகையால் நால்வகையினரும் தம்மினத்திற்கு ஏற்புடைய கருமங்களை சரிவரச் செய்து வருவதால் தான் முக்குணங்களின் பாதிப்பிலிருந்து விடுபடவழி வகுக்கும்.

அர்ச்சுனன்: பகவானே! பிராமணருக்கு விதிக்கப்பட்ட கருமங்கள் எவை?அவற்றை அறிய ஆவலாய் உள்ளேன்?

பகவான்: அர்ச்சுனா!

1, உள்ளத்தை அடக்கி வாழுதல்.
2. புலன்களை தம்வசப்படுத்தி வாழுதல்.
3. அறநெறிகளை பேணிவளர்க்க உடல்வருத்தம் போன்ற சிரமங்களை சகித்து கொள்ளல்.
4.உள்ளும் புறமும் தூய்மையுடன் இருத்தல்.
5.பிறர் புரிந்த குற்றங்களை பொறுத்தல் மன்னித்தல்.
6.உள்ளம் உடல் இரண்டையும் வலிமையுடன் வைத்திருத்தல்.

7.வேதங்கள் சாஸ்திரங்கள் ஆகியவைகளை நன்கு பயின்று நல்லறிவு வளர்த்தல்.

8.வேல்வி முதலான தூய நெறிகளை நடைமுறைப்படி செயல்படுத்தல்.
9. பரமாத்மா வேதம் முதலியவற்றில் நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்டு நல்ல ஆத்திகனாக மக்களுக்கு முன் மாதிரியாக வாழவேண்டும்.இவைதான் பிராமணர்களின் இயல்பான கருமங்கள்.

அர்ச்சுனன்: பகவானே!சத்திரியர்களுக்குரிய( அரசர்களுக்குரிய) காரியங்கள் எவை?

பகவான்:

1. திறமையும் துணிவும் மிகுந்த வீரம்.
2. பொலிவு( தேஜஸ்)
3.உறுதி
4.மக்கள் பராமரிப்பு ஆட்சி பரிபாலனம்.
5.போர்க்களத்தில் புறம்காணத தீரம்.
6.தானதர்மங்களில் தராள குணம்.
7.ஆட்சிபுரியும் நிர்வாக திறமை இவைகளே சத்திரியர்களுக்குரிய இயல்புகள் செயல்கள்.

அர்ச்சுனன்: பகவானே! வைசியர்களுக்குரிய இயல்புகள் எவை?

பகவான்:
1. நிலசாவுபடிக்கு உதவுதல்,பயிரிடல்,விவசாயம்
2. பசுக்களை பராமரித்தல்
3. நேர்மையுடன் வியாபாரம் தொழில் நடத்துதல் இவைகளே வைசீயர்களுக்கு வணிகர்களுக்குள்ள இயல்பான செயல்கள்.

அர்ச்சுனன்: பகவானே! சூத்திரர்களுக்கு உள்ள பணிகள் எவை?

பகவான்: தம்மினத்தவர்களோடு மற்ற மூன்று இனத்தவர்களையும் வாழ்வித்தலும்,வளர்த்து வலிமையுள்ளவர்களாக ஆக்குவதும் பயிர்த்தொழில் மூலம் மக்களுக்கு பணிபுரிவதும் இவர்களுக்குரிய பணிகள்.

அர்ச்சுனன்: பகவானே! இந்த நான்கு வர்ணத்தார்களும் தமக்கென விதிக்கப்பட்ட பணிகளை செய்து வருவதால் என்ன ஆகும்?

பகவான்: அர்ச்சுனா! இந்த நால்வகை இனத்தவரும் ஒன்றுபட்டு இணைந்து செயல்படுவதால் சமூகமும் நாடும் மேம்பாடும் ஒவ்வொரு இனத்தவரும் தமக்குரிய பணிகளில் சுயநல வேட்கையில்லாமல் பற்றுதலான ஈடுபாடுடன் முனைந்திருப்பவர்கள் பரமாத்மாவை அடைகிறார்கள்.

அர்ச்சுனன்: பகவானே! அவர்கள் எவ்விதம் பரமாத்மாவை அடைகிறார்கள்?

பகவான்:அர்ச்சுனா! பரமாத்மாவிடமிருந்து எல்லா உலகங்களும் உயிரனங்களிலும் உற்பத்தியாகின்றன.எல்லாப் பிராணிகளிடத்திலும் எல்லா இடங்களிலும் பரமாத்மா வியாபித்திருக்கிறார்.பரமாத்மாவிற்கு மனிதன் செய்யும் பூசை அவன் அவனுக்கு ஏற்பட்ட பணிகளை ஒழுங்காக செய்வதுதான் .அதன்மூலமே மனிதன் காரிய சித்தியடைகிறான்.அதாவது பரமாத்மாவிடம் ஒன்றிணைகிறான்.

அர்ச்சுனன்: கண்ணா! மனிதன் தன் இனத்திற்கேற்பட்ட கருமங்களை மட்டும் ஏன் செய்து வரவேன்டும்? பிற இனத்திற்குரிய பணிகளையும் ஏன் இணைத்துச் செய்யக் கூடாது?

பகவான்: தம்பி அர்ச்சுனா! அவரவர் தமக்கு ஏற்பட்ட அவைகளுக்கென்ற விதிக்கப்பட்ட கர்மங்களை சரிவரச் செய்து வந்தாலே போதும்.தன்னினத்திற்குரிய செயல்களை விட பிற இனத்தின் செயல் உயர்ந்ததாகவோ, சிறந்ததாகவோ இருந்தாலும் அதை மேற்கொள்ளலாகாது.தனக்கென உரிய செயலை அது தாள்வானதுஎன்று கருதி புறக்கணிக்கவும் கூடாது.இயல்புக்கு ஏற்ப ஏற்படுத்தப்பட்டுள்ள சுயதர்மமான கடமைப் பணிகளை செய்யும் மனிதன் ஒருபோதும் பாவத்திற்கு இலக்காவது இல்லை.குந்தியின்

மைந்தனே!குற்றம் குறை இருந்தாலும் மனிதன் சுயதர்மத்தை ( கடமைப்பணியை) விட்டுவிடலாகாது.நெருப்பு எரியத்தொடங்கும்போது புகையைக் கக்குவது போல் ஒவ்வொரு கருமம் தொடக்கத்தில் ஏதாவது குற்றம் குறையுள்ளதாக இருக்கும்.

அர்ச்சுனன்: பகவானே! கருமங்களில் சிறிதளவுகூட குறையில்லாதிருக்க ஏதாவது உபயம் ( வழிவகைகள்) உள்ளதா?

பகவான்:அர்ச்சுனா! இருக்கிறது. சாங்கியயோகத்தால் சாதிக்கலாம்.எவருடைய புத்தி எல்லா இடங்களிலும் முற்றிலும் பற்றுதல் இல்லாமல் இருக்கிறதோ, எவருடைய உடல் கட்டுபாட்டில் உள்ளதோ , எவர் எந்தப் பொருளிலும் சிறிதளவு கூட ஆசாபாசம் வைப்பதில்லையோ அத்தகையவர் சாங்கிய யோகம் மூலமாக ” நைஷகர்மியசித்தி”( செயல் ஒழிந்த பிரம்ம நிலை)அடைகிறார்.அதாவது அவருடைய எல்லா செயல்களும் செயலற்றுப் போகின்றன.செயல்களால் ஏற்படும் சிறிதளவு தோஷம் கூட அவரைத் தீண்டுவதில்லை. ( 49)

அர்ச்சுனன்: பகவானே! நீங்கள் குறிப்பிட்ட நைஷகர்மியசித்தியை அடையும் வழிமுறைகள் என்ன?

பகவான்:அர்ச்சுனா! அந்தக்கரணம் பரிசுத்தமாக இருப்பது சித்தி இதைப் பெற்ற மனிதன் ஞானத்தின் மேலான நிலையான பிரம்மத்தை எந்த வழிமுறையில் அடைகிறானோ ,அதை சுருக்கமாக சொல்லுகிறேன்.நன்கே அறிந்து கொள்.அர்ச்சுனா! அந்த மனிதன் சாத்வீக புத்தி கொண்டவன்,வைராக்கிய சித்தமுள்ளவன்.தனிமையில் தன்வயத்தில் வாழப் பழக்கப்பட்டவன்.ஆகார நியமம் கொண்டவன்.துணிவுடன் புலன்களை அடக்கி வைத்துக்கொள்ளும் சாதகன்,,உள்ளம்,உரை,செயல் இவற்றை கட்டுப்படுத்தி புலனுகர்ச்சியை தியாகம் செய்பவன்.அவன் விருப்பு , வெறுப்பை

கடந்து பராமாத்மா தியானத்தில் லயிக்கிறான். அவன் அகங்காரம், பிடிவாதம்,செருக்கு,காமம் , வென்சினம், பொருள் சேகரிக்கும் பேராசை ஆகியவைகளை துறந்து மமதையில்லாமல் மன அமைதியாக வழ்ந்து பிரம்ம நிலையை அடைய தகுதி பெறுகிறான்.

அர்ச்சுனன்: பகவானே! பிரம்ம நிலையை அடையத் தகுதி பெற்ற பின் என்னாகிறது?

பகவான்:அர்ச்சுனா! பிரம்ம மயமான நிலையை அடைந்து மகிழ்ச்சி கொண்ட சாதகன் எதற்காகவும் , எவருக்காகவும் ,வருத்தமோ விருப்பமோ கொள்ளுவதில்லை.சகல பிராணிகளிடமும் அந்த ஞானி சமநிலையுடன் அன்பும் பரிவும் காட்டுகிறான்.இத்தகைய சாதக புருஷருக்கு பரமாத்வாகிய என்னிடம் பராபக்தி (உத்தமமான பக்தி) நிறைந்திருக்கிறது.

அர்ச்சுனன்: பராபக்தி ஏற்படுவதால் என்ன ஆகிறது பகவானே?

பகவான்: இந்த உத்தம பக்தியால் சாதக புருஷன் என்னுடைய சத்திய சொரூபத்தை உள்ள படி அறிகிறான் தத்துவ ஞானத்தின் துணைகொண்டு நல்லுணர்வுடன் அதன் பயனாக என்னுள் ஐக்கியம் அடைகிறான்.

அர்ச்சுனன்: பகவானே!உங்களை அடைவதற்கு வேறு சிறந்த உபாயமும் உள்ளதா?

பகவான்: மிகச் சிறந்த வழியிருக்கிறது.

அர்ச்சுனன்: எம்பெருமானே! அது என்ன என்பதை அறியத்தரும்படி வேன்டுகிறேன்?

பகவான்: அர்ச்சுனா! எந்த உத்தமமான பக்தன் என்னையே சரணாகதியாக அடைகிறானோ,என்னையே எண்ணியே எண்ணி எனக்கே சமர்ப்பணமாக எல்லா காரியங்களையும் செய்து வருகிறானோ அவன் என் அருளால் சாசுவதமான உத்தம நிலையை ( பரமபதம்)அடைகிறான்.

அர்ச்சுனன்: பகவானே! இந்த நிலைக்கு நான் செய்ய வேண்டியது என்ன?

பகவான்: தம்பி அர்ச்சுனா!நீ என்றுமே என்னிடம் முழு ஈடுபாட்டுடன் இரு.நீ செய்யும் எல்லாக் காரியங்களையும் எனக்கே அர்ப்பணித்து விடு.நீ செய்யும் எல்லாச் செயல்களிலும் பொருள்களிலும் நீ கொண்டிருக்கும் பற்றுதலை அகற்றிக் கொள்.எல்லாவற்றிலும் சமநிலையை மேற்கொள்.எல்லாவற்றிலும் சமநிலையை மேற்கொள்.எப்போது என்னிடமே சிந்தையை செலுத்தி வாழ்ந்து வா.என் சார்பிலேயே செயலாற்றுவதாக கருதிக்கொள்.

அர்ச்சுனன்: பகவானே! உங்களிடமே எப்போதும் சிந்தையை செலுத்தி வாழ்வதில் என்ன ஆகும்?

பகவான்: அர்ச்சுனா!என்னிடம் சிந்தையை செலுத்தி வாழ்வதால் என் அருள் உனக்கு இலகுவில் கிட்டுகிறது.இதனால் இன்னல்கள் இடையூறுகளில் இருந்து விடுபடுவாய்.ஒருவேளை நீ மமதையின் காரணமாக என்னையும் என் பேச்சையும் மதிக்காது போனால் உனக்கு வீழ்ச்சி ஏற்படுவது நிச்சயம்.

அர்ச்சுனன்: எப்படியான வீழ்ச்சி எனக்கு ஏற்படும்?

பகவான்:  அர்ச்சுனா! அகங்காரத்தை துணைகொண்டு நீ இப்போது போர்புரிய வேண்டாம் என்று தீர்மானித்திருக்கிறாயே,இந்த தீர்மானம் பொய்யானது.காரணம் உன்னுடைய சத்திரய சுபாவம் ( இயல்பு) உன்னை போரில் ஈடுபடுத்தத்தான் செய்யும்.குந்தியின் மைந்தனே!தன் இயல்புக்கேற்ப விதிக்கப்பட்ட அல்லது ஏற்கப்பட்ட கர்மத்திற்கு கட்டுப்பட்டவன் நீ.உன் மதிமயக்கம் ( மோகம்) காரணமாக போர் புரிய விரும்பதாதது நீடிக்காது.இந்த போரையே நீ ஷத்திரிய சுபாவத்திற்கு ஆட்பட்டு அதன் தூன்டுதல்களுடன் செய்யத்தான் போகிறாய். தொடர்ந்து செய்.நீயே வெற்றி பெறுவாய்.

அர்ச்சுனன்: பகவேனே! இந்தசத்திரிய சுபாவம் போர்புரிதல் எனும் சுயதர்ம கர்மத்தை எப்படிச் செய்யத் தூண்டும்.எப்படி செய்விக்க முடியும்?

பகவான்:  அர்ச்சுனா! எல்லப் பிராணிகளுக்கும் புகுந்திருக்கும் அந்தர்மியாமியான சர்வேஸ்வரன்( பரமாத்மா) தன்மானத்தினால் சரீரம் எனும் இயந்திரத்தில் அமர்ந்து எல்லாப் எல்லாப் பிராணிகளையும் அவரவர் இயல்புப்படி ( சுபாவ சுய தர்மப்படி) இயக்குகிறான்.செயல் புரிய வைக்கிறான்.ஆட்டிப்படைக்கிறான்.

அர்ச்சுனன்: பகவேனே! இந்தப் பரவசமான ( பிறசக்திக்கு ஆள்பட்டிருக்கும்) நிலையிலிருந்து வெளிவர என்ன வழி?( சுபாப தர்மத்தின் ஆதிக்கத்திலிருந்து எப்படி விடுபடுவது)

பகவான்: பரதவம்சத்தின் வீரப் புதல்வனே!நீ “எல்லாமே அவன் தான்” எனும் நம்பிக்கையுடன் அந்தர்யாமியான சர்வேஸ்வரினிடம் சரணடைந்து விடு.அவருடைய பேரருளால் உனக்கு இந்த உலகத்திலிருந்து விடுபட்ட நிம்மதியுடன் சாசுவதமான பரமபதம் கிடைக்கும்.இது மிக மிக ரகசியமான சரணாகதி தத்துவம்.இந்த அரிய தத்துவத்தை உனக்கு உபதேசிக்கிறேன்.நீ இதுபற்றி நன்கு சிந்தித்து உன் விருப்பப்படி தெரிவு செய்.

பகவானே! நான் என்னுடைய விருப்பப்படி எதுவும் செய்யவில்லை.நீங்களே கூறுங்கள்.நான் என்ன செய்ய வேண்டும்.

பகவான்: அப்படியானால் மிக்க ரகசியமான பரம தத்துவத்தை மறுபடியும் கேள்.நீ எனக்கு மிகவும் பிரியமானவன்.ஆதலால் உன் நன்மைக்கு வேண்டியதைக் கூறுவேன்.

அர்ச்சுனன்: சர்வேசா ! எனக்கு நன்மை தரும் இதமான அருளுரை எது?
பகவான்: நீ என்னையே போற்றி ஆராதிக்கும் பரம பக்தனாகி விடு.என்னிடமே உன் மனதைச் செலுத்து.இப்படி இருப்பதால் நீ என்னைப் பெறுவாய்.இதை நான் உனக்குச் சத்திய பிரதிக்கினையாகக் கூறுகிறேன்.என் அன்புக்கு உரியவன் நீ.உன்னை மிகவும் நேசிக்கிறேன்.

அர்ச்சுனன்: நான் நீங்கள் அறிவுறுத்துமாறு செய்ய இயலாமல் போனால் என் நிலை என்ன பகவானே?

பகவான்: அர்ச்சுனா! எல்லாத் தருமங்களையும் விட்டுவிட்டு என்னையே சரணாகப் பற்றிக்கொள்.நான் உன்னை எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிடுத்து விடுகிறேன்,நீ கவலை கலக்கம் இல்லாமல் தெளிவாக பூரண நம்பிக்கையோடு இரு.

அர்ச்சுனன்: பகவானே!நீங்கள் மிகவும் சுலபமானதும்,உத்தமமானதுமான தத்துவத்தை உபதேசித்திருக்கிறீர்கள்.இதை நான் மற்றவர்களுக்கெல்லாம் தெரிவிக்கலாமா?

பகவான்: கூடாது.கூடாது.இது மிகவும் பத்திரமாக ரகசியமாகப் பாதுகாக்கப்பட வேண்டியது.சகிப்புத்தன்மையில்லாத மனத்திட்பம் இல்லாத,நம்பிக்கை இல்லாத எவடுக்கும் சொல்லி விடாதே!மேலும் எவர் என்னிடம் பக்தி கொள்ளவில்லையோ, இத்தத்துவத்தை கேட்க விரும்பவில்லையோ, குற்றமுள்ள நெஞ்சும் நோக்கமும் கொண்டிருக்கிறார்களோ ,அவர்களுக்கெல்லாம் இந்த அரிய ரகசிய தத்துவத்தை சொல்லிவிடாதே.

அர்ச்சுனன்: இதைத்தவிர நீங்கள் கூறிய மற்ற விஷயங்களை எவருக்குச் சொல்லலாம்?
பகவான்: என்னிடம் பக்தி கொன்டவர்களிடம் சொல்.எந்த ஞானவான் என்னிடம் பராபக்தி( மிக ஆழ்ந்த பக்தி சிரத்தை)கொண்டிருப்பதால் உந்தப்பட்டு மிக அரிய ரகசியத் தத்துவங்கள் நிரம்பிய இந்த பகவத் கீதையை ( பகவான் கருத்துரை) என் பக்தர்களுக்கு எடுத்துச் சொல்கிறானோ, அவன் என்னைப் பெறுகிறான்.மேலும் அவனைப் போல் என்னும் இல்லை.இப்பூமண்டலத்திலேயே அவனுக்கு நிகரான என் அன்பன் வேறு எவனும் இல்லை.

அர்ச்சுனன்: இதகைய அரிய உயரிய பணியைச் செய்ய முடியாது போனால்?

பகவான்: எனக்கும் உனக்கும் இடையில் இப்போது நிகழ்ந்த இந்த உடையாடல்களைக் கவனத்துடன் பயின்றால் போதும்.அவன் ஞானக்ஞம் செய்து என்னைப் பூசித்து போற்றியதாகும்.இதுவே எனது கொள்கை.

அர்ச்சுனன்:இதைப் பயிலவும் இயலாது போனால்?

பகவான்: இந்த உரையாடல்கள் மூலம் உபதேசிக்கப்பட்ட தத்துவங்களைப் பிறரும் கூற ஒருமுறை கவனமாக ,சிரத்தையுடன் கேட்டுக் கொண்டாலும் போதும்,கேட்பவன் பாவபந்தங்களிலிருந்து விடுபடுகிறான்.புண்ணியசாலிகள் மேலான உலகில் இடம் பெறுகிறான்.
அர்ச்சுனா! நான் உபதேசித்ததை எல்லாம் மனப்பூர்வமாக,கவனமாகக் கேட்டுக் கொண்டாயா?அக்ஞானத்தால் ஏற்பட்டிருந்த உன் மோகமயக்கம் விலகிவிட்டதா?

அர்ச்சுனன்:அச்சுதா!எம் பெருமானே!என் மோக மயக்கம் விலகியது.நல்ல தெளிந்த நினைவு ஏற்பட்டிருக்கிறது.இதெல்லாம் உங்கள் அருளால் ஏற்பட்டதுதான்.உங்கள் கீதோபதேசத்தைக் கேட்டதால் மட்டும் அல்ல.உங்களது கிருபைக்கே இந்த சக்தி உள்ளது.நான் ஐயம் திரிபு இல்லாமல் தெளிவாக திடமாக இப்போது இருக்கிறேன்.இப்போது நான் மேலான மகிமையான ஆணையைச் சிரமேற்கொண்டு போர் செய்து என் கடமையை நிறைவேற்றுவேன்.

போர்க்களத்தில் நடந்த சகல நிகழ்ச்சிகைளையும் திருதராஷ்டின மன்னனுக்கு சொல்லிக் கொண்டு வந்த சஞ்சயனை மகாராஜாதிரும்பவும் அவனிடம் வினவுகிறார்.அதற்கு சஞ்சயன் சொல்கிறான் மகாராஜாவே பகவான் வாசுதேவருக்கும் மகாத்மா அர்ச்சுனனுக்கும் இடையில் நிகழ்ந்த சகல உரையாடலையும் கேட்கும் பாக்கியம் பெற்றேன்.மிகவும் அற்புதமான இந்த தத்துவ விளக்க கருத்துரையை கேட்கும் போதும் அவற்றை நினைக்கும் போதும் என்னுடம்பு சிலிர்க்கிறது.பேரின்பம் பொங்குகிறது.

திருதராஷ்டின மன்னர்: சஞ்சயா!உனக்கு இந்த உரையாடலைக் கேட்கும் பாக்கியம் எப்படிக் கிட்டியது?
சஞ்சயன்: இது மிகவும் இரகசியமான தத்துவங்களை நிறைந்த உரையாடல். போர்க்கள நிகழ்ச்சிகளை தாங்கள் அறிய வேண்டும் என்ற ஆர்வத்தினால் வியாச பகவானின் அருளாசியால் எனக்கு அந்த பாக்கியம் கிடைத்தது .சாட்சாத் சர்வேசுவரனான , யோகேஸ்வரனான ஸ்ரீ பரமாத்மா திருவாய் மலர்ந்தருள பரம பக்தனான அர்ச்சுனன் கேட்டுக்கொண்டிருக்க அந்த நிலையிலேயே ( குருபரம்பரை வழியாக இல்லாமல்) நான் கீதோபதேசத்தை செவிமடுத்திருக்கிறேன்.

திருதராஷ்டினன்: சஞ்சயா! இதைக்கேட்டு கொண்டிருந்ததால் இதன் மூலம் உனக்கு ஏற்பட்ட பிரபாவம் என்ன?

சஞ்சயன்: பேரரசே! பகவான் ஸ்ரீகிருஷ்ணரும் பக்த அர்ச்சுனனும் தமக்குள் நிகழ்த்திய இந்த அற்புதமான் உரையாடலை நினைத்து நினைத்து புல்லரித்து போனேன்.மகிழ்ந்து பெருமிதம்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

திருதராஷ்டினன்: சஞ்சயா! இப்பெருமித மகிழ்ச்சிக்கு உனக்கு வேறு காரணமும் உள்ளதா?

சஞ்சயன்: உள்ளது மகராஜா பகவான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் மிக அற்புதமான ஒப்புயர்வில்லாத அந்த விஸ்வரூப தரிசனத்தை நான் என்னுக்குள் நினைத்துப் பார்க்கும் போதெல்லாம் பேராச்சரியம் ஏற்படுகிறது.அதை எண்ணி எண்ணி ஆனந்தப்பரவசம் அடைகிறேன்.

திருதராஷ்டினன்: சஞ்சயா! இப்போழுது நீ என்ன தீர்மானத்திற்கு வந்திருக்கிறாய்?

சஞ்சயன்: மகாராஜா! எந்த இடத்தில் எவர்தரப்பில் யோகேஸ்வராரன ஸ்ரீகிருஷ்ண பகவான் இருக்கிறாரோ, எங்கு காண்டீப தனுர்தாரியான மாவீரர் அர்ச்சுனன் இருக்கிறாரோ ,அங்கு தான் வெற்றி ஐஸ்வரியம்,திடமான நீதி, நெறி இடம் பெறும். இதுவே திண்ணம், இதுதான் எனது திடமான தீர்மானம்

கீதையின்சாரம்-முன்னுரை

கண்ணபிரான் போதனையான “பகவத்கீதை” ,”கீதையின் சாரம்” மனித வாழ்க்கையே போராட்டம் எனபதை பெரும் போர்களத்தில் வைத்தே பகவான் கிருஷ்ணர் தனது உண்மையான திடமான விசுவாசியும், உற்ற நண்பனும், தூய தொண்டனும், உயிர்த் தோழனும், உறவினனும் அதே காலத்தில் வாழ்ந்த மக்களுள் ஞானம், வீரம், புகழ் மிக்க போர் வீரனுமான அர்ச்சுனனுக்கு அவன் மனம் சோர்ந்து காண்டீபத்தையே கண்ணன் காலடியில் போட்டு மண்டியிட்டு மன்றாடிய போது, அர்ச்சுனனை உண்மையான ஞானி, யோகி, பக்தன், விவெகி, விராதி வீர்ன், அதிவிவேகி என்பதை உணர்ந்து கொண்டான்.

இப்படியானவன் சீடனாக அமைவது அருமையிலும் அருமை. எனவே இவன் மூலமாகவே பல்லாயிரம் வருடங்களுக்கு முன் முறிந்து சிதைந்த பரம்பரையின் புதிய பரம்பரைத் தொடர்பின் முதல் சீடனாக அர்ச்சுனனை உருவாக்கி அவன் மூலமாகவே உலக மக்களுக்காக பகவத்கீதையை அர்சுனனக்கு உபதேசிக்கிறான் கண்ண்ன். இருகையாலும் அம்பு எய்யும் திறைமை கொண்ட அர்ச்சுனன் தன் புலமை மிக்க அரும்பெரும் ஞானத்தால் தன் உள்ளத்தில் உதிர்க்கும் அத்தனை சந்தேகங்களையும் வெளிக்காட்டி கேள்வி கேட்டு வாதிட்டு அறிகின்றான். இருகையாலும் அம்பு எய்யும் திறைமை கொண்ட அர்ச்சுனன் தன் புலமை மிக்க அரும்பெரும் ஞானத்தால் தன் உள்ளத்தில் உதிர்க்கும் அத்தனை சந்தேகங்களையும் வெளிக்காட்டி கேள்வி கேட்டு வாதிட்டு அறிகின்றான்.

சதித்திட்டங்களால் அர்ச்சுனனுடைய அரசை ஆக்கிரமிக்க எண்ணிய துரியோதனின் மனத்தையும், போர்களத்தின் மத்தியிலேயே அர்ச்சுனன் மனதில் நடந்து கொண்டிருக்கும் நிலமையையும் கண்ணனால் புரிந்து கொள்ள முடிந்தது.

எதற்கும் அச்சம் பயம் கொள்ளாத அர்ச்சுனன் போர்க்களத்தில் உயிர் நஷ்டத்தை எண்ணியே மனம் தளர்ந்தான். காண்டீயம் அவன் கை விட்டு நழுவி விடுமளவு பொருமையை இழந்தான். இனியும் இங்கு நிற்க என்னால் முடியாது கண்ணா என்றான். போரிலெ வெற்றியைக் கண்டும் மகிழ்ச்சி கொள்ளாமல் உறவினர், நன்பர்கள், அன்பர்களின் உயிர் நஷ்டத்தைக் கண்டே கலங்கினான்.

எவர்களுக்காக என் வாழ்க்கையையும் போர் வெற்றியையும், அரசையும் விரும்பி போர்க்களம் வந்தவன் தன் குலத்தினரோடும், தன் உறவினரோடும் உள்ள இரத்தபாசம் அவனுக்கு ஏற்பட்ட இரக்கத்தால் வெளிப்படுகிறது.

அர்ச்சுனன் மூலமாக இவையாவும் அறிந்த கண்ணபிரானுடைய முடிவான தீர்மானம் நீதி நேர்மையில்லாத அநியாயமான அக்கிரமக்காரர்களை, சமூக விரோதிகளை சண்டானர்களை கொண்ர்றொழிக்க வேண்டும். நல்லவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற முடிவான விருப்பம் கொண்டான்.

அர்சுனா! தகாத இடத்தில் தகாத நேரத்தில் ஏன் இவ்விதம் கோழையானாய்? உனக்கு இது அழகல்ல உன் ஷத்திரிய தர்மத்திற்கே விரோதமானது, கேடானது. அர்ச்சுனா! உலகில் பன்றிகளைப் போல் வாழ்வதற்கல்ல மனிதன் பிறந்திருப்பது.

தருமஷேத்திரமான குருஷேத்திரமே போர்க்களமானது. உன் இரத்த பாச எதிரிகளால், உன் மனைவி துரொபதையின் துகில் உரிந்த சண்டாளர் அவளின் உடை களைந்தபோது, பிஷ்மர் துரோணர் மற்றும் மதிப்புக்குரிய பெரியவர்கள், மற்றும் மாவீரர்கள் எல்லோரும் மெளனமாக பேசாதிருந்தார்கள். நீ போரிடாது விட்டால் உன் மதிப்பும் போய்விடும். இந்த அவமதிப்பை உன்னால் சகிக்கவே முடியாது.

போரிட்டவாறு இறப்பாயானால் சுவர்க்கம். வெற்றியானால் பெருமையும் அரசையாளும் மகிமையும் கிடைக்கும். போர்புரிவதே உன்கடமை. அதை நடுநிலையான மனதுடன் செய். வெற்றி தோல்வியில் பற்று வைக்கதே. இந்த அநியாய அக்கிரம சண்டாளர்கள் அசுர மனம், அரக்க குணம் கொண்டவர்கள். சமூகத்திற்க்கு உதவாதவர்கள். இவர்களை கொண்றொழிக்கவே வேண்டும்.கொல்வதற்கு பயப்படாதே. இவர்களை ஏறேற்கனவே கொன்றுவிட்டேன். கொல்வதற்கு பயபடாதே. உன் பக்கம் நான் இருக்கிறேன். உனக்காகவே சாரதியாகி தேரோட்டியாக செயல்படுகிறேன். எனவே நீ கவலைப்படாதே. தொடர்ந்து போர் செய். உனக்கே வெற்றி நிச்சயம்.

நல்லவர்களை காப்பாற்றவும், கொடியர்களை அழ்த்து தர்மம், நீதியை நிலை நாட்டவே நான் விரும்பி அவதரிக்கிறேன். இவ்வாறு கண்ணன் போதிக்கிறார் பகவத் கீதையில்.

கீதையின்-சாரம்-முன்னுரை-முற்றிற்று

01. குருசோத்திரப் போர் களத்தில் படைகளை கவனித்தல்

பாண்டவர்களின் ஒப்பந்தப்படி பன்னிரண்டு ஆண்டுகள் தர்மரும் சகோதரர்களும் காட்டில் வாழ்ந்தார்கள்.ஓராண்டு காலம்
எவரும் அறியாமல் மாறு
வேடத்தில் வாழ்ந்தார்கள்.இவ்வித கஷ்டங்களை சகித்து ஒப்பந்த காலமும் முடிவானது.தங்களுக்குச் சேர வேண்டிய பாதி ராச்சியத்தை உரிமையுடன் பெற்றுக் கொள்ள வந்தார்கள்.

அவர்களுடைய நியாயமான வேண்டுகளை பங்காளி துரியோதனன் கொடுக்க மறுத்துவிட்டான்” பாதி ராச்சியயமாவது?ஊசிமுனை நிலம் கூடக் கொடுக்கமுடியாது. முடிந்தால் என்னுடன் போரிட்டு வென்று ராச்சியத்தை பெற்றுக்கொள்ளட்டும் என்று அறுதியிட்டுக் கூறிவிட்டான்.

கண்ணன்: . ஜானார்த்தனா! அத்தகைய பாவி மனிதர்கள் வெகுகாலம் நரகத்தில் கிடந்து உழலவேண்டும்.இது உலகறிந்த ஊண்மை.

போரின் இத்தகைய விளைவை நீ முன்பே அறிந்திருந்தும் ஏன் போரிட துணிந்து முன் வந்தாய்?

அர்ச்சுனன்: இதுதான் வியப்பாகவும் வேதனையாகவும் இருக்கிறது.நாங்கள் பெரும் பாவம் செய்ய தீர்மானித்திருக்கிறோம்.அரசாட்சிக்கும், அதன் சுகபோகங்களிற்குமாகச் சொந்த குடும்பதாரையே கொல்லத் துணிந்தோமே என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது.மதி கெட்டசெயல் இது

தர்மரும் சகோதரர்களும் தாய் குந்திதேவியிடம் நிலமையைத் தெரிவித்தார்கள்.” உரிமையைப் பெறப் போராடவும் தயங்க வேண்டாம்” என்றாள் தாய்.தாயின் உத்தரவு பெற்றதும் பாண்டவர்கள் போருக்கு ஆயத்தமானார்கள்.சமாதானத் தூதுவர்களாக பல அறிஞர்கள்,அரசர்கள், பெருமக்கள் சமாதானம் பேசியும் முடியவில்லை.ஆணவமும் அகம்பாவமும் கொண்ட துரியோதனன் எல்லோரையும் அலட்சியம் செய்து விட்டான்.

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா பலமுறை தூது சென்றும் தோல்வி கண்டார் அவரையும் துரியோதனன் மதிக்கவில்லை.காரணம் பிள்ளைப் பருவத்தில் கண்ணன் இடையர் குலத்தில் வளர்ந்தவன்.இடையர்களோடு கூடிப் பசுக்கூட்டம் மேய்த்தவன்.இதனல் கண்ணனைப் பற்றி எதுவும் அறியாமல் ஏளனமாய் எண்ணிக் கொண்டான்.அத்துடன் துரியோதனன் ராஜமாளிகையில் அரசயோகத்தில் வாழ்ந்தவன்.அர்ச்சுனன் கன்ணனனை தன்னுறவினனாகவும் தோழனானகவும் உயிருக்குயிரான நண்பனானகவும் ஓர் அவதார புருஷனானகவும் எண்ணி இதயத்தை பறி கொடுத்திருந்தான்.அதனால் அர்ச்சுனன் கண்ணனுக்கு கெளரவம் கொடுத்தான்.

போரே முடிவானது

போருக்கு ஆயத்தனமான இரு அணீயினரும் போர்தான் என்று தீர்க்கமான முடிவுக்கு வந்து விட்டார்கள்.அவர்கள் தங்களுக்கு உதவியாகப் பக்க பலமாக பல உறவினர்களையும், அன்பர்களையும், நண்பர்களையும் ,அபிமானிகளையும், ஆதரவாளர்களையும்,சிற்றரசர் பேரரசர் போன்றவர்களையும் பலதரப்பட்ட வீரர்களையும் திரட்டிக் கொண்டார்கள்.

போருக்கு வேன்டிய கஷரத துரக பதாதி ( யானை தேர், குதிரை,கலாள்) படைகளும் மற்றுமக்கால முறைப்படி தேவைப்படும் படைக்கலன்களான அம்புவில்லு , ஈட்டி, வாள்,சூலம்,வேல், பறைகள்( மேளங்கள்) சங்குகள், ஊதுகுழல்கள் யாவும் திரட்டி விட்டார்கள்.திகதி,நாள், நேரம் யாவும் முற்றாகி விட்டது.போர்ப்பிரகடனமும் ( பிரசித்தம்)செய்யப்படுகின்றது.

ஆனால் 56 தேசத்திற்கு அதிபதியான கண்ணபிரானனின் உதவியைக்கேட்டு எதிரிகளான இருவரும் ஒருவரயொருவர் அறிந்து கொள்ளாமல் செல்லுகின்றார்கள்.ஆனால் இருவரும் ஒரே சமயத்தில் புறப்பட்டு முன்பின்னாக செல்கிறார்கள்.துரியோதனன் முன்னும் அர்ச்சுனன் தாமதமாய் பின்னரும் சென்றார்கள்.

அச்சமயம் ஸ்ரீகிருஷ்ணர் உறங்கி கொண்டிருந்தார் .முதலில் சென்ற துரியோதனன் அகம்பாவத்துடன் கண்ணனின் தலைமாட்டருகில் ஆசனத்தில் அமர்ந்திருந்தான்.பிந்திச் சென்ற அர்ச்சுனன் கண்ணனின் காலருகில் கைகூப்பையபடியே அமைதியாக அடக்கமாக நின்றான்.

ஸ்ரீகிருஷ்ணர் கண் விழித்தமும் தன் கால்மாட்டில் நின்ற அர்ச்சுனனை முதலில் பார்த்து புன்னகையோடு அவனுக்கு நல்வரவு கூறினார்.அதேசமயம் பின்னுக்கு திரும்பியவர் தலைமாட்டில் துரியோதனன் ஆசனத்தில் உட்கார்ந்திருந்த்தைக் கண்டு அவனையும் வரவேற்று உபசரித்தார்.

பாண்டவர்களுக்கும் தங்களுக்கும் போர் தொடங்க முடிவாகிவிட்டது.என்ற விபரத்தை கூறிய துரியோதனன் தான் முதலில் வந்திருப்பதாகவும் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் வேண்டினான்.அப்படியா? ஆனால் நான் கண் விழித்தும் முதலில் அர்ச்சுனனைத்தான் கண்டேன். இருந்தாலும் எனக்கு நீங்கள் இருவரும் சமமே.அனாலும் பரிசுகள் வழங்கும் போது

சிறியவர்களுக்குத்தான் முதலில் வழங்குவது வழக்கம்.அதுவே முறை என்று கூறிய ஸ்ரீகிருஷ்ணர் அர்ச்சுனனைப் பார்த்து அர்ச்சுனா! எனது பெரிய சேனை ஒருபுறம் இருக்கும் .மறுபுறம் நான் தனியாகவும் ஆயுதம் எதுவும் எதுவும் எடுக்காத நிராயுதபாணியாகவும் இருப்பேன்.இந்த இரண்டில் எதை நீ விரும்புகிறாய் என்பதைக் கூறவேண்டும் என்றார்.

இதைக்கேட்ட அர்ச்சுனன் ஆயுதம்
ஏந்தாத நிராயுத பாணியாக நீர் மட்டும் என் பக்கம் இருந்தால் போதும் என்றான்.துரியோதனன் ஸ்ரீகிருஷ்ணருடைய பெரும் சேனைகளையே கேட்டுப் பெற்றான் பெருமகிழ்ச்சியோடு சென்றான்.அதே சமயம் கிருஷ்ணர் அர்ச்சுனா!” எனது பெரும் சேனைப்பலத்தை விட்டு விட்டு ஏன் இந்த தீர்மானத்திற்கு வந்தாய்”என்று கேட்டார்.கிருஷ்ணா! நீர் நிராயுதபாணியாய் ஆயுதம் எதுவுமே ஏந்தாமல் எனக்கருகே தேரோட்டியாய் இருந்து நான் வெற்றி பெற வேண்டும்.என்னுடைய இந்த விருப்பத்தை நீர் நிறைவேற்றினால் அதுவே போதும் என்றான்.அவன் விருப்பப்படியே ஸ்ரீகிருஷ்ணர் அர்ச்சுனனுக்கு ( பார்த்தனுக்கு) தேரோட்டியாக இணங்கிச் செயல்பட்டார்.இதுவே கண்ணன் சாரதியானதிற்கு காரணம்.

எங்கு இறைவன் இருக்கிறானோ
அங்கு வெற்றி நிச்சயம் என்பது தத்துவம்

பெரியப்பா,சித்தப்பா, பிள்ளைகளான பாண்டவர்களுக்கும் ( ஐவர்) கெளரவர்களான ( நூற்றியொருவருக்கும்) போர் நடப்பது முடிவாயிற்று.இருதரப்பாரிற்கும் பாட்டானார் மகரிஷி வேதவியாசர் .101 பிள்ளைகளுக்குத் தந்தையான மகராஜா ,திருதாட்டினர்,இவர் பிறவியிலே குருடர்.இவருடன் வேதவியாசர் மிகவும் பாசம் கொண்டவர்.அதனால் அவரிடம் வந்து மகனே ( திருதாட்டினர்) பெரும்போர் தொடங்கப்போகிறது.இதனால் பேரழிவு நிச்சயம்.இனியாராலும் தடுக்கவே முடியாது.இந்தப் போரை நீ பார்க்க

விரும்பினால் உனக்கு நான் “திவ்விய திருஷ்டி ( அருட்பார்வை) தருகிறேன். இதன் உதவியால் நீ இங்கிருந்த படியே போர்க்களக் காட்சிகளைத் தெளிவாக பார்க்க முடியும்.என்றார். இதைக்கேட்ட திருதாட்டினன் என் புதல்வர்களும் என் தம்பி பாண்டுவின் புதல்வர்களுமாக நம்குலத்தவர்கள் தாமே. தமக்குள் போரிடுவதை நான் விரும்பவில்லை .ஆனால் போர் நிகழ்ச்சிகளைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்றார்.

அப்படியானால் உன் உதவியாளன் சஞ்சயனுக்கும் திவ்விய திருஷ்டி அளிக்கிறேன்.அவன் போர்க்கள நிகழ்ச்சிகளையும் போராளிகளின் மனப்போக்கையும் நன்கு தெரிந்து உடனுக்குடன் சகல தகவல்களையும் தெரிவிப்பான் என்று கூறினார். அதனால் சஞ்சயனும் அருள்நோக்கைப் பெற்றான்.போர் தொடங்கியதிலிருந்து முடிவுவரை சகல நிகழ்ச்சிகளையும் அர்ச்சுனனின் தேர்ச்சாரதியான கண்ணபிரானின் செயல் திறன்களையும் அவரின் அரிய போதனைகளையும் அதேசமயம் அர்ச்சுனனின் கேள்விகளையும் அவரின் அரிய போதனைகளையும் அதேசமயம் அர்ச்சுனன் கேள்விகளையும் விபரமாக எடுத்துச் சொல்லிக் கொண்டே வந்தான்.

சஞ்சயன் ( காவல்க்கணர்) என்ற தேரோட்டியின் மகன். தேரோட்டிகளில் சஞ்சயனுக்கு மட்டுமே அக்காலம் தனிமதிப்பும் மரியாதையும் இருந்தது.இவன் அமைதியானவன்,அடக்கமானவன்,நல்நடத்தையானவன்,நல்லஞானமுள்ளவன்.பரமாத்மா கிருஷ்ணனுடைய பக்தன்.அவருடைய மகிமையை உண்மையான சொரூபத்தை பூரணமாக அறிந்தவன்.அக்காலம் அர்ச்சுனனும் சஞ்சயனும் இளமைமுதல் இணைபிரியாத நண்பர்கள்.சஞ்சயனுக்கு பகவான் வேதவியாசர் அளித்த தெய்வீக பார்வையால் அவனிருந்த இடத்திலிருந்தே திருதாட்டினருக்கு குருஷோத்திர போர் நிகழ்ச்சிகளை சொல்லிக்கொண்டே வந்தான்.

போர்முனை

அநுமான் கொடி பறந்து கொண்டிருக்க அழகான கம்பீரமான வெண்நிற புரவிகள்( குதிரைகள்) பூட்டிய கம்பீரமான ரதத்தில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா சாரதியாக அமர்ந்திருக்கிறார்.அவருக்கு பின்னால் காண்டீபதாரியாய் அர்ச்சுனன் அமர்ந்திருக்கிறான்.குறித்த நேரத்தில் ரதம் போர்க்களம் புகுந்தது.

இருபடையணிகளிலும் தம் உறவினர்களையும் , நண்பர்களையும் மற்றும் வேண்டியவர்களையும் கண்டான்.அர்ச்சுனன் போரில் இவர்கள் எல்லாம் இறந்து போவார்களே என்ற எண்ணமும் உண்டானது.சோகத்தால் மனம் தளர்ந்தான்.கண்ணா இருசேனைகளுக்கும் நடுவில் நம் ரதத்தை கொன்டுபோய் நிறுத்துங்கள்” என்றான்.அர்ச்சுனனுக்கு போர் ஆயத்தங்களை குறிக்கும் முரசங்கள் முழங்கியதும் அவனுக்கு உற்சாகம் பொங்கியது.ஏன் அர்ச்சுனா அவ்விதம் கேட்கிறாய் ? கண்ணா என்னுடன் போர் புரிய வந்திருக்கும் சகலரையும் பார்க்க விரும்புகிறேன் என்றான்.அர்ச்சுனனின் வேண்டுகோளின்படியே கண்ணன் ரதத்தை இருசேனைகளுக்கும் நடுவில் கொண்டு போய் நிறுத்தியதும் அர்ச்சுனா!இதோ உன்னுடன் போர் புரிய வந்திருக்கும் உறவினர்களான குருவம்சத்தவர்களை பார் என்றார்.அர்ச்சுனன் இடுபக்கப் படைகளையும் அவதானித்தான்.எதிர் அணியிலுள்ள சகலரையும் பாட்டனர்களான பீஷ்மர், தூரோணச்சாரியார், ஆசிரியர்கள் மற்றும் உறவினர்கள் யாவரையும் கண்டான்.மேற்கொண்டு இப்போர்க்களத்தில் யுத்தம் செய்ய வந்திருக்கும் வீரப்பெருமக்களை நான் பார்க்க வேண்டும் அல்லாமலும் எவர்களோடு நான் போரிட வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.அத்துடன் துரியோதனனுக்கு விருப்பமானதைச் செய்யும் நோக்குடன் வந்திருக்கும் பிற நாட்டு அரசர்களையும் பார்க்க ஆசைப்படுகிறேன்.

அதேசமயம்( கெளரவர்) துரியோதனன் படையின் பிரதம தளபதி பீஷ்மர் சிங்கம் கர்சிப்பதுபோல் சங்கொலி எழுப்பினார்.தொடர்ந்து அவர் படையினர்களும் போர் முரசங்கள் மற்றும் வாத்தியங்களை முழங்கினார்கள்.வஞ்சகன் துரியோதனன் அங்குமிங்குமாக ஓடி வியாசரிடமும் துரோரணச்சாரியரிடமும் வஞ்சமான முறையில் உரையாடி அவர்களை உசுப்பி உசார்ப்படுத்தி வைக்க பல அரசியல் தந்திரங்களை கையாளுகிறான்.காரணம் பெரியவர் பீஷ்மர் இருபகுதியாருக்கும் பாட்டனார்.ஆனால் தனது படைக்கு தலைமைத் தளபதி. இது இவனுக்கு ஓர் சந்தேகம்.அவர் இருதரப்பாரிடமும் பாசம் கொண்டவர்.அவனே தீர்மனிக்கிறான் அவர் தலைமை தளபதியாக இருந்தாலும்கூட பாண்டவர் படையை வெல்வது சந்தேகம். பாண்டவர் படைக்கே மிகப்பெரும் பலவானும் வல்லவனுமாகவிருக்கும் பீமசேனனின் படை எனது கெளரவர் படையை வென்றுவிடமுடியும் என்பதும் அவனை உறுதிப்படுத்தி மனதை உறுத்தியது.போர்முனையில் கெளரப்படையினரின் முழங்கக்கேட்டதும் பாண்டவர் படையும் போர் தொடங்க வாத்தியங்களை முழங்கியிருக்க வேண்டும்.ஆனால் அதற்குரிய ஆணை பிறப்பிக்கப்படவில்லை.அதேசமயம் வெண்நிறப்பிரவிகள் பூட்டிய சிறந்த ரதத்தில் அர்ச்சுனனோடு அமர்ந்திருந்த கிருஷ்ண பரமாத்மா தனது ” பஞ்சஷன்னியம்” என்னும் சங்கை எடுத்து எங்கும் பேரொலியாக கேட்க முழங்கினார்.

தொடர்ந்து அர்ச்சுனனும் தேவதத்தன் என்னும் சங்கை முழங்கினான்.தொடர்ந்து பீமன்,தர்மர்,நகுலன்,சகாதேவன் முறையே “பெளண்டிரம்”” அனந்த விசயம்””சுகோஷம்””மணீ புஷ்பகம்”ச்ங்குகளையும் முழங்கினார்கள்.வீறுகொண்டெழுந்த பாண்ட்வர்களின் சங்கநாதம் எல்லா திசைகளிலும் பரவி எதிரொலித்தது.முறைகேடாக ராச்சியத்தை அபகரித்துக் கொண்ட கெளரவர்களின் நெஞ்சங்களை நடுநடுங்க வைத்தன.

எதிர் அணியிலும் தன் அணியிலும் போரிடக் காத்திருக்கும் மாவீரர்களான பாட்டனார், ஆசாரியர், மாமா,சகோதர்கள்,

அண்ணன்,தம்பிகள்,புதல்வர்கள்,மாமனார்கள்,தந்தைக்கு ஒப்பான பெரியவர்கள்,உறவினர்கள்,நண்பர்கள்,அரசர்கள் இவர்களை எல்லாம் பார்த்ததும் அர்ச்சுனன் தைரியமிழந்து கோழையைப் போல் வருந்தி பேசத்தொடங்கினான்.

“ஹே கிருஷ்ணா!என் நெருங்கிய உற்றார் உறவினர்களை போர்புரியும் நிலையில் எதிரே பார்த்ததும் என் அங்கங்கள் தளர்ந்து போகின்றன.முகம் வாடுகிறது,உடல் நடுங்கிறது.மயிர்க்கூச்சு எழுகிறது.என் கையிலிருந்து காண்டீப வில் நழுவுகிறது.சர்மம் முழுவதும் எரிச்சல், மனம் தத்தளிக்கிறது. தடுமாறுகிறது.என்னால் நிற்கக்கூட முடியவில்லையே கண்ணா!”

கண்ணன்: அர்ச்சுனா!இதைத்தவிர வேறெதெல்லாம் தெரிகிறது?

அர்ச்சுனன் கேசவா! தீய சகுனங்களை காண்கிறேன்.போரில் இந்த உறவினர்களையெல்லாம் கொன்றுவிட்டு என்ன இலாபத்தை அடையப்போகிறேன்? எனக்கு எதுவும் கிட்டாது. (31)

கண்ணன்: அர்ச்சுனா! இவர்களையெல்லாம் வதம் செய்யாமல் உங்களுக்கு உரிமையோடுரிய ராச்சியம் எப்படிக் கிடைக்கும்?

அர்ச்சுனன் :கிருஷ்ணா! எனக்கு வெற்றியும் வேண்டாம்.இந்த அரசாட்சியும் வேண்டாம்.அரசர் பதவி தரும் சுகங்களையும் நான் விரும்பவில்லை.கோவிந்தா! எங்களுக்கு ராச்சியத்தாலோ சுகபோகங்களாலோ அல்லது வாழ்வதனாலோ என்ன பயன் கிட்டப்போகிறது. (32)

கண்ணன்: வில்லாளி வீரனே! அர்ச்சுனா! நீ வெற்றியையும் அரசாட்சிகளையும் விரும்பவில்லையா?

அர்ச்சுனன்: கண்ணா! நாங்கள் எவர்களுக்காக வேண்டி இந்த ராச்சியம் ,சுகபோகம் எல்லாம் விரும்புகிறோமோ அவர்கள் எல்லோரும் தம் உயிர் பொருள் சார்ந்த பற்றுதல்களை துறந்து போர்புரிய போர்முனையில் வந்து நிற்கிறார்களே?    (33)

கண்ணன்: அர்ச்சுனா! இவர்கள் எல்லோரும் உனக்கு யார்?

அர்ச்சுனன்: எந்து குருதேவர் , தந்தைமார்கள், புதல்வர்கள்,பாட்டனார்கள்,மாமா, ,மாமன்மார்கள், பேரப்பிள்ளைகள்,மைத்துனர்கள் மற்றும் பல உறவினர்கள். (34)

கண்ணன்: தம்பி ! இவர்களே உன்னைக் கொல்ல முன் வருவார்களேயானால்?
அர்ச்சுனன்: இவர்கள் என்னைக் கொல்லட்டுமே.மதுசூதனா! எனக்குத் தேவலோகம், பூலோகம், பாதளலோகமென்னும் மூவுலகங்களும் கிடைப்பதானாலும் நான் இவர்களைக் கொல்ல மாட்டேன்.வெறும் பூவுலக அரசாட்சிக்காகவா கொல்லவிரும்புவேன். (35)

கண்ணன்:  தம்பி ! ராச்சியம் ஆளுவதற்கு கிடைத்தால் உனக்கு மிக்க மகிழ்ச்சி ஏற்படும். ஏன் இதை நீர் விரும்பவில்லை .இது உங்களுக்கு உரிமையான ராச்சியம் அல்லவா?

அர்ச்சுனன்: ஜனாத்தனா! பெரியப்பா திருதராஷ்டிராரின் மக்களையும், உறவினர்களையும் கொன்றுவிடுவதில் எனக்கு எப்படி மகிழ்ச்சி ஏற்படும்?அவர்கள் எனக்கும் உறவினர்கள் தானே?இந்த அநியாயக்காரர்களைக் கொல்வதால் எங்களுக்குப் பாவம் தான் ஏற்படும்.மாதவா!இவர்களை நான் கொல்ல விரும்பவில்லை.ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களை அழித்துவிட்டு நாங்கள் சுகமாக வாழமுடியுமா?      ( 36,37)

கண்ணன்: அர்ச்சுனா! எதிரணியிலிருக்கும் உன் உறவினர்கள் உன்னையே கொல்லக் காத்திருக்கிறார்கள்.நீ மட்டும் ஏன் அவர்களை கொல்லப் பின் வாங்குகின்றாய்?
அர்ச்சுனன்: பெருமானே! பேராசை காரணமாக இவர்களுடைய பகுத்தறிவு பாழடைந்து விட்டது.அதனால் குலநாசம்,மித்ர தூரோகம் ஆகியவையால் ஏற்படும் குற்றத்தையும் பாவத்தையும் இவர்கள் கவனிக்கவில்லை.இப்பாவத்தை உணர்த்தும் பகுத்தறிவு படைத்த நாங்களாவது இக்குற்றத்தை செய்யாமல் இருக்கவேண்டும்.குலம் அழிந்தால் என்ன ஆகும்?    ( 38, 39)

கண்ணன்:  குலம் அழிந்தால் தொன்றுதொட்டு வரும் குலதர்மம் அழிந்துவிடும்.

அர்ச்சுனன்: குலதர்மம் அழிந்தால் என்ன ஆகும்? 

கண்ணன்:  குலம் முழுவதிலும் அதர்மம் பரவும். (40)

அர்ச்சுனன்: அதர்மம் பரவினால் என்ன ஆகும்?

கண்ணன்: அதர்மம் பரவினால் நல்லொழுக்கம் நசிந்து குலப்பெண்கள் கெட்டுபோவார்கள்

அர்ச்சுனன்: குலப்பெண்கள் கெட்டுப்போனால் என்ன ஆகும்?

கண்ணன்: குலப்பெண்கள் கெட்டுபோனால் கேடுகள் உள்ள இனக்கலப்பு ஏற்படும்.                                       (41)

அர்ச்சுனன்: இனக்கலப்பால் என்ன கேடுவரும் கண்ணா?

கண்ணன்: .இனக்கலப்பு இதற்கு காரணமாக இருந்தவர்களை மட்டுமல்ல, அக்குலம் முழுவதையும் நரகத்திற்கேஇட்டுச் சென்றுவிடும்.பிண்டதானம்,ஜலதானம்,( சிராத்தம்,தர்ப்பணம்)இல்லாததால் முன்னோர்கள்( பிதுருக்கள்) தாழ்வு நிலையடைவார்கள்.இனக்கலப்பு ஏற்படுத்தும் குற்றங்களால் குலதர்மம், ஜாதி,தர்மம் இரண்டுமே அழிந்து போகின்றன. ( 42,43)

அர்ச்சுனன்: கண்ணா! குலதர்மம் அழிந்த மனிதர்களுக்கு என்ன ஆகும்?

கண்ணன்: . ஜானார்த்தனா! அத்தகைய பாவி மனிதர்கள் வெகுகாலம் நரகத்தில் கிடந்து உழலவேண்டும்.இது உலகறிந்த ஊண்மை.                                     (44)

போரின் இத்தகைய விளைவை நீ முன்பே அறிந்திருந்தும் ஏன் போரிட துணிந்து முன் வந்தாய்?

அர்ச்சுனன்: இதுதான் வியப்பாகவும் வேதனையாகவும் இருக்கிறது.நாங்கள் பெரும் பாவம் செய்ய தீர்மானித்திருக்கிறோம்.அரசாட்சிக்கும், அதன் சுகபோகங்களிற்குமாகச் சொந்த குடும்பதாரையே கொல்லத் துணிந்தோமே என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது.மதி கெட்டசெயல் இது. (45)

கண்ணன்: இப்போது நீ என்ன செய்ய விரும்புகிறாய்?

அர்ச்சுனன்: நான் ஆயுதங்களைத் துறந்து யுத்ததிலிருந்து விலகிவிட விரும்புகிறேன்.நிராயுதபாணியான என்னை துரியோதனன் முதலானவர்கள் கொன்றாலும் அது எனக்கு நல்லது. (46)
இப்படியே மனம் வருந்திப் பேசியபின் காண்டீப வில்லையும் அம்புகளையும் கீழே போட்டுவிடு ரதத்தின் நடுவில் மனசோர்வுடன் உட்கார்ந்து விட்டான். (47)

படையினரின் விபரம்

பாண்டவர் படை: பாண்டவர் படையைச் சேர்ந்த சிறந்த வில்லாளிவீரர் காசிராஜர்,மாவீரர் சிகண்டி,திருஷ்டத்மனன்,வீராடமன்னன்.வெல்லவே முடியாத வீரசாத்தயகி, ராஜா துருபரர்,துரோபதியின் ஐந்து வீரப்புதல்வர்கள்,சுபத்திரையின் வீரப்புதல்வன் அபிமன்யு இவர்கள் யாவரும் படையில் போர் புரிகிறார்கள்.
துரியோதனின் படை: வீரமிக்க பாட்டனார் பீஷ்மர் தலைமைத்தளபதி,மாவீரன் கர்ணன்,வெற்றி வீரர் கிருபாசாரியார்,அசுவத்தாமா, விகர்ணன்,சோமதத்தரின் புதல்வர் பூரிசிரவர் இவர்களோடு சிறந்த போர் வீரர்களும் போராடுகிறார்கள்

02.கீதையின் உள்பொருள் சுருக்கம்-பக்கம்-1

போர்களத்திற்கு வெகு உற்சாகத்துடன் போர் புரிய வந்த அர்ச்சுனனன் போர் படைகளின் ஆர்பாட்டன்களையும் அவர்களின் உற்சாகத்தையும் கண்டு இவர்கள் எல்லாம் எந்த நிலைக்கு ஆளாகப்போகிறார்களோ என்று எண்ணி மனோதிடம் இல்லாமல் கோளையைப் போல வருத்தப் பட்டுகொண்டான். அவன் கண்களில் நீர் முட்டி வழியத் தொடங்கியது.மதுசூதனன் அர்ச்சுனா! தகாத வேளையில் எப்படி இந்தக் கோழைத்தனம் ஏற்பட்டது? இப் பயங்கொள்ளித்தனம் சிறந்த ஆண்மகனான வீர புருசனுக்கு அழகல்ல,நிம்மதியையோ மேல் நிலையையோ, அளிக்காது. ஆகையால் பார்த்தா! இந்த பேடித்தனத்தை அருகில் நெருங்க விடாதே. உன் போன்ற வீரர்களுக்கு இப்பலவீன்ம் முறையற்றது.வீரப்பெருமகனே! இதயத்தை வழுவிழக்கஷ் செய்யும் இந்த அற்ப பலவீனத்தை ஒதுக்கித் தள்ளிவிட்டு காண்டீபத்தை கையிலெடு. போபுரிய எழுந்திரு. போரைத் தொடங்கு என்றார் ( 1- 3)

அர்ச்சுனன்: கண்ணா! நான் சாவதற்குப் பயப்படவில்லை. பிறரைச் சாகடிகத்தான் தயங்குகிறேன். அஞ்சுகிறேன். என் எதிரே தோன்றும் பீஷ்மர், துரோணர் முதலானவர்களென் பெருமதிபிற்குரியவர்கள் நான் பூசிக்கத் தகுந்தவர்கள். இத்தகைய சான்றோர்களை கடிந்து பேசவே கூடாதென்று என் இளமைப் பருவமுதல் கருதிய நான் இவர்களுடன் எப்படி பகைமை உணர்வுடன் போர்புரிய முடியும். எப்படி தாக்கி அழிக்க முடியும் (4)

கண்ணன்: அர்ச்சுனா! கடமையைச் செய்வதற்கு எதிராக வேறு எதையும் கருத்தில் கொள்ளலாமா?

அர்ச்சுனன்: கண்ணபிரானே! மதிப்பிற்குரிய பெரியவர்களை கொல்வதைவிட இந்த பூமியில் பிச்சையெடுத்து வயிறு வளர்ப்பதை மேலாகக் கருதுகிறேன். உங்கள் போதனைப்படி நான் போரிட்டால்

எனக்கு என்ன கிட்டும்? பெரியவர்களையும் குருமார்களையும் கொன்ற பின் அவர்களது குருதி தோய்ந்த செல்வங்களையும் மற்றும் சுகபோகங்களையும் தானே அனுபவிக்கப் போகிறேன்? அந்நிலையில் என்னால் நிம்மதியாக வாழமுடியுமா?                           (5)

கண்ணன்: அர்ச்சுனா! அப்படியானால் நீ என்ன செய்வதாக உத்தேசம்? எதை நியாயம் என்று கருதுகிறாய்

அர்ச்சுனன்: பரந்தாமனே! இந்தப் போர்புரிவது சரியா தவறா என்பது எங்களுக்குத் தெரியாது. இந்தப் போரில் நாங்கள் ஜெயிப்போமா தோற்போமா என்பதும் தெரியாது. எல்லாவற்றையும் விட மிகவும் முகியமானது எவர்களைக் கொன்றுவிட்டு நாங்கள் வாழ விரும்பவிலையோ, அவர்கள் தான் எங்களுக்கு எதிரே அணிவகுத்து நிற்கிறார்கள்.இந்தச்சொந்த ப்ந்தமுள்ள குடும்பத்தாரை நாங்கள் எப்படி கொல்வோம் ( 6)

கண்ணன்: இப்போது நீ எதையும் தீர்மானிக்க முடியவில்லையோ இதற்கு மாற்று வழியாக எந்த உபாயத்தை யோசித்துள்ளாய்?

அர்ச்சுனன்: மாதவா! கோழைத்தனம் என்னும் குறைபாட்டால் என் சஷத்திரிய வீர இயல்பு தாழ்ந்து போயிருக்கிறது. எது தர்மம்? என்று தீர்மானிக்க இயலாத மதி மயக்கம் . ஆகையால் எது நலந்தருமோ,எது என் கடமையோ எனக்கு எடுத்து சொல்லுங்கள் நான் உங்கள் சீடன் உங்களை சரணடைந்திருக்கிறேன்.எனக்கு அறிவுரை வ்ழங்குங்கள்.வழிகாட்டுங்கள்.க்ண்ணபிரானே முதலில் சொல்வதைப்போல் யுத்தம் புரிய மட்டும் சொல்லாதீர்கள்.ஏனென்றால் போரில் வெற்றி பரிசாகக்கிடைக்கும் செல்வங்களும் அரசும்,அரச சுகபோகங்களும் அல்லது தேவலோக தலமைப்பதவியானாலும் கூட அவற்றால் என் சோகத்தைப் போக்க முடியாது இந்த துயரம் என் புலன்களையே செயலிழக்க வைக்கிறது. (7 -8)

எனவே நான் போர் புரியமாட்டேன் என்று தெளிவாக கூறிவிடேன். (9)

கண்ணன்: புன்சிரிப்புடன் நீ வருத்தப்பட வேண்டாததிற்கு வீணாக வருத்தப்பட்டு கொண்டிருக்கிறாய். புலமைமிக்க சான்றோர் போல்பெரிய தத்துவம் பேசுகின்றாய்! விவேகம் மிக்க சான்றோர்கள் இறந்து போனவர்களுக்காகவும் இறக்கப் போகிறவர்களுக்காகவும் ஒருபோதும் வருத்தப்படமாட்டார்கள். இத்தத்துவத்தை முதலில் நன்றே புரிந்துகொள். ( 10,11)

அர்ச்சுனன்: கண்ணா! ஏன் அவர்கள் வருத்தப்பட மாட்டார்கள்?

கண்ணன்: அர்ச்சுனா! நானோ நீயோ இந்த அரசர்களோ முன்பும் இருந்ததில்லை.பின்பும் இருக்கப்போவதில்லை என்று நினைக்கலாகாது.நாம் எல்லோருமே முன்பும் இருந்தோம்.பின்பும் இருக்கப்போகிறோம்.இந்த உண்மையை உணர்ந்த சன்றோர்கள் பிறப்பு இறப்புக் குறித்துச் சோகப்படமாட்டார்கள். ( 12)

அர்ச்சுனன்: வாசுதேவா! இதை எப்படி நான் அறிவு பூர்வமமாக உணரமுடியும்?

கண்ணன்: தம்பி அர்ச்சுனா! உயிருள்ள இந்த உடலுக்கு பிள்ளைப் பருவம் , வாலிபம், வயோதிபம், முதுமை எப்படி ஏற்படுகின்றனவோ இதே போலத்தான் மற்றச் சரீரங்களிலும் குடிபுகுகிறது இந்த ஜீவன் இதனாலிந்த விசயத்தில் விவேகிகள் வருத்தம் கொள்வதில்லை.                 ( 13)

அர்ச்சுனன்: பராத்தமாவே! குழந்தைப் பருவம் முதலிய பலநிலைகள் உடலுக்கு ஏற்படுகின்றன,உண்மைதான், ஆனால் ஏற்புடையது,ஏற்கமுடியாதது,சுகமளிப்பது, துன்பம் தருவது ஆகியவை எதிர்படும்போது என்ன செய்வது?

கண்ணன்: குந்திதேவியின் மைந்தனே! புலன்களுக்கு உட்பட்ட பௌதீகப் பொருட்கள் யாவும் உகந்தது.அல்லாதது என்னும் நிலைகளில் சுகத்தையும் துக்கத்தையும் தரகூடியவைகள் .ஆனால் அவை வந்து போககூடியவைகள். ஆகையால் அர்ச்சுனா!அவைகளை நீ ஏற்றுகொள். சகித்துகொள், அவைகளீடம் விருப்பு வெருப்பு இல்லாமல் இரு. (14)

அர்ச்சுனன்: கண்ணா அப்படி இருப்பதால் என்ன பயன்?

கண்ணன்: ஆண்களில் சிறந்தவனே! சுகதுக்கங்களில் சமநிலையோடு இருந்துவரும் தீர புருசனைப் புலன்களுக்கு ஆட்பட்ட பெளதீகப் பொருட்கள் மகிழ்ச்சியோ, துன்பமோ கொள்ள வைப்பதில்லை. அத்தகைய நடுநிலைப் பேராண்மைக்குரியவன் பாராத்மாவை தன்னுள் உணர்கிறான்.இதன் மூலம் அமரத்துவ நிலயையும் அறிகிறான். ( 15)

அர்ச்சுனன்: அது எப்படிச் சாத்தியமாகும் கண்ணா?

கண்ணன்: ” ஸத்” என்பது சேதன தத்துவம் – உயிர் கொண்டது ” அஸத்” என்பது சடப்பொருள் -உயில்லாப் பொருள் “ஸத்” எப்போதுமே இருந்து வருகிறது “அஸத்” பொருளுக்கு நிலையில்லை. இந்த உண்மையை தத்துவஞானிகள் அறிந்திருப்பதால் அவர்கள் அமரத்துவ நிலையில் இருக்கிறார்கள் (16).

அர்ச்சுனன்: அந்த ஸத் என்னும் அழியாப் பொருள் எது கண்ணா?

கண்ணண்:எப்பொருள் உலகம் முழுவதிலும் பரவி நிலையாய் இருக்கிறதோ, அது அழியாத “ஸத்” அதை யாராலும்அழித்துவிடமுடியாது

அர்ச்சுனன்: அஸத் எனும் அழியும் பொருள் எது?

கண்ணன்: நம்மிடமிருந்து ஜீவன் எனும் சேதனம் அமரத்துவம் கொண்டது. இதை ஊகித்து அறிய முடியாது. இதனுடைய உடல் உறுப்ப்புகள்.சாதன்ங்கள் யாவும் “அஸத்” எனும் அழியும் பொருட்கள்.இதனால் தான் சொல்கிரேன் அர்ச்சுனா! நீஉன் கடமைளைச் செய். யுத்தம் புரிய வேண்டியதுதான் இப்போதைக்குரிய உன் கடமை.

போரில் இறப்பதும் கொல்லுவதும் தவிர்க்க முடியாதவை ஆகையால் உடலில் இருக்கும் ஜீவனும் அந்நிலைக்கு ஆளாகும் என்றெண்னாதே.அதாவது தானும் மடிந்து பிறரையும்மடிய வைக்கும் என்றெண்ணாதே.இந்த ஜீவன் உடலுப்புகளைக் கொண்டிருந்தாலும் அழிவற்றது.மேலும் சேதனன் என்னும் இந்த ஜீவன் எவரையும் அழிப்பதுமில்லை. தானும் அழிவதில்லை.

அர்ச்சுனன்: மாதவா! ஏன் அப்படி அமைந்திருக்கிறது?

கண்ணன் : ஜீவனை சரீரி ( உடல் பெற்றது) என்பர்.இது பிறப்பு இறப்புகளைக் கடந்தது.அதாவது பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை.நித்தியமாக நிரந்தரமாக இருப்பது.சரீரம் அழிந்த பிறகும் அதில் குடிகொண்டிருக்கும் ஜீவன் நிலைபெற்றது.

அர்ச்சுனன்: இதை எப்படி உணர்வது? உணர்வதால் என்ன பயன்?

கண்ணன்: பார்த்தனே! எந்த மனிதன் இந்தப் பெளதீக உடலை கடந்த ஜீவனை அழிவில்லாதது. நித்தையமானது.பிறப்பும் இறப்பும் இல்லாதது என்பதை நன்கு உணர்கிறானேர் அவன் ப்றரைக் கொல்வதாகவோ பிறரை கொல்லச் செய்வதாகவோ எப்படி நினைப்பான்?

அர்ச்சுனன்: பரமனே! அப்படியானால் இறப்பது யார்?

கண்ணன்: அர்ச்சுனா சரீரம் தான் அழிகிறது “சரீரி” அழிவதில்லை . மனிதன் எவ்வாரு பழைய ஆடைகளை களைந்து விட்டு புதிய ஆடைகளை உடுத்துகிறானோ அதேபோல் ” சரீரி” என்னும் ஜீவன் பழைய உடல்களைத் துறந்துவிட்டு புதிய உடல்களுக்குள் புகுந்து குடியிருக்கச் செல்கின்றது.

அர்ச்சுனன்: புதுப்புது உடல்களில் குடி புகுவதால் உயிருக்குக் எதாவது மாறுதல்கள் ஏற்படுமல்லவா

கண்ணன்: எந்த மாறுதல்களும் ஏற்படாது. ஏனெனில் இந்த சரீரியை ( உயிரை) எந்த ஆயுதத்தாலும் அழிக்க முடியாது.தீயாலிது எரிக்க முடியாது.தண்ணீரால் இது கரைந்துவிடாது.காற்றால் இதை காய வைக்கவோ சிதறடிக்கவோ முடியாது.

அர்ச்சுனன்: கண்ணா! இந்த உயிர் ஏன் யூகப் பொருட்களால் பாதிக்கப்படுவதில்லை?

கண்ணன்: இந்த சரீரி என்னும் ஜீவனை தகர்க்கவோ, எரிக்கவோ, நனைக்கவோ, வற்றச் செய்யவோ எதனாலும் இயலாது.காரணம் இது நித்தியமாக- சாசுவதமாக இருப்பது.எல்லா வகையிலும் பரிபூரணமானது-நிலையான இயல்பு கொண்டது- சஞ்சமில்லாதது -தொன்றுதொட்டு இருந்து வருவது .இந்த ஜீவன் புலன்களுக்கு அடங்காதது.அதனால் நேரிடையாக காணவும் முடியாதது.இதை உள்ளுணர்வாலும் அறிய முடியாது இதில் எவ்வித மாறுதலும் ஏற்படுவதில்லை. இந்த உண்மைகளை உணர்ந்து கொண்டு இந்த ஜீவனைக் குறித்து நீ வருத்தபடவேண்டாம்.

அர்ச்சுனன்: அர்ச்சுதா! இந்த சரீரியை ( உயிரை) மாறுதலற்றது, அழிவற்றது என்பதை உணர்ந்து கொண்டபின் வருத்தமோ கவலையோ ஏற்படலாகாது உண்மை. ஆனால் அந்த உணர்வு ஏற்படாத வரையிலும் வருத்தம் ஏற்படத்தானே செய்யும்?

கண்ணன்: வலிமை மிக்க வில்லாளியே! நீ இந்த உயிரை பிறப்புக்கும் இறப்புக்கும் இலக்கானதாக கருதினாலும் அதையிட்டு வருத்தப்படக்கூடாது.காரணம் பிறந்தது இறக்கத்தான் செய்யும்.இறந்தது பிறகு பிறக்கத்தான் போகிறது.இந்த நியதியை எவராலும் ஒதுக்கிவிட முடியாது.ஆகையால் அழிந்து,பிறகு பிறக்கும் உடல்களைக் குறித்து நீ சோகம் கொள்ளலாகது.

அர்ச்சுனன்: சரீரி என்னும் உயிருக்காக சோகப்படலாகாது என்பது சரி தான்.ஆனால் சரீரத்துக்காக வருத்தப்பட வேண்டித்தானே இருக்கிறது?

கண்ணன்: இல்லை அர்ச்சுனா! எந்தச் சரீரத்துகாகவும் வருத்தப்படக்கூடாது. எல்லாப் பிராணிகளும் பிறப்பதற்கு முன்பு புலப்படாதவை. நடுவில்மட்டும் தான் புலபப்டுகின்றன இதற்காக வருத்தபடுவான் ஏன்?

அர்ச்சுனன்: கண்ணா! எப்படியும் கவலை எற்படுகிறது ஏன்? எப்படி அறிவது?

கண்ணன்: அறியாமைதான் காரணம்.ஜீவ தத்துவத்தை ஜம்புலன்களால் ( மெய்,வாய்,கண்,மூக்கு,செவி) மனத்தாலும் அறிவாலும் புரிந்துகொள்ளவோ, உணரவோ இயலாது.ஆகையால் ” சரீரியை” பார்ப்பது,பேசுவது,கேட்பது,எல்லாமே வியப்பாகத்தான் இருக்கும்.பிரமை பிடித்த வியப்பு இதை பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும் முடியாது.நமக்குள் நாமே சிந்தித்து உணர வேண்டும் இதற்கும் ஆழ்ந்த சிந்தனை தேவை.

அர்ச்சுனன்: அந்த உணர்வு எத்தகையது கண்ணா?

கண்ணன்: பரதவம்சத்துச் செல்வனே! எல்லா உடல்களிலும் உள்ள இந்த உயிர் என்னும் உள்ளது.அழிவற்றது. அழிக்க இயலாதது.இந்தத் தத்துவத்தை திடமாக உணர்ந்து கொண்டபின் எந்தப் பிராணிக்காகவும் ஏன் வருத்தப்பட வேண்டும்.

அர்ச்சுனன்: கண்ணா! வருத்தத்தை விலக்கிகொள்ள பல அறிவுரைகளைச் சொன்னீர்கள். ஆனால் எனக்கு இப்போது எற்பட்டிருக்கும் அச்சத்தையும் பாவச் செயல்களினால் ஏற்படும் பயத்தையும் எப்படிப் போக்குவது?

கண்ணன்: அர்ச்சுனா! உன் ஷத்திரிய தர்மத்தை( கடமையை) ச் சர்ந்தாவது நீ பயப்படாமல் இருக்க வேண்டும்.காரணம் வீரர் குலத்தவர்களான சஷ்த்திரியர்களுக்கு போரிடுவதுதான் தர்மம் இதைவிட நலம்தரும் வேறுசெயல்கள் ஒன்றுமில்லை.

அர்ச்சுனன்: அப்படியானால் சஷத்திரியர்கள் போர் புரிந்துகொண்டே இருக்கவெண்டுமா?

கண்ணன்: இல்லைத் தம்பி போர் எற்படும்போது போரிட வேண்டிய கட்டாயம் ஏற்படும்போது சஷத்திரய தர்மம் போரிடுவதுதான் அதுவே சுவர்க்கம் புகும் தலைவாசல் .பார்த்தா! போரிடும் வாய்ப்பைப் பெறும் சஷத்திரியர்கள் பாக்கியசாலிகள்.உண்மையில் அவர்கள் உத்தமமான சுகம் பெறுகிறார்கள்.சுவர்க்கம் புகுகிறார்கள்.

அர்ச்சுனன்: கண்ணா! வலுவில் வந்த போரை நாம் தவிர்த்துவிட்டு நான் ஒதுங்கி போனால் என்ன ஆகும்?

கண்ணன்: இது அறப்போர் .இதை நீ செய்யாவிட்டால் உன் சஷ்த்திரிய தர்மமும் இதுவரை நீ ஈட்டிய புகழும் அழியும் நீ உன் கடமையைச் செய்யாததால் உனக்குப் பாவமும் வந்து சேரும்.

அர்ச்சுனன்: புகழ் அழிந்து அபகீர்த்தி ஏற்பட்டால் என்ன ஆகும்?

கண்ணன்: அன்புள்ள் தம்பி! நீ போர் புரியாவிட்டால் தேவதைகள்,மனிதர்கள் எல்லோரும் உன்னை இகழ்வார்கள்.வெகு காலம்வரையும் நீ கடமை தவறிய குற்றத்தை சொல்லிக் காட்டுவார்கள்.இந்த அவப்பெயர் மதிக்கத்தக்க பெருமை கொண்ட உன் போன்ற மனிதனுக்கு மரணத்தைவிட கொடிய துன்பம் தரும்.

அர்ச்சுனன்: மாதவா! மேலும் என்ன ஆகும்?

கண்ணன்: உன்னை பீஷ்மர்,துரோணர் முதலான மாவீரர்கள் வீரபுருசனாக மதிக்கிறார்கள்.அந்த மதிப்பும் போய்விடும்.நீ சாவிற்கு பயந்து கோழையாகி போரிடாமல் ஓடிவிட்டதாக கருதுவார்கள்.

அர்ச்சுனன்: பகவானே! இந்த அவமதிப்பை என்னால் சகித்துக் கொள்ளமுடியாதா?

கண்ணன்: உன்னால் முடியவே முடியாது. மிகப்பெரிய பயங்கரமான மோசமான விளைவுகள் ஏற்படும். உன் எதிரிகளுக்கு பழிவாங்க சந்தர்ப்பம் கிடைத்துவிடும்.அவர்கள் உன் வீரதீர பிரதாபத்தை எள்ளி நகையாடுவார்கள்.இழி சொற்களால் உன்னை ஏசுவார்கள். தூற்றுவார்கள்.இதைவிட துன்பம் வேறு இருக்கமுடியுமா?

அர்ச்சுனன்: சரி நான் போர் புரிந்தால்?

கண்ணன்: போரிட்டவாறு நீ இறந்தாலும் உனக்கு பெருமை சுவர்க்க லோகமும் கிடைக்கும். வென்று விட்டாயானால் இவ்வுலகை அரசாளும் மகிமை மாட்சி கிட்டும். ஆகையால் குந்திதேவியின் மைந்தனே! போர் புரியும் தீர்மானத்துடன் ஆயத்தமாகு. காண்டீபத்தை கையிலெடு.

அர்ச்சுனன்: கேசவா! போர்புரிவதால் பாவம் எற்படாதா?

கண்ணன்: நீ நடுநிலையான மனப்பாங்குடன் கடமையைச் செய். வெற்றி தோல்வி,லாபம்,நட்டம்,இன்பம்,துன்பம் இவைகளில் சமபுத்தியை ஏற்படுத்திக்கொள்.இந்நிலையில் நீ போர்புரிந்து பகைவர்களைஅழிப்பதால் உனக்கு பாவம் ஏற்பட்டது.

அர்ச்சுனன்: கண்ணா! பாவம் ஏற்படுத்தாத சமபுத்திக்கு மேலும் என்ன சிறப்புள்ளது?

கண்ணன்: இந்த சமநிலை அறிவு ( சமபுத்தி) பற்றி முன்பே உனக்கு சாங்கியயோகம் பகுதியில் கூறியிருக்கிறேன்.இப்போது “கர்மயோகம்” (செயல்பாடு) சார்ந்த கருத்திலும் சமபுத்தியின் சிறப்பை சொல்கிறேன்.
1. நடுநிலை மன்ப்பாங்கு ( சமபுத்தி) கொண்டுள்ள நீ எல்லாக் கருமபந்தங்களிலும் இருந்து விடுபடுவாய்
2.சமபுத்திக்கு துளியும் அழிவு ஏற்படாது.

3.இதை மேற்கொண்டால் எதிரிடையானவிளைவும் ஏற்படாது.
4.இதைச் சிறிதளவு சார்ந்த அச்சத்திலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.

அர்ச்சுனன்: கண்ணா! நீங்கள் புகழ்ந்துபேசும் சமபுத்தி நிலையை எட்ட என்ன வழிகள்?

கண்ணன்: இந்நிலையை எட்ட முதலில் உன் அறிவை ஒரே இலட்சிய முனைப்பிற்கு ஆயுதப்படுத்திக் கொள்ள வேண்டும். பரம்பொருள் தத்துவம் ஒன்று அதை எட்டவேண்டும் என்ற திடமான நிச்சயம் ஏற்பட வேண்டும்.
திடநிச்சயமுள்ள புத்தியை செயலாற்றல் மிக்க ஒருமுனைப்புள்ள் அறிவு என்பர்..இந்த நிச்சயமில்லாத புத்தி மனிதனை பல வழிகளிலும் இட்டுச் சென்று அல்லல்ப்படுத்தும். பல பிரிவுகளைக் கொண்டதாக அது பிரிந்து சிதைந்து செயல்படுத்தும்.

அர்ச்சுனன்: ஒரே முனைப்புள்ள நிச்சயம் மனித புத்திக்கு ஏன் எளிதாக ஏற்படுவதில்லை?

கண்ணன்: அறியாமைதான் காரணம். இந்த அறியாமை எப்படி ஏற்படுகிறது? ஆசாபாசங்களுக்கு அடிமையானவர்கள் .சுவர்ககலோக சுகபோகத்தை மேலாக கருதுபவர்கள். வேதத்தின் கர்ம காண்ட பகுதிகளில் கூறப்பட்டுள்ள விருப்பங்களுக்கு ஏற்ற கர்மாக்களில் பற்றுதல்ல் கொண்டவர்கள். பெளதீக சுகபோகம் வாழ்க்கையின் பயன் என்று நம்பி வாழ்பவர்கள். இத்தைகைய மனிதர்கள் மலர்ந்து மனம் வீசும் மலர்களைப்போல் கவர்ச்சிமிக்க வாக்குக்ளைத் தம் கருத்துகளைச் சாதகமாக பேசி வருவார்கள்.அவர்களுடைய கவர்ச்சிப் பேச்சுக்கள் மாறி மாறிப் பிரவிகளைத் தரும் சுயநலச் செயல்களை சிலாகிப்பவை,சுகபோகம்,செல்வம்,செல்வாக்கு ஆகியவைகளைப் பெற உதவும் அற்பச்செயல்களை விபரிப்பவை.நறுமண மலர்களில் உள்ள கவர்ச்சி இந்த ஜனகரஞ்சகப் பேச்சுகளிலும் இருக்கும். ஆனால் இம்மலர்களைப் போலவே அவை விரைவில் வாடி உருகுலைத்துவிடும்.அப்பேச்சுகளில் மயங்கி உழல்பவைகளின் கதியும் அப்படித்தான் சுயநலம் சுகபோகம் என்று உழலும் மனிதர்கள் பரமாத்மாவிடம் ஈடுபடும் என்றும் உறுதியான் அறிவை பெற முடியாது.

அர்ச்சுனன்: சுகபோகம், செல்வம்,செல்வாக்கு அகியவைகளில் ஏற்படு, பற்றுதலிலிருந்து விடுபட நான் என்ன செய்ய வேண்டும் பரமாத்மாவே வழி காட்டுங்கள்.

கண்ணன்: வேதங்கள் சத்துவம் ரஜஸ் தமஸ்(அடக்கம்,மிடுக்கு,வெறி) எனும் முக்குணங்களைக் கொண்ட உலகியல் வாழ்வை விவரிக்கின்றன.
அர்ச்சுனா! வேதங்கள் விவரிக்கும் ஆசாபாசங்கள் நிரம்பிய செயல்களில் நீ பற்றுதல் கொள்ளாதே ,விருப்பு,வெறுப்பு எனும் தளைகளிலிருந்து நீ தவித்திரு.சாசுவதமான பரமாத்துவத்தில் (உடல் அழிவற்றது.உடல் அழிவும் மாற்றமும் கொண்டது)எனும்

திடலுணர்வுடன் நிலை பெற்று இரு.கிடைக்காத பொருளைப் பெறவும்.கிடைத்த பொருளைப் பாதுகாக்கவும் கவலைப்படாதே முயற்சிக்காதே.பரம்பொருளைப் பெறும் ஒரே இலட்சியத்தில் உறுதியுடன் நிலைத்திரு.!

அர்ச்சுனன்: அப்படி ஒரு இலட்சிய நிலைப்பாட்டில் திடமாக இருப்பவர்களுக்கு என்ன ஏற்படும் கண்ணா?

கண்ணன்: அர்ச்சுனா! பெரிய அழகில் குளம் ஒன்று உருவானபின் அதற்கு முன் பயன்படுத்திவந்த சிறியகுட்டை தேவையில்லாமல் போகிறது.அதன் மதிப்பும் மறைந்து விடுகிறது.அதெபோலத்தான் வேதங்களின் பரந்த தத்துவங்களையும் ,சாஸ்திரங்களின் போதனைகளிஅயும் நன்கு அறிந்த ஞானிகள் வாழ்ந்தும் துறந்தும் நிற்கும் மகாபுருஷர்கள்.இவர்களை ஜீவன் முத்தர் ( வாழ்ந்த நிலையிலேயே பற்றுதலின்றி இருக்கும் பெருமை பெற்றவர்கள்) என்பர்.இந்த மகான்கள் உலகியல் சுகபோகங்களுக்கும் செல்வம்,செல்வாக்கு போன்ற வைபவங்களுக்கும் மதிப்பு அளிப்பதில்லை.அவைகளை விரும்பவும் மாட்டார்கள்.

அர்ச்சுனன்: கண்ணபிரானே! நான் அந்த ஜீவன் முக்த நிலையைப் பெற என்ன செய்ய வேண்டும்?

கண்ணன்: கர்ம யோகத்தைக் கடைப்பிடி.செயலில் முனைப்புதான் கர்மயோகம் செயலின் விளைவைப் பற்றிச் சிந்திக்காமல் செயல்திறன் பற்றியே சிந்தித்து முனைவது யோகம் .செயல்புரிவது உன் கடைமை பலனை எதிர் நோக்குவது அல்ல.செயல் முனைப்புதான் உனக்கு உரியது.மேலும் கர்மபலன்களுக்கு நீ காரணமாகதே அதாதவது நீ செயலாற்றுவதற்கு உறுதுணையாக இருக்கும்.உன் உடல்,உள்ளம் அறிவு முதலியவற்றில் பற்றுதல் வைக்காதே.

அர்ச்சுனன்: அப்படியானால் நான் ஏன் செயலாற்ற வேண்டும்?

கண்ணன்: செயலாற்றாமல் இருப்பதிலும் நீ ஈடுபாடு கொள்ளக்கூடாது.பற்றுதல் எதிலும் இருக்கலாகாது.

அர்ச்சுனன்: அப்படியானால் நான் செயல் புரியமுடியும்?

கண்ணன்: செயலில் நிறை குறை வெற்றி தோல்வி ஆகியவற்றில் நடுநிலையுடன் இருத்தல் “யோகம்” ஆகையால் தனஞ்சயா! நீ பற்றுதல்,விருப்பு வெறுப்பு இவைகளைப் புறக்கணித்து விட்டு சமநிலையில் நிலைத்திருந்து கர்மத்தை செய்!

அர்ச்சுனன்: சமநிலையில் நிற்காமல் நான் செயல் புரிந்தால் என்ன ஆகும்?

கண்ணன்: விருப்பு -வெறுப்பற்ற சமநிலையுடன் செய்யாத செயல் இழிவையே தரும். தனஞ்சயா ! நீ சமநிலை, சமபுத்தியை மேற்கொள். செயலின் விளைவை ( பயனை) விரும்புவன் அற்பன்.அவனது சுயநலபுத்தி செயலைவிட்டு பயனில் ஈடுபடுகிறது.பயனுக்கு அடிமையாகிறது.

அர்ச்சுனன்: கர்மபலனை விரும்புவன் அற்பன் என்றால் சிறந்தவன்( மேலானவன்) எவன்?

கண்ணன்: சமபுத்தி கொண்டவன் சிறந்த மனிதன். அவன் இந்த மானிட வாழ்கையிலேயே பாவ -புண்ணியயங்களுக்கு அப்பாட்பட்டவனாகிரான்.ஆகையால் அர்ச்சுனா! நீ சமநிலை, சமபுத்தியில் திடமாக நிலைத்திரு.இதுதான் செயல்த்திறன்.

அர்ச்சுனன்: சமபுத்தியின் விளைவு என்ன?

கண்ணன்: “யோகம்” எனப்படும் சமபுத்தி,சமநிலை, சமநிலை கொண்டமனீஷி( மெய்ஞானி) செயலின் பயனில் பற்றில்லாதவர்.அவர் பிறவித் தளையிலிருந்து விடுபட்டு , உன்னதமான் அழியாப் பெரும் பதவியைப் பெறுவார்.

அர்ச்சுனன்: செயலின் பயனைத் துறந்த சமநிலையை நான் எப்படிப் பெறுவேன்,எப்போது உணர்வேன்?

கண்ணன்: அர்ச்சுனா! எப்போது உன் அறிவு மோகம் எனும் சக்தியைக் கடக்கிறதோ , அப்பொதே உனக்குள் நீ உணர்ந்த கேள்விப்பட்ட யோகங்களிருந்து பற்றின்மை ஏற்பட்டுவிடும்.

அர்ச்சுனன்: வைராக்கியம் ஏற்பட்டபின் யோகம் எனும் சமநிலை எப்போது ஏற்படும்?

கண்ணன்: பலவையான் சாஷ்திரங்களின் சித்தந்தங்கள் கருத்து வேறுபாடுகள் ஆகியவற்றால் சஞ்சலப்பட்டிருக்கும் உன் புத்தி உலகியல் வாழ்விலிருந்து விடுபட்டு பரம்பொருளான் பரமாத்மாவிடம் திடமாக ஈடுபடும்போது உனக்கு யோகநிலை சித்திக்கும்.

அர்ச்சுனன்: யோகநிலை சித்திபெற்ற திடமதி கொண்ட மனிதனுக்கு என்ன் அடையாளங்கள்?

கண்ணன்:  பார்த்தா! சமநிலை பெற்றவர் மனத்திலுள்ள விருப்பங்களையெல்லாம் ஒதுக்கி விடுவார் .தன்நிலையிலிருந்து தமக்குள்ளேயே மகிழிச்சி அடைகிறார்.அவர் “ஸ்திதப்ராக்ம்ஜர்”(நிலையான் சமபுத்தி பெற்றவர்.)

அர்ச்சுனன்: ஸ்திதபிரக்ஞன் எப்படிச் கருத்தை வெளியிடுவான்?

கண்ணன்: தம்பி! சாதரண மனிதர்களைப் போல் பேசுவதில்லை.சமபுத்தி- சமநிலை கொண்டஞானி.அவருடைய செயலும் குறிப்பும் சீரிய கருத்துகளை வெளிப்படுத்தும்.அந்த ஸ்திதபிராக்ஞர் நிகழ்காலத்தில்வாழ்ந்து கொண்டிருந்தாலும் துன்பம், துயரம், சோதனை, விபத்து எனும் கேடுகள் ஏற்படும் போது வருந்துவதில்லை.சுகம், செளக்கியம், புக்ழ், செல்வம்முதலிய நலன்கள் கிட்டும்போது மகிழ்ச்சி கொள்ளுவதில்லை அந்த ஞானி ஆசை,பயம்,பாசம்,குரோதம்,பகை ஆகிய இயல்புகளைக் கடந்தவராக இருப்பார்.

திடசிந்தனௌம் சீரீய கர்ய்த்துகளையும் கொண்ட அந்த சமபுத்திஸமநிலைச் சாதகரைத்தான் “ஸ்திதபிரக்ஞர்”என்று அழைப்பார்கள்.அவர் எல்லா நிலைகளிலும் செயல்களிலும் பற்றுதல் இல்லாதவர்.முன்வினைப் பயனாக அநுகூலமான் வாய்ப்பு வரும்போது மகிழ்சியடைய மாட்டார்.பிதிதிகூலமான சந்தர்ப்பம் ஏற்படும்போது வெறுப்படைய மாட்டார்.அவருடைய அற்வு திடமாக நிலைபெற்றிருக்கிறது.பரமாத்மாவோடு இணைய வேண்டுமென்கிற தீர்மானத்துடன் வாழும் அவர் சித்த புருஷ்ர்.

அர்ச்சுனன்: அந்த சித்த புருஷ்ர் எப்படி அமர்கிறார்?

கண்ணன்: அர்ச்சுனா! எப்படி ஆமை தனது நான்கு கால்களையும் கழுத்தையும் வாலையும் முதுகு ஓட்டுக்குள் ஒடுங்குமாறு உள்ளடக்கிக் கொண்டு கிடக்கிறதோ,அதே போல கர்மயோகியான “ஸ்திதபிரக்ஞர்” தம் ஜம்புலன்களையும் மனத்தையும் பெளதீக விஷயங்களிலிருந்து விலக்கி ,தம் உள்ளுணர்வில் அடக்கிக் கொள்ளுகிறார். அந்நிலையில் அவருடைய அறிவு சமநிலையில் திடமாக இருக்கிறது.

அர்ச்சுனன்: ஜம்புலன்களையும் ஒடுக்கி ஒருமுகப்படுத்துதலுக்கு நேரிய அடையாளம் எது?

கண்ணன்: ஜம்புலன்களையும் தம் இலக்கான விஷயங்களிலிருந்து ( அநுபவங்களிலிருந்து) ஒதுக்கி வைக்கும் தேகாபிமனியான மனிதனிடமிருந்து அந்த விஷயங்கள் விலகிவிடுகின்றன.ஆனால் சுவை உணர்வு கொண்ட போகரஸபத்தி ( சுவை உணர்வு) விலகுவதில்லை.ஆனால் பரமாத்மாவை அடையும் சித்த புருஷனின் சுகபோக புத்தி கூட விலகிவிடுகிறது.

அர்ச்சுனன்: ரஸபுத்தி எனப்படும் சுவையை நாடும் அறிவு இருப்பதால் என்ன கேடு?

கண்ணன்: ரஸபுத்தி இருப்பதால் விஷய சாதனங்களில் பற்றுக் கொண்ட மனிதன் எவ்வளவுதான் விவேக ஞானம் உள்ளவனாக இருந்தாலும் ,குழப்பம் விளைவிக்கும் புலன்கள் அவனது மனத்தை வலுக் கட்டாயமாக விஸய அநுபவங்களில் ( உலகியல் இன்பத்தில்) ஈடுபட இழுத்துச் செல்லுகின்றன.

அர்ச்சுனன்: ரஸபுத்தியை விலக்குவதற்கு என்ன செய்யவேண்டும்?

கண்ணன்: கர்மயோகி சாதகர் எல்லாப் புலன்களையும் அடக்கித் தம் வசத்தில் இருத்தி பரமாத்மாவாகிய என்னை தியானித்து சரணடைய வேண்டும்.என் மீது நம்பிக்கை வைத்து,வேறு சிந்தனை கவலை இல்லாமல் இருக்க வேண்டும்.இவ்வாறு தம் புலன்களை அடக்கி வசப்படுத்தியவரின் புத்திநிலை பெற்று விளங்கும்.

அர்ச்சுனன்: பரமாத்மாவே! உங்களைச் சணடையாமல் இருந்தால் என்ன ஆகும்?

கண்ணன்: என்னை சரணடையாமல் இருந்தால் புலன்கள் விரும்பும் விஷய அநுபவங்களில் சிந்தனை செல்லும். மனிதனுக்கு அவைகளில் ஈடுபாடு ஏற்படும் .அவைகளை அநுபவிக்க வேண்டுமென்ற ஆசை ஏற்படும்.

அர்ச்சுனன்: ஆசை ஏற்பட்டபின் என்ன ஆகும்?

கண்ணன்: ஆசை வளரும். ஆசை நிறைவேறத் தடையோ தடங்கலோ ஏற்படும்போது வெறுப்பு மிகுந்த கோபம் ஏற்படும் பிறகு மதிமயக்கம், மூடத்தனமெல்லாம் வளரும்.

அர்ச்சுனன்: அதன் பிறகு என்ன ஆகும்?

கண்ணன்: நல்ல சிந்தனை ,மனப்பக்குவம்,பகுத்தறியும் விவேகம் எல்லாம் விலகிவிடும்.பழைய பரிபக்குவ நினைவே இல்லாமல் போகும்.இதன்னல் புத்தி சக்தி குலையும் தொடர்ந்து மனிதன் அழிவைத்தான் எட்டுவான்.

அர்ச்சுனன்: ஸ்தித பிரக்ஞரின் நிலையை உணர்த்தினீர்கள் கேசவா! அவர் எப்பட்ய் நடந்து கொள்வார் என்பதைச் சொல்லுங்கள்?

கண்ணன்: தம்பி! நிலைபெற்ற பிரக்ஞையுள்ள சாதகரின்நடவடிக்கை செயல் வடிவில் இராது.கருத்து வெளிப்பாடாக இருக்கும். புலனடக்கம்,மனவடக்கம் கொண்டசாதனையாளர் அவர்,விருப்பு -வெறுப்புகளைக் கடந்தவர்.தம் வசமுள்ள புலன்கள் மூலம் உலகியல் அனுபவங்களில் ஈடுபட்டிருந்தாலும், உள்மனத்தின் திருப்தியுடன் வாழ்கிறார்.

அர்ச்சுனன்: உள்மனம் எனும் அந்தக்கரணத்தின் திருப்தியைப் பெற்றபின் என்ன ஆகும்?

கண்ணன்: அத்தகைய திருப்தி கொண்ட மனிதரின் எல்லாத் துயர்களும் நசித்து விடுகின்றன.அந்த சாதகரின் சமபுத்தி விரைவிலேயே பரமாத்மாவோடு நிலையாக இணைந்து விடுகிறது.

அர்ச்சுனன்: எவருக்கு புத்தி நிலைபெறுவதில்லை?

கண்ணன்: எந்த மனிதனின் மனமும் இந்திரியங்களும் அடங்கி இருக்கவில்லையோ .அவனிடம் நிலைபெற்றிருக்கும் சம புத்தி ஈராது.அவனுக்குத் தன் கடமை உனர்வில் பிடிப்பு இராது.கடமையில் திட்மான ஈடுபடு இல்லையேல் ,அமைதி கிட்டாது.அமைதியை இழந்த மனிதனுக்கு மகிழ்ச்சி ஏது?

அர்ச்சுனன்: உலகியல் உழல்பவனிடம் புலன்கள் அடங்கி இராது.ஆனால் சாதகராக இருப்பவருக்கும் நிலையான் சமபுத்தி ஏற்படாமல் போவதற்கு என்ன காரணம்?

கண்ணன்: காரண்ம் புலனடக்கமும் மனவடக்கமும் இணைந்து வசப்பட்டு இராததுதான். நீரில் செல்லும் ஓடத்தை காற்று தன் திசையில் இழுத்துச் செல்வதைப் போலே ,சாதகரின் புலன்கள் தம் விஷயங்களில் ஈடுபட்டிருக்கும்போது ஏதாவது ஒரு புலன் சஞ்சலமான் மனத்துடன் இணைந்து விட்டால் போதும்.அந்த மனமே சாதகரின் புத்தியைக் குலைத்துவிடும்.சமநிலைகெட்டுவிடும்.

அர்ச்சுனன்: பின் எவருக்கு த்தான் புத்தி நிலைபெறுகிறது?

கண்ணன்: வீரத்திருமகனே! ஜம்புலன்களும் எவருக்கு முழுவதும் கட்டுபப்ட்டு இருக்கின்றனவோ, எவருடைய உள்ளம் பெளதீக விஷய அநுபவங்களில் பற்றுதலின்றி இருக்கிறதோ, அத்தகைய சாதகரின் பிரக்ஞை( பகுத்தறிவு) ஒரே குறிக்கோளில் நிலைபெற்று இருக்கிறது.

அர்ச்சுனன்: எவருக்கும் புலனடக்கம் இல்லையோ அத்தைகைய சாமானிய மனிதருக்கும், புலனடக்கம் உள்ள சாதகருக்கும் உள்ள வெளிப்படையான வித்தியாசம் என்ன?

கண்ணன்: புலன் அநுபவங்களுக்கு இலக்காகி உழலும் சாமனிய மனிதர் பரமாத்தாவுடன் இணையும் சாதனையில் ஈடுபடாமல் மதிமயங்கி மோக நித்திரையில் ஆழ்ந்திருப்பார்.அக்காலம் அவர்களுக்கு இருள் சூழ்ந்த இரவு ,அத்தகைய இராக்காலத்தில் அடக்கம் மிக்க ஞானிகள் விழித்திருப்பார்.பரமத்ம தத்துவதத்தில் இலயிருத்திருப்பார்கள். சாமானிய மனிதர்கள் விழிப்புணர்வுடன் சுகபோகங்களை அநுபவித்தும் பொருள் சம்பாத்தித்தும் பொழுது போக்கும் காலத்தில், ஞானிகள் ஆத்மலயிப்பில் அமைதியுடன் மூழ்கியிருப்பார்கள்,இதைதான், சாமானியயர்கள் மதிமயங்கி உறங்கும் இரவு ஞானிகளுக்குப் பகல் என்றும் சாமனியர்கள் அமைதி காணும் இரவு என்றும் சொல்வார்கள்.

அர்ச்சுனன்: அப்படியானால் அடக்கம் உள்ள சாதகர்களுக்கு எதிரில் பெளதீக சுகபோகப் பொருள்கள் வருவதில்லையா?

கண்ணன்: வருவதுன்டு இதனால் அடக்கமுள்ள சாதகர் சஞ்சலம் அடைவதில்லை.எப்படிக் கம்பீரமான் கடல் தம்மிடம் வந்து சங்கமிக்கும் நதிகளால் எந்த மாற்றத்தையும் பெறுவதில்லையோ,அதே போலத்தான் அடக்கமுடையோர் எதிரில் உலகியல் சுகபோகப் பொருள்கள் எதிர்ப்படுகின்றன.இதனால் அவர்களூடைய மனம் பேதலிப்பதில்லை.இத்தகைய மாமனிதர்கள் தான் பரமாத்ம தத்துவமான பரம சாந்தியைப் பெறுகிறார்கள்.போக விசயங்களில் ஈடுபாடு கொண்ட சம்சாரிகளுக்கு இந்தப் பேரமைதி கிட்டாது.

அர்ச்சுனன்: ஆசாபாசம் உள்ள சம்சாரிகளுக்கு ( சாந்தி) எப்படிக் கிட்டும்?

கண்ணன்: சுகபோகங்களில் ஏற்படும் ஆசாபாசங்களை முற்றிலும் துறந்து விட்டால் அமைதி பெறலாம்.எந்த மனிதன் எல்லா ஆசைகளையும் பாசங்களையும் விடுவதோடு தான் தனது எனும் செருக்ககையும் துறந்து வாழ்கிறனோ,அவனுக்கு சாந்தி கிடைக்கும்.

அர்ச்சுனன்: புருஷோத்மரே!செருக்கைத் துறந்த சாதகரின் நிலைப்பாடு எப்படி இருக்கும்?

கண்ணன்: செருகொழிந்த சாதகரின் நிலைப்பாடு பிரும்பத்தில் ஈடுபட்டிருக்கும் பார்த்தா! இதைத்தான் பிரும்ம நிலை என்பர்.இந்நிலையை எட்டியதும் அந்த சாதக மனிதர் எக்காலத்திலும் மோக பாசத்தில் சிக்கமாட்டார்.தம் இறுதிக் காலத்திலும் பிரும்ம நிலையில் இருப்பவர்.நிர்வாண பிரும்மம் எனும் பரம சாந்தி நிலையில் முக்தி பெறுகிறார்

03.கர்ம யோகம்

அர்ச்சுனன்: ஜனார்த்தனா! உங்கள் கருத்துப்படி ஞானபுத்தி எனும் மெய்யறிவுதான் தலைசிறந்தது என்றால் நான் உத்தமமான ஞான்புத்தியை நாடாமால் கொடுமையான செயலில் ஈடுபட வேண்டும் என்று ஏன் என்னை வற்புறுத்துகிறீர்கள்? நீங்கள் இரண்டையும் சொல்லுகிறீர்கள்! ஒருமுரை செயலில் ஈடுபடு! என்கிறீர்கள். மறுமுறை மெய்யறிவை நாடு என்கிறீர்கள்.கேசவா!உங்களுடைய இந்த மாறுபட்ட அறிவுரையால் எனக்குத் தடுமாற்றம் குழப்பம் ஏற்படுகிறது. தீர்மானமாக ஒருவழியை எனக்குக் காட்டுங்கள். அதன் மூலம் நான் ந்லன் பெறவகை செய்யுங்கள்.

கண்ணன்:தீமையை விரும்பாத இயல்பு உள்ள அர்ச்சுனா!இந்த மனித உலகில் இருவகையான் ஈடுபாட்டை முன்னே கூறியிருக்கிரேன். சாணக்கிய யோகிகளுக்கு ஞான யோகத்திலும் சாமனிய யோகிகளுக்கும் கர்ம யோகத்திலும் ஈடுபாடு இன்றியமையாதது. இரண்டின் இலட்சியமும் ஒன்று தான்.ஞான யோகத்தாலும் கர்ம யோகத்தாலும் ஒரே நிலையிலுள்ள சம புத்திஎ எற்படுகிறது.இரு யோகங்களின்வழிமுறைகளை நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். இலட்சியத்தின் முனைப்பு இருக்க வேண்டும்.

அர்ச்சுனன்: அந்த சமபுத்தி நிலையை எட்ட எவ்வகைக் கருமத்தை புரிவது அவசியமாகிறது?

கண்ணன்:செயல் புரிவதுதான் அவசியம். மனிதன் செயலாற்றல் உள்ளவன். செயல் புரியாதிருந்தால் அவனது ஆற்றல் வீணாகி விடும்.செயல் புரியாமல் பயனை எட்டவே முடியாது.சாதனை மூலம் தான் சித்தி கிட்டும்.சமபுத்தியை பெற செயல் புரியத் தொடங்க வேண்டும்.செயலைப் புறக்கணிக்கவே கூடாது.

அர்ச்சுனன்: செயல் புரிவதைப் புறக்கணிப்பதால் சமபுத்தி கிட்டாதா?

கண்ணன்: இல்லை.எந்த மனிதனும் எந்த நிலையிலும் ஒரு கணநேரம் கூட செயற்பட்டால் இருக்க முடியாது.எனெனில் இயற்கையாக ஏற்பட்டுள்ள இயல்புகள் உரிரனங்களை இயக்குகின்றன. செயல் புரிவது பிராணிகளின் உடன் பிறந்த சுபாவம்.இதை எந்தப் பிராணியாலும் தவிர்க்கவோ தடுக்கவோ முடியாது.

அர்ச்சுனன்: சரி மனிதன் எதுவும் செய்யாமல் மெளனியாக அமர்ந்திருந்தால் அது செயலைத் துறந்ததாக அமையாதா?

கண்ணன்: அது செயல் துறவு ஆகாது.புலன்களைப் வெளிப்படையாக செயல்பட விடாமல் உள்ளத்தில் பலவற்றையும் சிந்தித்துக் கொண்டிருப்பதும் செயத்துறவு ஆகாது.இது மூடர்கள் புரியும் வெளிவேசம், ஏமாற்று வேலை.இதன்னல் பல தீமைகள் ஏற்படும்.

அர்ச்சுனன்: அப்படியால் நீங்கள் கூறிய சமபுத்தியை எப்படிப் பெற முடியும் கண்ணா?

கண்ணன்: அர்ச்சுனா! எந்த மனிதன் புலன்களைத் தன் கட்டுபாட்டில் வைத்துக் கொண்டு ஆசாபாங்களுக்கு அடிமையாகாமல் கடமையாகிய பணிகளைப் பற்றுதல் இல்லாமல் செய்து வ்ருகிறானோ.அவன் தான் உத்தமன். அவனுக்கு சமபுத்தி கிட்டுகிறது.ஆகையால் நீ சாத்திர விதிப்படி அமையும் கடமையச் செய். மனம் போனவாறு செயல்புரிவதைவிட விதித்துள்ள கடமையை புரிவது உயர்ந்தது.செயல் புரியாவிட்டால் உன் உடல் இயக்கம் கெட்டுவிடும்.

அர்ச்சுனன்: பகவானே! கடமைளை செய்வதால் பந்தம் ஏற்படாதா?
கண்ணன்: ஏற்படாது செயலை ” யக்ஜம்” என்பர் இதைச் தனக்காகச் செய்தால் மனிதன் செயல்களின் தடையால் கட்டப்படுகிறான். இதைத்தான் “கர்மபந்தம்”என்பர்.குந்தியின் மைந்தனே! நீ கடமைச் செயலை எவ்வித சுயநல எண்ணமும் இல்லாமல் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற நெறி உணர்வுடன் செய்து வா.

அர்ச்சுனன்: நான் ஏன் செயல் புரிய வேண்டும் கண்ணா?

கண்ணன்: தம்பி அர்ச்சுனா மனித இனத்தை படைக்க ஆரம்பித்த போதே பிரம்மதேவர் இந்த நியதியை ஏற்படுத்தி விட்டார்.படைப்புக் காலத்திலேயே பிரம்மா மனிதர்களிடம் ” கடமைச் செயலேனும்”யக்ஜத்தை செய்து வளர்ச்சி பெறுங்கள்.இது கடமையை நிறைவேற்ற ஊக்கமளிப்பதாக, உதவி புரிவதாக அமையட்டும்!” என்று கூறியிருக்கிறார்.

அர்ச்சுனன்: பிதாமகரான ( பாட்டானார்) பிரும்மதேவரே! எந்த மனநிலையில் நாங்கள்கடமையைச் செய்ய வேண்டும்?

கண்ணன்: “யக்ஞம்” எனும் கடமையை நிறைவேற்றுவதன் மூலமாக நீங்கள் தேவர்களின் உயர் நிலையை எட்டுங்கள்.தேவதைகளுக்கு வளர்ச்சி ஏற்படும்.தேவதைகள் உங்களை வளர்த்து உயர்வு அளிப்பார்கள்.இவ்வாறு தேவதைகளும் நீங்களும் ஒருவரை ஒருவர் வளர்த்துக் கொள்வதால் அதாவது தமக்காக அல்லாமல் பிறருக்காக கடமையைச் செய்வதால் நீங்கள் பரமாத்மாவை அடைவீர்கள்.பெரும்பேறு பெறுவீர்கள்.

அர்ச்சுனன்: பிதாமகரே! நாங்கள் கடமையைச் செய்யாது போனால்?
கண்ணன்: நீங்கள் கடமையைச் செயல் எனும் யக்ஞத்தைச் செய்வதால் அபிவிருத்தி அடைந்த தேவதைகள் நீங்கள் கேட்காமலேயே உங்களுக்கு கடமையை நிறைவேற்றுவதற்கு தேவையான் சாதனங்களை அளித்துக் கொண்டிருப்பார்கள்.ஆனால் நீங்கள் அச் சாதனங்கள் மூலமாக தேவதைகளைப் பேணி வளர்க்காமல் நீங்களே சுகபோகங்களை அனுபவிப்பவர்களானால் திருடர்களாவீர்கள்.

அர்ச்சுனன்: பகவானே! இந்தக் குற்றத்திலிருந்து எப்படி தப்புவது?

கண்ணன்: தம்பி அர்ச்சுனா! பிறர் நலனிற்காகக் கடமைச் செயலை செய்து வருவதுதான் வழி.இதனால் யக்ஞபலனாக சமத்துவ நிலையை உணர்வாய்.இதனால் மேன்மை பெறும் மனிதர்கள் பாவங்களிலிருந்து முக்தி பெறுகிறார்கள்.எவர் தம் சுய செளக்கியங்களுக்காகவே செயலாற்றுகிறாரோ அவர்கள் பாவங்களையே சேகரிக்கிறார்கள்.பாவிகளாக கருதப்படுகிறார்கள்.

அர்ச்சுனன்: பகவானே!இப்போது நீங்கள் கடமைச் செயல்பற்றி பிரமதேவரின் கட்டளையை எடுத்துச் சொன்னீர்கள்.இது குறித்து உங்கள் அறிவுரை என்ன?

கண்ணன்: இது குறித்து நான் கூறுவது சிருஷ்டிஎனும் சக்கரத்தை இயக்க கடமைச் செயலை செய்து வருவது அவசியமாகிறது.ஏனென்றால் எல்லா பிராணிகளுமே உணவாகிய அன்னத்திலிருந்து உற்பத்தியாகிறது அன்னம் மழையினால் உற்பத்தியாகின்றன.மழை யக்ஞத்தால்(கடமையை நிடைவேற்றுகிறது)பொழிகிறது.யக்ஞம்சுயநல உணர்வு இல்லாமல் செய்யும் பணிகளால் உருவாகிறது.கடமைப் பணிகளைப்புரியும் விதிமுறைகளை வேதங்கள் போதிக்கின்றன.வேதங்கள் பரம்பொருளான் பரமாத்மாவிடமிருந்து வெளிப்பட்டவை.ஆகையால் எங்கும் பரந்துள்ள பரமாத்மா யக்ஞத்திலும் எப்போதும் இருந்து வருகிறார்.பாராத்மாவை அடைவது தன் கடமைப் பணியை நிரைவேற்றுவதின் மூலமே சாத்தியமாகும். ஆகையால் சிருஷ்டி சக்கரத்தின் பாதுகாப்பிற்கு மனிதர்கள் தம் கடமைச் செயல்கள் முரையாக செய்துவர வேண்டியது இன்றியமையாத தேவை.
ஒருபோதும் புறக்கணிக்கமுடியாது.

அர்ச்சுனன்: எவராது அந்த சிருஷ்டி சக்கரத்தின் பாதுகாப்பிற்காக தன் கடமைப் பணியை செய்யாது போனால்?

கண்ணன்: பார்த்தனே! எந்த மனிதன் சிருஷ்டி சக்கரத்தின் பரம்பரையை இயக்கத் தொடரைப் பாதுகாக்கத் தன் கடமைப் பணியை செய்யாது இருகிறானோ அவன் புலன்களுக்கு அடிமைப்பட்டு போக வாழ்வில் உழலும் பாவத்தை புரிகிறான்.பாவம் நிறந்து வாழ்பவனின் வாழ்க்கை வீண்.பூமிக்குப் பாரம்,இவன் வாழ்வதைவிட இறப்பதே மேல்.

அர்ச்சுனன்: சுயநலப்பற்றில்லாமல் நீங்கள் காட்டும் நெறிவழியில் சிருஷ்டி சக்கரத்தில் இயக்கத் தொடரைப் பேணிப் பாதுகாக்க தனது கடமைப் பணியை மனிதன் நிறைவேற்றி வந்தால் ஆவது என்ன?

கண்ணன்: அத்தகைய உத்தம மனிதன் தனக்குள் அகம் மகிழ்ந்தும் மனநிறைவு பெற்றும் வாழ்கிறான்.அவன் செய்யா வேண்டியது ஏதும் மிஞ்சி இருப்பதில்லை.ஏனெனில் அந்த மகா புருஷனுக்கு இந்த உலகியல் வாழ்வில் செயல்புரிவதோ புரியாமலிருப்பதோ சுயலாபம் கொண்டதல்ல.அந்த உத்தமருக்கு எந்தப் பிராணியுடன் சுயநலம் சார்ந்த சம்பந்தம் ஏற்படுவதில்லை.

அர்ச்சுனன்: பகவானே!நானும் அத்தகைய உத்தம புருஷனாக முடியுமா?

கண்ணன்: முடியும்.நீ உத்தம புருஷனாக ஆகலாம்.நீ தொடர்ந்து பற்றுதல் இல்லாமல் கடமையைச் செய்து வா.அப்போதுதான் பாரம்மத்மாவை எட்ட முடியும்.

அர்ச்சுனன்: முன்பு இப்படி பற்றுதல் இல்லாமல் கடமைகளை எவராது செய்திருக்கிறாரா? அவர் பரமாத்மாவை அடைந்திதிருக்கிறாரா?
கண்ணன்: ஜனக மாகராஜா போன்ற பல மகா புருஷர்கள் தன்னலம் கருதாமல் கடமைப் பணிகளை செய்துகொண்டு வாழ்ந்திருக்கிறார்கள்.பரமாத்மாவின் அனுக்கிரகத்தைப் பெற்ற பின்னும் அவர்கள் உலகநலனுக்காக ( உலகைத் தீய வழியிலிருந்து

தடுத்து நல்வழியில் செலுத்த) கடமையாற்றி வந்திருகிறார்கள்.ஆகையால் லோகஸங்கிரகம்”நலனிற்காக நீயும் அவர்களைப்போல கடமைகளைச் செய்.

அர்ச்சுனன்: லோகஸங்கிரகம் எனும் உலகநலன் எப்படி ஏற்படுகிறது?

கண்ணன்: இருவகையில் ஏற்படுகிறது தமது கடமைகளை நிறைவேற்றுவதின் மூலமாகவும், வாக்குறிதிகள் மூலமாகவும், மேன்மக்கள் புரியும் செயல்களைப் பார்த்து பிறர் பின்பற்றுகிறார்கள்.மேலும் அவைகள் தம் வாக்குகளால் புலம்படுத்தும் நெறிமுறைகளை மற்றவர்கள் ஏற்றுச் செயலாற்றுகிறார்கள்.

அர்ச்சுனன்: பரமாத்மாவை அடையும் தகுதிபெற்ற ஜனக மகாராஜா போன்றவர்களைப் போல் உலக நலனிற்காக கடமையாற்றியதற்கு எடுத்துக் காட்டுகள் உள்ளதா?

கண்ணன்: என்னையே எடுத்துக்காட்டகக் கொள் பார்த்தா!மூவுலகிலும் நான் செய்ய வேண்டிய கடமை மீதியில்லை.எனக்கு கிடைக்க வேண்டிய பொருள் எதுவும் கிடைக்காமல் போகவில்லை .எல்லாம் நிறைவுடன் பெற்றிருந்தும் நான் உலக நலனிற்காக கடமைப் பணிகளைப் புரிந்து வருகிறேன்.

அர்ச்சுனன்: பகவானே நீங்களும் கடமைப்பணி புரிய வேண்டிய அவசியம் என்ன?

கண்ணன்: அர்ச்சுனா! அவசியமுள்ளது நான் சுணங்கி கடமைப் பணிகளை ஒதுக்கி விட்டு கடமையை நிறைவேற்றாது போனால் பிறரும் என்னைப் பின்பற்றி சுணங்கி சோம்பி நிற்பார்கள்.அவர்களும் கடமைப் பணிகளை புறக்கணித்து விடுவார்கள்.அவர்களது வாழ்க்கை இயக்கம் சீர்குலையும்.

அர்ச்சுனன்: அப்படியானால் என்ன ஆகும்?

கண்ணன்: நான் என் கடமைகளைச் செய்யாது இருந்தால் மற்ரவர்கள் முறை தவறி வாழத் தொடங்குவார்கள்.இதனால் எல்லாக் குளறுபடிகளுக்கும் மக்கள் சமுதாயத்தை சீர்குலைத்தற்கும் நானே மூலகாரணமாவேன்.

அர்ச்சுனன்: இந்த நோக்கில் உலக நலனிற்காக கடமைப் பணி புரிவது மிக அவசியமாகிறது.ஆனால் தத்துவஞானிகளான மகா புருஷர்களுக்கும் கடமைப் பணிகள் புரிவது அவசியமாகிறது?

கண்ணன்: ஆம் அர்ச்சுனா! மிகவும் அவசியம். எப்பட்ய் அஞ்ஞானிகள் தாம் செய்யும் தொழில்களீல் சுயநல விளைவுடன் பயனை எதிர்நோக்கி முனைப்புடன் ஈடுபாடுகிறார்களோ விருப்பு வெறுப்பில்லாத ஞானிகளான மாகபுருஷர்களும் உலநலனுக்காக வேண்டி முனைப்புடன் தம் கடமைப் பணிகளில் ஈடுபட்டாக வேண்டும். மேலும் ஞானிகளிற்கு மகத்தான பொறுப்பும் உள்ளது.அஞ்ஞானிகளை தம் வழியில் கொண்டுவரும் வகையில் எடுத்துகாட்டாக அவர்கள் பணிபுரிய வேண்டும்.அதன்னல் அஞ்ஞானிகள் திருந்த வேண்டும்.

அர்ச்சுனன்: அஞ்ஞானி, ஞானி இருவரும் செயற்படுவதில் என்ன வித்தியாசம் என்ன?

கண்ணன்: எல்லாச் செயல்களும் பலவகையிலும் இயற்கையின் இயல்புகளால் நிறைவேற்றி வைக்கப்படுகின்றன.ஆனால் நான் எனது எனும் செருக்கில் மயக்கிய உள்ளப்பாங்கு மனிதனை அஞ்ஞானியாக்குகிறது.அவன் நான் தான் செய்கிறேன்.என்று கருதுகிறேன்.வீரம் மிக்கவனே! குணப்பிரிவு,கர்மப்பிரிவு இரண்டையும் உணர்ந்துள்ள் ஞானி எல்லாச் செயல்களும் இயல்பாகவே இயற்கையிலேயே நிகழ்கின்றன.என்பதை உண்ர்ந்திருப்பதால் தாம் புரியும் செயல்களில் சுயநலப்பற்று வைப்பதில்லை.

(சத்துவம் ரஜஸ் எனும் குணங்களும் ,உடல் புலன்கள்,மனம்,புத்திபிராணி,பொருள் எல்லாம்கொண்ட உலகியலும் குணப்பிரிவிலும் இவைகளில் ஏற்படும் செயல்கள் கருமப்பிரிவிலும் அடங்கும்)

அர்ச்சுனன்: கண்ணபிரானே!உங்களுக்கு உள்ள பொறுப்புகள் ஞானிகளான மாகா புருஷ்ர்களுக்கும் உள்ளனவா?

கண்ணன்: இல்லை அர்ச்சனா!ஞானிகளை மகா புருஷர்கள் அஞ்ஞானிகளைப்போல் காரியங்களைச் செய்யாமல் இருக்கலாம்.ஆனல் அவர்கள் நேரிடையாகவோ, மறைமுகமாகவே அஞ்ஞானிகளை தடுமாறச்செய்யாமல் இருக்க வேண்டும் .சிறிதளவு இயற்கைக் குணங்களில் மோகித்து மயங்கினாலும் வழி தவறி விடலாம்.இயற்கைக்குணங்களிலும் செயல்களிலும் பற்றுதலுடன் ஈடுபட்டுள்ள அஞ்ஞானிகள் ஞானிகளைப் பார்த்து மேலும் சஞ்சலப்பட்டு வழிமாறிப் போவார்கள்.

அர்ச்சுனன்: பகவானே! நான் இப்போ சஞ்சலப்படுகிறேனே.என்னால் என்ன செய்ய முடியும்?
கண்ணன்: அர்ச்சுனா! நீ பகுத்தறீயும் விவேக புத்தியுடன் சிந்தித்து உன் எல்லாச் செயல்களையும் என்னிடம் அர்ப்பணித்துவிடு விருப்பு , வெறுப்பு பற்றுதல், மமதை,வருத்தம் ஏதும் கொள்ளாமல் கடமைப் பணியான போரிடும் பணியை தொடர்ந்து செய். உன் வீர இயல்பிற்கேற்ப போர்புரி.

அர்ச்சுனன்: எனது எல்லாக் கடமைப் பணிகளையும் உங்களிற்கே அர்ப்பணிப்பதால் என்ன ஆகும்?
கண்ணன்: குற்றமற்ற நோக்கத்துடன் சிரத்தையுடன் எனது வழிகாட்டலின்படி நடப்பவர்கள் எல்லாவகைக் கர்ம பந்தங்களில் இருந்து விடுபடுகிறார்கள்.தடை நீங்கிய நிலை அவர்களை மேம்படுத்துகிறது.

அர்ச்சுனன்: அப்படியனால் உங்கள் வழிகாட்டலிற்கேற்ப நடப்பவர்களுக்கு என்ன ஆகிறது?

கண்ணன்: என் கொள்கையில் குற்றம் குறை கண்டு அதன் வழியில் செல்லாதவர்கள் உலகியல் உணர்வுகளுக்குள் சிக்கி மதிமயங்கிப் போகிறார்கள்.அவர்களுக்கு பரபொருள் பேரறிவு கிட்டுவதில்லை.அவிவேகி ( அறிவிலி) களாகி அழிந்து போகிறார்கள்.அவர்கள் வாழ்ந்தும் பயனில்லை.

அர்ச்சுனன்: பரமாத்மாவே உங்கள் கருத்துப்படிஆசாபாசம் இல்லாமல் கடமையாற்றத்தவறுபவர்கள் ஏன் அழிவு ஏற்படுகிறது?

கண்ணன்: ஞானி வெறுப்பு -விருப்பு இல்லாத ஈடுபாட்டுடன் செயல்புரிகிறார்கள். இதனால் சாஸ்திர நியமங்களிற்கேற்ப செயலாற்ற அவர்களால் இயலவில்லை.முறைகேடான இயல்பால் அவர்கள் அழிகிறார்கள்.

அர்ச்சுனன்: கண்ணா! இந்த அழிவிலிருந்து காப்பாற்றிகொள்ளா என்ன உபாயம்?

கண்ணன்: ஒவ்வொரு புலன் சார்ந்த இயக்கத்திலும் விருப்பு -வெறுப்பு கலந்திருக்கின்றன. ஆகையால் மனிதன் புலன்களுக்கு அடிமையாகாமல் நடுநிலையோடு செயல் புரியவேண்டும். விருப்பு-வெறுப்பு உணர்சிகளுமே மனிதனின் பகைவர்கள்.

அர்ச்சுனன்: அப்படியானால் மனிதன் என்ன செய்ய வேண்டும் கண்ணா?

கண்ணன்: தன் கடமையை அறநெறியாக மதித்து நிறைவேற்ற வேண்டும்.குணநலன் குறைவாக இருந்தாலும் கடமை அறநெறி தான்.கடமையை நிறைவேற்றும் போது மரணம் ஏற்பட்டாலும், அது நல்லதே.பிறருடைய அறநெறி எவ்வளவுதான் குணநலன்,நிரம்பியதாக இருந்தாலும் அது எற்கத்தக்கதல்ல.அச்சம் ஊட்டுவது.ஆபத்தானது.

அர்ச்சுனன்: தர்மத்தைச் ( கடமையை) செய்வது சிறந்தது என்று அறிந்திருந்தாலும் மனிதன் எதனால் தூண்டப்பட்ட்டு வழி தவறி அதர்மத்தையும் பாவத்தையும் அடிகடி புரிகிறான்?

கண்ணன்: ரஜோ குணத்தால் ஏற்படும் காமம் பாவத்தை செய்விக்கும் துர்க்குணம் , காமத்திலிருந்து குரோதம் விளைகிறது.மாபாவியான காமம் ஒருபோதும் திருப்தியடையாது.அது பாவங்களை விளைவிப்பது.

அர்ச்சுனன்: மாபாவியான காமம் என்ன செய்கிறது?

கண்ணன்: எப்படிப் புகை தீயை மறைந்திருகிறதோ, தூசு எப்படி கண்ணாடியை மறைந்திருக்கிறதோ, ஜவ்வுப்படிவம் எப்படி கருப்பபையை மூடியிருக்கிறதோ , அதே போல காமம் , பாவம் செய்ய விரும்பாத மனப்பண்பை பலவீனப்படுத்துகிறது.மனிதனை பாவம் செய்யத் தூண்டுகிறது.குந்தியின் மைந்தனே! காமம் தீயைப் போல் எரிக்க எரிக்கத் தணியாதது. விவேவிகளான சாதனையாளர்களிற்கு அது எதிரி.காமத்தில் வயப்பட்ட மனிதனின் விவேகமும் பகுத்தறிவும் மறைக்கப்பட்டு விடுகிறது.

அர்ச்சுனன்: அத்தகைய காமம் எங்கிருக்கிறது?

கண்ணன்: காமம் புலன்கள், மனம், புத்தி மூன்று நிலைகளிலும் இருக்கிறது.இதன் மூலமாக காமம் உடல் பற்றுதல் மிகுந்த மனிதனின் அறிவை மறைத்து அவனை மயங்க வைக்கிறது.பாவங்கள் புரிய தூண்டுகிறது.

அர்ச்சுனன்: அந்த காமத்தை எப்படி அழிப்பது?
கண்ணன்: பரத வம்சத்தில் பிறந்த சிறந்த வீரனே! நீ முதலில் உன் புலன்களை அடக்கு .பிறகு பகுத்தறிவையும் , விஞ்ஞான் அறிவையும் மறைத்துக் கேடு விளைவிக்கும் மாபாவியான் காமத்தையும் கட்டாயம் அழித்து விடு.

அர்ச்சுனன்:  பகவானே! நீங்கள் உபதேசிக்கும் இந்த உபாயத்தை எப்படிச் செயல்படுத்துவது?
கண்ணன்: குந்தியின் வீரமைந்தனே! உடலைவிட மேம்பட்டவை ஜம்புலன்கள்( மேலானவை, வலுவானவை, வெளிப்பாடுமிக்கவை,பரந்திருப்பவை, சூட்சுமமானவை) இந்திரியங்களான் புலன்களைவிட மேம்பட்டது மனசு. மனதைவிட மேம்பட்டது புத்தியெனும் அறிவு.புத்தியைவிட வலுவானவை காமம் எனும் ஆசை. ஆகையால் எல்லாவற்றிலும் வலிமைமிகுந்த காமத்தைக் கட்டுப்படுத்து.இலகுவில் வெல்லமுடியத இந்த எதிரியை வீழ்த்தி விடு! நீ எல்லாவகையிலும் வெற்றி பெறுவாய்.

(காமம்) அகந்தையில் உள்ளது.இதனால் உலகியல் பொருள்களில் அகந்தையில் கவர்ச்சி உண்டு.அகந்தையில் இரு அம்சங்கள், ஒன்று இயற்கையின் அம்சம்.ஜடப் பகுதி,மற்றது பரமாத்மாவின் சைந்தன்யம் எனும் உணர்ச்சி அம்சம்.இயற்கையின் அம்சம் இயற்கையின் பாலும் பரமாத்மாவின் அம்சம் பரம்பொருள்பாலும் ஓரின உறவு காரணமாகக் காணப்படுபவை.ஆகையால் அகந்தையின் அடித்தளக் காமம் இருக்கிறது.உணர்ச்சி அம்சத்தில் தத்துவ ஞான ஆர்வமும் அன்புடைமையும் உள்ளன.இதுதான் ஜடத்திற்கும் சேதனனுக்கும் அடிப்படை வித்தியாசம்.ஜட நிலையைத் தாண்டி சேதன நிலையை எட்டிய மனிதன் ஜடத்தின் அம்சமான காமத்திற்கு அடிமையாகக் கூடாது.

04.உன்னத அறிவு

அர்ச்சுனன்: பகவானே! கர்மயோகமான கடமைச் செயற்பாட்டில் தீவிர விருப்பமான சுயந்ல வேட்கையை ( காமம்) அழிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினீர்கள்.இந்த கர்ம யோகத்தின் மரபுத்தொடர்( பரம்பரை) எப்படியானது?

கண்ணன்: அர்ச்சுனா! இந்த அழிவில்லத கர்ம யோகத்தை நான் முதலில் சூரியனுக்கு உபதேசித்தேன்.பின் சூரியன் தன் மகன் மனுவிற்கும் .மனு தன் மகன் இஷ்வகுவிற்கும் உபதேசித்தார்கள்.இவ்வாறு வழி வழியாக உபதேசிக்கப்பட்டு வந்திருக்கும் இந்த கர்மயோகத்தை உலகை ஆன்டு வந்த ராஜரிஷிகள் அறிந்திருந்தார்கள்.பல ஆண்டுகள் கடந்து போனதால் இந்த யோகம் மனிதர்களிடம் அரிதாகி விட்டது. அர்ச்சுனா! நீ என் நெருங்கிய பக்தன் பிரியமான தோழன் இதனாலேயே இப் புராதனமான கர்மயோகத்தை உனக்கு உபதேசிக்கிறேன்.இது மிகவும் இரகசியமான அரியதத்துவம்.

அர்ச்சுனன்: பரம்பொருளே!நீங்கள் எந்தச் சூரியனுக்கு உபதேசித்தீர்களா அவர் வெகு காலத்தில் முன்பே பிறந்தவர்.ஆனால் நீங்கள் அவதரித்ததோ இந்தக் காலத்தில். சிருஷ்டி காலத்தில் தொடக்கத்திலே நீங்கள் இந்த அரிய யோகத்தை சூரியனுக்கு உபதேசித்ததை நான் எப்படி தெரிந்து கொள்ளமுடியுமா?

கண்ணன்: பிரதாபம் மிகுந்த வீரனே!இந்த விசயம் எனது இந்தப் பிறவியைச் சார்ந்தது அல்ல.எனக்கும் உனக்கும் பல பிறவிகள் ஏற்பட்டு விட்டன. அவையெல்லாம் எனக்குத் தெரிந்தவைதான் ஏதாவது எந்தப் பிறவியில் நீயும் நானும் என்னவெல்லாம் செய்து கொன்டிருந்தோம் என்பதை நான் நன்கு அறிவேன்.ஆனால் நீ உன் பிறவிகளையும் பிறவிச்செயல்களையும் அறியவே மாட்டாய்.

அர்ச்சுனன்: எனக்கு ஏற்பட்ட பிறவிபோல் உங்களுக்கு ஏற்படவில்லை?

கண்ணன்: இல்லை. நான் பிறப்பு இறப்புகளைக் கடந்தவன்.பிறவி இல்லாதவன்.மரணமில்லாதவன்.உயிரினங்களிற்கு எல்லாம் ஈஸ்வரன்( ஆக்கவும் அழிக்கவும் வல்லமை படைத்தவன்)எனினும் என் வசத்திலுள்ள இயற்கை நியதியை கட்டுப்படுத்திக்கொண்டு யோக மாயையில் நான் வெளிப்படுகிறேன். ( பிறக்கிறேன் அவதாரம் செய்கிறேன்).

அர்ச்சுனன்: நீங்கள் வெளிப்படும் தருணம் எது?

கண்ணன்: பரத வம்சத்தில் உதித்த அர்ச்சுனா! எப்பொதெல்லாம் தர்மத்திற்கு கேடு ஏற்படுகிறதோ அதர்மம் மேலோங்கி பெருகிறதோ அப்போதெல்லாம் நான் அவதாரம் எடுக்கிறேன்.( விரும்பி பிறக்கிறேன்)

அர்ச்சுனன்: நீங்கள் அவதாரம் எடுப்பதால் பயன் என்ன கண்ணா?

கண்ணன்:நல்லவர்களான நன்னெறியாளர்களைப் பாதுகாக்கவும் தீயவர்களை அழிப்பதற்கும்,தர்ம நெறிகளை நடைமுறைப் படுத்தி நிலை நாட்டுவதற்கும் நான் ஒவ்வொரு யுகத்திலும் பிறக்கிறேன்.

அர்ச்சுனன்: பகவானே! இம்மாதிரி அடிக்கடி பிறவி எடுப்பதால் உங்களை பந்தபாசம் கட்டுப்படுத்துவது இல்லையா?

கண்ணன்: இல்லை. என்னுடைய பிறவியும் செயலும் தெய்வாம்சம் பொருந்தியவை. எனக்கென்று எந்தச் சுயநலமும் கொள்ளாமல் உலக நன்மைக்காகவே நான் பிறவி எடுக்கிறேன்.இந்த உண்மையை எந்த மனிதன் தத்துவ ஞானத்துடன் உணர்கிறானோ,அவன் இறந்த பின் மறுபிறவி பெறாமல் என்னையே வந்தடைகிறேன்.

அர்ச்சுனன்: அத்தகைய தத்துவஞானி உங்களையே வந்தடைகிறான் என்பதற்கு என்ன அத்தாட்சி?

கண்ணன்: அத்தாட்சி உள்ளாது.என்னோடு ஒன்றி, என்னையே புகலாக கொன்ட தத்துவஞானிகள் என் பிறப்பு இறப்புகளின் திவ்விய தன்மையை அறிந்து ளொண்டதால் புனிதர்களாகி, ஆசை,அச்சம் சினம் முதலிய தீய இயல்புகளில் இருந்து விடுபட்டு என்னையே வந்தடைகிறார்கள்.

அர்ச்சுனன்: அவர்கள் எந்தத் தன்மையுடன் உங்களைப் புகலடைகிறார்கள்?

கண்ணன்: பார்த்தனே! உலகியல் உறவுகளோடு ஒட்டாமல் எந்தத் தன்மையுடன் என்னை மனிதர்கள் புகலடைகிறார்களோ, நானும் அவர்களுடன் அதே தன்மையுடன் தான் ஒட்டுறவு கொள்ளுகிறேன்.எனது இந்த உறவால் சம்சாரிகளான மனிதர்களிடம் சிறப்பான எதிர் விளைவுகள் ஏற்படுகிறது.நற்குணங்கள் நிரம்பிய அவர்கள் சுயநலம்,செருக்கில்லாமல் பிறருக்கு நன்மை புரிவதில் தீவிரமாக ஈடுபடுகிறார்கள்.

அர்ச்சுனன்: அச்சுதா! உங்களைப் புகலடைந்தவர்களை நீங்கள் பாசத்துடன் ஆட்கொள்கிறீர்கள். அப்படியிருந்தும் மனிதர்கள் உங்களைவிட்டு வேறு தேவதைகளைப் பூசிக்கவும் உபாசிக்கவும்செய்கிறார்களே ஏன்?
கண்ணன்:அத்தகைய மனிதர்களின் மனபாங்கில் உலகியல் ஆர்வம் ஆதிக்கம் செலுத்துகிறது.அதனால் கர்ம அனுஷ்டானங்களால் ஏற்படும்.பயனை சித்தியாக பெற விரும்புவார்கள்.இதனாலேயே அவர்கள் என்னை விட்டுவிடு பிற தேவதைகளை உபாசிக்கிறார்கள்.ஏனென்றால் இந்த மாதிரி மாநிட உலகில் கர்மாக்களில் ஏற்படும் பயன் விரைவில் கிட்டி விடுகிறது.

அர்ச்சுனன்: பகவானே! எப்படி மனிதர்கள் கர்மாக்களில் ஏற்படும் சுயநல பயனிற்காக பிற தேவதைகளை உபாசிக்கிறார்களோ, அதே போல் நீங்களும் ஏதாவது ஒரு பயனை வேண்டிய தக்க கர்மாவை செய்வதுண்டா?

கண்ணன்: நான் ஜீவன்களின் குணங்களுக்கும் செயல்களுக்கும் ஏற்ப நால்வகைப் பிரிவுகளை( வர்ணங்கள்,இனங்கள்) உருவாக்குகிறேன்.அவை பிராமணன், சத்திரியன்,வைசீகன்,சூத்திரன் என்னும் இனங்கள்.ஆனால் நான் படைப்பு முதலிய பணிகளை பயன் கருதியோ செருக்குடனோ செய்வதில்லை. இதேபோல் என்னைத் தத்துவ ஞானத்துடன் அறிந்துள்ள ஞானிகளும் விருப்பு வெறுப்பு இல்லாமல் செலாற்றுவதால் கர்ம பந்தங்களிற்கு ஆட்படுவதில்லை.

அர்ச்சுனன்: இதேபோல் இவ்வுலகில் எவராவது பணி புரிந்து இருக்கிறார்களோ?

கண்ணன்: செய்திருகிறார்கள். முதலில் முத்தி பெற விரும்பிய ஞானிகள் இந்தக் கர்ம தத்துவத்தை அறிந்து கொண்டு பயனில் ஆசையில்லாது பணிபுரிந்திருக்கிறார்கள்.நீயும் அந்த முன்னோர்களைப் போல் அவர்கள் காட்டிய வழியில்பணிபுரிந்து வா.

அர்ச்சுனன்: அர்த முமுசுக்கள் செய்து காட்டியதும் ,நீங்கள் உத்தரவிடுவதும் உபதேசிப்பதுமான கர்மா எனும் கடமை பணி எத்தகையது?

கண்ணன்: செயல் ( கர்மா) எது? செயலின்மை ( அகர்மா) எது? இந்த விஷயத்தில் மகா வித்துவான்களே தடுமாறி விடுகிறார்கள்.எனவே செயல் தத்துவத்தை உனக்கு உபதேசிக்கிறேன்.இதை உணர்ந்த நீ உலகியல் தளைகளிருந்து விடுபடுவாய்.கர்மா மூன்று வகைப்படும்.கர்மம், அகர்மம்,விகர்மம்( செயல்,செயலின்மை, தகாத செயல்).இம்மூன்று கர்ம பேதங்களையும் இவைகளின் நிலைகளையும் கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டும்.இதைத்தான் கர்ம தத்துவம் என்பர்.இது மிகவும் ஆழ்ந்த தத்துவம்.

அர்ச்சுனன்: கர்மம் அகர்மம் இவைகளில் உண்மைத் தத்துவத்தை அறிவது என்பது என்ன?

கண்ணன்: கர்மத்தில் அகர்மத்தையும் அகர்மத்தில் கர்மத்தையும் காண்பது, உணர்வது செயல்படுத்துவது தான் கர்ம தத்துவம்.அதாவது செயலில் ஈடுபடும்பொது பற்றுதல் , ஒட்டுறவு இல்லாமல் இருப்பது, பற்றுதல் அற்ற நிலையில் செயற்படுவது
( நாம் இந்தக் காரியத்தைச் செய்யவில்லை.இக்காரியம் ந்ம்மை இதில் ஈடுபடுத்தியிருக்கிறது என்ற உணர்வுடன் செயல்படுவது).இவ்வாறு செயல் செயலின்மை இரண்டையும் ஒருநிலையில் கொண்டுள்ளவர் தான் யோகி புத்திமான்.

அர்ச்சுனன்: பகவானே! அந்தப் புத்திமானுக்குரிய சிறப்புக்கள் என்ன?

கண்ணன்: எவருடைய செயல்கள் யாவும் தன்னல முனைப்பும் தீவிர விருப்பமும் இல்லாதவையோ, மேளும் அவை நல்லறிவு எனும் தீயில் இட்டு புடம்போட்டவையோ அத்தகைய திறன் கொண்டவரை ஞானிகள்.பேரறிவாளர்கள்.பண்டிதர் என்பர். அத்திறன் தான் அவைகளுடைய புத்திசாலித்தனம் எனும் சிறப்பியல்பாகும்.

அர்ச்சுனன்: அத்தகைய சிறந்த மனிதர்களின் நிலைப்படுகள் என்ன?

கண்ணன்: செயல்திறன் கொண்ட பண்டிதர்கள் செயல் , செயலின் பயன் இரண்டிலுமே பற்றுதல் கொள்வதில்லை. மேலும் அவர்களைச் சார்ந்திருப்பதில்லை.அவர்கள் எப்போதும் மனதிருப்தியுடன் வாழ்பவர்கள். ஆகையால் அவர்கள் எல்லாம் செய்து கொண்டிருந்தாலும் எதுவும் செய்யாதவர்களாகவே இருப்பார்கள்.செயல்,செயலின்மை இருநிலைகளும் அவர்களிற்கு சமம்.

அர்ச்சுனன்:அத்தகைய சாதனையாளர்கள் செயலில் ஈடுபடாமல் இருந்துவிட்டால் என்னவாகும்?

கண்ணன்: சரீரம் ,அந்தகரணம் இரண்டையும் கட்டுபாட்டில் வைத்திருப்பவரும் .சேமித்து வைத்துள்ள சகலதையும் தியாகம் செய்பவரும்,உலகியல் ஆசைகளும் இல்லாதவருமான சாதகர் உடல் சம்மந்தப்பட்ட கருமங்களை செய்து கொண்டிருந்தாலும் கர்மபந்தத்தில் சிக்குவதில்லை.

அர்ச்சுனன்:அத்தகைய சாதகர்கள் செயலில் ஈடுபாடு கொண்டவராக இருந்தால் என்னவாகும்?

கண்ணன்: அந்தச் சாதனையாளரும் சூழ்நிலைக்கு ஏற்பதாக தம்மை மாற்றிக் கொண்டு மனநிறைவு பெறுகிறார்கள்.பொறாமை சஞ்சலம் விருப்பு வெறுப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படாமல் இருப்பார்கள்.செயலின் நிறைவு ( பயன்) நிறைவின்மை (பயனின்மை)இவ்விரண்டையும் சமமாக கருதியவாறு செயலில் ஈடுபட்டு இருப்பதால் கர்ம பந்தங்கள் அவர்களை கட்டுப்படுத்துவதில்லை.மேலும் எவர் விருப்பு வெறுப்புகளை கடந்தவரோ,சுதந்திரமானவரோ எவருடைய குறிக்கோள் பரமாத்மாவை அடையும் முனைப்பு உள்ளதோ அத்தகைய சாதகர் உலக நன்மைக்காகவே செயலை புரிந்து வருவார் .ஆகையால் அவர் செயலில் ஈடுபட்டிருந்தாலும் அதில் சிக்காமல் செயலின்மை நிலையில் நிலைத்திருக்க வல்லவர்.

அர்ச்சுனன்:அச்சாதகர்கள் செய்யும் உலக நன்மைக்காக காரியங்கள் எத்தனை வகையானது?

கண்ணன்: நன்மைகள் பலவகை
1. எந்த நன்மைகளில் எல்லாச் சாதனங்களும் உபகரணங்களும்,செயல்முறையும் செய்பவரும் பிரும்ம சொரூபமான்வையோ அது பிரும்ம யக்ஞம்.

2. எதில் எல்லாமே எனக்கு அர்ப்பணிக்கப்பட்டவையோ, அது “பகவதர்ப்பண ரூபமான யக்ஞம்”
3. எதில் சாதகர் தம்மை பிரமத்தில் இரண்டறக் கலந்துவிடக் செய்திருக்கிறாரோ அது பேதமற்ற ” அபின்னதாரூப யக்ஞம்”
4. எந்த நற்செயலில் சாதகர் தம் ஜம்புலன்களையும் அடக்கியிருக்கிறரோ,அவைகளைத் தத்தம் பொருள்களிருந்து( விஷயங்களிலிருந்து விடுவிதிருக்கிராரோ அது” ” ஸம்யம ரூபமானயக்ஞம்”.

5.எதி சாதகர் விருப்பு வெறுப்பு இல்லாமல் அடங்கியுள்ள புலன்களால் பொருட்களில் ஈடுபடுகிறாரோ அதற்கு பெயர் விஷயஹவன ரூபயக்ஞம்
6. உயிரெ நிலைகள், புலன்கள், உள்ளம் இவைகளின் செயல்களைத் தடுத்து ,அறிவு விழிப்புடன் இருக்கும் போதே சஞ்சலம் இல்லாத திட நிலையை எட்டுவது “அமாதி ரூபமானயக்ஞம்.
7.உலக நலனிற்காக தன்செல்வத்தை செலவிடுவது ” திரவிய யக்ஞம்”
8.தன் தர்மத்தை ( அற நெறிகளை) கடைப்பிடிப்பதில் ஏற்படும் இடர்பாடுகளையும் இன்னல்களையும் மகிழ்ச்சியுடன் சகித்துக் கொள்வது ” தபோ யக்ஞம்”.

9. செய்யும் காரியம் நிறைவு பெற்றாலும் , பெறாது விட்டாலும் பயன் கிடத்தாலும் ,கிடைக்காது விட்டாலும் சமமான மனநிலையில் இருப்பது ” யோக யக்ஞம்”
10 சீரிய நெறி நூல்ககளை நற்சாத்திரங்களை கற்பதும் கற்பிப்பதும் பகவானின் திருநாமங்களை ஜெயிப்பதும் முதலான பக்தி நெறிகளை அனுட்டிப்பது ” சுவாத்யாய ரூபமான ஞானயக்ஞம்”.
11. யோக நியமங்களிற்கேற்ப பூரகம் ( மூச்சை உள்ளே இழுப்பதும்) கும்பகம் ( மூச்சை நிறுத்தி வைப்பதும்) ரேசகம்( மூச்சை வேளியே விடுவது) எனும் முறையில் ப்ராணயாமம் செய்வது பிராணாயாம ரூபமான யக்ஞம்”
12. நியம ஒழுங்கு முறை ஆகாரம் உட்கொண்டு பிராணன்களை தத்தம் இடங்களில் நிறுத்தி வைப்பது “ஷ்தம்பனவிருத்தி பிராணாயாம ரூப யக்ஞ்ம்”.

இந்த எல்லா யக்ஞங்களும் செயற்பாடுகளில் இருந்து செய்பவர்கள் ஏற்படும் ஈடுபாட்டை( பந்த பாசம்) அகற்றுவதற்குத்தான் இந்த உண்மயை உணர்ந்து யக்ஞங்களை அனுஷ்டிக்கும் சாதனையாளருக்கு எல்லா வகை பாவங்களும் அழிந்து போகின்றன.

அர்ச்சுனன்: பகவானே! பாவங்கள் அழிவதால் என்ன ஆகிறது?

கண்ணன்: குருவம்சத்து வீரனே! நான் மேற்சொன்ன யக்ஞங்களை சரியாக செய்பவர்களுக்கு அமிருத சொரூபமான பரமாத்மாவைப் பெறும் பேறு கிட்டுகிறது.ஆனால் எவ்வித யக்ஞமும் செய்யாத மனிதனுக்கு இந்த உலகம் கூட பயனிளிக்காது.பின் பரலோகம் எப்படிப்பயனுள்ளதாக அமையும்.

அர்ச்சுனன்: இத்தகைய யக்ஞகளைப் பற்றிய வர்ணனை வேறு எங்குள்ளது பகவானே?

கண்ணன்: நான் கூறிய யக்ஞங்களும் மேலும் பலவும் வேதங்களில் விரிவாக வர்ணிக்கப்பட்டுள்ளது.அவை கர்மாக்களிலிருந்து உருவானவை என்பதை அறிந்து கொள். இத்தகைய தத்துவ அறிவுடன் நீ யக்ஞத்தை செய்தால் கர்ம பந்தங்களிலிருந்து விடுபடுவாய்.

அர்ச்சுனன்: எல்லா யக்ஞங்களிலும் தலை சிறந்தது எது?

கண்ணன்: பிரதாபம் மிக்க அர்ச்சுனா!கருமங்களிலிருந்து அமையும் எல்லா யக்ஞங்களிலும் ஞானயக்ஞம் தான் சிறந்தது.ஏனெனில் ஞான யக்ஞத்தில் எல்லாக் கருமங்களிலும் பொருள்களும் அடங்கிவிடுகின்றன.

அர்ச்சுனன்: அந்த ஞானத்தை எப்படிப் பெறுவது

கண்ணன்: ஞானயக்ஞத்திற்கு அடிப்படையான மெய்யறிவு ஞானம் பெற நீ தத்துவ தரிசிகளான மகா புருஷர்களிடம் செல்ல வேண்டும்.அந்த ஞானிகளின் திருவடிகளில் தண்டனிட்டு வணங்கி ,அவர்களுக்கு தொண்டு புரிந்து அவர்களிடமிருந்து ஞானோபதேசம் பெற வேண்டும்.அவர்களிடம் ஞானப் பசியுடன் யாசித்து வேண்டிக் கொண்டால் ஞானோபதேசம் செய்தருள்வார்கள்.

அர்ச்சுனன்: அந்த ஞானிகள் உபதேசித்தருளும் ஞானத்தால் என்ன விளையும்?

கண்ணன்: அர்ச்சுனா!அந்த பரிசுத்த ஞானத்தை பெற்ற பின் உன்னை மோகம் ,மயக்கம் எதுவும் பாதிக்கமாட்டாது.அந்த ஞானத்தின் திறத்தால் நீ எல்லா ஜீவராசிகளையும் முதலில் உன்னுள் காண்பாய்.பிறகு என்னுள் காண்பாய். இதனால் எல்லா இடங்களிலும் ஒரே பரமாத்மாவின் தத்துவத்தை உணர்ந்து கொள்வாய்.

அர்ச்சுனன்: பகவானே! இந்த ஞானத்திற்கு மேலும் ஏதாவது மகிமையுள்ளதா?

கண்ணன்: உள்ளது.நீ எல்லாப் பாவிகளிலும் கடைசியான பாவியாகி இருந்தாலும் இந்த ஞானம் எனும் ஓடத்தால் நிச்சயம் பாவக்கடலைக் கடந்துகரையேற முடியும்.

அர்ச்சுனன்: எப்படிப் கடலை கடந்த பின் கடல் தன்னிடத்தில் இருந்தபடியே இருக்கிறதோ அதேபோல் பாவங்களை கடந்த பிறகு பாவங்கள் இந்த உலகில் இருந்து கொண்டிருக்கும் தானே?

கண்ணன்: இல்லை அர்ச்சுனா! எப்படித் தீ காய்ந்த கட்டைகளைஎரித்து சாம்பலாக்கி விடுகிறதோ.அதேபோல ஞானமெனும் அக்கினி எல்லாக் கருமங்களையும் பாவங்களையும் பொசுக்கி விடுகிறது.ஆகையால் இந்த உலகத்தில் ஞானத்திற்கு சமமான பவித்திரமானதுவேறெதுவும் கிடையாது. இந்த ஞாத்தை கருமயோகம் மூலமாக சித்தி பெற்ற சாதகர் தாமதமாகவே அடைந்து விடுகிறார்.

அர்ச்சுனன்: கர்மயோகம் மூலமாக சித்தராகிய மனிதருக்குத்தானே ஞானம் கிட்டுகிறது என்பதை அறிந்தேன்.ஆனால் மற்ற சாதகருக்கு எப்படிப் கிட்டுகிறது?

கண்ணன்: அர்ச்சுனா! புலன்களை அடக்கி வைத்திருக்கும் சாதனையைக் புரிந்துவரும் சிரத்தையுள்ள சாதகருக்கு அந்த ஞானம் கிட்டுகிறது.ஞானம் பெற்றதும் அந்த சாதகருக்கு பேரமைதி.பரமசாந்தி கிடைக்கிறது.

அர்ச்சுனன்: இந்த ஞானத்தை பெறுவதில் ஏற்படும் தடை இடையூறுகள் எவை?

கண்ணன்: எந்த மனிதன் தானும் அறியாதிருந்து,பிறரிடமும் நம்பிக்கை ஈடுபாடு கொள்ளாமல் பிறருடைய அறிவுரையை ஏற்காமல்,தன்னுள் தன்னம்பிக்கையும் கொள்ளாது தடுமாறிக் கொண்டிருக்கிறானோ,அவனுக்கு வீழ்ச்சி நிச்சயம் சந்தேகமும் சஞ்சலும் கொண்ட மனிதனிற்கு இந்த உலகமோ,மேலுலகமோ எந்தச்சுகமும் அளிக்காது.

அர்ச்சுனன்: பகவானே! சந்தேகமும் சஞ்சலமும் விலகி விட்டால் ஆவது என்ன?

கண்ணன்: தனஞ்சயா! எந்த மனிதன் நெறியுடன் சமநிலையை மேற்கொண்டு எல்லா கருமங்களிலிருந்தும் தொடர்பில்லாமல் இருந்து வருகிறானோ, அவன் கரும தத்துவமான நல்லறிவும் , ஞானமும் மூலமாக எல்லா விதச் சந்தேகங்களையும் சஞ்சலங்களையும் அழித்து விடுகிறான் அத்தகைய சாதகருக்கு கருமபந்தம் கட்டுபடுவதில்லை.ஆகையால், பரத வம்சத்து வீரத் திருமகனே!நீ உன் உள்ளத்தில் அஞ்ஞானத்தில் ஏற்படும் சந்தேகம் ,சஞ்சலங்களை ஞானமேனும் வாள் கொண்டு அழித்துவிடு ! சமநிலையில் திடமாக இரு! கடமையை நிறைவேற்றப் போர்புரி!போரை தொடர்ந்து புரிவது உன் கடமை அதுவே உன் சத்திரிய தர்மமும் வீர இயல்பும்.

05.கர்மயோகம், கிருஷ்ண உணர்வில்செயல்

அர்ச்சுனன்: பகவானே!ஒரு சமயம் நீங்கள் கருமங்களை துறப்பதை( சாந்திய யோகம்) புகழ்கிறீர்கள்.வேறொரு சமயம் கருமங்கள் செய்ய வேண்டியதை (கருமயோகம்)வலியுறித்துகிறீர்கள்.ஆகையால் இந்த இரு சாதனங்களிலிருந்து ஏதாவது ஒன்றை எது நிச்சயமாக நன்மை பார்ப்பதோ அதை மட்டும் எனக்கு எடுத்துச் சொல்லுங்கள்?

கண்ணன்: வீரனே! சாங்கிய யோகம் கருமயோகம் இரண்டுமே சிறந்தவை.ஆனால் இவ்விரண்டிலும் சாங்கிய யோகத்தைவிட கரும யோகம் சிறந்தது.

அர்ச்சுனன்: பெருமானே! கருமயோகம் ஏன் சிறந்ததாக கருதப்படுகின்றது?

கண்ணன்:  புஜபலம் மிக்க வீரனே!கருமயோகி எவரிடமும் எதனிடமும் விருப்போ வெறுப்போ கொள்ளுவதில்லை.அவர் நித்திய சந்நியாசி என்பதை உணர்ந்து கொள்.விருப்பு வெறுப்புகளை கடந்திருப்பதால் அவர் சம்சார பந்தங்களிலிருந்து எளிதாக விலகி வாழமுடிகிறது.

அர்ச்சுனன்: பகவானே! இந்த இருயோகங்களும் சிறந்தவை என்கிறீர்கள் இரண்டிலுமிருந்து கிட்டும் பயன்களில் ஏதும் வேறுபாடு இல்லையா?

கண்ணன்: அர்ச்சுனா! அறியாமையில் உழலும் மூடர்கள் சாங்கிய யோகம்,கர்மயோகம் இரண்டும் தனித்தனி பயன்கள் அளிப்பவை என்று கருதுகிறார்கள்.புத்திமான்கள் அப்படிக் கருதுவதில்லை .நிலைத்திருந்தாலும் யோக சாதகருக்கு இரு யோகங்களின் பயன்களும் ஒன்ருபோல் கிடைத்து விடுகின்றது.எந்தப் பயன் சாந்தியயோகிக்கு கிடைக்கிறதோ, அதெ பயன் கருமயோகிக்கு கிடைக்கிறது.ஆனால் இரு யோகங்களையும் ஒரே நிலையில் காண்பவர்தான் சரியான நோக்கம் கொண்டவர்.

அர்ச்சுனன்: இருயோகங்களின் பயன்களும் ஒன்றுதான் என்றால் கரும யோகம் சாலவும் சிறந்ததாக எப்படி ஆகும்?

கண்ணன்: வீரப்பெருமானே! கருமயோகம் நிறைவு,நிறைவின்மை( சித்தி,அசித்தி) இரண்டிலும் சமநிலை எட்டுகிறது.இந்நிலையை பெறாமல் சாங்கிய யோகம் சித்திபெறாது.( சமநிலையில் நீடித்திருக்க இயலாது)ஆனால் சிந்தனைத் திறன் மிக்க கருமயோகி சித்தி அசித்திகளில் சமநிலை பெற்று விரைவிலேயே பேதம் அற்ற பிரமத்தை அடைகிறார்.

அர்ச்சுனன்:  கர்மயோகத்தின் மூலமாக அவர் பிரம்மத்தை எப்படி அடைகிறார்?

கண்ணன்: ஜம்புலன்களையும் அடக்கி வென்றவர்.அப்பழுக்கற்ற உள்ளப்பாங்கு கொண்டவர்.உடலை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்.எல்லாப் பிராணிகளிடத்திலும் தம்மை காணும் கருமயோகி செயல்புரிந்து வந்தாலும் செயல்களின் ஆசா பாசங்களில் சிக்குவதில்லை.அந்த சாதகர் பரமாத்மா நிலையை அடைகிறார்.

அர்ச்சுனன்: பகவானே! சாங்கியயோகி கர்மங்களிலிருந்து எப்படிச் சிக்காமல் தனித்திருகிறார்?

கண்ணன்:  ஸத் ( உண்மை) அஸத்( உண்மையற்றது) இவ்விரண்டு தத்துவத்தையும் உணர்ந்து ஸத்தில் நிலைத்திருக்கும் சாங்கியயோகி உலகியல் வாழ்வில் ஈடுபட்டு ஜம்புலன்களின் செயல்களில் பங்குகொள்கிறார்.அவர் காணல்,கேட்டல்,தொடல்,நுகர்தல் உண்ணுதல்,நடத்தல்,உறங்குதல்,சுவாசித்தல், பேசுதல்,மலஜலம்,கழித்தல்,பெறுதல்,கண்களைமூடித் திறத்தல்(இமைத்தல்)இச் செயல்களையெல்லாம் புலன்கள் செய்கின்றன.நான் செய்யவில்லை என்பதை உனர்ந்து என்பதை உணர்ந்து கொண்டு செயல்களுக்கு கட்டுப்படாமல் ஆசாபாசங்களுக்கு அடிமையாகாமல் வாழ்கிறார்.

அர்ச்சுனன்: இந்த இருவகை யோகிகளுமே செயல்களில் கட்டுப்படாமல் வாழ்கிறார்கள்.ஆனால் இப்படிச் சிக்காமல் இருப்பதற்கு வேறு உபயமும் உள்ளதா?

கண்ணன்: உண்டு அதுதான் பக்தியோகம் பக்தியோகி ஈடுபடும் ஆர்வத்தை துறந்து எல்லாச் செயல்களையும் பகவானிற்கே அர்ப்பணித்து விடுகிறார்.ஆகையால் அவரும் நீரின் மேல் இருக்கும் தாமரை இலைபோல் சகல பாவங்களிலும் சிக்காமல் சுயவிருப்பு வெறுப்பு இல்லாமல் வாழ்கிறார்.

அர்ச்சுனன்: பகவானே! பக்தியோகி சகலதையும்
உங்களுக்கே அர்ப்பணித்து விடுவதால் கருமங்களில் சிக்காமல் இருக்கிறார். ஆனால் கருமயோகி எந்த நோக்கத்துடன் செயல்புரிகிறார்.எப்படிச் செயல்கலில் சிக்காமல் இருக்கிறார்?

கண்ணன்: கர்மயோகி தம் அந்தக் கரணத்தில்(உள்மனம்)தூய்மைக்காகவே உடல் ,உள்ளம்,அறிவு இவைகளிடம் பற்றோ செருக்கோ கொல்ளாமல் இருக்கிறார்.இதனால் அவர் செயலின் பயனை ஆசையுடன் எதிர்ப்பார்பதில்லை.ஆதலால் அவருக்கு நிலையான நிம்மதி( பரமசாந்தி)கிட்டிகிறது.இந்நிலையை எட்டாதவர்கள் பயனில் ஆசைகொண்டு செயலாற்றுவதால் சம்சார பந்தத்தில் உலகியல் தளைகளில் கட்டுண்டு உழல்கிறார்கள்.

அர்ச்சுனன்: சாங்கிய யோகியின் மூலம் வெளிப்படும் செயல்கள்?

கண்ணன்: அர்ச்சுனா! உடல்,புலன்கள்மனம் இவைகளை தம்வசம் அடக்கி வைத்திருக்கும் சாங்கிய யோகி மனத்திலிருந்து எல்லாக் கருமங்களையும் ஒன்பது துவாரங்களை கொண்ட சரீரத்திடம் விட்டு விடுகிறார்.இதனால் கருமங்களை தான் செய்வதாகவே செய்விப்பதாகவோ கருதாமல் சுகமாக நிம்மதியாக தம் யோகி நிலையில் நிலைத்திருக்கிறார்.

அர்ச்சுனன்: சாங்கிய யோகி எந்தச் செயல்களையும் செய்வதில்லை செய்விப்பதுமில்லை. அனால் பரமாத்மா செய்விப்பார் தானே?

கண்ணன்: இல்லை. பரமாத்மா எந்த மனிதனையும் செயலாற்றும் திறன் உள்ளவனாக ஆக்குவதில்லை.எந்தச் செயலையும் பிறரைக் கொண்டு செய்விப்பதுமில்லை.கரும பலத்துடன் எவரையும் சம்பத்தபடுத்துவதுமில்லை.ஆனால் மனிதர்கள் தம் சுபாவத்தின்படி இயல்பாக செயல்புரிந்து வருகிறார்கள் அச் செயல்களுக்கு தங்களையே கர்த்தாவாக எண்ணிக் கொள்கிறார்கள்.பிறகு கரும பலத்துடன் செயலின் விளைவு சம்பந்தம் தானாகவே ஏற்பட்டுவிடுகிறது.

அர்ச்சுனன்: பரமாத்மா எவருக்கும் செயாற்றும் சுதந்திரத்தை அழிப்பதில்லை ஆனாலும் பிராணிகள் மனிதர்கள் புரியும் செயல்களுக்கு பயனை ஏற்கிறார் இல்லையா?

கண்ணன்: சர்வவியாபியான எங்கும் பரந்துள்ள பரமாத்மா எவருடைய பாவ புண்ணியங்களையும் ஏற்பதில்லை.அறியாமை காரணமாக ஜீவன்கள் தம் சொரூபத்தை உணர முடியாததால் மதிமயங்கி போகின்றன. இதனாலேயே ஜீவன்கள் செயல்களுக்கு தம்மையே கர்தாக்களாகவும் செயலின் பயனை அநுபவிப்பவர்களாகவும் நினைத்துக் கொள்கிறார்கள்.இதன் விலைவாக பிறப்பு இறப்பு எனும் சூழலில் ஜீவராசிகள் உழன்று கொண்டிருகிறார்கள்.

அர்ச்சுனன்: பகவானே அப்படியானால் எல்லா ஜீவன்களும் இதெபொலா தம்மைக் கர்த்தாகவும் போக்தாகவாகவும் ( அநுபவிப்பவர்களாக) மதி மயங்கிப் போகிறார்கள்?

கண்ணன்: இல்லை அர்ச்சுனா! விவேகிகள் மெய்ஞானம் மூலமாக அஞ்ஞானத்தை அழித்து விடுகிறார்கள்.சூரியனைப் போன்ற அவர்களுடைய ஞானம் பரமாத்மாவை அறிந்து கொள்ள உதவுகிறது.

அர்ச்சுனன்: அந்தப் பரமாத்மா தத்துவத்தின் அநுபவம் எவருக்கு ஏற்படுகிறது கண்ணா?

கண்ணன்: எவருடைய அறிவும் உள்ளமும் பரமாத்மவிடமே லயித்து இருக்கின்றனவோ, எவர் பரமாத்ம தத்துவத்தில் நிலைத்திருக்கின்றாரோ அவர்கள் அத்தகைய பரமாத்ம சாதகமான ஞானத்தின் மூலமாக பாவ புண்ணிய தளைகளிலிருந்து விடுபட்டு பரமத்மாவிடம் சேர்ந்து புன்ணிய விட்டுகிறார்கள்.அவர்களுக்கு மறுபடியும் பிறவி ஏற்படுவதில்லை.

அர்ச்சுனன்: பரமாத்மாவை உணர்ந்து கொண்ட மகா புருஷர்களின் ஞானம் நடைமுறை நிலையில் எப்படி இருக்கிறது கிருஷ்ணா?

கண்ணன்: தத்துவஞானியான மகாபுருஷர்கள் கல்வியிலும் பண்பிலும் சிறந்து விளங்கும் பிராமனிடமும் அவையில்லாத சண்டாளனிடமும் சமநிலையில் பழகி பரமாத்ம சொரூபத்தை காண்கிறார்கள்.இதேபோல் பசு,யானை,நாய் முதலிய பிராணிகளிடமும் சமநிலையுடன் பரமாத்ம தத்துவத்தை தரிசிக்கிறார்கள்.ஆனால் இந்த சமநிலை அவர்களுடன் கூடி வாழ்வதற்கோ, உறவாடுவதற்கோ பயன்படுத்துவதில்லை.

அர்ச்சுனன்:சமநிலை நோக்கைக் கொண்டிருப்பதால் என்ன ஆகிறது? என்ன பயன் கிட்டுகிறது?

கண்ணன்: எவருடைய உள்ளம் எல்லா நிலைகளிலும் சமத்துவ நிலையில் அதாவது பரமாத்ம தத்துவத்தில் திடமாக இருக்கிறதோ, அவர் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டே இவ்வுலகை வென்றவராகிறார்.இதன் உலகாயுத நிலையிலிருந்து மேம்பட்டு விளங்குகிறார்.காரணம் பிரமம் குற்றம் குறையில்லாதது.எனுனும் சமநிலையிலுல்ளது.ஆகையால் அந்த மகான்கள் சமநிலையில் உள்ள பிரமத்திடமே நிலைத்திருக்கிறார்கள்.

அர்ச்சுனன்: கண்ணா!இத்தகைய சமத்துவ நிலையில் நீடித்திருக்க என்ன வழி?

கண்ணன்: நடைமுறை வாழ்வில் விரும்புவது -விரும்பாதது அனுகூலம் பிரதிகூலம் சார்ந்த சூழ்நிலை ஏற்பட்டாலும்மகிழ்ச்சியோ வருத்தமோ கொள்ளாதவர்.மோக மயக்கங்கள் இல்லாதிருப்பார்.அன்றியும் நிலையான பகுத்தறிவாளியாக இருப்பார்.பிரமத்தை அறிந்திருப்பார்.பரமாத்மாவிடமே நிலைத்திருப்பார்.

அர்ச்சுனன்: பகவானே! இந்த சமத்துவ நிலை எந்த நிலையில் ஏர்படுகிறது?

கண்ணன்: .வெளிப்பொருட்களிடம்( பெளதீக பொருட்கள்) பற்றுதல் கொள்ளாத ஞானி முதலில் தம்முள் இருக்கிற சாத்வீகமான சுகத்தை அடைகிறார்.பிறகு அவர் பரமாத்வோடு ஒருங்கிணைந்து சாசுவதமான ஆனந்தத்தை அநுபவிக்கிறார்.

அர்ச்சுனன்: உலகாயுத( பெளதீக) பொருள்களின்பால் ஏற்படும் பற்றுதல்களிலிருந்து எப்படி தப்புவது?

கண்ணன்: .குந்தியின் புதல்வனே!புலன்களும் போகப் பொருட்களும் சேர்ந்து ஏற்படுத்தும் அநுபவங்கள் எல்லமே துன்பம் விளைவிப்பவைதாம்.ஆதியும் அந்தமும்(பிறப்பு-இறப்பு) உள்ளவைதாம்.ஆகையால் விவேகமான மனிதன் அவைகளின் ஈடுபடமாட்டான்.அநுபவிக்கவும் விருப்பமாட்டான்.

அர்ச்சுனன்: கணணா! அந்தச் சுகபோக அநுபவங்களில் ஈடுபடாத மனிதரின் சிறப்புகள் தான் என்ன?

கண்ணன்: .எந்தவொரு மனிதன் தன் உடலை திறப்பதற்கு முன்பே காமம், குரோதம் முதலியவற்றின் உத்துவேகத்தை சகித்துக் கொள்ளும் திறன் பெற்றுவிடுகிறானோ, அதாவது காமம் ,குரோதம்முதலியவற்றின் உத்வேகம் தலைகாட்டவே விடாமல் செய்து விடுகிறானோ அவன் தான் சுக புருஷன்.அவனே யோகி,அவன் தான் தீரனான ஆண்மகன்.

அர்ச்சுனன்: அந்த நிலையை எய்திய பின் என்ன ஆகிறது கண்ணா?

கண்ணன்: .காம குரோதிகளின் உத்வேகம் எழாதிருப்பதால் அந்த ஆண்பிள்ளைக்கு பரமாத்ம தத்துவத்தில் ஏற்படும் நித்திய சுகம் கிட்டுகிறது.அவன் அதில் இலயித்து ஆனந்தமடைகிறான்.அவனுடைய ஞானம் தெளிவாக நிலைத்திருக்கிறது.அவன் பிரம்ம சொரூபமாகிறான்.அந்த சாதகன்( சாதனையில் வெற்றி கண்டவன்)சாந்தமான பிரமத்தை அடைகிறான்,பிரம்மஞானி என போற்றப்படுகிறான்.

அர்ச்சுனன்: அந்த சாந்தமான யோகத்தை மேலும் எவர் பெறுகிறார்?

கண்ணன்:எந்த சாதகருக்கு உடல், புலன்கள் மனம், புத்தியெல்லாம் தன் வசத்தில் இருக்கின்றனவோ ,எல்லாப் பிராணிகளின் நலன்களிலும் நாட்டமுள்ளதோ, எவருடைய மனச் சஞ்சலங்கள் அழிந்து போகின்றனவோ, எவருடைய எல்லப் பாவங்களும்விலகி விட்டனவோ, அத்தகைய விவேகிகளான ஞானசாதகர்களுக்கு நிர்வாண பிரமம் கிட்டுகிறது.

அர்ச்சுனன்: கண்ணா! நிர்வாண பிரமம் அடைந்தவர்களில் இலட்சணங்கள் எவை?

கண்ணன்:அர்ச்சுனா சுத்த பிரம்மத்தை அடைந்தவர்களிடம் காமம்,குரோதம் சிறிதும் இருக்காது.மனம் அவர்கள் வசமே இருக்கும்.அவர்கள் சுய உண்மை நிலையை ( சொரூபத்தை) அறிந்தவர்கள்.அவர்களை சாங்கிய யோகி என்பர். அவர்கள் வாழும்போதும் இறந்த பிறகும் சுத்த( நிர்வாண) பிரமத்தை அடைந்தவர்கள் ஆவர்.

அர்ச்சுனன்: இந்த நிர்வாண பிரமம் வேறு சாதனங்கள் மூலமும் அடையக்கூடியதா?

கண்ணன்:ஆம் அர்ச்சுனா! தியான யோகத்தால் பெறமுடியும்.வெளி விஷயங்களை வெளியே விட்டுவிட்டு அதாவது எல்லா போகப் பொருட்களையும் துறந்துவிட்டு கண்களின் பார்வையை புருவங்களின் இடையில் நிலைநிறுத்தி நாசித் துவாரங்களில் சஞ்சரிக்கும் பிராணன் ( பூரகம்) அபானம் ( சேரகம்) எனும் மூச்சுக் காற்றை சமானமாக்கி எல்லாப் புலன்களையும் மனத்தையும் ,புத்தியையும் தன்வசப்படுத்தி வைத்திருக்கும் சாதகர் ஆசை,பயம், குரோதம் முதலியவற்றைத் துறந்தவர்.மோட்சத்தை விரும்பும் அவர் எப்போதும் முத்தர் நிலையில் இருப்பர்.

அர்ச்சுனன்: பகவானே! எல்லாத் தளைகளிலிருந்து எளிதாக விடுபட வேறு சுலபமான சாதனம் உள்ளதா?

கண்ணன்: உள்ளது.பக்தியோகம் எவர் என்னை எல்லா உலகங்களுக்கும் பாதுகாவலனாகவும்,பரிபாலகனாகவும் மதிக்கிறாரோ,எவர் எல்லா உயிரணங்களுக்கும் பரம கர்த்தாவாக(சுயநலமற்ற இரக்கமுள்ள அன்பன்) என்கிறாரோ,எவர் என்னை எல்லா யக்ஞங்களுக்கும் தவங்களுக்கும் அநுபவ பாத்தியதை கொண்டவராக உணர்கிறாரோ( தம்மை ஒருக்காலும் அநுபவிப்பவராக என்ணாதிருகிறாரோ) அவருக்கு பரமசாந்தி பேரமைதி கிட்டுகிறது.

06.ஸாங்கிய யோகம்

பகவான்: அர்ச்சுனா! நான் கர்மயோகம் குறித்துப் பல விஷயங்களைச் சொன்னேன். இப்போது கர்ம யோகத்தின் சாரத்தைச் சொல்கிறேன்.எந்த மனிதன் செய்வினைப் பயன்களை( தோன்றிமறையும் பொருட்களை) துய்க்காமல் தம் கடமைகளைச் செய்து வ்ருகிறானோ,அவன் தான் துறவி.அவன் தான் யோகி.தீமை சார்ந்த கருமங்களை துறந்தவன் சன்னியாசியோ யோகியோ இல்லை.
ஆகையால் அர்ச்சுனா! உலகோர் எதைச் சன்னியாசம் ( சாங்கிய யோகம்) என்கிறார்களோ, அதுதான் கர்மயோகமென்பதை உணர்ந்து கொள்.

அர்ச்சுனன்: சன்னியாசி, யோகி -இவர்களிடம் எந்த விஷயத்தில் மகிமை உள்ளது?

கண்ணன்: சங்கற்பங்களைத் துறக்கும் விஷயத்தில் தான் உள்ளது.ஏனெனில் சங்கற்பங்களை ( செயல் தீர்மானம்)துறக்காமல் அதாவது தம் மனத்தின் ஆதிக்கத்தை விடாமல் மனிதன் எந்த விதமான யோகியாகவும் முடியாதது.

அர்ச்சுனன்: யோகியாவதற்கு முக்கிய காரணம் என்ன?

கண்ணன்: எந்த மனிதன் யோகத்தில் ( சம நிலையில்) ஆதிக்கம் செலுத்த விரும்புகிறானோ, அத்தைகைய சிந்தனை கொண்ட யோகிக்குபற்றுதல் இல்லாமல் கடமையையைச் செய்வதுதான் யோக நிலையில் திடமாக இருப்பதற்குக் காரணம்.அந்த யோகியின் அமைதிதான் ( சாந்தி) பரமாத்ம தத்துவத்தை அடைவதற்குக் காரணம்.அதாவது,உலகியல் தொடர்புகளைத் துறப்பதால் கிட்டும் அமைதியை அனுபவிக்காமல் இருப்பதே பரமாத்துவத்தைப் பெறுவதற்குக் காரணம்.

அர்ச்சுனன்:  யோகத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட யோகரூடன் எனும் சாதனையாளனுக்கு என்ன அடையாளம் பகவானே?

கண்ணன்: எந்த யோக சாதகனுக்கு புலன்களின் இலக்கான போகவிஷயங்கலும் செயல்களிலும் விருப்பமுள்ள ஈடுபாடுஇல்லையோ ,தன்னலம் வேண்டி எந்தச் சங்கற்பமும் இல்லயோ அந்தச் சிறந்த மனிதர் தான் யோகரூடர்.யோகத்திலேயே ஈடுபட்டிருப்பர்.

அர்ச்சுனன்: மனிதன் யோகரூடனாக விளங்குவதற்கு என்ன செய்ய வேண்டும் கண்ணா?

கண்ணன்: அம்மனிதன் தன்னைத் தானே உயர்த்திக் கொள்ளவேண்டும்.தன்னைத் தாழ்த்திக் கொள்ளக்கூடாது.மனிதன் அவனுக்கே நண்பனாகவும் பகைவானகாகவும் இருப்பவன் தனக்குத்தனே நட்பும் பகையும் ஆனவன்.

அர்ச்சுனன்: தானே தனக்கு நட்பாகவும் பகையாகவும் எப்படியாக முடியும் கண்ணா?

கண்ணன்: எந்த மனிதன் தன்னைத்தானே வெற்றி கொள்கிறானோ,அதவது எவன் “அஸத்”( உண்மையற்றது) நிலையுடன் தொடர்பு கொள்ளாமல் இருக்கிறானோ,அவனே அவனுக்கு நண்பன் எவன் தனக்குத்தானே தோல்வி அடைகிறானோ,அதாவது எவன் “அஸத்” கூட தொடர்பு கொண்டிருகிறானோ அவனே அவனுக்கு விரோதி.

அர்ச்சுனன்: மனிதன் தனக்குத்தானே நண்பனானால் என்ன ஆகும் பகவானே?

கண்ணன்: எவன் தன்னைதானே வென்றிருக்கிறானோ,அவன் முன்வினைப் பயனாக ஏற்படும் நன்மை தீமைகளிலும்,நடைமுறை வாழ்வில் செய்யப்படும் செயல்களின் வெற்றி தோல்விகளிலும்
பிறர் புரியும்,மானம், அவமானங்களிலும் இருக்கிறான்.ஆகையால் அந்தத் திடசித்தனான மனிதன் பரமாத்மாவை அடைகிறான்.

அர்ச்சுனன்: பகவானே! பரமாத்மவை அடைந்த மனிதனின் இலட்சணங்கள் என்ன?

கண்ணன்: அந்த மகாபுருஷர்களின் அந்தக்கரணம் ( உள் மனம்)எப்பொதும் ஞானம் விஞ்ஞானம் எனும் மெய்யறிவு சிறப்பறிவுகளல் நிரம்பி திருப்தியுடன் உள்ளது.அவனிடம் எல்லப் புலன்களும் அடங்கி ஒடுங்கி இருக்கின்றன. அவன் எல்லா சூழ்நிலைகளிலும் மனம் பேதலிக்கமால் விருப்பு வெறுப்புகளுக்கு இலக்காகாமல் நடுநிலையில் இருக்கிறான்.மண்ணாங்கட்டி, கருங்கல்,தங்கம் இம் மூன்றையும் சமமாக மதிக்கும் அறிவு பெற்றவன்.பொருள்களில் மட்டுமல்ல உற்றார்,உறவினர்,நண்பர்,பகைவர்,மதிப்பவர்,மதியாதவர்,பொதுவானவர்,வெறுக்கத்தக்கவர்.நல்லவர்,தீயவர்-இத்தைய எல்லோரிடமும் சமபுத்தியுடன் பழகுபவன்.இத்தைகைய சமபுத்தி உள்ளவன் மிகச்சிறந்த மனிதனாகிறான்.

அர்ச்சுனன்: அத்தைகைய சமபுத்தி கர்மயோகத்தால் மட்டும் ஏற்படுகின்றதா, அல்லது வேறு சாதனைகளாலும் ஏற்படுவதா?

கண்ணன்: அந்த சமபுத்தி தியான யோகத்தாலும் ஏற்படுகிறது.ஆதலால் தியான யோகத்தின் விதிமுறையைச் சொல்கிறேன்.தியானயோகி போகபுத்தி இல்லாதவர்.அனுபவ ஆசை கொண்டு பொருள்களைச் சேகரிக்க மாட்டார்.ஆசைகளைத் துறந்தவர் உள்ளத்தையும் உடலையும் தம் வசத்தில் எப்பொதும் வைத்திருப்பவர்.ஏகாந்தத்தில் தனியனாக வாழ்ந்தாலும் மனத்தை நிரந்தரமாகப் பரமாத்மாவிடம் ஈடுபடுத்தியிருப்பார்.

அர்ச்சுனன்: மனதைப் பரமாத்மாவிடம் இடையறாது ஈடுபடுத்த அதாவது தியான யோகத்தில் ஆழ்ந்திருக்கப்பயன்படுபவை எவை?

கண்ணன்:பரிசுத்தமான புனிதமான இடத்தில் தருப்பைப் புற்களை விரித்து அவற்றின் மேல் மான் தோலை விரித்து அருள்மேல் பவித்திரமான வஸ்திரங்களை விரித்து ஆசனம் அமைக்க வேண்டும்.அது அதிக உயரமாகவோ தாழ்வாகவோ இருக்கலாகாது.ஆடாமல் நிலையாக இருக்க வேண்டும்.இந்த ஆசனத்தில் அமர்ந்து மனத்தையும் புலன்களையும் தம் வசமாக்கி தியான யோகப் பயிற்சியை அந்தக்கரண சுத்திக்காக அமைத்துக்கொள்ள வேண்டும்.

அர்ச்சுனன்: அந்த ஆசனத்தில் எவ்வாறு அமரவேண்டும்?

கண்ணன்: உடல், கழுத்து, தலை மூன்றையும் நிமிர்த்தி நேராக அசையாமல் அமர வேண்டும்.பார்வை மூக்கு நுனியில் நிலையாக இருக்கவேண்டும்.

அர்ச்சுனன்: இந்த ஆசனத்தில் எந்த உள்ளப்பாங்குடன் அமர்ந்திருக்க வேண்டும்?

கண்ணன்: தியான் யோகியின் அந்தக்கரணம் விருப்பு வெறுப்புகள் இல்லாதது பயமற்றது.பிரும்ம சரிய விரதத்தில் ஈடுபட்டிருப்பது அத்தகைய யோகி விழிப்புணர்வுடன் மனத்தை உலகியல் வாழ்விலிருந்து விலக்கி என்னிடம் செலுத்தி என்னையே தியானித்தவாறு அமர்ந்திருப்பான்.இப்படித்தான் ஜம்புலன்களையும் அடக்கியவாறுஅமர வேண்டும்.

அர்ச்சுனன்: இதன் பயன் என்ன பகவானே?

கண்ணன்: மேற்சொன்னவாறு தன்மனத்தை நிரந்தரமாக என்னிடம் செலுத்தியிருக்கும் யோகி தன் மனத்தை ஆள்வதில் தேர்ந்தவன்.இவருக்கு என்னுள் இருக்கும் “நிர்வாண ப்ரமா” எனும் பரிசுத்தமானசாந்தி( ஆழ்ந்தபேரமைதி)கிட்டுகிறது.

அர்ச்சுனன்: இவ்வாறு தியானம் செய்பவர்கள் பலர் உள்ளனர்.ஆனால் அவர்கள் எல்லோருக்கும் தியான யோகம் சித்தி பெறுவதில்லையே ஏன்?

கண்ணன்: அர்ச்சுனா! நடுநிலை பிறழ்வதுதான் காரணம்.அதிகமாய் சாப்பிடுகிறவன்,சாப்பிடாமலே இருப்பவன்,அதிகம் தூங்குபவன்,தூங்காமலே இருப்பவன்,இவர்கள் புரியும் யோகம் பலனளிப்பதில்லை.

அர்ச்சுனன்: அப்படியானால் இந்த யோகம் எவருக்குச் சித்திக்கிறது?

கண்ணன்: எந்த சாதகருடைய உணர்வு முறையும் நடைமுறையும் செயல்முறையும் அளவாக ஒழுங்காக இருக்கின்றனவோ,செயலீடுபாடுகளும் முயற்சிகளும் தன்னலமின்றி நெறி முறைப்படி அமைகின்றனவோ,உறக்கமும் விழிப்பும் மிதமாக உள்ளனவோ அவருக்கு துன்பங்களைப் போக்கவல்ல இந்த தியானயோகம் சித்தி பெறுகிறது.

அர்ச்சுனன்: துன்பங்களை போக்கவல்ல தியான யோகம் எப்போது சித்தி பெறுகிறது?

கண்ணன்: நன்கு தன் வயப்படுத்தபட்ட சித்தம் தன்நிலையில் திடமாக இருந்தவாறு எல்லாப் பொருட்களிடமிருந்தும் ஒதுங்கி இருக்கிறது.அதாவது அத்திட சித்தம் எப்பொருளையும் தனக்கு தேவை என்று கருதுவதிலை.இந்நிலையைப் பெற்றவர்தான் யோகி.இவர் தியான யோகத்தில் சித்தி பெற்றவர்.

அர்ச்சுனன்: அந்த யோகியின் அத்தகைய சித்தத்தின் நிலைப்பாடு என்ன?

கண்ணன்: காற்று அசைவில்லாத இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் தீபத்தின் சுடர் சிறிதும் அசையாமல் இருப்பதைப் போல, தியான யோகத்தில் ஆழ்ந்திருக்கும் யோகியின் சித்தம் சஞ்சலமின்றி ஒரே முனைப்பில் ஆழ்ந்திருக்கும்.

அர்ச்சுனன்: சித்தம் அந்நிலையில் திடமாக இருப்பதால் என்ன ஆகிறது?

கண்ணன்: யோகப் பயிற்சிகளால் நிலைநிறுத்தப்பெற்றுள்ள சித்தம் ஆழ்நிலையில் ஒடுங்கி சமாதி நிலையை அடைகிறது. அதனாலேயே சுகமாக லயிக்கிறது.அப்போது யோகி தன்னுள் தன்னையே பார்த்துக் கொண்டு பேரானந்தமடைகிறார்.

அர்ச்சுனன்: தமக்குள்ளேயே பேரானந்தம் அடைவதால் என்ன பயன் ஏற்படுகிறது?

கண்ணன்: அத்தைகைய யோகி எல்லையற்றதும், புலங்களிற்கு எட்டாததும், புத்தியால்( உணர்வால்) மட்டுமெ அறியத்தக்கதுமான சுகானுபவத்தை பெறுகிறார்.இத்தைகைய உண்மையான சுகானுபவத்தில் ஆழ்ந்திருந்தாலும் அந்த தியான யோகி எந்த நிலையிலும் தன்னிலையிருந்து  ( சுய சொரூபத்திலிருந்து) நழுவுவதில்லை.மாறுவதில்லை.

அர்ச்சுனன்: பகவானே! அந்த யோகி எக்காரணத்தால் தன்நிலையிலிருந்து மாறுவதில்லை?

கண்ணன்: அந்த யோகி தான் பெறும் சுகலாபத்தை விட மேலானதாக எதையும் கருதுவதில்லை.அந்நிலையில் எவ்வளவு பெரிய துன்பமும் அவரை தடுமாறச் செய்யாது.ஏனெனில் அவர் தன்னிலையில் பரம சுகம் பெறுகிறார்.துக்கம் எதுவும் அவரை நெருங்குவதில்லை.

அர்ச்சுனன்: அப்படியானால் அத்தகைய மேலான சுகலாபம் பெற என்ன செய்ய வேண்டும்?

கண்ணன்: யோகம் என்பதை முதலில் புரிந்து கொள்.எந்த நிலையில் துக்கங்களின் சோக்கை பிரிவாகிறதோ,அதாவது உலக வாழ்வுடன் அறவே தொடர்பற்றுப் போகிறதோ,அதுதான் “யோகம்”.இத்தகைய யோகத்தை சலிப்படையாத உள்ளம் பாங்குடனும் தீர்மாமான உறுதிபாட்டுடனும் பெற வேண்டும்.

அர்ச்சுனன்: கண்ணா! தன் சொரூபத்தை தியானித்திருப்பதால் யோகம் எனும் சம்த்துவ ஈடுபாடு ஏற்படுகிறது.இதைப் பெற வேறுவழியும் உள்ளதா?

கண்ணன்: உள்ளது.நிர்க்குணம்,நிராகாரம் எனும் இயல்பும் உருவும் இல்லாத பரமாத்மாவை தியானிப்பது.தீவிர விருப்பதால் ஏற்படும் எல்லா ஆசைகளையும் துறந்து விட்டு, புலன்களின் பாதிப்பை மனத்திலிருந்து அறவே அகற்றிவிட்டு தைரியமும் திடமும் கொண்ட பகுத்தறிவின் மூலமாக மெல்ல மெல்ல உலகியல் வாழ்விலிருந்து ஒதுங்கி விட வேண்டும். எல்லா இடங்களிலும் பரிபூரணமான பரமாத்மாவிடம் மனத்தையும் புத்தியையும் நிலைநிறுத்திய பின் வேறு எதைபற்றியுமே சிந்திக்காமல் இருக்க வேண்டும்.

அர்ச்சுனன்: வேறு சிந்தனைகள் ஏற்பட்டு விட்டால்?

கண்ணன்: ஏற்படாமல் நிலைநிறுத்த முயற்சி செய்து வரவேண்டும்.நிலையற்ற தடுமாற்றமுள்ள மனம் எங்கெல்லாம் அலைபாய்கிறதோ அங்கிருந்தெல்லாம் விலக்கி அதை பரமாத்மாவிடம் முறையாக ஏடுபடுத்த வேண்டும்.

அப்படிச் செய்வதால் ரஜோகுணம் சார்ந்த செயல்கள் இல்லதாவரும், சாந்தமான உள்ளம் கொண்டவரும், பாவங்கள் அற்றவரும், பிரம்ம சொரூபியுமான யோகிக்கு உத்தமமான ( சாத்வீகமான) சுகம் கிட்டும்.

அதற்கு பிறகு முழுவதும் பரமாத்மாவிடம் ஏற்படுத்தக் கொண்டுள்ள ,குற்றமற்ற அந்த யோகிக்கு சுகமளிக்கும் பிரம்ம சொரூபமான பரமசுகம் கிட்டும்.

அர்ச்சுனன்: பகவானே! நீங்கள் இதுவரையில் ஸகுணமும் ஸாகாரமுமான சொரூபத்தையும் , தம் சொரூபத்தையும்,நிர்க்குண, நீராகார சொரூபத்தையும் டியானம் செய்பவர்களை அறிமுகபடுத்தினீர்கள்.ஆனால் இவர்கள் உலகத்தை எந்த நோக்கோடு பார்க்கிறார்கள் என்பதைச் சொல்லவில்லையே?பகவானே! இப்போது சொல்லுங்கள் தம் சொரூபத்தை தியானம் செய்துவரும் யோகி எந்த உலகத்தை எப்படிப் பார்க்கிறார்?

கண்ணன்: தியான யோகத்தில் ஈடுபட்டிருக்கும் உள்ளப் பாங்கு கொண்ட யோகி தம்மைத்தாமே  ( தம் சொரூபத்தையே) எல்லா உயிர்களிடமும் பார்க்கிறார்.எல்லாப் பிராணிகளையும் தம்மிடம் பார்க்கிறார்.இதனாலேயே அவர் சமநோக்கு.சமசிந்தனை கொண்ட” சமதர்சி”என்று போற்றப்படுகிறார்.

அர்ச்சுனன்:  எவர் உங்களுடைய ஸகுண-ஸகார சொரூபத்தை ( குணமும் உருவும் கொண்ட வடிவத்தை) தியானிக்கிறாரோ,அவர் இவ்வுலகத்தை எப்படிப் பார்க்கிறார்?

கண்ணன்: அந்த யோகி எல்லவற்றிலும் என்னைக் காண்கிறார்.என்னிடம் எல்லவற்றையும் காண்கிறார்.ஆகையால் அத்தைகைய சாதகருக்கு எதிரில் நானும் என் எதிரில் அவரும் எப்பொதும் காட்சியளிக்கிறோம். நாங்கள் எங்களை கண்டு கொண்டிருக்கிறோம்.

அர்ச்சுனன்: நீங்களும் அந்த யோகியும் ஒருவரை ஒருவர் காண இயலாத நிலை ஏன் ஏற்படுவதில்லை?

கண்ணன்: அர்ச்சுனா! அந்த யோகி எல்லா உயிரினங்களிலும் இடம் பெற்றிருக்கிற என்னுடன் இரண்டறக் கலந்து என்னைப் போற்றுகிறார் இதனால் எல்லா ஜீவன்களுடனும் முறையாய் பழகிக் கொண்டே எப்போதும் இடையறாமல் என்னுள் ஒன்றியிருக்கிறார்.அப்படியிருக்க நாங்கள் ஒருவருக்கொருவர் எப்படிப் புலப்படாமல் இருக்கமுடியும் .ஒருக்காலும் முடியாது.

அர்ச்சுனன்: பகவானே1 எவர் உங்களுடைய நிர்குண-நிராகரா சொரூபத்தையே (குணமும் உருவும் இல்லாத தன்மை) தியானித்திருக்கிறாரோ,அவர் இந்த உலகை எந்த நோக்கில் பார்க்கிறார்?

கண்ணன்: அர்ச்சுனா! அந்தஞானியான மனிதன் தன் உறுப்புகளிலும் அவை ஏற்படுத்தும் சுகதுக்கங்களிலும் தன்னை சரிசமமாக பார்க்கிறான்.ஆனால் யோகி அப்படி இல்லை.அவர் தம் உடலை பிற ஜீவன்களுடன் ஒப்பிட்டு சரிநிகராக காண்கிறார். எல்லா ஜீவன்களிடமும் அவைகளின் சுகதுக்கங்களிலும் தன்னைச் சமமாக நோக்குகிறார்.இதனால் தான் ஞானியான யோகி மனிதருள் மேம்பட்டவராக போற்றப்படுகிறார்.

அர்ச்சுனன்: மதுசூதனா! இதுவரை தாங்கள் சமத்துவ நிலையை அடைய உதவும் தியான யோகத்தை பற்றி சொன்னீர்கள்.மனத்தின் சஞ்சலம் காரணமாக தியான யோகத்தில் திடமாக ஈடுபடுவது எனக்கு கடினமாக இருக்கிறது.காரணம்,மனம் மிகச் சஞ்சலமானது.குழப்பம் ஏற்படுவது.வலியது,பிடிவாதமுள்ளது.இத்தகைய மனத்தைத் கட்டுபடுத்துவது காற்றை கட்டுபடுத்துவதைப் போல் மிகக் கடினம்.முழுமையாக வெற்றி காண்பது மிக அரிது என்று எண்ணுகிறேன்.

கண்ணன்: அர்ச்சுனா! நீ சொல்வது சரிதான்.மனம் சஞ்சலம் மிகுந்தது.இதை அடக்குவதும் மிகக் கடினம்.குந்தியின் புதல்வனே! பயிற்சியானாலும் வைராக்கிய சிந்தையாலும் மனத்தை கட்டுபடுத்த இயலாதவரால் தியான யோகத்தில் சித்தி பெற முடியாது.தனது மனத்தையும் புலன்களையும் அடக்கி வைக்கும் ஆற்றல் பெற்றவரால் நிச்சயமாக தியான யோகத்தில் சித்தி பெறமுடியும்.

அர்ச்சுனன்: கண்ணபிரானே! தியான யோக சாதனையில் சிரத்தை இருக்கிறது.ஆனால் முயற்சி பலவீனமாக இருக்கிறது.இத்தைகைய சாதகருக்கு அந்திய காலத்தில் யோக சாதனை பயன்படாமல் போகிறது.அந்நிலையில் அவருக்கு யோக சித்தி கிட்டாமல் போகிறது .பிறகு என்ன நிலையை அடைகிறார்? உலகியல் வாழ்க்கையில் புகலின்றி இரண்டும் கெட்ட சாதகர் சிதறிப்போன மேகத்தை போல உருக்குலைந்து போவார் இல்லையா? ஹே கிருஷ்ணா! என் சந்தேகம் இதுதான் .இதை நீங்கள் தான் போக்க வேண்டும்.உங்களைத்தவிர இதை வேறொருவராலும் போக்கமுடியாது.

கண்ணன்: பார்த்தனே!நிலைதடுமாறிய சாதகராக இருந்தாலும் இவருக்கு யோகத்திலோ அல்லது பரலோகத்திலோ வீழ்ச்சிஏற்படுவதில்லை. ஏனென்றால் அன்பானவனே! நலந்தரும் செயலைச் செய்துவரும் எந்தச் சாதனயாளரும் இழிநிலைக்கு செல்வதில்லை.

அர்ச்சுனன்: சரி அப்படியானால் இழிநிலை( துர்கதி) செல்வதிலை என்ரால் வேறு எங்கு செல்கிறார்கள்
கண்ணன்: அர்ச்சுனா!எந்த சாதகரின் உள்ளத்தில் உலகியல் ஆசை சிறிதளவெனும் இடம்பெற்றிருக்கிறதோ.அவர் யோக நிலையிலிருந்து நழுவியராவர்,அவர் புண்ணிய கருமங்களை செய்பவர்கள் வாழும் மேலான உலகத்தில் ( சுவர்க்கம் முதலியன) இடம் பெறுகிறார்.ஆனால் அங்கு பல வருடங்கள் இருந்தபின்,அழியும்

மானிட சமுதாயத்தில் ( பூவுலகில்) செல்வந்தர்களின் மாளிகையில் வந்து பிறக்கிறார்.ஆனால் எந்த சாதகரின் உள்ளத்தில் உலகியல் வாழ்விற்குரிய விருப்பம் இல்லையோ அவரும் கடைசி காலத்தில் ஏதாவது ஒரு விஷேச காரணத்தால் யோக சாதனையிலிருந்து தவறினால், அவர் சுவர்க்கம் முதலிய சுகபோக உலகிற்கு செல்லாமல்,நேரே தத்துவ ஞானிகளின் கூட்டத்தில் பிறக்கிறார்.தொடர்ந்து யோக சாதனயில் ஈடுபடுகிறார் .இத்தகைய பிறவி இந்த மனித உலகில் மிகவும் அரிது.

அர்ச்சுனன்: தத்துவஞானிகளின் குலத்தில் பிறவி பெறுவதால் என்ன பயன் கண்ணா?
கண்ணன்: அர்ச்சுனா! அந்த சாதகருக்கு பூர்வ ஜென்மத்தில் கிடைத்த யோக சாதனைகள் சுலபமாக கிடைக்கின்றன.இதனால் யோக சித்தி பெறும் முயற்சியில் முனைப்புடன் ஈடுபடுகிறார்?

அர்ச்சுனன்: பகவானே! நீங்கள் தத்துவஞானிகளான யோகிகளின் குலத்தில் பிறப்பவரின் நிலைபற்றி சொன்னீர்கள்.சுத்தமான செல்வந்தர்களின் இல்லங்களில் நிலை என்ன?
கண்ணன்: அர்ச்சுனா! அந்த யோகப் பிரஸ்டரான இரண்டும் கெட்டான் சாதகர் தன்னடக்கம் இல்லாது போனாலும் ( பிற ஆசாபாசங்களுக்கு இலக்கானாலும்) முன் பிறவி செய்த யோக சாதனை காரணமாக பரமாத்மாவிடம் கவர்ந்து இழுக்கப்படுகிறார்.

அர்ச்சுனன்: கண்ணா! முன் பிறவியில் செய்த முயற்சியில் அப்படி என்ன சக்தியிருக்கிறது? எப்படி யோக சாதனைக்கு வலுகட்டாயமாக கவர்ந்து இழுக்கப்படுகிறார்?
கண்ணன்: யோக சாதனையில் ஆர்வமுடன் ஈடுபட்டவர் வேதத்தில் கூறியுள்ள விருப்பமுள்ள ( பயந்தரும்) செயல்களைத் தவிர்த்து யோக சாதனையிலே நீடித்திருக்கிறார்,எனினும் ஒருசமயம் நிலை தவறிவிடுகிறார்.பிறகு சாமளித்துக் கொண்டு யோகத்தில் மறுபடியும் தொடர்ந்து ஈடுபடுகிறார்.இத்தகைய சாதகரைப் பற்றி என்ன சொல்ல முடியும்

அர்ச்சுனன்:பரமாத்மாவிடம் ஈடுபட்டு ஈர்க்கப்படும்போது என்ன ஆகிறது?
கண்ணன்;அந்த நிலையில் யோகி விரைவாக சாதனையில் ஈடுபடுகிறார். எல்லாப் பாவங்களிலிருந்து விடுபடுகிறார்,பல பிறவிகளிலும் தொடர்ந்து சாதகர் நிலையில் முன்னேறி பரமகதியான பரமாத்மாவை அடையும் பேறுபெறுகிறார்.

அர்ச்சுனன்: பரமகதியான பரமாத்மாவை அடையும் யோகிக்கு உள்ள சிறப்பு மகத்துவம் என்ன?
கண்ணன்; அந்த யோகி விரும்பி ஆவல் கொண்டு சாதகம் செய்யும் தவசிகள், ஞானிகள்,சாதகர்கள் ஆகியவர்களைவிட சிறந்தவர்.எனவே அர்ச்சுனா! நீயும் தொடர்ந்து அந்த யோகியாக விளங்க தொடர்ந்து சாதகம் செய்து வா.

அர்ச்சுனன்:  அந்த யோகிகளிலும் தலை சிறந்தவர்?
கண்ணன்; எவர்களெல்லாம் என்னிடம் ஆழ்ந்து ஈடுபட்டவாறு உள்ளுணர்வுடன் சிரத்தையும் பக்தியும் பிரேமையும் கொண்டு என்னைப் போற்றி வணங்கி வருகிறாரோ,அந்த பக்தன் எல்லாவித யோகிகளையும்விட மேலானவர்.மிகச்சிறந்தவர்.

07.பூரணத்தின் ஞானம்

அர்ச்சுனன்: கண்ணபிரானே! நாங்கள் குறிப்பிடும் தலை சிறந்த யோகியாக என்னால் ஆக இயலுமா?எப்படி?

கண்ணன்; பார்த்தனே! நீ என்னிடம் தீவிர ஈடுபாடு கொண்டு என்னையே புகலாக கொண்டு என்னைப் போற்றி வந்தால் நீ நிச்சயம் என் முழுரூபத்தையும் அறிந்து கொள்வாய்.அதற்கான வழிமுறையைஎன்னிடம் கேட்டுத் தெரிந்து கொள்.அந்த முழுமையான என் உருவை அறிந்து கொள்ள உனக்கு விஞ்ஞான பூர்வமான ஞானத்தை முழுமையாக அறிவிக்கிறேன்.அதை அறிந்த பிறகு உனக்கு இந்த உலகில் அறிந்து கொள்ளவேண்டியது வேறெதுவும் மீதி இராது.

அர்ச்சுனன்:  அப்படியானல் எல்லா மனிதர்களும் உங்கள் முழு ரூபத்தையும் ஏன் அறிந்து கொள்வதிலை?
கண்ணன்; இந்த உலகில் தாமாகவே யோக சாதனையில் ஈடுபாடு கொண்டவர்கள் மிகக் குறைவு.மனிதர்களிடம் இதற்கான முயற்சியும் குறைவு.ஆயிரத்தில் ஒரு மனிதன் தான் தன் நன்மைக்காக முயற்சியும் செய்கிறார்.அம்முயற்சி செய்யும் சாதகர்களில் ஒருவர்தான் என் பரிபூர்ண சொரூபத்தை தத்துவ ஞானம் மூலமாக அறிய முடியும்.அவரைப் போன்றோர் அரிதிலும் அரிது.

அர்ச்சுனன்:  அப்படியானல் எல்லா மனிதர்களும் உங்கள் முழு ரூபத்தையும் ஏன் அறிந்து கொள்வதிலை?
கண்ணன்;  இந்த உலகில் தாமாகவே யோக சாதனையில் ஈடுபாடு கொண்டவர்கள் மிகக் குறைவு.மனிதர்களிடம் இதற்கான முயற்சியும் குறைவு.ஆயிரத்தில் ஒரு மனிதன் தான் தன் நன்மைக்காக முயற்சியும் செய்கிறார்.அம்முயற்சி செய்யும் சாதகர்களில் ஒருவர்தான் என் பரிபூர்ண சொரூபத்தை தத்துவ ஞானம் மூலமாக .அறிய முடியும்.அவரைப் போன்றோர் அரிதிலும் அரிது.

அர்ச்சுனன்:  இதற்கெல்லாம் மூல காரணம் யார்?
கண்ணன்;  நான் தான் எல்லா உலகிற்கும் மூல காரணம்.ஏனெனில் உலகம் என்னிடமிருந்கு தான் பிறக்கிறது.பிறகு என்னுள் அடங்கி விடுகிறது.தஞ்சயா! என்னைத்தவிர வேறு எவரும் எதுவும் துளி கூட இந்த உலகிற்கு காரணமில்லை.நூலில் முடிச்சுகள் போட்டு மணிகளாக்கி,அவைகளை நூலில் கோத்து மாலையாக்கினாலும் அந்த மாலை முழுவதும் நூலினால் ஆனதுதானே,இதே போலத்தான் எல்லா மாலை முழுவதும் நூலினால் ஆனதுதானே.இதே போலத்தான் எல்லா உலகிலும் நானே தான் வியாபித்து பரவி இருக்கிறேன்.

அர்ச்சுனன்: பகவானே! இந்தத் தத்துவத்தை எப்படி அறிந்து கொள்வது?
கண்ணன்; குந்தியின் மைந்தனே! தண்ணீரில் நான் தான் சுவையாக இருக்கிறேன்.சூரியனிலும் சந்திரனிலும் நான் ஒளியாக இருக்கிறேன்.எல்லா வேதங்களிலும் ஓங்கார( பிரணவ) சொரூபமாக இருக்கிறேன்.ஆகாசத்தில் நான் சப்தமான( ஒலியாக) இருக்கிறேன்.மனிதர்களில் புருஷார்தமாக ( பேரண்மை) விலங்குகிறேன். பூமியில் புனிதமான மணமாகவும், தீயில் தேஜஸாகவும் ( வெப்பம்),எல்லா உயிரனங்களிலும் ஜீவ சக்தியாகவும், தவசீலர்களிடம் தவமாகவும் இருந்து வருகிறேன்.

பார்த்தனே!எல்லப் பிராணிகளுக்கும் ஆதிமுதல் வித்து நான் தான் என்பதை உணர்ந்து கொள்.புத்திமான்களில் புத்தியாகவும் தேஜஸ்விகளின் தேஜஸாகவும் ( ஊக்கசக்தி) நான் தான் இருக்கிறேன்.

பரம வம்சத்தின் தலை சிறந்த வீரனே! வலிமை மிக்கவர்களின் காமமும்,விருப்பமும் நீங்கப் பெற்ற சாத்வீகமான பலமாக நான் இருக்கிறேன்.மனிதர்களிடத்தில் அறநெறியுடன் கூடிய விருப்பம் ( காமம்)நான்.மேலும் என்ன சொல்ல? எவ்வளவு சாத்வீகம், ராஜஸம்

தாமஸம் என்று முக்குணங்கள் என்னிடமிருந்து தான் உருவாகின்றன.ஆனால் அவை எனக்குள்ளும்,நான் அவைகளுக்குள்ளும் அடங்கி ஒடுங்கி இருப்பதில்லை.அதாவது நான் அவைகளைக் கடந்தவன்.அவைகளுடன் ஒட்டாமல் இருப்பவன்.

அர்ச்சுனன்: அப்படியானால் மக்கள் உங்களை இந்நிலையில் ஏன் அறிந்து கொள்வதில்லை?

கண்ணன்: உலக மக்கள் சத்துவம்,ராஜஸ்,தமஸ் எனும் முக்குணங்களில் மோகித்து வாழ்கிறார்கள்.அதாவது உலகியல் வாழ்வியலேயே ஆழ்ந்து உழன்று வருகிறார்கள் இதனால் தான் முக்குணங்களை கடந்தவனும் அழிவற்றவனுமான என்னை அறிய இயலவில்லை.

அர்ச்சுனன்: உங்களை எவர் அறிந்தவர்கள்?
கண்ணன்: என்னுடைய முக்குணங்களாலான மாயையை கடப்பது கடினம். .எந்த சாதகர்கள் இந்த மாயையில் இருந்து விடுபட்டு என்னையே புகலாக அடைகிறார்கள்,அவர்கள் என் அருளால் முக்குண மாயைச் சூழலிருந்து முற்றிலும் விடுபடுகிறார்கள்.பிறகு அறிந்து கொள்ளுகிறார்கள்.

அர்ச்சுனன்: அப்படியானால் எல்லோரும் உங்களை ஏன் புகலாகச் சரணடைவதில்லை?
கண்ணன்: அசுரகுணம் சார்ந்தவர்களும் மாயையால் மறைக்கப்பட்ட ஞானத்தை கொண்டவர்களுமான மனிதர்கள் மிக மட்டமானதும் பாவங்களுமான செயல்களைச் செய்து வருகிறார்கள் இந்த மூடர்கள் என்னைச் சரணடைவதில்லை.

அர்ச்சுனன்: அப்படியானால் உங்களை எவர்தான் சரணடைகிறார்கள்?
கண்ணன்: நான்கு வகை மனிதர்கள் என்னை பூஜிக்கிறார்கள்.என்னைப் புகலடைகிறார்கள்.பொருளாசை கொள்ளாதவர்கள்,துன்பத்தில் உழல்பவர்.என்னை அறிந்து கொள்ள விருப்புவர்,மெய்யறிவு பெற்ற ஞானிகள்.இவர்கள் புண்ணியசாலிகளான பக்தர்கள்.

அர்ச்சுனன்: இந்த நால்வர்களிலும் தலை சிறந்தவர் யார்?

கண்ணன்: இந்நான்கு வகை பக்தர்களில் என்னிடம் அதிக ஈடுபாடு கொண்டவர் ஞானி. இவர் தாம் தலை சிறந்தவர்.காரணம்,இவர் இடையறாமல் என்னிடம் ஈடுபாடு கொண்டிருக்கிறார்.இவருக்கு நானும் எனக்கு இவரும் மிக்க விருப்பமானவர்கள்.

அர்ச்சுனன்: மற்ற பக்தர்கள் சிறந்தவர்களில்லையா?

கண்ணன்:  இல்லை.அவர்கள் எல்லோரிலும் உதாரகுணம் கொண்டவர்கள்.சிறந்தவர்கள்.

அர்ச்சுனன்: அப்படியால் உங்களிடம் பேரன்பு கொண்டுள்ள பக்தரான ஞானியிடம் என்ன சிறப்பு உள்ளது?

கண்ணன்: அந்த பக்த ஞானி என் ஆத்மாவின் சொரூபம்.என்னையே புகலாக கொண்டிருக்கிறார்.என்னையே திடமான பக்தி சிரத்தையுடன் தியானித்தும் பூஜித்தும் வருகிறார்.இவரிடம் உல்ள சிறப்பு என்னைத் தவிர வேறு எதையும் விரும்புவதிலை.பொருளாசை கொண்டவனிடம் என்னைத் தவிர பொருளிலும் ஆசை உள்ளது.துன்பப்படுபவர்கள் துன்பத்தை போக்கி கொள்ளும் விருப்பம் கொண்டவர்கள்.என் தத்துவத்தை அறிய விருப்புவர்களிடம் அந்த விருப்பமே மேலோங்கி உள்ளது.ஆனால் ஞானியிடம் பற்றோ ஆசையோ என்னையே சார்ந்தல்லாமல் வேறு பொருளில் இருப்பதில்லை.

அர்ச்சுனன்: ஞானியான பக்தருக்கு இவ்வளவு மகிமை எப்படி ஏற்படுகிறது பகவானே?

கண்ணன்:  பல பிறவி எடுத்த பிறகு கடைசியாக மனிதப் பிறவி கிட்டுகிறது.இந்த மனிதர்களில் என்னிடம் பூர்ணபக்தியும் புகழும் கொண்ட ஞானி எல்லாம் பரமாத்மாதான் என்ற மெய்ஞானத்துடன் வாழ்கிறார்.இத்தகைய ஞானி உலகில் மிக மிக அரிதாகத்தான் உருப்பெறுகிறார்.

அர்ச்சுனன்: இத்தகைய பிரேமையும் பக்தியும் கொண்டு பரமஞானியாக உருப்பெறாமல் போவதற்கு என்ன காரணம்?

கண்ணன்: பலவகை ஆசாபாசங்கள் காரணமாக எல்லாமே வாசுதேவர் தான் என்கிற ஞானம் மறைக்கப்பட்டு விடுகிறது.இந்த சுயநல இயல்புக்கு அடிமையாகிய மனிதர்கள் என்னைப் புகலடையாமல் தம் ஆசாபாசங்களை நிறைவேற்றிக் கொள்ள பல உபாயங்களை நியமநிட்டைகளையும் மேற்கொள்கிறார்கள்.இதற்காகப் பல்வேறு தேவதைகளைச் சரணடைகிறார்கள்.பூஜித்து வழிபட்டு வருகிறார்கள்
( பரமாத்மாவான என்னை மறந்து விடுகிறார்கள்).

அர்ச்சுனன்: அந்த அஞ்ஞானிகளை ஏன் உங்கள் பக்கம் வரச் செய்வதில்லை?

கண்ணன்:  நான் மனிதர்களுக்கு அளித்துள்ள சுயநிர்ணய உரிமையை சுதந்திரத்தை ஒருபோதும் எடுத்துக் கொள்ள விரும்புவதில்லை.மேலும் எவை எவை எந்த எந்த தேவதையைப் பூஜித்து ஆராதிக்க விரும்புகிறாரோ, எந்த தேவதைகளிடம் அவருக்குள்ள பக்தி சிரத்தையே வலுப்படுத்துகிறேன்.அதன் துணையுடன் அவர் அவர் தமக்கு உவந்த தேவதையை போற்றி உபாசிக்கிறார்கள். அர்ச்சுனா!இதில் ஒரு விசித்திரமான விஷயம்,அவர்களுக்கு தம் தேவதைகளை உபாசிப்பதால் கிட்டும் பலன் என்னால் நிர்ணயிக்கப்பபட்டவாறு தான் கிடைக்கும்.சுயநல விருப்பத்துடன் தேவதைகளை உபாசிப்பதால் அந்த சிறுமதி மனிதர்களுக்கு அழிவுள்ள பலன்கள் தான் கிட்டுகிறது.அழிவில்லாப் பலன்களை நான் (பரம்பொருள்)கிட்டுவதில்லை இதர தேவதைகளை ஆராதிப்பவர்கள் பெரும்பாலும் ( சுவர்க்கம்முதலிய)போய் திரும்ப வேண்டிய உலகங்களுக்குச் செல்லுகிறார்கள்.என்னையே புகலாகக் கொண்டு பக்தி செலுத்தும் ஞானிகள் என்னை வந்தடைகிறார்கள்.

அர்ச்சுனன்: அப்படியானால் எல்லா பக்தர்களுமே உங்கள் பக்தர்களாக ஏன் ஆக்குவதில்லை?

கண்ணன்:  தம்பி! விவேக புத்தி இல்லாத மனிதர்கள் என் தலை சிறந்த அழிவற்ற உத்தம நிலையை அறிந்து கொள்ளாமல்,புலன்களுக்கும் புலம்படாத என் பரமாத்மா நிலையை பிறப்பும் ,இறப்பும் இளமையும் மூப்பும் கொண்ட மனித நிலையாகக் கருதுகிறார்கள் அப்படியானாவர்கள் என்னையே உபாசிக்கும் பக்தர்களாக எப்படி ஆக முடியும்?

அர்ச்சுனன்: பரமாத்மாவே! சாமானிய மனிதர்கள் உங்களுடைய உத்தமநிலையை அறியாமல்,அறிய மாட்டாமல் இருக்கலாம்,ஆனால் நீங்கள் அவர்களுக்கு எதிரில் உங்கள் உண்மையான உருவத்துடன் வெளிப்பட்டு ஏன் காட்சி அளிப்பது இல்லை?

கண்ணன்: உதவாது.தம்பி! அந்த மூட ஜனங்கள் என்னை இறப்பும் பிறப்பும் இல்லாத சாசுவதமான பரம்பொருள் என்று உணராத போது,யோக மாயையினால் சூழப்பட்டிருக்கும் நான் சாசுவதமான சுயரூபத்துடன் அவர்கள் எதிரில் வெளிப்படுவதிலை..

அர்ச்சுனன்: அந்த யோக மாயையின் திரை உங்களுக்கு எதிரில் இருப்பதில்லையா?

கண்ணன்:  இல்லை,அர்ச்சுனா! நான் முக்காலங்களிலும் ( கடந்த ,நிகழும் வரப்போகும் காலங்களில்) உள்ள எல்லா உயிரனங்களையும் அறிகிறேன்.ஆனால் மாயையின் மயக்கத்தில் மோகித்திருக்கும் ஜீவன்கள் என்னை அறிந்து கொள்வதில்லை.

அர்ச்சுனன்: உங்களை அறியாததற்கு முக்கிய காரணங்கள் எவை?
கண்ணன்: என்னை அறியாததற்கு உள்ள முக்கிய காரணம் விருப்பு வெறுப்புகளால் ( ராகம்-துவேஷம்) ஏற்படும் துவந்த மோகம் ( இருமை மயக்கம்) தவ வலிமை மிக்க வீரனே! இந்த மோகத்தினால் மதி மயங்கியிருக்கும் ஜீவன்கள் இந்த உலகில் உழன்று கொண்டிருக்கும்.பிறப்பதும்,இறப்பதுமாக வந்து போய்கொண்டிருக்கும்.

அர்ச்சுனன்: எல்லோருமே இந்த துறந்த மோகத்தில்